I read this in some site some time back.
David America,
*அழுகையில் படம் பார்ப்போரை அழவைக்கும் நடிக வேந்தர்*
*விழுமிய பொருளையெல்லாம் விழிகளில் காட்டும் மன்னன்*
*எழுகடல் புவியில் எட்டாவதாய் வந்து*
*எழும கலைக்கடலாய் நின்ற சிவாஜி!.*
**
என்று கவியரசர் கண்ணதாசனால் பாராட்டு பெற்ற நடிகர் திலகம் திரு சிவாஜி கணேசன்
ஐயாவின் படங்களில் உங்களுக்கு பிடித்த படம்... அதில் உங்களைக் கவர்ந்த நடிகர்
திலகத்தின நடிப்பு இவை பற்றி இங்கெழுத அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
வாழ்க நடிகர் திலகத்தின் புகழ்!
**
அன்புடன்
டேவிட்
Reply by Sakthi sakthithasan,
அன்பின் டேவிட்,
நான் ஈழத்தில் இருந்த இனிமையான பொழுதுகளை எனது நினைவில் கொண்டு
வருகிறேன்.
" வசந்த மாளிகை @ எனது மனதை விட்டு அகலாத படம். ஈழத்தில் 235 நாட்கள்
தொடர்ந்து ஓடு வசூல் சாத்னையை ஏற்படுத்திய படம்.
முதலாவது நாள், ஜம்பதாவது நாள், நூறாவது நாள், நுற்றைம்பதாவது நாள்,
இருநூறாவது நாள், இருநூற்றி இருபத்திஜந்தாவது நாள் என ஜந்துமுறை
இப்படத்தை நானும் எனது உற்ற நண்பனும் பார்த்தோம்.
அவரது நடிப்பு, கொடுக்கப்பட்ட வசனத்தை உணர்ச்சிபூர்வமாக பேசும் பாவம்,
கண்ணதாசனின் கருத்து மிகு பாடல்கள், அவற்ரிற்கு அற்புதமாக KVM அளித்த
இசை. இவையனைத்தும் ஒன்றிணைந்து அந்தப்படத்தை மிகவும் தரம் வாய்ந்த படமாக
மாற்றியிருந்தது.
இங்கே எனக்குப் பிடித்த இரு காட்சிகளை விபரிக்கிறேன்
1) குடிகாரனாக இருந்த சிவாஜி கணேசனை, மாற்றி ஒரு நல்ல மனிதனாக
ஆக்குகிறார் வாணிஸ்ரீ, அதுவரையில் சிவாஜி கணேசன் இருந்த இடத்தைக்கூட
திரும்பிப் பார்க்காத வரது அண்ணணும், அண்ணியும் அவரின் மாற்றத்தைக்
கண்டதும், சொத்தை தமக்குள் வைத்துக் கொள்வதற்காக அண்னியின் தங்கையை
அவருக்கு மணம் பேசுகிறார்கள். ஆனால் சிவாஜி கணேசனோ தனது மனதை
வாணிஸ்ரீயிடம் பறிகொடுத்து விட்டார். அவரது அண்ணணாக பாலாஜி
நடித்திருந்தார். இதோ அந்தச் சம்பாஷணை.
பாலாஜி : எப்படிப்பட்ட பெண்ணை உனக்குப் பிடிக்கும் ?
சிவாஜி கணேஷன்: ஆடம்பரமில்லாத அழகு, அந்தஸ்தைப் பார்க்காத அன்பு
பாலாஜி : அப்படிப்பட்ட பெண் யாரையாவது நீ விரும்புகிறாயா ?
சிவாஜி: நான் விரும்பும் பெண் எனக்குத் தேவையில்லை, என்னை விரும்பும்
பெண்தான் எனக்குத் தேவை
இந்தக் காட்ச்சியில் சிவாஜி கணேஷன் தனது வசனங்களை பேசும் போது உதட்டால்
பேசவில்லை. உள்ளத்தால் பேசினார், அத்னால் தான் அவர் நடிகர் திலகம்.
2) இரண்டாவது காட்சி, தனது மனதில் இடம் பிடித்த பெண்னைக் காட்டுவதாகக்
கூரி வாணிஸ்ரீயை வசந்தமாளிகைக்கு அழைத்துச் செல்கிறார், அங்கே அந்த வசந்த
மாளிகையையும், அதற்குச் சொந்தக்காரியாகிய தன் மனங்கவர்ந்தவளையும் பற்றி
விபரிக்கும் போது
" இறைவன் மட்டும் எனக்கும் பறக்கும் சக்தியைக் கொடுத்திருந்தால்,
அகாயத்திலே பறந்து சென்று அந்த நிலவை எடுத்து வந்து இந்த வசந்தமாளிகைக்கு
வண்ணவிளக்காக அலங்கரித்திருப்பேன், வானத்திலே மின்னும் நட்சத்திரங்களை
எடுத்து வந்து தோரணங்களாக தொங்க விட்டிருப்பேன், ஆனால் இறைவன் தான்
எனக்கு அந்த சக்தியை கொடுக்கவில்லையே ! என்ன செய்வேன்? என்ன செய்வேன் ? "
இந்த வசனத்தைப் பேசும் போது காதல் உணர்ச்சிகள் மாறி, மாறி அவர் முகத்தில்
வந்து அலைமோது, தமிழ் அப்படியே கணீரெனேஉ ஒலிக்கும். நடிகர் திலகத்திற்கு
நிகர் அவரேதான்.
அன்பின் டேவிட் அருமையான இழை ஆரம்பித்ததுக்கு என் நன்றிகள்
அன்புடன்
சக்தி
