http://thatstamil.oneindia.in/movies...ooja-held.html
Saagar,
I am not too sure if Suryakanthi is doing well in the box office. Seems that the director has changed tracks and tried a full commercial movie but doesn't seem to reach the people. One more promising director bites the dust!!
Look at this one
Isaignani Ilayaraja swamigalin (?) innisayil
http://www.images.behindwoods.com/ph...adiyum-05.html
இன்றைக்கு பாடல் கேட்டு வருபவர்கள், 'அந்த படத்தில் வந்தது மாதிரி... இந்த பாடல் வேண்டும்' என்று குறிப்பிட்டுதான் கேட்கிறார்கள். 'புதுமையாக வேண்டும்' என யாரும் கேட்பதில்லை. 877 படங்கள் முடித்தாகி விட்டது. இப்போது எந்த இயக்குனரும் என்னிடம் புதுமையை நோக்கி வரவில்லை.
http://thatstamil.oneindia.in/movies...-up-music.html
வடிவேலு, பிரகாஷ் ராஜ், நட்ராஜ், பிரம்மானந்தம், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கும் குலசேகரனும் கூலிப்படையும் படத்தின் படப்பிடிப்பு இன்று பாடல் ஒலிப்பதிவுடன் தொடங்கியது.
எஸ்.என்.எஸ். மூவிஸ் சார்பில் உஷா வெங்கட்ரமணி, கெளசல்யா மணி தயாரிக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் இந்தப் புதிய படத்தில் கீர்த்தி சாவ்லா, உதயதாரா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.
http://thatstamil.oneindia.in/movies...ooja-held.html
UPCOMING MOVIES OF ILAYARAJA - 2010
-----------------------------------------------------------
Pen Singam ( Tamil )
Uday Kiran, Meera Jasmine, Karthika
Release Date : Apr 2010
Nandhalala ( Tamil )
Mysskin, Ashwath Raman, Snightha Akolk
Release Date : 04 Apr 2010
Sketch For Love ( Telugu )
Chetan Kumar, Archana, Atul Kulkarni
Release Date : May 2010
Nannavanu ( Kannada )
Prajwal Devaraj, Aindrita Ray, Avinash
Release Date : May 2010
Oh My God ( Telugu )
Master Kamal, Kriya, Ali
Release Date : 27 Aug 2010
Priyatama Raave ( Telugu )
Githan Ramesh, Priyamani, Jahnavi
Release Date : 29 Oct 2010
Paadi Parantha Kili ( Tamil )
Nirmal
Release Date : Nov 2010
Padithurai ( Tamil )
Abhishek, Abinaya, Arya
Release Date : Dec 2010
Thandavakone ( Tamil )
Sanjaikumar, Manochitra, Kanja Karuppu
Release Date : Dec 2010
Pen Singam is DEVA Sir
Suresh/raagas, which thread did you post the padutha theeyaga links?
Hi guys,
Raja has done music for this Kannad short film..
http://movingpoems.com/tag/ilayaraja/
Plum,
Here it is:
http://www.mayyam.com/hub/viewtopic....5320&start=660
Chandramohan,
That is the film on Akka Mahadevi which Raja has given musical shape to Akka Mahadevi's great vachanas. The background score of that short film was done by Shantanu Moitra (now famous for the music of 3 Idiots.) Our own Rajasaranam had dug this DVD up and had written a lovely post on all the songs. You can read his article at:
http://pulikesi.wordpress.com/2008/0...bbles-on-akka/
Thx Suresh!Quote:
Originally Posted by Sureshs65
Pen Singam is DEVA Sir
K, Got it. Thanks!
IR has given a good lot in 2009 that I am relishing. But I am waiting for his next offering too. Wonder what could it be!
Jan 15 TOI Bangalore edition carries Suryakaanti review by GSKumar. He has rated 3.5 stars [Good to Very good] He says its a classy movie and regarding IR's music he says its melodious. Today's TOI page 3 has a news snippet that director Chaitanya has trimmed few scenes in the movie to accelerate its pace.
Banglore mirror also carried a good review saying that the director has given a commercial masala succesfully and rated 3 stars.
Bangalore edition of Dinakaran also had a good review for the movie.
To add, Suryakanthi was the solo Kannada release for Sankranthi.
IR, ARR conferred Padma Bhushan Awards !
http://beta.thehindu.com/news/national/article94788.ece
Apropos the Pazhassiraja-ONV lyrics controversy,yesterday Manorama News Channel beamed a 1 hour long interview with director Hariharan.My respect (non existent) have grown 200 fold for the man after watching it.As expected the channel guy asked Hariharan to clear the air regarding the lyrics controversy.
The answer "I havent heard what Raaja sir said.I read about the whole thing in newspapers.As a director i got exactly what i wanted from ONV and Rajasir composed it beautifully,the way I was expecting it to be.If Raaja sir felt lyrics didnt convey the emotions its his personal opinion.He has a 'right' to express his opinion and there is nothing wrong in it"
rajaalltheway,
Thanks for the news about the Manorama program. Hariharan is a sensible man and he probably understands an artist better, given that he is also an artist.
South Indian Actor Arya opens Production House
South Indian actor Arya has opened his own production house The Show People, its first project being Padi Thurai. He has the shared the responsibility of the films among friends and other industry people.
Currently busy acting in a Telugu flick Madrasa Pattinam, Chikku Bukkku, Arya seems to the person who likes to concentrate on one thing at a time.
Though the talented actor has started his production house, he just wants to act as a producer in it, rather than acting in the films churned out by his production house.
He says, “I have started a production house- The Show People, along with my friends. I will be producing three films per year. My first film will be Padi Thurai. Bala assistant Saga is directing this film. Ilayaraja is composing the music. New face Abhishek is doing the lead role and Nadodigal Anaya is pairing with him. Saga has asked me to do a role in this film but I strongly rejected this idea. My only role in this film is that of a producer.
Looks like TTLS is finally dusted for release. Don't know in which language though.
http://entertainment.oneindia.in/mal...lm-020210.html
thanks,
Krishnan
"Chinna Polike" from Om Shanti.... everytime i listen to it, i just wonder why was it not by SPB. I'm sure it would have given so much nativity if it were SPB and the song would have reached more audience. Forget audience, it would have commanded my complete attention atleast. Pch.. Why Kunal Gunjawala, of all!!!!!!!
Vikatan Interview.......
'இளைஞர்களை இசை மூலமாகச் சந்திப்பேன்!''
இளையராஜாவின் புதிய திட்டம்
.
எப்போதும் கலகலக்கும் எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி வளாகம், அன்று பவ்யமும் திவ்யமுமாக நிறைந் திருந்தது. காரணம், ராஜா!
கல்லூரி விழாவுக்கு வந்திருந்தவரிடம், ''பத்மபூஷ ணுக்கு வாழ்த்துக்கள்!' என்றேன். சின்னப் புன்னகை யுடன் ''காரில் ஏறுங்க'' என்றார். கோடம்பாக்கமே தவம் இருக்க, அபூர்வமாக புன்னகைத்துக் கடக்கிற அதே ராஜா, பழைய ஞாபகங்களில் தொடங்கி இந்த நொடி வரை ஒரு நதியாக வளைந்து நெளிந்து பெருகும் மெட் டைப் போலவே அரிதான உரையாடலில் தொடங்கினார்.
''பத்மபூஷண் விருது உங்களுக்குக் கிடைத்திருப்பதில் ரொம்ப சந்தோஷம். ஆனாலும், 20 வருடங்களுக்கு முன்னாடியே கிடைச்சிருக்கணும்னு பேசிக்கிறாங்க. எப்படி உணர்றீங்க?''
''விருது கிடைத்ததில் மகிழ்ச்சி. மிகுந்த மரியாதையுடன் அதை ஏற்றுக்கொள்கிறேன். தமிழ்நாட்டுக்கும், தமிழ் இசைக்கும், தமிழ் இசைக் கலைஞர்களுக்கும் கிடைத்த உயரிய கௌரவமாகக் கருதுகிறேன்!''
''இத்தனை வருடங்களாக நாங்க இளையராஜாவைப் பார்த்த பிரமிப்பும், கொடுத்த மரியாதையும், இந்தத் தலைமுறை மாணவிகளிடமும் இருக்கு. திரையிசையில் மாபெரும் வெற்றி பெற்ற உங்களின் அடுத்த திட்டம் என்ன?''
''திட்டமிட்டு எதையும் நான் செய்யறது இல்லை. திட்டம் போட்டு நடக்கணுங்கிறது நம்ம கையிலா இருக்கு? நமக்கு விதிச்சது இல்லாமல் எதுவும் நடக்காது. 'அன்னக்கிளி' ஆரம்பிச்சு 25 படம் வரைக்கும் பிளான் பண்ணி மியூஸிக் போட்டிருக்கலாம். அப்புறம் ஆன்மிகம், தெய்வ நம்பிக்கைன்னு வந்த பின்னாடி, எல்லாமே அன்னன்னிக்கு வந்த விஷயம்தான். How to name it, Nothing but wind, திருவாசகம் எல்லாமே தானாக நிகழ்ந்ததுதான். காற்றுபோல, ஒளிபோல இசையும் பரவி யாரையாவது, எங்கேயாவது போய் அடைஞ்சுக்கிட்டே இருக்கணும். கொட்டுகிற இசை மழை யில் எங்கேயாவது, யாராவது துளிர்க்கணும்... பூக்கணும். அடையாளம் தெரியாத இந்தப் பயணத்தை இசை செய்துக்கிட்டே இருக்கணும். நொடிக்கு நொடி என்னைப் புதுப்பிச்சுக்கிட்டு இத்தனை வருஷமா இயங்கிட்டு இருக்கேன். இப்படிப்பட்ட நல்ல சூழலில் என்னை இறைவன் வைத்திருக்கும்போது, நான் நிறைவாக உணர்வது தானே நியாயம்?
நமக்குத் தெரிஞ்ச இசையை இளைஞர்களுக்குக் கொடுத்துட்டுப் போகணும்னு மட்டும் தோணுது. அதற்குச் சூழல் அமையணும். நான் எடுத்துட்டுப் போக ஒண்ணுமே இல்லை. கொடுத்துட்டுப் போகத்தான் இருக்கு. எனது அனுபவத்தைப் பகிரவும் இளைய தலைமுறைக்கு விட்டுட்டுப் போகவும் தயாரா இருக்கேன். தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து இளைஞர்களை இசை மூலமா ஒன்றிணைக்கணும். பார்க்கலாம், என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்!''
''கொடுத்துட்டுப் போவதாக இருந்தால், அதை எந்த மாதிரி செய்யலாம்னு, அதற்கான செயல்திட்டம் என்ன?''
''உலகத்தோட ஒரு பக்கத்துல பீத்தோவன், மொஸார்ட்னு இருந்திருக்காங்க. நம்ம பக்கம் தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி, அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர்னு இருந்தாங்க. எல்லாமே 18-ம் நூற்றாண்டோடு முடிஞ்சுபோச்சு. அதற்குப் பிறகு இன்னொரு மொஸார்ட் வரவே இல்லை. உலகம் தோற்றுவிக்கலைன்னு அர்த்தம் கிடையாது. அந்த நிகழ்வு நடை பெறலை. புரந்தரதாசர் வரைக்கும் அவங்க பங்குக்கு எல்லாத்தையும் கொடுத்துட்டுப் போயாச்சு.
எனக்கு என்ன தோணுதுன்னா, இப்ப இருக்கிற கர்னாடக, இந்துஸ்தான், வெஸ்டர்ன் மியூஸிக்கோடு அதன் எல்லைகள் முடிஞ்சு போச்சா? இல்லைதானே! உண்மையான... இன்னும் உன்னதமான இசை எங்கேயோ இருக்கு. அந்த இசைதான் என் தேடுதலா இருக்கு. இதற்கு நான் பதில் அறியாமலும் போகலாம். ஆனா, என்னிக்காவது ஒரு நாள் இதுக்குப் பதில் கிடைக்காமல் போகாது. போய் ஊடுருவிப் பார்க்கிறவங்க கண்டுபிடிப்பாங்க. என் கையில் விதை இருக்கு. விதைக்காமல் போனால் வித்துக்கும் நஷ்டம்... உயிருக்கும் நஷ்டம். இந்த ஊரில் இருந்தே 200 பீத்தோவன், 200 தியாகராஜ சுவாமிகள் வரட்டுமே. வறுமையில் வாழ்ந்துட்டு இசை படைத்தவர் தியாகராஜ சுவாமிகள். இத்தனை தியாகராஜ சுவாமிகள் வரணும்னு சொன்னது திறமையைவெச்சுச் சொல்லலை. திறமைங்கிறது வித்வத்வம், பண்டித்துவம், அது கர்வத்தை மட்டுமே வளர்க்கும்.
என் அனுபவத்திலே நிறைய இருக்குன்னு சொல்லும்போது இதைத் தெரிஞ்சுக்க ஓர் அமைப்பு இல்லைங்கிறது என்னுடைய துரதிருஷ்டமா, நாட்டின் துரதிருஷ்டமா?''
''கலைஞனுக்குச் சமூகத்தின் மேல் அக்கறை இருக்கணும் என்கிறது ஒரு தரப்பு. அப்படி எல்லாம் இல்லை. கலைஞன் வேறு மாதிரி, அவன் தனிமையானவன்கிறது வேற தரப்பு. இரண்டில் எது சரி?''
''இரண்டு பக்கத்துக்குமே எது சரின்னு சொல்ற உரிமை கிடையாது. யாருக்கு எப்படி இஷ்டமோ அப்படி இருந்துட்டுப் போகட்டும். நான் சொல்றதையே என் உடம்பு கேட்க மாட்டேங்கிறது. அடுத்தவங்க கேட்கணும்னு நான் எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கு?''
''பீத்தோவன், மொஸார்ட், பாக்னு எப்பவும் பெருமிதமா... உயர்வா பேசுவீங்க. நம்ம ஊர் இசையமைப்பாளர்களைப்பற்றி ஒண்ணும் சொன்னதே கிடையாதே?''
''இசை என்பது உன்னதமான கலை வடிவம். பீத்தோவன், பாக் போன்றவர்கள் நாம் பின்பற்ற வேண்டிய மேதைகள். நான் எனக்கு முன்னாடி ரோடு போட்டவர்களைப்பற்றித்தான் பேச முடியும். நான் ரோடு போட்டேன்னா, எனக்குப் பின்னாடி வர்றவங்க அதைப்பத்திப் பேசணும். யார் யாரு நான் போற பாதையெல்லாம் மரம் நட்டுட்டுப் போனாங்களோ, புத்தகம் வெச்சுட்டுப் போனாங்களோ, குடிக்கத் தண்ணீர் வெச்சுட்டுப் போனாங்களோ அவங்களை நான் போற்ற முடியும், வணங்க முடியும், தொட்டுக் கும்பிடவும் முடியும்.
ஆனா, எனக்குப் பின்னாடி வர்றவங்களை நான் ஃபாலோ பண்ண முடியாது, இல்லையா? எனக்குப் பின்னாடி வர்றவங்களை எனக்குத் தெரியவே இல்லை. எனக்கு முன்னாடி போனவங்களைப் பார்த்து, 'ஐயோ! இப்படியெல்லாம் பண்ணிட்டாங்களே, இப்படியெல்லாம் பண்ணிட்டாங்களே'ன்னு வியந்துகிட்டே இருக்கேன். இன்னும் அவங்க பக்கத்தில் என்னால் நெருங்க முடியலை. ஒரு சி.ஆர்.சுப்பராமன் பண்ணின 'சின்னஞ்சிறு கிளியே' போல இன்னும் யாராலும் ட்யூன் பண்ண முடியலை. அந்தப் பாட்டு ட்யூன் பண்ணி 60 வருஷம் ஆச்சு. எல்லா கர்னாடகக் கச்சேரிகளிலும் 'சின்னஞ்சிறு கிளியே' பாடறாங்க. சினிமாவில் இருந்து கர்னாடக கச்சேரிக்குப் போகிற அளவுக்கு அந்த ஆளு ட்யூன் பண்ணிட்டு 32 வயசுலயே போயிட்டார். அவரைப் போற்றாமல் வேறு யாரைப் போற்ற?
எனக்கு எஸ்.வி.வெங்கட்ராம னைத் தெரியும். பார்த்திருக்கேன். அவர் என்னைப் பாராட்டினார். நான் அவர் காலைத்தொட்டு வணங்கினேன். இந்தத் தலை முறையில் யாரைப் பாராட்ட லாம்னு நீங்களே சொல்லுங்க?''
''ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் வாங்கிட்டார். அவர் மியூஸிக்பற்றி உங்க கருத்து என்ன?''
''அவருக்கு நடந்த பாராட்டு விழாவில் என் பேச்சைக் கேட்கலையா? அப்புறம் ஏன் இந்தக் கேள்வி? உலகம் அங்கீகரிச்ச பிறகு நான் யாரு? உலகத்தில் ஒருத்தன்தானே நான்! உலகத்தைவிட்டுத் தனியாவா நான் இருக்கேன்?''
'' 'அழகர்மலை' படத்தில் 'இந்த அன்னை பூமி போதும்' பாட்டு. எப்பவும் மண் சார்ந்த பிரியம்...''
''என்னங்க, கங்கையில் குளிச்சிட்டு வந்தாலும் ஏன்னு கேட்பீங்க போலிருக்கே? என் மண்ணை நான் பாடாமல் யார் பாடுவாங்க? என்னங்க இது... (சிரிப்பு...)''
''ஜெயகாந்தன் பிரவாகமா ஆரம்பிச்சு, ஒரு கட்டத்தில் எழுதினது போதும்னு நிறுத்திட்டார். அது மாதிரி எப்பவாவது இந்த மியூஸிக்கை நிறுத்திடணும்னு தோணியிருக்கா?''
''இப்பவும் ஒரு பாட்டு முடிஞ்சதும் மியூஸிக்கை நிறுத்திடுவேனே. (சிரிப்பு) அது ஜெயகாந்தனோட முடிவு. அவர் அவர்தான். நான் நான்தான். அவர் முடிவு பண்ணி அவர் சொன்னாரு. அதே முடிவை நான் சொல்லணும்னு நீங்க எதிர்பார்த்தா எப்படி?''
''இறைவனிடம் சரண் அடைய எப்பவும் விருப்பப்படுகிறவர் நீங்கள். ஆனாலும், நீங்கள் ஈகோ உடையவர், அதிக இறுக்க மானவர்னு உங்களைப்பற்றிப் பேச்சிருக்கு. இந்த இரண்டு அம்சங்களுக்கும் முரண்பாடு காணப்படவில்லையா?''
''உங்களுக்கு இருக்கிற ஈகோவால்தானே இந்தக் கேள்வியையே கேட்க முடியுது. இந்தக் கேள்வியே உங்களுக்கு இருக்கிற ஈகோவைக் காட்டுதே தவிர, பண்பைக் காட்டலை. இருக்கட்டும். ஈகோ இல்லா மல் நான் எப்படி வேலை செய்ய? உங்களுக்கு ஏன் ஈகோ இருக்குன்னு ஈகோ இல்லாத ஆளுதானே கேட்கணும்? அப்படிக் கேட்டால், 'உங்களை மாதிரி ஆக முடியலை சாமி!'ன்னு சொல்வேன். சரியாகச் சொன்னால், 'உன்னை முதல்ல பார்த்துட்டு வாய்யா... போய்யா!'ன்னு சொல்லணும்... சொல்லவா!'' (மீண்டும் சிரிப்பு)
''' 'பா' ஹிந்திப் படத்தில் உங்க மியூஸிக்பற்றி அமிதாப் அவரோட ப்ளாக்கில் உருகி எழுதியிருந்தாரே..?''
'' 'பா' படத்துக்காகப் பாடும்போது அவரை அதே மேக்-அப்போடு பாடவெச்சேன். இது அமிதாப் பாடுகிற பாட்டு இல்லை. அந்தக் குறையுடைய கேரக்டர் பாடுகிற பாட்டு என்பதால் அப்படிச் செய்தேன். அதை அமிதாப் ரொம்பவும் ரசித்தார். என் வீட்டைப் பார்த்துவிட்டு 'ஏதோ புனித யாத்திரைக்கு வந்த மாதிரி இருக்கு'ன்னு சொன்னார். ஏதோ ஒண்ணு அவரை அப்படிப் பார்க்கவெச்சிருக்கு. கார்த்திக் ராஜா, அமிதாப்புக்கு ரொம்ப ஃப்ரெண்ட். எப்ப வந்தாலும் அவனுக்கு போன் செய்துவிட்டு வருவார். அமிதாப் தன்னு டைய அப்பாவின் கவிதைகளுக்கு கார்த்திக்கை ட்யூன் போடச் சொல்லிக் கொண்டுபோயிருக்கார். நானும் அந்த 'ப்ளாக்' படிச்சேன். பக்குவப்பட்ட மனசு. சொல்ல நினைச்சுச் சொல்லியிருக்கார்.''
''உங்க குடும்பத்திலேயே கார்த்திக், யுவன், பவதாரிணின்னு மூணு பேர். அவங்க இசைத் திறமைபற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?''
''நான் அதைப்பத்தி கருத்துச் சொல்றது சரியாக இருக்காது. உலகம் பார்த்திருக்கு. உலகமே முடிவு பண்ணட்டும். என்னுடைய சர்ட்டிஃபிகேட் எதுக்கு? நான் அவங்களோட தகப்பன். அவங்க வளர்ச்சியைப் பார்த்துச் சந்தோஷப்படலாம். அவங்க இசை, பாட்டுபற்றி அபிப்ராயம் கேட்டப்ப, அவங்ககிட்டே அதைப்பற்றிச் சொல்லியிருக்கேன். அவங்க குழந்தையா இருந்தபோது அவங்களுக்காக நேரம்கூட ஒதுக்கியதில்லை. இந்த அளவுக்கு அவங்க வளர்ந்ததுக்கு அவங்களேதான் காரணம்!''
"உலகம் அங்கீகரிச்ச பிறகு நான் யாரு? உலகத்தில் ஒருத்தன்தானே நான்! உலகத்தைவிட்டுத் தனியாவா நான் இருக்கேன்?''
appadi pOdunga!
உண்மையை சொல்லனும்னா நான் ராஜாகிட்ட இருக்குற அந்த ஈகோவை ரசிச்சுக்கிட்டு தான் இருக்குறேன். என்ன ஒரு ஈகோ!
அது அவர் கிட்ட இருக்குற அசைக்க முடியாத தன்னம்பிக்கையுனால வந்ததா இருக்கலாம், இல்ல இந்த உலகம் என்னடா நான் போடுறதுதாண்டா மியுசிக்கு அப்படின்னு, இல்ல இந்த உலகம் இன்னும் என் மியுசிக்க சரியாய்அங்கீகரிக்குற அளவுக்கு வளரலை அப்படின்னா கூட இருக்கலாம்
sanjeevi - this 'ego' thingy is what drives everything, from society to industry - if you dont have it, then you become redundant - the problem i see is ppl focussing on this aspect of IR, but then it is IR himself with his 'spiritual' talks drew ppl's attention to that kind of talk! so he himself has to blame for part of it -adhu oru pakkam
OTOH, 'naan romba panivaa nadakka try panraen' - appadeennu sonnaa oduney, 'aahaa andha pulla evvalavu adakkam' appdeennu paaraattuvaanga
IR did not have time for anything other than music - so dedicated was he to his passion/love for his profession/ chosen path - that being the case, andha eedupaatai paarthu inspire aagaamal, motta mandaikkum muzhangaalukkum mudichhu podum aasaamigal niraiyaa per
to date, i have not come across a single journalist/ magazine that explores in-depth his musical output and instead focus on idiotic side-issues - avar kettaarey oru kelvi "if i bathe in ganges, you wud ask me why i did so ?" - ROTFL!!
as i said in another thread on Kamal, 99% of journalists in India are unadulterated, malicious morons with no idea/clue of what to write and what not to! almost all of them come from a heritage whose cultural attributes included sitting around in front of a home/house (veettu thinnai) playing cards and gossipping abt the chinna veedu of a local pannaiyaar/periya manushar than doing anything useful in life - such an attitude is wired in their genes, you cant change them - they simply dont know the difference between 'kalai' and 'kuckoos'
irir123,
well said...
Oruvarai interview seivadhu endral,
Avarudiaya vetrigal. experiences , kadandhu vandha paadhai
ipadi ellam theirndhu kondu kelvi kaetka vendum.
Enaku theirndhu - Abroad il , idhai sariyaga seivadhu pola thonugiradhu..
Ingae, either in TV or magazine,
yar endrae theiryadhu....
Music director - idhu matum therigiradhu.
hahhahahaha.. IlaiyaRaja - idhu romba nalla theriyudhu.......
TV show ilum, old people - endha thuraiyaga irundhalum,
interview seiyum , indha kalathu youngsters.....
romba easya, poi, poi ya oru expressions....
kelvi...
kodumai...
Interview seiya pattavarin - Achievements , adhai avar
epadi seidhar... enna feel panrar
ipadi kelvi kaeka vendiyadhu dhanae.....
Arivu illamal kelvi....
idhil IR mel complaint......... kodumai......
"Enaku theirndhu - Abroad il , idhai sariyaga seivadhu pola thonugiradhu."
to an extent its true - but while there are classy magazines/journals, there are tons of cheap magazines that pander to the prurient - on a comparative scale, we have more of the latter than the former, and many of the latter masquerade as the former
irir123, again you did super post :)
ellaa payalukkum paatulaye badhil irukku
'poda poda punnaakku
podaadhe thappukanakku'
Regarding ganges, it can be spun thus
"By talking of ganges cleansing one's sins, ir has bowed to sanatna dharma(or whatever, I am not well informed) and is reiterating the regressive principles of manuwad, very unbecoming and socially irresponsible of such a succesful and iconic figure" etc :-)
(Shaju, Charu must pay me if they pick this idea and write a defamatory article on IR)
The only thing that could stop all this crap about his personality is the continous flow of music from him. He has the divine weapon on his hands, and i dunno why he is not using that as he used to.
To some knowledgeable people and in his opinion he is continuing to make good compositions... i am at a loss why that escapes me :roll:Quote:
Originally Posted by ramk1
I would say because of the fact that commercially most of movies he associated with of late is bombed at the box office and general change in the trend in music which obviously affecting our taste are the reasons why we may fail to see them.
The eye opener in my case was the song from "athu oru kanaa kaalam" "kaatu vazhi pora ponne" i never paid attention to the song when it was released but when i heard instrumental version of it in "paa" i was speechless... this is something really beautiful composition which beats other songs by a mile.. but still you see to most of the people its not in tune with current trend...
There is a revival movement for any great art form i am sure its there for Raaja's music... the current trend songs dont have a shelf life beyond even couple of days.
Can expect some melodies for this movie (before Apr 14) :
http://beta.thehindu.com/arts/movies/article104947.ece
I am afraid Satyan Anthikad has exhausted all his stuff..his recent films were all monotonous ( at least in narration and characterization ) and predictability has come in a lot.
This happens to all directors at some point of time..but who delays it longer is the one who stands out..like BR, MR etc..
raja_fan,
I thought Sathyan achieved that nirvana quite some time back. Atleast the last half dozen movies of his which I saw were almost similar in characterization and treatment.
This reminds me of P G Wodehouse and his statement against his critics. Writing the preface to one of the Psmith novels, Wodehouse said something like this, "For my earlier book, the critics said it was the same Wodehouse story with different characters. They can't say that for this book. This is the same story with the same characters!!!" (He has already written a Psmith book.) Sathyan is somewhere close to that.
Suresh you pgw also?
Btw, that was the preface to summer lightning. Blandings castle
Plum,
Yes. I do but has been some time now. Now I remember that it was Blandings Castle :) There was one Psmith in Blandings as well right?
Source VIKATAN
'சென்னைக்கு வந்திருக்கவே மாட்டேன்!''
திருமாவிடம் நெகிழ்ந்த ராஜா!
இசைஞானியும் இளஞ் சிறுத்தையும் சந்தித்தார்கள் என்ற தகவல் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. அரசியல் என்றால் ஓடக்கூடியவர் இளையராஜா. இசைக் கோவைகளுக்கும் திருமாவளவனுக்கும் ரொம்பவே தூரம். ஆனாலும் அந்தச் சந்திப்பு உருக்கமானதாகவே அமைந்தது!
திருமாவளவன் இதுவரை இளையராஜாவை நேரில் சந்தித்ததே இல்லை. பத்மபூஷண் விருது ராஜாவை நோக்கி இந்த ஆண்டு வந்து சேர்ந்ததும், அவரைச் சந்தித்து வாழ்த்துச் சொல்ல விரும்பி இருக்கிறார். உடனே வரச் சொல்லி அழைப்பு வந்ததும் சிறுத்தை கிளம்பியிருக்கிறது. உடன் கவிஞர் அறிவுமதியும்! இசைமயமான அந்தத் தருணத்தில் என்ன நடந்தது? திருமாவளவன் சொல்கிறார்...
''ஓராண்டுக்கு முன், 'இசையுலகின் அசைக்க முடியாத சக்ரவர்த்தியாக இருக்கிற இளையராஜா உலகப் புகழை அடைந்துவிட்டார். ஆனால், அவருக்கு இந்திய அரசாங்கம் எந்த விருதும் இதுவரை தரவில்லை. திட்டமிட்டு அவரைப் புறக்கணிக்கிறார்கள்' என்று விடுதலைச் சிறுத்தைகளின் செயற்குழுவில் நாங்கள் ஒரு தீர்மானம் போட்டோம். இம்முறை பத்மபூஷண் விருது அவருக்குக் கிடைத்திருப் பதால் பாராட்டச் சென்றேன். மாலை போட்டேன். மறுத்தார். 'எங்களுக்காக ஏற்றுக்கொள்ளுங்கள்... இது காலம் கடந்த விருதுதான் என்றாலும், வாழ்த்துவது எங்கள் கடமையல்லவா?' என்றேன். சிரித்தபடியே ராஜா, 'சாதிக்காகவா விருது கொடுப்பான்? சாதிச்சதுக்காகத்தானே தருவார்கள். காலத்தால் கிடைத்த விருது, காலம் கடந்த விருது என்றெல்லாம் எதுவும் இல்லை. தருணம் ஏற்பட்டால், பரிசுகள் கிடைக்கும். உள்ளே இருக்கும் குஞ்சுக்குச் சிறகு முளைத்தால், முட்டையில் விரிசல் விழும். அதுதான் கோழியின் தருணம். அது மாதிரி இப்போது எனக்குப் பரிசு கிடைக்கும் தருணம்' என்ற மனநிலையில் இருந்தார்.
'விடுதலைச் சிறுத்தைகள் என்று பெயர் வெச்சிருக்கீங்களே... எதில் இருந்து விடுதலை அடையப்போறீங்க? எதில் இருந்தாவது விடுதலை அடைய முடியுமா?' என்று அவர் கேட்டபோது என்னால் உடனே பதில் அளிக்க முடியவில்லை. 'அகந்தையில் இருந்து விடுதலை அடைய முடியுமா என்று கேட்கிறீர்களா?' என்றேன். அதற்கு அவர் சிரித்தார். 'இது உங்களுடைய கொள்கையா?' என்று கிண்டலடித்தவர், தன்னுடைய ஆரம்ப கால அரசியல் வாழ்க்கையைச் சொல்ல ஆரம்பித்தார்.
'சின்ன வயசிலயே எனக்குக் கட்சி, அரசியல், உலகம், பிரச்னைகள் எல்லாமே தெரிய ஆரம்பிச்சது. ஏன்னா, கம்யூனிஸ்ட் கட்சியில் தொடர்பு இருந்தது. ஆனா, இசை ஆர்வம் அதைவிட அதிகமா இருந் தது. ஏதோ ஒரு பொருளை வித்து 400 ரூபாய் பணத்தை என்னோட அம்மா கொடுத்தாங்க. அதை வெச்சுக்கிட்டுதான் சென்னைக்கு வந்தேன். இன்றைக்கு இருக்கிற இசை அனுபவம் அன்றைக்கு இருந்தா, நிச்சயமா சென்னைக்கு வந்திருக்கவே மாட்டேன்!' என்று சிரித்தார்.
'ஆனால், இன்று இசையுலகத்தை ஆளும் ஆளுமை நீங்கள்தான்!' என்றேன் நான். 'நிலம் தாழ்ந்ததாக இருப்பதால் நீர் அதன் மீது ஓடுகிறது. எனவே, என் மீதுதான் நீர் ஓடுகிறது என்று நிலம் பெருமைப்பட முடியுமா? அதுபோல இசை, என்னைத் தேர்ந்தெடுத்து என் மீது ஒடுகிறது. அவ்வளவுதான். அதற்காக இசை அறிவு என்னிடம் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம் அல்ல. இசை என்னும் புள்ளியை நோக்கி நான் நாட்டம் செலுத்தினேன். அது என்னைத் தேர்ந்தெடுத்தது. நீங்கள் உங்களது நாட்டத்தை அரசியலில் செலுத்தினீர்கள். அரசியல் அறிவு உங்களைத் தேர்ந்தெடுத்தது.' என்று தத்துவ விளக்கங்களாகவே சொல்லிக்கொண்டே போனார்.
அதன் பிறகு திருக்குறளின் அகர முதல எழுத்தெல்லாம்... தொடங்கி பல முக்கியமான குறள்களுக்கெல்லாம் விளக்கங்கள் சொல்ல ஆரம்பித்து, இதே வடிவத்தில் தான் எழுதிய குறள் வெண்பாக்களைச் சொல்ல ஆரம்பித்தார். தான் எழுதிய அத்தனை பாடல்களையும் அவர் மனப்பாடமாக வைத்திருந்தார். அதைவிட, ஒரு சம்ஸ்கிருதப் பாடலைக் கடகடவென ஒப்பித்தார். அது அவரே எழுதிய பாடல். 'நான் என்னுடைய கடமையை, எனக்குத் தெரிந்ததைச் செய்கிறேன். அதனால், யார் என்னைப் புகழ்ந்தாலும் அதை நான் பெரிதாக நினைப்பது இல்லை. அதைப் பார்த்துத்தான் சிலர் என்னைக் கர்வம் பிடித்தவன் என்கிறார்கள்' என்று விளக்கம் அளித்தார்.
அவரது புத்தகப் படிப்பு குறித்துக் கேட்டேன். 'நான் எதுவும் படிக்கிறது இல்லை. அதுக்கு நேரமும் இல்லை. அதில் நாட்டமும் இல்லை' என்று அவர் சொன்னது ஆச்சர்யமாக இருந்தது. அவரை இசையறிஞர், சினிமா இசை யமைப்பாளர் என்றெல்லாம் பார்க்க முடியவில்லை. இசைஞானி என்று கலைஞர் சூட்டிய பட்டம்தான் பொருத்தமானது. அதுவும் ஞானி என்று சொல்வது தான் முழு பொருத்தம். தமிழ்ப் புலமை, பாண்டித்தியம், மொழி அறிவு, பாடல் புனையும் ஆற்றல்... இப்படி எத்தனையோ தனித் திறமைகள்கொண்டவராக அவர் இருப்பதை உணர முடிந்தது.
இப்படிப்பட்ட மனிதரை இத்தனை ஆண்டுகளாகச் சந்திக்க முடியாமல் இருந்துவிட்டேனே என்ற வருத்தம் எனக்கு மிஞ்சியது. புறப்படும்போது, 'எங்களுக்கு உங்களது வழிகாட்டுதல் வேண்டும்' என்று கேட்டோம். 'நல்லதையே செய்யுங்கள்' என்று சொன்னார். அப்படியே ஆகட்டும் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு வந்தேன்'' என்று முடித்தார் திருமாவளவன்.
சிறுத்தையின்ஆர்வத்தைப் பார்த்தால் இனி, அடிக்கடி ராஜாவைச் சந்திக்கும்போல!