பம்மலார்,
எங்கள் நாஞ்சில் நகரில் பட்டிக்காடா பட்டணமா ஓடிய நாட்கள் எத்தனை? :)
Printable View
பம்மலார்,
எங்கள் நாஞ்சில் நகரில் பட்டிக்காடா பட்டணமா ஓடிய நாட்கள் எத்தனை? :)
மதுரையில் அமோக வெற்றி பெற்றதற்கு இன்னொரு காரணம்!
இது மதுரைக்கு அருகில் உள்ள சோழவந்தானில் நடப்பதாக எடுக்கப் பட்டதால் மதுரை மக்கள் இதை அதிகம்ரசித்தார்கள் என்று சொல்லலாம் :)
சோழவந்தானில் கதைக்களம் மட்டுமல்ல, படப்பதிவும் அங்கே தான் நடந்தது. குறிப்பாக டி.ஆர்.மஹாலிங்கம் அவர்களின் பண்ணையில் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப் பட்டதாக படித்திருக்கிறேன். ஷூட்டிங் சமயத்தில் நடிகர் திலகத்துடன் டி.ஆர். மஹாலிங்கம் அவர்கள் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட படங்கள் பத்திரிகைகளில் வந்ததுண்டு.
ராகவேந்திரன்
டியர் ஜோ சார்,Quote:
Originally Posted by joe
நாஞ்சில் நகரில், பட்டிக்காடா பட்டணமா, பயோனீர் பிக்சர் பேலஸ் அரங்கில், 50 நாட்கள் ஓடி அமோக வெற்றி கண்டது.
அன்புடன்,
பம்மலார்.
விரைவில் சென்னை மஹாலக்ஷ்மியில் நடிகர் திலகத்தின் இரு மாறுபட்ட வேடங்களில், என்னைப் போல் ஒருவன், வெளியாகிறது.
ராகவேந்திரன்
தகவலுக்கு நன்றி ராகவேந்திரன் சார்.Quote:
Originally Posted by RAGHAVENDRA
சகோதரி சாரதா காட்டில் மழை தான். இத்தகவல் குறித்து, நம் எல்லோரையும் விட ஒரு படி மேலாக அவர் தான் அதிக சந்தோஷப்படுவார்.
அன்புடன்,
பம்மலார்.
Guys,
Let me recall TMM's 1st confrence held at Madurai.
Thalaivar's TMM 1st confrence held at Madurai was one of big rally and crowd had for some time.
Whole Madurai was had TMM's flag white and red and every where thalaivar's song going and huge crowd gathered at Madurai Thappukkam and most of other political leaders surprised a lot by seeing this crowd. I could remember myself sitting corner of Thammmukkam ground and thalaivar telling "Pillaikale"...
Its indeed sad that TMM was not progressed like ADMK, whose fault?? That time I was a kid and not had much political knowledge.
I appreciate people remember about TMM 1st confrence.
Cheers,
Sathish
’என் தமிழ் என் மக்கள்’ திரைப்படம் இது வரை நான் பார்த்ததில்லை ..வி.சி.டி , டி.வி.டி களோ ,பாடல் காட்சிகளோ ,ஒரு துணுக்கு காட்சியோ கூட எங்கும் பார்த்ததில்லை.
ஏன்? இந்த படத்தை எப்படி பார்ப்பது ? :roll:
Hi all,
I got some news about TMM at
http://en.wikipedia.org
/wiki/Thamizhaga_Munnetra_Munnani
But it would be good to see photos.
Cheers,
Sathish
நக்கீரன் வாரமிருமுறை இதழின், லேட்டஸ்ட் (21.5.2010) இதழில், வெளியாகியுள்ள ஒரு சாக்லெட் தகவல்:
http://pammalar.webs.com/apps/photos...otoid=83278117
நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவையின் தலைவர் திரு.கே.சந்திரசேகரன் அவர்களின் பெருமுயற்சிக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள், நன்றிகள், வாழ்த்துக்கள்!
அன்புடன்,
பம்மலார்.
A fantastic response to all those who said that TMS sings in high pitch.
http://www.youtube.com/watch?v=R8mgr...eature=channel
who says that the younger generation cannot enjoy classic songs?
Quote:
i cant believe that searching for this songs and listing to them .. i wish my dad was around to see me doing this... he used keep these songs so loud and i used get bugged in the night ,.. i miss him so much and these songs are filling in for him i guess .i just love these songs now ... i miss you appa ...
danny6246 5 months ago
Quote:
I want to die while i am hearing this song (no words to tell, fantabulous)
and some historyQuote:
Can you please translate the lyric in to English...
I would love to understand it... Pleaseeee
Quote:
How this songs was shhot.heard from M.S.Viswanathan during an interview;
After composing the song by Kannadhasan, TM Soundhararajan and MSViswanathan the song was sent to Sivaji ganesan for him to prepare for the next day shooting as it was in pracice those days.Sivaji was so
influenced by it and took thre days to prepare himself for this song!!!!!!!!
So it turned out to be so great.MSV liked the moving of cigaratte by Sivaji in the song.
thanks for the good news :)Quote:
Originally Posted by RAGHAVENDRA
I often used to wonder why people always compare Nadigar Thilagam with Marlon Brando when they are poles apart as far as acting is concerned. Both of them have unique style, appearance, gait, acting method etc., and you will notice that there is a stark difference in their performance. Both of them are legends in their own way.
NT is a master in memorizing his lines even if it runs to more than 30-40 pages whereas in most of the films, Brando has refused to memorize his lines.
In the film, “ Last Tango in Paris “, Brando, as usual, has refused to memorize his lines and decided to write them on a cue card and pasted them around the sets for easy reference!! There is a long monologue in the film where Brando sits beside his dead wife and speaks with all emotion and I was surprised to learn that he actually uttered those dialogues by looking at the cue cards pasted all over the sets. Brando even asked Bertolucci, the director if he could paste the dialogues on the actress’s rear end !!! :D
One of Brando’s characteristic feature is to lift his eyebrows upwards and he does it in this scene also which was not spontaneous. He did it in order to search for his next cue, according to wiki.
Now, I began to ruminate NT’s performance in Cheran Senguttuvan scene (I’m not comparing here, but just trying to differentiate :) ).
This is not at all an attempt to demean Brando and who the hell am I to do so?? After all, Don Veto Corleone is my favourite guest who frequently visit my drawing room.
Dear Mohan,
I wonder how would you have seen the film "Last Tango in Paris" which was banned in India and as far as my memory goes, the distributor never tried to release the film afterwards. Maybe you must have watched it in a video. From your posting I only made a guess that you saw the film, but I am not sure.
The raising of eye brow is a mannerism of Sir Marlon Brando which he guises occasionally. I feel Marlon Brando was lucky enough that NT did not go to hollywood.
Raghavendran
Pammalar SirQuote:
Originally Posted by pammalar
I talked with my father-in-law and he did say that vasantha maaligai was also released in that theatre and completed 100 days there. He was in mid-teens during then and theatre was taken care by his father then and that could be the reason , He might be going by the no. on the shield. According to him the function happened right in front of the theatre. BTW Salem Nataraja is not that far from that place. Thanks for all the statistics.
சிங்கை வசந்தம் தொலைக்காட்சியில் நாளை வெள்ளி இரவு 9 மணிக்கு நடிகர் திலகத்தின் ‘பட்டிக்காடா பட்டணமா?’
சிங்கப்பூர் நேரமா அல்லது இந்திய நேரமா?Quote:
Originally Posted by joe
ராகவேந்திரன்
சிங்கை நேரம் :)Quote:
Originally Posted by RAGHAVENDRA
உண்மை. நானும் இந்தப் படத்தை பார்த்ததேயில்லை. சி.டி. கிடைக்கிறதா என்று தெரியவில்லை.Quote:
Originally Posted by joe
ராகவேந்தர் சார்,
தங்கள் வரவேற்பிற்கும் என்னைப் போல் ஒருவன் செய்திக்கும் நன்றி. நான் எங்கும் போய் விடவில்லை. இங்குதான் இருக்கிறேன்
அன்புடன்
நடிகர் திலகம் மதுரையில் குவித்த தொடர் வெற்றிகள்
சில மாதங்களுக்கு முன்பு வேறொரு திரியில் ஒரு விவாதத்தின் போது தொடர்ந்து படங்கள் வெளிவந்தாலும் நடிகர் திலகத்தின் படங்கள் தொடர்ந்து வெற்றி பெறும், பெற்றன என்பதை பேசினோம். அப்போது குறிப்பாக 1966, 67, 68 வருடங்களைப் பற்றி ஒரு ஒப்பிடல் வந்தது. இந்த மூன்று வருடங்களில் நடிகர் திலகம் நடித்து 20 படங்கள் வெளிவந்தன. இவை அனைத்துமே [ஒன்றை தவிர] மதுரையில் 50 நாட்களையும் தாண்டி ஓடியிருக்கின்றன என்பதுதான் சிறப்பம்சம். அதே காலக்கட்டத்தில் எல்லா நடிகர்களுக்கும் கிட்டத்தட்ட இதே
எண்ணிக்கையில் படங்கள் வெளிவந்தன. ஆனால் யாருக்குமே இப்படி ஒரு வெற்றி கிடைக்கவில்லை. வேறு எவருக்கும் இது போல அனைத்துப் படங்களும் 50 நாட்கள் ஓடவில்லை.
பட்டியல் இதோ
1966
1 மோட்டார் சுந்தரம் பிள்ளை - கல்பனா - 100 நாட்கள்
2. மகாகவி காளிதாஸ் - ஸ்ரீதேவி & லட்சுமி - 57 நாட்கள்
3. சரஸ்வதி சபதம் - ஸ்ரீதேவி - 104 நாட்கள்
4. செல்வம் - சென்ட்ரல் - 64 நாட்கள்
1967
5. கந்தன் கருணை - நியூசினிமா - 125 நாட்கள்
6. நெஞ்சிருக்கும் வரை - சென்ட்ரல் - 43 நாட்கள்
7. பேசும் தெய்வம் - சிந்தாமணி - 70 நாட்கள்
8. தங்கை - நியூசினிமா - 70 நாட்கள்
9. பாலாடை - ஸ்ரீமீனாட்சி - 57 நாட்கள்
10.திருவருட்செல்வர் - நியூசினிமா - 84 நாட்கள்
11 இரு மலர்கள் - நியூ சினிமா - 75 நாட்கள்
12.ஊட்டி வரை உறவு - சென்ட்ரல் - 114 நாட்கள்
1968
13.திருமால் பெருமை - ஸ்ரீதேவி - 71 நாட்கள்
14.கலாட்டா கல்யாணம் - ஸ்ரீமீனாட்சி - 70 நாட்கள்
15.ஹரிச்சந்திரா - கல்பனா - 63 நாட்கள்
16.என் தம்பி - சென்ட்ரல் - 84 நாட்கள்
17.தில்லானா மோகனாம்பாள் - சிந்தாமணி - 132 நாட்கள்
18.எங்க ஊர் ராஜா - நியூ சினிமா - 72 நாட்கள்
19.லட்சுமி கல்யாணம் - ஸ்ரீதேவி - 60 நாட்கள்
20.உயர்ந்த மனிதன் - சென்ட்ரல் - 70 நாட்கள்
ஏராளமான முறை சொன்னாலும் கூட சலிக்காது நாங்கள் சொல்லக்கூடிய ஒரு உண்மை - மதுரை என்றென்றும் நடிகர் திலகத்தின் கோட்டை.
அன்புடன்
PS: சாரதா, என்னுடன் சண்டை போடுவீர்கள் [செல்லமாக தான்] என்று தெரியும். இருந்தும் இதை எழுதுகிறேன்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 20
கே: நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிரெஞ்சு அரசு கூட விருது வழங்குகிறதே, நம் இந்திய அரசு? (கோவி.முருகையன், மாராபட்டு)
ப: வள்ளுவனுக்கு சங்கப்பலகை இடம் கொடுக்க மறுத்தது. கம்பனை ஸ்ரீரங்கம் கண்டு கொள்ளவே இல்லை. கவிதைப் போட்டியில் பாரதிக்கு இரண்டாவது இடம் தான் கிடைத்தது. இவர்கள் எல்லாம் இன்றும் வாழ்கிறார்கள். எதிர்த்தவர்கள் எங்கே? சாதனையாளர்களோ சரித்திரம். அரசாங்கப் பரிசுகள் அன்றோடு மறந்து போகும் செய்தி.
(ஆதாரம் : தினமணி கதிர், 21.8.1994)
அன்புடன்,
பம்மலார்.
டியர் ராகவேந்திரன் சார்,Quote:
Originally Posted by RAGHAVENDRA
தங்களது பாராட்டுக்களுக்கு எனது நன்றிகள் என்றென்றும்.
தங்களின் ஆவலையும், எதிர்பார்ப்பையும் என்னால் இயன்ற அளவு பூர்த்தி செய்கிறேன்.
அன்புடன்,
பம்மலார்.
டியர் முரளி சார்Quote:
Originally Posted by Murali Srinivas
தங்களுடைய பதிவுகளைப் பார்த்தேன், படித்தேன், மகிழ்ந்தேன். நன்றி. உங்களை யார் போக விட்டார்க்ள்.
என் தமிழ் என் மக்கள் படம் கிட்டத்தட்ட நடிகர் திலகத்தின் அரசியல் வாழ்க்கையை ஒத்திருக்கும். சம்பவங்கள் லேசாக திரைக்கதைக் கேற்றவாறு அமைக்கப்பட்டிருக்கும். மற்ற படங்களில் நடிப்பால் நம் கண்களைக் குளமாக்கினார் என்றால் இப் படத்தின் கதையே நம் உள்ளத்தை, குறிப்பாக ரசிகர்கள், உருக்கி விடும். படம் பிரமாதமாக ஒன்றும் அமைய வில்லை என்றாலும் கூட ரசிகர்களின் உள்ளத்தை அப்படியே பிரதிபலித்தது எனலாம். நம் த.மு.மு. கொடி படத்தில் பட்டொளி வீசிப் பறக்கும். நடிகர் திலகம் காங்கிரஸிலிருந்து விலகி வந்த அன்றைய அரசியல் சூழலைத் தழுவி எடுக்க்ப் பட்ட படம். பாடல்கள் சரியாக அமையவில்லை என்பதும் ஒரு காரணம்.
ராகவேந்திரன்
நடிகர் திலகம் நடித்த ஒரே தொலைக்காட்சித் தொடரான மீண்டும் கௌரவம், இணயத்தில் பார்வைக்காக தரப்பட்டுள்ளது. இது வரை அதனைப் பார்த்திராத பலர் இருக்கக் கூடும். இருபது பகுதிகள் உள்ளன. அவர்களுக்காக இதோ அந்த இணைப்புகள்
http://www.rajshritamil.com/Video/Me...avam-Episode-1
http://www.rajshritamil.com/Video/Me...avam-Episode-2
http://www.rajshritamil.com/Video/Me...avam-Episode-3
http://www.rajshritamil.com/Video/Me...avam-Episode-4
http://www.rajshritamil.com/Video/Me...avam-Episode-5
http://www.rajshritamil.com/Video/Me...avam-Episode-6
http://www.rajshritamil.com/Video/Me...avam-Episode-7
http://www.rajshritamil.com/Video/Me...avam-Episode-8
http://www.rajshritamil.com/Video/Me...avam-Episode-9
http://www.rajshritamil.com/Video/Me...vam-Episode-10
http://www.rajshritamil.com/Video/Me...vam-Episode-11
http://www.rajshritamil.com/Video/Me...vam-Episode-12
http://www.rajshritamil.com/Video/Me...vam-Episode-13
http://www.rajshritamil.com/Video/Me...vam-Episode-14
http://www.rajshritamil.com/Video/Me...vam-Episode-15
http://www.rajshritamil.com/Video/Me...vam-Episode-16
http://www.rajshritamil.com/Video/Me...vam-Episode-17
http://www.rajshritamil.com/Video/Me...vam-Episode-18
http://www.rajshritamil.com/Video/Me...vam-Episode-19
http://www.rajshritamil.com/Video/Me...vam-Episode-20
ராகவேந்திரன்
சில வருடங்களுக்கு முன் பெங்களூரில் மியூசிக் வேர்ல்ட் / பிளானெட் M இல் என் தமிழ் என் மக்கள் cd பார்த்தாக ஞாபகம் . விசாரித்து விவரம் தெரிவிக்க்றேன். கிழே கொடுக்கப்பட்டுள்ள வலையில் கிடைபதாக அறிந்தேன். நாட் sure .
http://www.anytamil.com/php/searlist.php
I vaguely remember seeing the banner of ETEM which was placed in Bhuvaneswari theatre. NT almost had the same looks of Mudhal Mariyadhai in this film, if I'm right.Quote:
Originally Posted by RAGHAVENDRA
NT Part 6 about to cross 58 pages in such a short time. My God ! what a sprint !!! :clap:
Wishes to all the participants and keep going :thumbsup:
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 21
கே: 'சிவந்த மண்' எதிர்பார்த்த அளவு வெற்றி தரவில்லையே, காரணம் என்ன? (என்.பி.ஈஸ்வர், திருவனந்தபுரம் - 2)
ப: பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடுமாம்! ஸ்ரீதரே மலைக்குமளவுக்கு வெற்றி தந்த படம் அது. கதை விடாதீர்!
(ஆதாரம் : பேசும் படம், ஜூன் 1970)
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 22
கே: நடிகர் திலகம் இதுவரை நடிக்காத ஏதாவது ஒரு பாத்திரம்? (ஆர்.கர்ணன், பெத்தெரங்கபுரம்)
ப: போலி அரசியல்வாதி!
(ஆதாரம் : பொம்மை, பிப்ரவரி 1994)
அன்புடன்,
பம்மலார்.
டியர் முரளி...
சச்சின் எத்தனை செஞ்சுரிகள் அடித்தார் என்றுதான் கணக்கிடுவார்களே தவிர, எத்தனை முறை 80 - 90ல் அவுட்டானார் என்று யாரும் கனக்கில் கொள்வதில்லை.
அந்த வகையில் 1966, 67,68-ல் நடிகர்திலகம் மதுரை கிரவுண்டில் அடித்த செஞ்சுரிகள் - (5) ஐந்து (மோட்டார் சுந்தரம் பிள்ளை, சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, ஊட்டிவரை உறவு, தில்லானா)
அதே 1966, 67, 68-ல் அவர் சென்னை கிரவுண்டில் அடித்த செஞ்சுரிகள் - (7) ஏழு (சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, ஊட்டிவரை உறவு, இரு மலர்கள், கலாட்டா கல்யாணம், தில்லானா, உயர்ந்த மனிதன்)
ஐந்து செஞ்சுரிக்கே கோட்டை என்றால், ஏழு செஞ்சுரி அடித்த ஸ்டேடியத்தை என்ன சொல்வீர்கள்?.
இது ஒருபக்கம் இருக்க, அதென்ன 'நெஞ்சிருக்கும் வரை' 43 நாட்கள்?. இது 'முத்துக்களோ கண்கள்' பாடலுக்கே சரியா போச்சே, அப்படத்திலுள்ள மற்ற விஷயங்களுக்கெல்லாம் எப்படி..?.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 23
கே: நடிப்பிலே போதிய தேர்ச்சி இல்லாத மஞ்சுளா, உஷாநந்தினி போன்ற நடிகையருடன் சிவாஜி இணைந்து நடிக்கத் தான் வேண்டுமா? (மதுரைவாலா, தாராபுரம்)
ப: அவர்கள் இருவரும் வளர வேண்டிய நடிகைகள், போகப் போக வளர்ச்சியை நடிப்பில் காட்டும் ஆர்வம் கொண்டவர்கள். சிவாஜி இவர்களுடன் நடித்து, நடிப்பு சொல்லிக் கொடுத்து, தைரியமூட்டி இவர்களுக்கு ஒரு நம்பிக்கையூட்டுகிறார். இன்னாருடன் தான் நடிக்க வேண்டும் என்று சிவாஜி முடிவு செய்திருந்தால், பல நடிகைகள் முன்னுக்கு வந்திருக்க முடியாது தெரியுமோ!
(ஆதாரம் : பேசும் படம், நவம்பர் 1974)
அன்புடன்,
பம்மலார்.
சாரதா,
நான் சொல்ல வந்தது வேறு. நான் சென்னையில் நடிகர் திலகத்தின் சாதனைகளையும் மதுரையில் அவர் நிகழ்த்திய சாதனைகளையும் ஒப்பிடவேயில்லை. மீண்டும் படித்துப் பாருங்கள். நான் சொல்லியிருப்பது, அதே காலக்கட்டத்தில் அன்றைக்கு முன்னணியில் இருந்த அனைத்து நடிகர்களுக்கும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையில் [20] படங்கள் வெளிவந்தன [1966,67,68]. ஆனால் நடிகர் திலகத்தின் படங்கள் மட்டும்தான் இந்த வெற்றிகளை பெற்றிருக்கின்றன. வேறு எந்த நடிகருக்கும் மதுரையில் அனைத்துப் படங்களும் இந்த வெற்றிக் கோட்டை தொடவில்லை என்பதைத்தான் குறிப்பிட்டிருந்தேன்.
நீங்கள் என்னுடன் (செல்லமாக) சண்டை போடுவீர்கள் என நான் குறிப்பிட்டது எதற்காக என்றால் மதுரை புகழ் பாடுகிறேன் என சொல்லுவீர்கள் என்பதற்காகத்தான்.
உங்கள் அதீத ஆர்வத்தில் நீங்களே சென்னையின் ஒரு செஞ்சுரியை குறைத்து விட்டீர்களே. ஆம், மோட்டார் சுந்தரம் பிள்ளையைதான் குறிப்பிடுகிறேன். அதுவும் சேர்த்து சென்னையில் 8.
ஆனால் ஒன்று. சென்னை அளவிற்கு திரையரங்குகளோ, மக்கள் தொகையோ இல்லாத மதுரையில் அனைத்துப் படங்களுமே 8 வாரங்களும் அதற்கும் மேலும் வெற்றிகரமாக ஓடுவதும் அவற்றில் சில தமிழகத்திலே அதிக நாட்கள் ஓடியதும் எங்கள் மதுரையில்தான் என சொல்லும் போது எங்கள் பெருமை நியாயமானதுதானே!
நெஞ்சிருக்கும் வரையைப் பொறுத்தவரை நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். அதைப் பற்றி தனிப்பட்ட முறையில் கூட எனக்கு மிக பெரிய வருத்தம் உண்டு. எப்படி ஆண்டவன் கட்டளை, நீல வானம் போன்றவை பெற வேண்டிய வெற்றியை பெறவில்லை என்பதில் நமக்கு பெரிய அளவு வருத்தம் இருக்கிறதோ அதே அளவு வருத்தம் இந்தப் படத்தைப் பொறுத்தவரைக்கும் இருக்கிறது. இடைவேளைக்கு பிறகு கதையில் விநியோகஸ்தர்களின் நிர்பந்தம் காரணமாக ஏற்படுத்திய மாற்றங்களினாலும் தமிழகத்தின் தலை எழுத்தையே மாற்றிய 1967 பொதுத் தேர்தலின் போது வெளியானதாலும் [ரிலீஸ் தேதி 02.03.1967], படத்தின் வெற்றி பாதித்தது. காரணங்கள் பல சொன்னாலும் அது ஒரு வருத்தமாகவே என்றும் இருக்கும். இங்கே பதிவிடுவதற்கு முன் சுவாமி அவர்களிடமும் இதே கருத்தைத்தான் குறிப்பிட்டேன்.
அன்புடன்
டியர் முரளி....Quote:
Originally Posted by Murali Srinivas
'மோட்டார் சுந்தரம் பிள்ளை' சென்னையில் 100 நாட்கள் ஓடவில்லை. மதுரையில் மட்டும்தான். சென்னையில் பத்து வாரங்கள்தான் ஒடியது.
ஆனால் எல்லாப்படங்களும் சென்னையில் குறைந்தது மூன்று முதல் ஐந்து திரையரங்குகளில் ரிலீஸாகிறது. ஆனால் மதுரையில் ஒரு அரங்கில்தானே. (எப்போதாவது அபூர்வமாக இரண்டு, அந்த இரண்டாவது அரங்கில் பத்து பதினைந்து நாட்களில் எடுக்கப்பட்டுவிடும்).Quote:
Originally Posted by Murali Srinivas
அதே சமயம் சென்னையில் பத்து வாரங்கள் 'நெஞ்சிருக்கும் வரை' ஓடியது. (புதுமை செய்கிறேன் என்று 'முத்துக்களோ கண்கள்' பாடலை இயக்குனர் ஷ்ரீதர் ரொம்ப இருட்டாக்கி விட்டார். போதாக்குறைக்கு இருவருக்கும் மேக்கப்பும் கிடையாது. அதே சிச்சுவேஷனில் அமைந்த 'மடிமீது தலைவைத்து' (அன்னை இல்லம்) பாடலை அவரது சீடர் மாதவன் சூப்பராக பண்ணியிருந்தார்).Quote:
Originally Posted by Murali Srinivas
மதுரை ஒரு விசித்திரமான ஊர். மற்ற இடங்களில் நன்றாக ஓடிய சிலபடங்கள் அங்கே ஓடியதில்லை. மற்ற இடங்களில் அவ்வளவாக ஓடாத பல படங்கள் அங்கு ஒடி வெற்றியடைந்திருக்கின்றன.
சகோதரி சாரதா,Quote:
Originally Posted by saradhaa_sn
'மோட்டார் சுந்தரம் பிள்ளை' சென்னையில் 78 நாட்கள் மிக வெற்றிகரமாக ஓடியது.
சாந்தி - 78 நாட்கள் (26.1.1966 முதல் 13.4.1966 வரை : 14.4.1966 முதல் 'ஃபான்டோமாஸ்' ஆங்கிலத் திரைப்படம்)
கிரௌன் - 78 நாட்கள் (26.1.1966 முதல் 13.4.1966 வரை : 14.4.1966 முதல் 'சாதுமிரண்டால்' திரைப்படம்)
புவனேஸ்வரி - 78 நாட்கள் (26.1.1966 முதல் 13.4.1966 வரை : 14.4.1966 முதல் 'சாதுமிரண்டால்' திரைப்படம்)
100 நாட்கள் ஓடிய சென்டர்கள்:
மதுரை - கல்பனா
திருச்சி - பிரபாத்
அன்புடன்,
பம்மலார்.
தமிழன் எக்ஸ்பிரஸ் 13.5.2010 இதழில் வெளியாகியுள்ள தலையங்கம்:
http://pammalar.webs.com/apps/photos...otoid=83700210
இதனை எமக்கு மின்னஞ்சல் செய்த நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவைத் தலைவர் திரு.கே.சந்திரசேகரன் அவர்களுக்கு உளங்கனிந்த நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
இரு வாரங்களுக்கு முன்னர் காபி வித் அனு நிகழ்ச்சியில் வந்த நடிகர் விஜயகுமார் தான் நடிக்க வேண்டும் என முடிவெடுத்ததற்கே நடிகர் திலகம் தூண்டுகோலாக அமைந்த நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக வெளிப்படுத்தினார் .
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 24
கே: 'தெய்வமகன்' படம் உலகப் படவிழாவுக்குப் போவது பற்றி உங்கள் கருத்து என்ன? (எஸ்.எஸ்.மணி, திருவனந்தபுரம்)
ப: இந்தியனாகப் பிறந்த ஒவ்வொருவனும் - குறிப்பாக தமிழன் பெருமைப்பட வேண்டும்.
(ஆதாரம் : பேசும் படம், பிப்ரவரி 1970)
அன்புடன்,
பம்மலார்.
PAMMAL SIR,Quote:
Originally Posted by pammalar
It was world film festival or oscar nomination?
டியர் ரங்கன்,
அந்தக் கேள்வி கேட்டவர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த எஸ்.எஸ்.மணி. அவர் எம்.ஜி.ஆர். அவர்க்ளின் ரசிகர் என்றாலும் அந்தக் காலத்திலேயே நடிகர் திலகத்தின் படங்களையும் நடிகர் திலகத்தின் நடிப்பையும் பாராட்டத் தயங்க மாட்டார். சிறந்த வெளிநாட்டுப் படம் என்கின்ற பிரிவில் இந்திய அரசின் சார்பில் எதிர்ப்புகளைச் சந்தித்து அனுப்பப் பட்ட படம் தெய்வ மகன். அதைத் தான் அவர் அவ்வாறு கேட்டுள்ளார் என்பது என் எண்ணம்.
ராகவேந்திரன்