http://i48.tinypic.com/2d6jfw7.jpg
டிசம்பர் 24, 1987
உலகத் தமிழர்கள் வாழ்வில் இருள் சூழ்ந்த நாள். மறக்க முடியாத கறுப்பு தினம். மக்கள் திலகம் அவர்களை துரத்தித் துரத்தி தோல்வி கண்ட காலன் இவர் துயிலும் போது பறித்துச் சென்ற நாள். ஏழை மக்களின் ஒளிவிளக்காய் திகழ்ந்த மக்கள் திலகம் மண்ணுலகை விட்டு மறைந்த நாள். ஆனாலும் நம் நெஞ்சங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் அவரது நினைவுகள் நம் வாழ்நாள் முழுவதும் நம்மை வழிநடத்தும். அவரது படங்கள் நமக்குப் பாடங்கள். அவர் வகுத்து தந்த அரசியல் சித்தாந்தங்கள் நம்மை வாழ வைக்கும். 25 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. உலகம் உள்ளவரை உத்தமத் தலைவன் அவன் பேரும் இருக்கும்.
வாழ்க எம்.ஜி.ஆர் புகழ்!
http://i49.tinypic.com/prpeh.jpg