மக்கள் திலகத்தின் நடிப்பின் திறமைகள் .
நடிப்பு என்பது கற்பனையான ஒன்று .அதை நடிக்கும்போது தன்னுள் இருக்கும் ஆற்றலை ஒருவர் வெளிபடுத்தும்போது ரசிகர்கள் மற்றும் மக்கள் நடிப்பை ரசித்து ஒரு சிறந்த நடிகராக ஏற்று கொள்கிறார்கள் .
http://i41.tinypic.com/107tbnr.jpg
தன்னுடைய கொள்கைபிடிப்பினால் தனக்கு பிடித்த கதா பாத்திரத்தில் கொள்கை வேந்தனாக நடித்ததின் மூலம்
''புரட்சி நடிகர் '' ஆனார் .
அளவான வசனம் - சாந்தமான தோற்றம் - வீரமான சாகசம்
சிந்தனை தூண்டும் காட்சிகள் -எல்லோருக்கும் எளிதில் புரியும்
பாடல்கள் - வன்முறை இல்லா சண்டை காட்சிகள் -மரியாதையும் - நாகரிகமும் கலந்த காதல் காட்சிகள்
இதுதான் மக்கள் திலகமும் அவரது ரசிகர்களும் -மக்களும் விரும்பிய படங்கள் .
இதனால்தான் அவரது படங்கள் இன்றும் பேசப்படுகிறது .
மக்கள் விரும்பி மீண்டும் மீண்டும் பார்க்கிறார்கள் .
ஒரே மாதிரி நடிப்பு என்றால் யார் படம் பார்ப்ப்பார்கள் ?
படத்திற்கு படம் வித்தியாசமான வேடங்களில் மக்கள் திலகம்
நடித்து வெற்றிக்கொடி நாட்டினார் .