In fact, some one should write to Behindwoods also to first verify/authenticate certain facts before publishing such articles, which ultimately will retain the reputation of Behindwoods only!
Printable View
Ivan vera madhiri-mammoth garlands IN LAVANYA THEATRE BANGALORE by our fellow hubber kumaresanprabhu and other sivaji fans
As far as Hindi Cine field is concerned, Sanjeev Kumar's acting was somewhat different and soon he established his name as a fine character artiste who has versatility, as proved by his tear jerking act in Koshish, Kilona...etc., even in a star studded movie Sholay dominated by Dharmendra and Bachchan, Sanjeev Kumar could standout as the hero of the story around him only. However, Sanjeev saab could never establish himself as a bankable icon like Dharmendra or Rajesh Khanna or Bachchan! His acting skills were appreciated even as he could win Bharath award.. like that! Being a Tamilian NT was cursed with the dirty politics which hindered his national awards even though he proved far and above that by winning the Afro-Asian award for VPKB, a nice nose-cut to the Indian political bundits who shunned NT. But.... dear reviewer! Sanjeev Kumar can never ever be compared with a thespian and a legend like the one and only Sivaji Ganesan who remains a Universal Set of acting while Sanjeev saab is merely a subset of Sivaji Ganesan! Ganesan is the ocean of acting while Sanjeev was merely a drop in the ocean. I have seen all Sanjeev movies.... including his 9 roles in Naya Din Nayi Raath... churned out of NT's milestone/bench mark movie Navarathiri. NT right from his thunderous entry via Parasakthi through his mesmerising performances in movies like VPKB, Pudhiya Paravai, Deiva Magan...till his prestigious presences in later movies with other heroes, he proved the giant who can be construed as a never before never again phenomenon as fortified by the phenomenal success of his Karnan in its rerelease, corroborating his resale value and rerun potential of his movies till date! Sanjeev's tenure is short lived. We NT fans admire Sanjeevji merely for the reason that he remained the greatest fan of Sivaji Ganesan.
Again a worthwhile Quote from P_R Yester years post.
It was which was the best Sivaji movie ever. And as a movie, I think 'Thillana Mohanambal' was a very complete movie. Marvellous casting, excellent performances and scintillating music. Great viewing from start to finish. And of course Sivaji's performance is matchless. For instance...
When he goes to Thiruvaroor with (Baliah forcing his company) he sees Balaji visiting Mohana's house and gets miffed. He asks Baliah to go back to Sikkal and says he will go to Nagapatnam and come some time later.
Baliah: Kai selavukku Panam vachurukkiya thambi...?
Sivaji: (seething) panam ennannE panam....panathukkaaga thaanENNe ivaLuga indha aattam aadraaluva.....naanum vachurukkENNEn panam...naanum aadurEn.
You see how a harmless inquiry like the one Baliah makes, touches his sensitive nerve. He goes off on a tangent and the look on the face is one of hurt and bubbling anger.
There are several other instances where you can see the insecure, possesive, even slightly arrogant genius, who is basically a simple man. That performance had a lot of subtleties that is largely overshadowed by the bigger scheme of things.
Again a worthwhile Quote from P_R Yester years post.
It was which was the best Sivaji movie ever. And as a movie, I think 'Thillana Mohanambal' was a very complete movie. Marvellous casting, excellent performances and scintillating music. Great viewing from start to finish. And of course Sivaji's performance is matchless. For instance...
When he goes to Thiruvaroor with (Baliah forcing his company) he sees Balaji visiting Mohana's house and gets miffed. He asks Baliah to go back to Sikkal and says he will go to Nagapatnam and come some time later.
Baliah: Kai selavukku Panam vachurukkiya thambi...?
Sivaji: (seething) panam ennannE panam....panathukkaaga thaanENNe ivaLuga indha aattam aadraaluva.....naanum vachurukkENNEn panam...naanum aadurEn.
You see how a harmless inquiry like the one Baliah makes, touches his sensitive nerve. He goes off on a tangent and the look on the face is one of hurt and bubbling anger.
There are several other instances where you can see the insecure, possesive, even slightly arrogant genius, who is basically a simple man. That performance had a lot of subtleties that is largely overshadowed by the bigger scheme of things.
என்னுடைய ஏப்ரல் பதினாலு வரிசை.
படித்தால் மட்டும் போதுமா? 1962
எனக்கு மட்டுமல்ல ,பல சிவாஜி ரசிகர்களின் சிறந்த வரிசையில் ,நிச்சயம் இடம் பிடித்திருக்கும்.
அற்புதமான,புதுமையான வங்காள கதை களம் . பீம்சிங் ,ஆரூர்தாசை சரியாக வேலை வாங்கி இருப்பார்.(அளவோடு) .பாடல்கள் ஓஹோ ரகம்.(மாயவ நாதனின் தண்ணிலவு முதல் இடம்)
இந்த மாதிரி மேக் அப் உடன் நடிக்கவே ,ஒரு துணிவு வேண்டும்.தமிழ் பட உலகின் முதல் இட ஸ்டார் எத்தனை துணிச்சல் இருந்தால் இதை செய்வார்?
இந்த பட கோபால், பணக்காரனுக்குரிய தோரணை,வேட்டை காரனுக்குரிய தடாலடி(சிறிதே செயல் கோபம்),படிக்காததினால் ஒரு தயக்கம் கலந்த தாழ்வுணர்வு (மனைவியின் உதாசீனத்தில் இன்னும் கூடும்),மற்றவர்களின் மீது இயல்பான வாஞ்சை,அக்கறை,என்று ஒரு கலவையான ,கனமான பாத்திரம். இது என்ன பெரிய கனம் என்று சுகமான சுமையாக ஊதி தள்ளுவார் அற்புதமாய்.
நல்லவன்,நான் கவிஞனுமில்லை,பொன்னொன்று பாடல்களை முரளி,சாரதி அலசி விட்டார்கள்.
இந்த படத்தின் highlight ,கடைசி பதினைந்து நிமிடங்கள் (இறுதி காட்சி வரை) வசனமே இல்லாமல் (NT க்கு) படம் நகரும். ஒரு magic போல படம் இறுதியை அடையும்.
பார்த்தே ஆக வேண்டிய பா வரிசை.
வியட்நாம் வீடு - 1970
பிராமணர்கள் கொஞ்சம் மிகையான தோரணை, நம்பிக்கைகள், அகந்தை, கொண்டு மற்றோருடன் இருந்து தனித்து தெரிந்த காலம். சில வீட்டில் பெரியோர்களை பார்க்கும் போது நிஜமாகவே வேற்று கிரக வாசிகள் போலவே நடந்து கொள்வார்கள்.நடை,உடை,பாவனை, தோரணை எல்லாவற்றிலும். இத்தனைக்கும் அவர்கள் வீட்டின் நிலவரம் சராசரிக்கும் கீழேதான் இருக்கும். அறிவில்,படிப்பில், சமூக அந்தஸ்தில்,பணத்தில். அப்போது, சில கதைகளில் பிராமணர்களை அறிய வாய்ப்பிருந்தது (அதிக பட்ச எழுத்தாளர்கள்) ஆனால் படங்களில் அந்த சமூகம் பிரதிபலிக்க பட்ட விதம் காமெடிக்காக மட்டுமே. அதுவும் வஞ்ச மனம் கொண்ட காமெடியன் ஆக. எனக்கு சிரிப்பாக வரும்.
இந்த சூழ்நிலையில் எழுபதில் வந்த படம் வியட்நாம் வீடு. இந்த படத்தை ஒரு நல்ல நடு முயற்சி என்று சொல்லலாம். Melodrama வில் இருந்து விலகாமல் , ஒரு ரியலிச படத்திற்கான அம்சங்களை கொண்டிருந்த படம். சமகால பிரச்சினைகளை பேசியது புதிய மீடியத்தில், சமூகத்தில் அந்நிய படுத்த பட்ட, மிகையான நம்பிக்கை,அகந்தை,கவுரவ மனப்பான்மை கொண்ட ஒரு சமூகத்தை மைய படுத்தி அவர்களின் சராசரி பிரச்சினைகளை பேசியது. ஓய்வு பெறவிருக்கும் ஒரு மேல் மத்யதர பிரைவேட் கம்பெனி ஊழியனை பேசியது.(கவர்மென்ட் ஊழியர் என்றால் வேலை பார்க்கும் போது வறுமையிலும்,retire ஆனதும் செழிப்பாகவும் இருப்பார்.பிரைவேட் என்றால் தலை கீழ் ) அவனின் சராசரி உடல் பிரச்சனையை பேசியது. சிறிது moral value வில் பிறழும் அவன் மகனை பற்றி பேசியது.பிறந்த குலத்தில் உள்ள அறிவு செருக்கை இழந்த படிக்காத அவன் மகன் பிரச்சினை பேசியது. பருவ வயதின் பால் பட்டு வழுவ இருந்த மகளை பேசியது. நன்கு சம்பாதித்தும் சேமிக்க தெரியா உயர் சம்பள காரர்களின் வயதான வாழ்க்கையை பேசியது. அவர்களின் positional importance வீட்டிலும்,வெளியிலும்,அலுவலகத்திலும் வதை படும் கொடுமை பேசியது. பிராமணர்களும் நம்மிடையே உள்ள ரத்தமும் ,சதையும் கொண்ட ,பிரச்சினைகளை அன்றாடம் சந்திக்கும் சராசரி மனிதர்களே என்று பேசியது. அந்த மனிதனின் மிகையான நம்பிக்கைகளும்,செருக்கும் சோதனைக்குள்ளான மிடில்-ஏஜ் ,ஓல்ட்-ஏஜ் crisis சமாசாரங்களை ,அறிவு-ஜீவி மேர்பூச்சற்ற நேர்மையான,வெளிப்படையான,பாவனைகள் களைந்த நல்ல முன் முயற்சிதான் வியட்நாம் வீடு.
வியட்நாம் வீட்டின் கதை ஒன்றும் nerrative surprise கொண்டதல்ல. மிக சாதாரண அடுத்த வீட்டு கதை. Prestige பத்மநாபையர் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த தகப்பனை சிறு வயதில் இழந்து,தாயாரால் வறுமையில் வளர்க்க பட்டு,அத்தையால் ஆதரிக்க பட்டு ,அத்தை மகளையே மணந்து நல்வாழ்க்கை
வாழும் ஒரு தனியார் நிறுவன உயர் நிலை ஊதியர்(B.P, இருதய நோய் உண்டு) நல்லொழுக்கம் ,நன்னடத்தை, பேணும்,மற்றோரை பேணும் படி கட்டாய படுத்தும், prestige என்பதை தன மந்திர சொல்லாக கொண்டு வாழ்பவர். அற்புதமான இவர் வாழ்வு, சரியான சேமிப்பில்லாமல், அலுவலகம் இவருக்கு ஓய்வு(retiement )கொடுத்து விட, தயாராய் இல்லாதவர் பிள்ளையை மலை போல் நம்புகிறார். ஆனால் நல்ல வேலையில் உள்ள மூத்தவன் மனைவி பேச்சால் தடம் புரண்டு, அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும் அளவில் சென்று,குடும்ப பொறுப்பையும் ஏற்க மறுக்க, இளையவன் சரியான படிப்பு இல்லாமல் ,சாதாரண தொழிலாளி வேலைக்கு செல்லும் ஒரு பொறுப்பில்லா ஊதாரி. மகளோ ,ஒரு காதலில் மூழ்கி,ஓடி போகும் அளவு வரை சென்று ,சரியான நேரத்தில் ,தந்தையால் மீட்க படுகிறாள். இறுதியில் ,ஓரளவு குடும்பத்தில் அமைதி திரும்பி(புயலுக்கு பின்) ,அவர் இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேரியும், அலுவலகம் அவரை மீண்டும் உயர் பணிக்கு கூப்பிட,ஆனந்த அதிர்ச்சியில் ,உயிர் துறக்கிறார். சாதாரண மேடை நாடக கதையல்லவா?
இனி நம் கடவுள் தன் திருவிளையாடலால் இதை ஒரு cult படமாக்கி,பிரம்மாண்ட வெற்றி பெற வைத்த விந்தையை பார்க்கலாம்.
முதலில் சொன்னால் ,இந்த மாதிரி பாத்திரங்களால்தான், NT , தனது தனித்தன்மையை நிரூபித்து, உலக நடிகர்களிலே முதல்வர் என்று புகழும் அளவு,உயர்ந்து இன்றளவும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராய் போற்ற படுகிறார்.(கமலும் இந்த பாத்திரத்தை மிக சிலாகிப்பார்).மற்ற நடிகர்கள்,தனது இயல்புடனே சிறிது மாற்றம் செய்து ,ஏற்ற பாத்திரத்தை தன் இயல்புக்கு மாற்றுவர். ஆனால் உலகத்திலேயே , கூடு விட்டு கூடு மாறி ஏற்று கொண்ட பாத்திரத்தில் தன்னை நுழைப்பவர் ,நம் NT ஒருவரே. அதனால் ,அவர் எடுக்கும் ரோல் மாடல்,Proto -type , அந்த genre type இல் ,ஒரு அதீத குண,மன நலன்களுடன், பல்வேறு மிகை இயல்பு கொண்ட பாத்திரங்களின் அசல் கலவையாக, அந்தந்த இனத்தையோ,மதத்தையோ,தொழிலையோ,குடும்ப பிரச்சினைகளையோ,மன-உடல் பிரச்சினைகளையோ பாத்திர வார்ப்பில் பிரதிபலிக்கும் போது அதீத கலவைகளின் வார்ப்பாக(சங்கராசார்யார்,டிவிஎஸ் ) இருக்கும். அதை stylised ஆக அவர் நடிக்கும் போது connoisseurs என்று சொல்ல படுபவர்கள் பரவசப்படுவார்கள் அல்லது சக நடிகர்கள் பாடம் கற்று கொள்வார்கள்.(Actors ' actor ) . இது ஒரே மனிதர் பல்வேறு கதாபாத்திரங்களை நடிக்கும் போது, வேறு பாடு காட்டவும், சிவாஜி என்ற கலைஞன், சிவாஜி என்ற கலைஞனை ஒவ்வொரு முறையும் தாண்டி,வேறு படுத்த மிக மிக அவசியம்.
இதில் வரும் prestige பத்மநாபன் பாத்திரம் ஒரு wonder . தான் நடித்ததை திரும்ப நடிக்காத ஒரே மேதை NT மட்டுமே.(ஒரே மாதிரி ரோல் ஆக இருந்த போதும்)
நீங்கள் ஒரு பிராமணரை (வெவ்வேறு வயது கொண்ட)அறுபதுகளில் observe செய்திருக்கீர்களா? செய்யா விட்டாலும் என்னோடு இப்போது பயணியுங்கள். முரண்பாடுகளின் மொத்த மூட்டைதான் அவர்கள். உலகத்திற்காக கிராப், லௌகீகம் காக்க குடுமி, அலுவலம் போக மேல் கோட் ,கீழே லௌகீகம் காக்க பஞ்ச-கச்சம், மேலாதிக்க மனம், ஆனால் பொருளாதாரத்தில் அன்றாடம் காய்ச்சிகள்,வேடிக்கையான சுத்தம், உடலை துடைத்து கொள்ளாமல் ஈரம் உடுத்தி மடி காப்பார்கள்.எல்லோரையும் ஒதுக்கி வைப்பார்கள் ஆசாரத்திற்கு. ஆனால் மிக சிறந்த தனி-மனித நேயம் மிக்கவர்கள்.வித்யாசமான பேச்சு வழக்கு.பேசும் பாணி. எல்லாம் அறிந்தது போல், எல்லாவற்றையும் பேசுவார்கள். வீட்டில் பேசுவது கூட அறிவுரை பாணியிலேயே இருக்கும்.சம்பந்தமில்லாத விருந்தாளியிடமும் அறிவுரை பாணிதான்.பேச்சில் ஒரு assertion , body -language ஒரு கண்டிப்பான ஒரு hand movements , side -on body swings ,வயதுக்கு மீறின ஒரு முதுமை,இயல்பான கோழைத்தனம், பிரச்சினைகளில் புலம்பும் மனம்,மற்றையோரை எல்லார் எதிரிலும்(பிரைவேட் ஆனா விஷயங்களிலும்)கண்டித்து தான் விரும்பியதை சொல்லும் அதீத ஸ்வாதீதம்,ஒரு confined -disciplin இதுதான் நான் பார்த்த பிராமணர்கள்.(தஞ்சாவூர்,திருநெல்வேலி,சென்னை ஆகிய இடங்களில்)
மற்ற எல்லாப்படங்களிலும் நடிகர்திலகம் நடித்த காட்சிகளில் ஹை லைட் என்று சொல்லும் காட்சிகள் இருக்கும். வியட் நாம் வீட்டில் அத்தனை காட்சிகளும் highlight . மேக்-அப் மிக சிறப்பாக இருக்கும். புருவம்,காது மயிர் உட்பட அத்தனை தத்ரூபம்.வியட்நாம் வீடு சுந்தரம் என்ற பிராமண குலத்தை சேர்ந்த ஏழை இளைஜெர் மிக சிறப்பாக வசனத்தை (அன்றாடம் பிராமணர்கள் வீட்டில் உபயோகிக்கும் பேச்சுக்களையே ) கொடுத்திருப்பார்.
சிவாஜியின் பிராமண பேச்சு அவ்வளவு அழகாக இருக்கும். அந்த modulations சாத்திரி என்று மனைவியை அழைக்கும் தொனியில் இருந்து எல்லாமே அருமை.(கண்ணதாசன் பாலக்காட்டு பாடலில் கோட்டை விட்டிருப்பார். இது பாலக்காடு பிராமணர் பேச்சு வழக்கு அல்ல.மனைவியும் புதியவள் அல்ல)ஆனால் பாடலின் அழகு கருதி (Puppet பாணி அற்புத நடன அசைவுகள்) மன்னித்து விடலாம்.
இந்த படத்தில், பின்னால் வரும் காட்சிகளை விட ஆரம்ப காட்சிகள் மிக நன்றாக இருக்கும். நகைச்சுவை மிக இயல்பாக கதையுடன் ,பேச்சு வழக்கை ஒட்டி இருக்கும். ஆரம்ப கிரக பிரவேச காட்சி,ஆபீஸ் புறப்பட தயார் ஆகும் காட்சி, வீட்டுக்கு வந்த பெண்ணின் நண்பிகளை கலாய்க்கும் காட்சி, ஆபிசில் அக்கௌன்டன்ட் நந்த கோபாலை கண்டிக்கும் காட்சி ,வீட்டின் அன்றாட காட்சிகள்,முள் குத்தி கொண்டு வீடு வரும் காட்சி,சின்ன மகன் முரளியின் மேல் கம்ப்ளைன்ட் வந்ததும் படிப்பை நிறுத்தி விட்டு தொழிலாளியை வேலைக்கு அனுப்பும் காட்சி,Retire ஆகும் காட்சி(லாஜிக் உதைத்தாலும்),மனைவியுடன் குடும்ப நிலை விவாதிக்கும் காட்சி, கொஞ்சம் கொஞ்சமாய் வீட்டில் மதிப்பிழக்கும் காட்சிகள், மகன்களை இயலாமை வாட்ட கண்டிக்கும் காட்சிகள், retire ஆனா பிறகு ஆபிஸ் வரும் காட்சி,அறுவை சிகிச்சைக்கும் புறப்படும் காட்சி எல்லாம் பார்த்து அனுபவிக்க வேண்டிய அற்புதம். பார்வைக்கு பார்வை,நடைக்கு நடை பார்த்திராத ஒரு சிவாஜி.(உலகத்திலே ஒருவன் என உயர்ந்து நிற்கும் திலகமே)
ஒரு பிராமண குலத்து உயர் குடும்ப(கஷ்டப்பட்டு முன்னேறிய) பாத்திரத்தை அவ்வளவு perfection உடன் மற்ற பிராமண நடிகர்கள் கூட செய்ததில்லை. இதில் அவர் easy chair ,ஊஞ்சல் ஆகியவற்றை மிக கவனமாய் உபயோகித்து மூட், pasture , கொண்டு வருவார்.
இந்த படத்தில் inflexible preachy disciplinarian & ethical careerist ஆக வரும் பத்மநாபன் சாருக்கு பால்ய அரட்டை நண்பரகள் யாரும் இல்லாதது by design or default எப்படி இருந்த போதிலும் அருமையான விஷயம். அவருக்கு எல்லோரும் எதிர் நிலைதான். இரண்டே பேர் அவரிடம் நேர்மையாய் உள்ளவர்கள் அத்தை(நடு நிலை) அவரது சம்பந்தி justice ரங்கநாதன்(முழுக்க உடன்பாடு ஆனால் தள்ளி நின்று) . Open rebellions அவர் அக்கௌன்டன்ட் நந்த கோபால் ,அவரது மகன் முரளி,மருமகள் மாலா. தொழில் முறை நண்பர்கன் டாக்டர் ,சாஸ்திரிகள். மற்றபடி அவருடன் உடன் படாதவர்கள் மனைவி சாவித்திரி,மகன் ஸ்ரீதர்,மகள் அகிலா,ஆபிஸ் மேல் அதிகாரிகள், கீழ பணிபுரிவோர், அந்த தெரு ஆட்கள் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் எதிர் வினை புரிவார்கள்.வேலையாள் முருகன் உட்பட.
இதில் முரளிக்கு காந்தியின் மகன் நிலைதான். சாவித்திரி மகன்களுக்கு சிறிது இடம் கொடுக்கிறாளா அல்லது மௌன எதிர் வினையா?மாலா தந்தை,மாமா இவர்களை சேர்த்து எதிரியாக பாவிக்கிறாள் என்பது பூடகம்.மகள் அகிலாவோ அளவு மீறிய கட்டுப்பாட்டுக்கு எதிர் வினை புரிகிறாள்.(வலுவாகவே) நந்தகோபால் நல்ல திறமை சாலி.(அல்லது பத்மநாபன் சிபாரிசு செய்வாரா).ஆனால் பத்மநாபனின் british cum brahmin work culture உடன் உடன் பட மறுத்ததால் ,கீழ் நிலை ஊழியர்கள் எதிரில் அவமதிக்க படுகிறான்.அவன் எதிர் வினை மிக சரியானது. மேலதிகாரிகளுக்கும் காலத்தோடு மாறாத அவரை extend பண்ணாமல் retire பண்ணுவது ஒரு எதிர்வினை.
காலத்தோட ஓட்ட ஒழுகாத பத்மநாபன் செயல். மேல் நிலை அடைந்தும் தன் பிடிவாத socio -cultural குணங்களை மட்டுமல்ல ,ஒரு விவசாய குடும்ப மனநிலையில் கூட்டு குடும்பம் பேணி, தனது inefficient finance planning (ஏதாவது எனக்கு தெரியாமல் சேத்து கீத்து வச்சுரிக்கியா-மனைவியிடம்) விளைத்த பிரச்சினையை ,ஒழுங்காக வாழக்கை நடத்தி வரும் மூத்த மகன் மேல் சுமத்தும் சராசரியாகவே உள்ளார்.சவடால் நிறைந்த prestige ,கவைக்குதவாமல் போனதில் ஆச்சர்யம் என்ன?
Retirement scene குறையாக சொல்வோரிடத்தில், பத்மநாபனின் வேலையிலோ,நேர்மையிலோ,விசுவாசத்திலோ குறை காண இயலாத அவர் மேலதிகாரம்,அவரை காலத்துக்கு ஒவ்வாதவர் என்ற காரணத்தால் ,சிறிய சலுகையும் காட்டாமல் அனுப்பியிருக்கலாம் என்ற கோணத்தில் பார்த்தால் அந்த காட்சியில் புது சுவை தெரியும்.அதனால் இந்த படம் protogonist கோணத்திலேயே பயணித்தாலும் பூடகமாய் புரிந்து கொள்ள நிறைய உண்டு.. ஒரு நேர்மையான திரை கதையமைப்பே அதுதானே?அதுவும் real life characters வைத்து பின்ன பட்ட இந்த படத்தில்?மற்றோருக்கு spacing கொடுக்காமல் உறவிலோ , அதிகாரத்திலோ ,imposing ஆக உள்ளோர் ,இந்த அடியை ,தான் பலவீன படும் பொது ,பிறரை சார்ந்து உள்ள போது பட்டுத்தானே ஆக வேண்டும்?
சிவாஜியின் நடிப்பு மூன்று வெவ்வேறு நிலைகளில் ஒரு தனித்து வேறுபட்ட கலாசார,சமூக ,பேச்சு வழக்கை கொண்டு இயங்கும். முற்பகுதி ( ஒய்வு பெரும் வரை) அவர் உச்சத்தில் இருந்து மற்றோருடன் ஆதிக்கம் செலுத்துவார். ஒரு டாமினன்ட்,assertive ,எள்ளலுடன் எல்லாவற்றையும் அணுகுவார். என்னை பொறுத்த வரை இந்த பகுதிதான் மிக மிக சிறந்தது. இந்த பகுதியில் அவர் பின்னால் பலவீனப்படப்போகும் போது இருக்க போகும் மனநிலையை உணர்த்துவது கண்ணாடி பீஸ் காலை கிழித்து அவர் பண்ணும் அதகளம். இரண்டாவது பகுதியில், எதிர்பாராத retirement அதிர்ச்சியில்,எப்படியாவது குடும்பத்தினர் உதவியுடன் சமாளிக்கலாம் அல்லது தன காலில் நிற்கலாம் என்று நம்பும் போது ,கண்ணெதிரேயே அவருடைய நிலை படி படியாக தாழும் நிலை. நிலைமையுடன் சமரசம் செய்ய முயன்று ,தோற்று ,புலம்பி ,சோர்வார். மூன்றாவது பகுதியில் சிறிது பொங்கி, நிலைமை படி படியாக சீரமையும் பகுதியில் ,வெளிப் படும் இயலாமை கோபம்,சாபம் கொடுக்கும் பாணி அறிவுரைகள் என்று போகும்.
வியட்நாம் வீடு சுந்தரத்தின் வசனங்கள் சிவாஜிக்கு அப்படி ஒரு தீனி போடும்.non -repetitive situation based punchlines பிரமாதமாக இருக்கும்.(சற்றே பாலச்சந்தர் பாணி!!??) பேய்க்கு வாழ்க்கை பட்டால் என்று சொல்லும் போது இவ்வளவு நாள் ஜாடை மாடையாய் புள்ளெல திட்ற மாதிரி வைவாள். இப்போ நேரிடையாய், you must stand on your own legs ,every action there is a reaction , position -possession , prestige -justice , இவ கெடுத்தா எல்லாத்தையும் என்ற லைன்கள் popular மட்டுமல்ல. அன்றாடம் நான் கேட்டவை . நான் பார்த்த இரண்டு பள்ளி கூட வாத்தியார்கள் , என் தாத்தா மற்றும் அவர் நண்பர்கள்,எனக்கு தெரிந்த ஒரு பிரபலம் எல்லோரும் பத்மநாப ஐயர் சாயல் கொண்டு இருந்ததால், NT நடிப்பின் வாழ்க்கைக்கு உள்ள reach என்னை அதிசயிக்க செய்யும்.( வாசன் அவர்கள் இந்த நாடகத்தை,படத்தை பார்த்து அதிசயித்து அழுதாராம்.சிவாஜியை மீறிய உலக நடிகரே இல்லை என்று சொன்னார் )
அவர் சம்பந்தி பிணங்கிய மகன்,மருமகளை வீட்டுக்கு அழைத்து வரும் காட்சியில் ஒடுங்கி படுத்திருப்பார். அந்த படுத்த நிலையில் எழுந்திருக்க முயன்று, சம்பந்தியை உபசரிக்க முயல்வார். இதற்கு ஈடான ஒரு நடிப்பை நான் எந்த உலக படத்திலும் கண்டதில்லை.
உன்கண்ணில் நீர் வழிந்தால் காட்சி சிவாஜி-பத்மினி ,எப்படி இணைந்து எல்லா வயதிலும் இந்த chemistry தர முடிந்தது என்பது ஆச்சர்யம்.(உடனிருந்து காலமெல்லாம் மணம் பரப்பிய இதயமல்லவா).முதல் stanza முழுவதும் பழைய இனிய பரவச நாட்களை நினைவு படுத்தும் போது easy சேரில் மடிந்து மடியில் மனைவியை கிடத்தி வருடுவார். இரண்டாவது stanza எல்லோராலும் கை விட பட்டு மனைவியால் அரவணைக்க படும் ஆதங்கம் ஊஞ்சலில் மார்பில் சாய்வார். கடைசி stanza விரக்தியில்,பிள்ளை போல் மடியில் படுத்து தேம்புவார். சிவாஜியின் நடிப்பும்,பத்மினி reaction எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காது. கொழந்தேள்லாம் ஒம மேல ஆசையாதாண்டி இருக்கா. ஒனக்கொண்ணுன்னா துடிச்சி போறா. என்னைத்தாண்டி வெறுக்கிரா என்ற புலம்பல் ஒவ்வொரு ஆணின் மிடில்-ஏஜ் ,ஓல்ட்-ஏஜ் crisis வெளியீடு.அது நடிகர்திலகம் சொல்லும் விதம் மனதை கிண்டி காயப்படுத்தும். கடைசியில் என்ன பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிருப்பேன்,இவ கெடுத்தா எல்லாத்தையும் என்று மனைவியிடம் இயலாமை சீறல் ,நான் பல குடும்பங்களில் பார்த்த கேட்ட அனுபவம்.அவ்வளவு இயல்பாக தைக்கும்.
இந்த படத்துக்கு துன்பியல் முடிவு தேவையில்லாத ஒட்டாத ஒன்று. surprise twist என்று பார்த்தாலும் ,அந்த காலகட்டத்தில்,அவரை சாகடிக்காமல் விட்டால் தான் ரசிகர்களுக்கு surprise .
இந்த படத்துக்கு NT க்கு ஒத்திகை தேவையே இருந்திருக்காது. (பல முறை மேடையில் இதே ரோல்) .ஆனால் பத்மினி பிரமாதமாக காம்ப்ளிமென்ட் பண்ணி ,நடிப்புக்கு சரியான ஜோடி என்பதை உணர்த்தி விடுவார். (ஆனால் முரளி favourite ஜி.சகுந்தலாவின் மேடை நடிப்பு இதை விட பிரமாதம் என்போர் உண்டு). முக்கியமாய் தன அம்மாவிடம் ,தன மகன்களை குறை சொல்லிய பிரின்சிபாலை பொரிந்து கட்டும் இடம்.ஒரு தாயின் மனநிலையை அழகாக பிரதிபலிப்பார். எல்லோரும் நன்கு பண்ணியிருப்பார்கள்.(தங்கவேலு,நாகேஷ் உறுத்தல்.ஆனால் வியாபார தேவை போலும்).
மாதவன் ஒரு நல்ல creative இயக்குனர் என்று சொல்ல முடியா விட்டாலும், ஒரு நல்ல executive இயக்குனர். எல்லா genre படத்தையும் நன்கு பண்ணியுள்ளார்.(குறிப்பிட வியட்நாம் வீடு,ஞான ஒளி,பட்டிக்காடா பட்டணமா,தங்க பதக்கம்,பாட்டும் பரதமும், ராஜபார்ட் ரங்கதுரை).ஸ்ரீதர் உதவியாளராய் இருந்தவர். தேவராஜ்-மோகன் போன்ற நல்ல உதவியாளர்களை கொண்டவர்.
கே.வீ.மகாதேவன் இந்த படத்திற்கு பலம். எந்த படம் என்றாலும் நன்றாக பண்ண கூடியவர்.
இந்த மாதிரி பாவனைகள் அற்ற,நேரடியான, நேர்மையான கதை சொல்லும் படங்களை பார்ப்பதில் உள்ள சுவையே தனி. ஆனால் அதற்கு regress ஆகும் கலை மனம் வேண்டும் .பழைய ஓவியங்கள்,இலக்கியங்கள், கதைகள்,சரித்திரம் எல்லாம் ரசிக்க இந்த வகை தயாரிப்பு ரசிகனுக்கோ,வாசகனுக்கோ மிக அவசியம்.நாம் நம் இளைய தலைமுறையை சரியான aesthetic sense இல் வளர்ப்பதே இல்லை.
வியட்நாம் வீடு- நடிப்பில் ஒரு வடக்கு நோக்கி.வழிகாட்டி.(கமல் பாணியில் மலையாளத்தில்) .எந்த கமர்சியல் compromise இன்றி மாபெரும் வெற்றி பெற்ற NT படங்களில் ஒன்று.(அவர் ஸ்டார் ஆக இருந்தும் நிறைய ரிஸ்க் எடுத்திருக்கிறார்.)
சுமதி என் சுந்தரி-1971
எழுபதுகளில் என் மீசை அரும்பும் பருவத்தில் ,என் சக வயது தோழர்களுடன் திரும்ப திரும்ப பார்த்து ,அதை பற்றி உரையாடி(எதை பற்றி என்று பிறகு)மகிழ்ந்து ,லயித்த நகைச்சுவை தெளித்த காதல் காவியம்(ஆங்கிலத்தில் ரொமாண்டிக்-காமெடி).ரோமன் ஹாலிடே என்ற படத்தை தழுவிய வங்காள மூலத்தில்(பிரசாந்த்)இருந்து கோபு-சி.வீ.ராஜேந்திரன் இணைப்பில் உருவான ரசிக்கத்தக்க படம்.(அசல் பெயர் விட்டில் பூச்சி??)
நடிகர் திலகம் ,நடிப்பில் முன் மாதிரியாய் இருந்தது போல் உடையில்,சிகை அலங்காரத்தில் ,ஸ்டைலில், அனைத்து வயதினருக்கும் (முக்கியமாய் கல்லூரி இளைஞர்கள்) முன் ரோல் மாடல் அண்ட் டிரென்ட் செட்டர்.ஏன் இந்தியாவுக்கே எனலாம்(ஐம்பதுகளில் வட இந்திய பத்திரிகைகள் அவரை நன்கு உடையணிந்த இந்திய ஆண் நடிகராய் தேர்வு செய்து மகிழ்ந்தன. இந்த படத்தில் மிக மிக அழகாய் (படத்தில் ஜோசிய காரன் சொல்வது போல்) அழகான சிகை அலங்காரம்,உடைகள் என அதகளம் புரிவார்.ஜெயலலிதா மிக அழகாய் தோன்றி பொருத்தமான ஜோடியாய் காதல் காட்சிகளில் பொருந்துவார்.. நடிகர் திலகம் சற்றே தூக்கி சடாரென்று நெற்றிக்கு இறங்கும் நிறை குடம் பாணி hair ஸ்டைல்.வெளுறிய காவி நிற சட்டை ,சிவப்பு தொப்பி,பிரவுன் சட்டை ,கட்டம் போட்ட ஹாட்,ஜெர்கின்,லெதர் ஜாக்கெட்,கிரே சட்டை,கட்டம் போட்ட பிரவுன்,மஸ்டர்ட் சட்டை,லவேண்டேர் டி ஷர்ட்,காகி ஷார்ட்ஸ்,அருமையான கூலிங் கிளாஸ், வைட் அண்ட் வைட் (சிவப்பு காலர்),அருமையான இரவு உடைகள்,கிரே பான்ட்,seersucker Madras Check patterns என்று பொருத்தமான ஸ்டைல் ஆன உடைகளில் தோன்றி இள மனசுகளை அள்ளோ அள் என்று அள்ளுவார்.கலைச்செல்வியும் பாந்தமான மித வர்ண புடவைகளில் ஜொலிப்பார்.
ஒரு ஸ்டாம்ப் சைஸ் கதை.மிதமான ,இதமான வசனங்கள்.ஆரம்பமே களை கட்டும்.டைட்டில் ஓடும் போதே ஹாலிவுட் நடிகை புகைப்படங்களை பட கதையமைப்புக்கு பொருத்தமாய் ஓட விடுவார்.ஒரு காதல் பாடல் சம்பந்தமே இல்லாத நபருடன் எடுத்த எடுப்பிலேயே நாயகி பாடி ரசிகர்களை அதிர வைப்பார்.சாரி சொல்லி கதா நாயகி பாடல் இடையில் திரும்பும் போது ரசிகர்கள் மூச்சு விடுவார்கள்.அதிலிருந்து கதை பயணிக்கும் பாணி தமிழ் ரசிகர்களுக்கு புதிது.சி.வீ.ஆர் உடை நிறத்திலேயே கலர் சைகாலஜி உபயோகித்து காட்சியின் தரத்தையே மாற்றுவார்.(உடை-ராமகிருஷ்ணன்)
பாஸ்கர் ராவ்-தம்பு காம்போ இதமாய் ஒளிப்பதிவை குளுமையாய் தரும்.
நடிகர் திலகம் நடிக்காமல் ரெஸ்ட் எடுப்பார்.அதுதான் இந்த படத்தையே தூக்கி நிறுத்தும்.சினிமா பற்றியே தெரியாமல் டீ எஸ்டேட் டையே உலகமாய் கொண்டிருக்கும் மது என்ற இளைஞனாய் ....ஆரம்ப காட்சியில் இருந்து ஜாலியாய் நடிப்பார். தங்க வேலு தவறாய் அர்த்தம் செய்து வீட்டில் குளிக்க சொல்லி மிரட்டும் இடத்தில்(மூன்று முறை டவல் உடன் திரும்பும் காட்சி),முதலிரவு காட்சியில் மிரளும் போது,பொட்டு வைத்த முகமோ (எஸ்.பீ.பாலு முதல் NT பாடல்) மிதமான இளமை கொஞ்சும் ஸ்டைல்(தரையோடு வானம்-புகழ் பெற்ற ஸ்டில்),ஏய் புள்ளே பாடலில் ஆட தெரியாதவன் போல் ஆடுவது,தொடர்ந்த இளைஞர்களை பைத்தியமாக்கிய பலூன் காட்சி, பூவின் ஒரு இதழை சுவைத்து காமத்தை அழகாய் வெளிப்படுத்தும் காட்சி,(வசந்த மாளிகை ப்ளம் ஞாபகம் வருமே!!),சட்டென்று ஜெயலலிதா அழும் போது எல்லா திசைகளிலும் அப்பாவியாய் பார்ப்பது,கிளி-ஜோசிய காட்சி, என்னுடைய பேவரிட் ஒருதரம் (காலை ஸ்டைல் ஆக தூக்கி நிற்பது,பௌலிங் ஆக்க்ஷன்) என்று இந்த பாணி படத்திலும் தான் தான் கிங் என்று நிரூபிப்பார்.ஒருதரம் பாடல் கலாட்டா கல்யாணம் படத்திற்காக உருவானது.ஆனால் மழை வந்து படமாக்க முடியாமல் இந்த படத்தில் உபயோகித்தனர்.
விஸ்வநாதன் இசையில் இளமையை கொட்டுவார்.ல ல லா ஹம்மிங் ,ஹும் ஹம்மிங் என்று கலக்குவார்.
எனக்கு மிக மிக பிடித்த நடிகர் திலகத்தின் லைட் movie .(மற்றவை ராஜா,என்னை போல் ஒருவன்,எங்கள் தங்க ராஜா)
இந்த படம் இளைஞர்களை குறி வைத்து எடுக்க பட்டதால்,நடுத்தர வயதினர்,முதியவர் என மற்றோருக்கு அதிக நாட்டம் வரவில்லை.இளைஞர்கள் இக்காலம் போல் பணப்புழக்கம் கொள்ளாத காலம்.அதனால் மிதமான வெற்றியை அடைந்த இளமை திருவிழா இப்படம்.
கோபால் : அருமையான பதிவுகள் , rewinding . உங்களுக்கு பிடித்த படமானால் , பிச்சு வாங்குகிறீர்கள் - இல்லை என்றால் மற்றவர்களின் கதி அதோ கதிதான் . உங்கள் பின் பலத்தை புரிந்து கொண்டேன் அதனால் இந்த என் மன எண்ணத்தை இரண்டு வரிகளில் எழுதி என் வாதத்தை முடித்துகொள்கிறேன் ( பிரயோஜனமில்லை என்பது வேறு விஷயம்)
"It is very easy to hurt someone and say ‘Sorry’, but it is really very difficult to get hurt and say ‘I am Fine’.."
ரவி