http://i58.tinypic.com/m836kp.jpg
Printable View
இனிய நண்பர் திரு குமார் சார்
மிக அருமையாக மக்கள் திலகத்தின் செல்வாக்கை பற்றி அழகாக பதிவிட்டு இருக்கிறீர்கள் . மிக்க நன்றி .மக்களின் ரசனைகளை பல் வேறு திறமையான
நடிகர்கள் தங்களின் திறமையால் வெளிப்படுத்தி இருந்தாலும் மக்கள் அதிகமாக அன்றும் இன்றும் விரும்பி பார்ப்பதில் நம் மக்கள் திலகத்தின் படங்கள் தான் என்றால் அது மிகையல்ல .சமீபத்தில் கோவை நகரில் பட்டிக்காட்டு பொன்னையா திரைப்படம் அரங்கம் நிறைந்துள்ளது மூலம் மக்கள் திலகத்தின் மாபெரும் வெற்றி படங்களும் சராசரி படங்களும் மக்களால் விரும்பி பார்க்கபடுவது சாதனையே.
Courtesy - malaisudar
"ஹாத்தி மேரா சாத்தி' பெரும் வெற்றி பெற்றதை அடுத்து அதை தமிழில் தயாரிக்க தேவர் முடிவு செய்தார். நீண்ட காலமாக தேவர் பிலிம்ஸ் படங்களில் நடிக்காமல் இருந்த எம்ஜிஆரை இந்தப் படத்திற்கு அவர் ஒப்பந்தம் செய்தார். படத்துக்கு "நல்ல நேரம்' என பெயர் சூட்டப்பட்டது.
எம்ஜிஆரை வைத்து அதிக படங்களை தயாரித்த தேவரின், தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தில் அவர் நடித்த கடைசி படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. சிறு வயதில் ஒரு சிறுத்தையிட மிருந்து யானை ஒன்று தன்னை காப்பாற்றியதை அடுத்து, யானைகள் மேல் பெரும் பாசம் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் பெரியவன் ஆனதும் யானைகள்பால் அன்பு செலுத்துகிறான்.
ஒரு கட்டத்தில் அவனது செல்வமெல்லாம் பறிபோய் விட அந்த யானைகளை கொண்டே வித்தைகள் செய்து, இழந்த செல்வத்தை மீட்கிறான். அவனது மனைவிக்கு யானைகளை பிடிக்காமல் போய் விட அதனால் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக கொண்டதாக கதை அமைந்திருந்தது.
கடைசியில் குழந்தையை காப்பாற்ற யானை தன் உயிரை தியாகம் செய்கிறது. அதன் பின்னர்தான் யானையின் தியாகத்தை அந்த பெண் உணர்கிறாள். யானையை வளர்க்கும் செணன்ல்வந்தராக எம்ஜிஆர் நடித்தார். அவருக்கு ஜோடியாக கே.ஆர்.விஜயா நடித்திருந்தார். அசோகன், தேங்காய் சீனிவாசன், நாகேஷ், சச்சு, மேஜர் சுந்தர்ராஜன், ஜஸ்டின், உட்பட பலர் நடித்த இந்தப் படத்தில் நான்கு யானைகளும் நடித்திருந்தன.
யானைகளின் வித்தைகள் மற்றும் எம்ஜிஆர் செய்யும் சாகசங்கள் படத்தின் ஹைலைட்டாக அமைந்திருந்தன.
கவிஞர் கண்ணதாசன் எழுதிய,
ஓடி ஓடி உழைக்கணும்; ஊருக்கெல்லாம் கொடுக்கணும், ஆடி, பாடி நடக்கணும், அன்பை நாளும் விதைக்கணும்.
டிக் டிக் டிக் டிக் இது மனதுக்கு தாளம்
டக்டக்டக் இது உறவுக்கு தாளம்
நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே
என் மேனி என்னாகுமோ
ஆகிய பாடல்களும், அவினாசி மணி எழுதிய ஆகட்டும்டா தம்பி ராஜா நடராஜா; மெதுவா தள்ளையா, பதமா செல்லையா என்ற பாடலும் திரையிசை திலகம் கே.வி.மகா தேவனின் இனிய இசையில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. சின்னப்பா தேவரின் சகோதரர் எம்.ஏ.திருமுகம் படத்தை இயக்கினார். இந்தப் படமும் சென்னையில் நான்கு திரையரங்குகள் உட்பட பல இடங்களில் நூறு நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது.
COURTESY - NET
எம்ஜிஆருக்கே வேலை இல்லை..யென்று சொன்னவர்.
"வேலை கேட்டு ஒவ்வொரு கடையாக ஏறி இறங்குவார் எம்ஜிஆர. ஆனால் எந்த கடையிலும் யாரும் அவருக்கு வேலை தர தயாராக இல்லை. நான் வேலை செய்த கடையிலும் ...ஏதாவது வேலை இருந்தா கொடுங்க...நான் செய்கிறேன் ..னு வந்தவரிடத்தே ...வேலை ஏதும் காலி இல்லை ..என்று திருப்பி அனுப்பினேன். வேலை ஏதும் கிடைக்காமல் , பட்டினியோடு அலைந்து திரிந்த அலுப்பில் அவர் மயக்கமாகி விட , அந்தப்பக்கம் வந்த கேஆர்விஜயாம்மா அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து அழைத்துப்போவார்.."நல்ல நேரம்" படத்தில் வரும் இந்த காட்சியில் எம்ஜிஆருக்கே வேலை இல்லை என்று சொன்னேங்க.." கண்ணீரோடு நினைவு கூர்ந்தார்அவிநாசியில் எனது நண்பரின் துணிக்கடையில் நீண்ட நாட்களாக வேலை செய்யும் புன்னகை" பாய் ".
சென்னையில் தியாகராய நகரில் வேலை செய்துகொண்டிருந்தபொழுது நடந்த இந்த நிகழ்வை சொல்லிசொல்லி பூரித்தார் அவர். "எம்ஜிஆரு எவ்ளோ கலர் தெரியுங்களா..? ரோஸ்னா..ரோஸ்..புத்தம்புது ரோஸ் மாதிரி" ஆச்சர்யத்தோடு அந்த தருணங்களில் ஆழ்ந்தார் பாய்.
மக்கள்திலகம் எம்ஜிஆர் மீது சாமான்ய மக்கள் கொண்ட அன்பும்,ஆதரவும், பற்றும், பாசமும் வேறு எந்த தலைவரும் இட்டு நிரப்பவே முடியாத பேரதிசயம்.
"நான் ஆணையிட்டால்..
அது நடந்துவிட்டால்.."
இன்றைக்கும் 7வது படிக்கும் மகனின் பேவரைட் பாட்டு இதுதான்.(எங்கள் வீட்டில் அவ்வளவு அடக்குமுறைகளா..என கருதவேண்டாம் ..smile emoticon ) ஆயிரம் புதுப்பாடல்கள் கூட அவனை சிறிதேனும் மாற்ற முடியவில்லை.
"புத்தன், ஏசு, காந்தி பிறந்தது
பூமியில் எதற்காக.?
தோழா..ஏழை நமக்காக .."
எங்கே ,எப்போது ,எந்த தருணத்தில் இந்த பாடல் ஒலித்தாலும் , எப்படி தேசியகீதம் ஒலிக்கிறபொழுது எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு, பாட்டு முடியும்வரை, மெளனமாக எழுந்து நின்று ஒரு உண்மையான தேசபக்தன் மரியாதை செய்கிறானோ அதைப்போல இந்த பாட்டினை கேட்கிறபொழுதெல்லாம் ஆணி அடித்தாற்போல அசையாமல் நான் நின்றுவிடுவதுண்டு...
" எம்ஜிஆரின் படங்கள் ஏன் இவ்வளவு வெற்றிபெற்றது ?" என்பதற்கு ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டாலும், "எந்த சூழ்நிலையையும் எதிர்த்து நின்று போராடு.. நீ வெற்றி பெற்றுவிடலாம் " என்கிற " பாஸிடிவ் அப்ரோச்" - நேர்மறை நம்பிக்கையை அவர் தன் படங்களின் மூலமாக தூண்டிவிட்டுக்கொண்டே இருந்தார்..என்பதையே சிறந்த காரணமாக, ஒரு நம்பிக்கை சிந்தனையாளராக பார்க்க முடிகிறது என்னால்.
சாமான்யர்களின் ஏக்கத்தை ,கனவுகளை ,வேட்கையை அவரது படங்கள் தணித்ததைப்போல , குறைத்ததைப்போல வேறு எந்த படங்களுமே இன்றுவரை செய்ய முடியவில்லை என்பதை மறுப்பதற்கேயில்லை...
ஒரு அரசியல் தலைவர் என்பதைத்தாண்டி, அவரைப்பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் சிலருக்கு இருந்தாலும்கூட, தன்னம்பிக்கையை தூண்டும் அவரது படங்கள் சமுதாயத்திற்கு நன்மையை செய்துகொண்டுதான் இருக்கின்றன..
எம்ஜிஆர் ஒரு சகாப்தம்தான்..!!