மிக்க நன்றி சார்
Printable View
நண்பர்களே,
நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நிகழ்ச்சியின் அம்சமாக, அடுத்த மாதம், ஆகஸ்ட் 2015 நிகழ்ச்சி, மெல்லிசை மன்னருக்கு அஞ்சலி நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. நடிகர் திலகத்தின் படங்களில் மெல்லிசை மன்னர் இசையில், தேர்ந்தெடுத்த சில பாடல்களும், காட்சிகளும் இடம் பெறும்.
http://i1146.photobucket.com/albums/...ps0zq4lwmd.jpg
மெல்லிசை மன்னருக்கு நினைவாஞ்சலி
மெல்லிசை மன்னரின் நினைவாஞ்சலிக்கு என்ன பாடலை தேர்வு செய்யலாம் என்று நினைக்கையில் பல்லாயிரம் பாடல்கள் உண்டு. எல்லோரும் இதுவரை பதிவிட்டு தீர்த்துவிட்ட பாடல்கள் நிறைய உண்டு. கொஞ்சம் வித்தியாசமான தேர்வு என் தேர்வு.
மெல்லிசை மன்னருக்கு அதிகம் பாடிய இரு பாடகிகள் இசையரசியும் வாணிஜெயராமும். இவர்கள் இருவரும் இணைந்து பாடிய ஒரு பாடல்.
இப்படி ஒரு சூழலை ஏற்படுத்திக்கொடுத்தது திரு முக்தா ஸ்ரீனிவாசன் அவர்கள். இப்படி மாமியார் மருமகள் பாடுவதாக இந்த பாடல் ஒன்றுதான். அதற்கே முக்தா அவர்களுக்கு பல முறை நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம்.
பாடலின் சூழல் மிகவும் அருமையான ஒன்று. தன் வீட்டில் இருக்கும் பூர்ணிமா ஜெயராமே தனக்கு மருமகளாக வேண்டும் என்ற ஆசை சுஜாதாவிற்கு. பூர்ணிமாவிற்கோ இது நடக்குமோ நடக்காதோ என்ற ஒரு ஐயம்.. பாடலின் வடிவே அழகு. ஆம் பாந்தமான சுஜாதா நீதான் என் வீட்டின் மருமகள் உனக்கு எதற்கு அச்சம். இந்த தாய் சொன்ன வாக்கு பலிக்கும் என்று சொல்ல நினைப்பதெல்லாம் நடப்பதில்லை எனக்குள் இருக்கும் இந்த அச்சம் போகாது என பூர்ணிமா சொல்ல ஒரு சின்ன போர் போல அழகான சூழல்.
சுஜாதா பற்றி சொல்லவே வேண்டாம். பாந்தமான தாயாக பிரமாதமான நடிப்பு. அவருக்கு இசையரசியின் குரல் என்ன பாந்தமாய பொருந்துகிறது. அந்த அன்பான தாயாக சுஜாதா மாற குரலால் இசையரசி மாற மிக கச்சிதம். வாணியும் தனக்கே உரிய அழகில் பூர்ணிமாவிற்கு அழகாக பாட. ஒரு தெளிந்த நீரோடை போல் மெல்லிசை மன்னரின் இசை நம்மை மயக்கும்.
வாலி அவர்களின் பிரமாதமான வரிகள் பாடலுக்கு கூடுதல் அழகு.
இதே படத்தில் பி.ஜெயசந்திரன் பாடிய ஒரு ஓசையின்றி பாடலும் மிகவும் பிரமாதமான பாடல்.
http://www.4shared.com/download/M5jC....gif?lgfp=3000
https://www.youtube.com/watch?v=0UAA78sh3LI
மாற்றார் தோட்ட மெல்லிசை மதுரங்கள் : ஜேம்ஸ் பாண்ட் படங்களின் தீமிசையும் டைட்டில் பாடல்களும்!!
பகுதி 21 : லைசென்ஸ் டு கில் / Licence to Kill (1989) starring Timothy Dalton as James Bond OO7!
John Barry's usual theme music and title song!Quote:
இப்படமும் விறுவிறுப்பான கதையோட்டத்தில் அருமையான வெளிப்புறப் படைப்பில் சிறந்த இசையமைப்பில் ரசிகர்களைக் கவர்ந்தது
இறுதிக் கட்ட திருப்பங்கள் நிறைந்த கிளைமாக்ஸ் இன்றுவரை பேசப்படுகிறது.
திமோதி டால்டன் இப்படத்துடன் விடை பெற்றுக் கொண்டு பியர்ஸ் புரோஸ்னன் ஜேம்ஸ் பாண்ட் பணியை மேற்கொள்ள வழிவிட்டார்
https://www.youtube.com/watch?v=Wye2OCpyFt4
https://www.youtube.com/watch?v=Ju_by-sC79c
https://www.youtube.com/watch?v=ApA68jVsqFs
https://www.youtube.com/watch?v=1ujTWhWm5vE
RARE ADVT RELEASED AND UN RELEASED MOVIES ADVT- LATE 1950'S AND EARLY 1960'S
http://i62.tinypic.com/2s77685.jpg
திரு கலாமின் மறைவின் தாக்கம் குறையக்கூடியதே அல்ல - இப்பொழுது வாழும் அரசியல் வாதிகளைபார்க்கும் பொழுது இப்படி பட்ட ஒரு தன்னலம் இல்லாத ஒருவர் நம்மிடையே வாழ்ந்தார் என்று எண்ணும் பொழுது கண்களில் இருந்து பொங்கி வரும் கண்ணீரை நிறுத்த முடியவில்லை .........................
" A great Indian muslim died on Hindu holy day of Tholi Ekadasi in a christian hospital. He maintained secularism in his death also". Salute to great man.
====
The first pooja at Sri rameswaram temple is offered in Kalam sir's family name everyday which has been a practise since his great grand father's times.
There used to be a utsav wherein the utsav moorti was decorated n sailed in a boat (a saucer kind of a boat) which is called "teppotsava". When the 'teppa' sailed amidst the river, the utsav murti (idol) fell into the river 400 feet deep. Everyone was worried n confused. Immediately, kalam's great grand father dived into the river n brought the idol out from deep waters. Since then, the first pooja in the rameshwram temple is offered in/by/for their family to Lord Rameswara(one of the 12 jyotirlingas)
மாற்றார் தோட்ட மெல்லிசை மதுரங்கள்
பகுதி 22 : தி சைலன்செர்ஸ் / The Silencers (1966) starring DEAN MARTIN as MATT HELM, a spoof on JAMES BOND!
Quote:
ஜேம்ஸ் பாண்ட் படங்களின் தொடர் வெற்றி அவற்றை ஒரு பார்முலா வட்டத்திற்குள் கொண்டு வந்தது உலகெங்கும் ஏனைய நாடுகளிலும் மொழிகளிலும் ஜேம்ஸ் பாண்டின் அடியொற்றிய சி ஐ டி பாத்திரங்கள் உருவாக்கப் பட்டு அவையும் ரசிகர்களின் பொழுது போக்கு தாகத்தை வெகுவாக தணித்தன!! ஜேம்ஸ் பாண்ட் இங்கிலாந்து உளவாளி என்பதால் அவருக்குப் போட்டியாக அவரது அணுகு முறைகளைக் கொஞ்சம் கிண்டலடித்து spoof வகை கதாபாத்திரங்களாக உருவாக்கப் பட்டாலும் இன்று வரை உளவுத் திலகம் ஜேம்ஸ் பாண்டே !
அமெரிக்க போட்டியாளராக மேட் ஹெல்ம் எனும் துப்பறிவாளராக புகழ் பெற்ற ஹாலிவுட் பாடக நடிகர் டீன் மார்டின் களமிறங்கினார் ! சைலன்சர்ஸ்,மர்டேரர்ஸ் ரோ வரிசைப் படங்களில் சரியான போட்டியாக கலக்கினாலும் ஜேம்ஸ் பாண்ட் படங்களின் பளபளப்பு இவற்றில் இல்லை !!
நான்கு போட்டிப் படங்களில் டீன் மார்டின் நடித்தாலும் சைலன்சர்ஸ் மட்டுமே ஓரளவு வெற்றி கண்டது!! ஜேம்ஸ் பாண்டைக் கிண்டலடிக்கும் சாக்கில் ஏகத்துக்கும் கவர்ச்சி ஆபாசம் புகுத்தப் பட்டதால் ரசிகர்கள் ஓரளவு ரசித்து விட்டு குட்பை சொல்லிவிட்டார்கள்! டீன் மார்டின் போலவே பிளின்ட் என்ற துப்பறிவாளராக ஜேம்ஸ் கோபர்ன் என்னும் ஹாலிவுட் ஹீரோவும் களமிறங்கி பின்வாங்க நேரிட்டது !!
நம்ம ஊரிலும் மக்கள் கலைஞர் ஜெயசங்கர் சி ஐ டி சங்கராக பல படங்களில் துப்பறிவாளராக வந்து தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் பட்டம் வென்றார் !!
The Silencers had enchanting music and songs with dances similar to tamil CID films!! enjoy the trailer!!Music composed by Elmer Bernstein!!
https://www.youtube.com/watch?v=gZPBqcefUI4
Enjoy the spoof on Bond by way of the perk he enjoys..girls and gadgets!!
https://www.youtube.com/watch?v=WqLVtMsTo8A
நடிகர்திலகத்தின் தங்கசுரங்கம் படத்தின் கதையமைப்பு நிறைய சைலன்சர்ஸ் தழுவலே!! குறிப்பாக பாரதி, நிர்மலா பாத்திரப் படைப்புக்கள், சேற்றில் கதாநாயகி முங்குவது ....
https://www.youtube.com/watch?v=gfBWyCSCh-w
https://www.youtube.com/watch?v=TojrKH2x7lo
Dance Queen Cyd Cheris with Dean Martin!
https://www.youtube.com/watch?v=D1CMolsp3to