Dear Ragul,
Arumayaana 'saraswathi sabatham' aayvu. Nandraaga ezhuthiyullergal. Vaazhga! valarga!
Printable View
Dear Ragul,
Arumayaana 'saraswathi sabatham' aayvu. Nandraaga ezhuthiyullergal. Vaazhga! valarga!
Very Informative,authentic writeup on NT. Congrats Mr Murali Sir.
Pls continue your golden writeup and reach many more milestone.
அனைவர்க்கும் ஓர் இனிப்பான செய்தி.
http://i50.tinypic.com/21bkwu0.jpg
நமது அருமை நண்பர் சுப்பு அவர்களும், திரு.ஆனந்த் அவர்களும் இணைந்து 'நடிகர் திலகம் 360 டிகிரி' என்ற பேனரில் 'நான் வாழ வைப்பேன்' மற்றும் 'வெள்ளை ரோஜா' ஆகிய இரு காவியங்களையும் வெளியிட ஏற்பாடுகள் செய்து வந்தது நமக்குத் தெரிந்ததே.
இப்போது 'நான் வாழ வைப்பேன்' திரைக்காவியம் வெளியிடப்பட ரெடியாகி விட்டது என்பதுதான் அந்த இனிப்பான செய்தி. கண்டிப்பாக ஏப்ரல் மாதத்தில் நம் மனதுக்குப் பிடித்த ஒன்று அல்லது இரண்டு A/C திரையரங்குகளில் படம் வெளியாகலாம் என்ற தகவல் வந்துள்ளது.
இப்போது அனைவர் மனதிலும் எழும் கேள்வியும் எனக்குப் புரிகிறது. DTS மற்றும் Restoration எதுவும் செய்யப்படவில்லை. ஆனால் பட பிரிண்ட் நன்றாக இருப்பதாக அதிகாரபூர்வமான தகவல்கள் வருகின்றன. ஈஸ்ட்மென் கலரில் வெளியான இத்திரைக்காவியம் அதே பொலிவுடன் புத்தம் புதிய காப்பி போல இருப்பதாக சுப்பு சார் கூறினார். (ஆனால் புத்தம் புது காப்பி அல்ல) பிரிண்ட் CTC அதாவது கார்பன் டெட்ரா குளோரைட் மூலம் சுத்தமாக வாஷ் செய்யப்பட்டுள்ளது. நேற்று போஸ்டர் டிசைன்ஸ் ரெடி செய்ய ஆயத்தமாகி விட்டதாகவும் சுப்பு சார் கூறினார். கலரின் ஒரிஜினல் மெருகுத்தன்மை மாறாமல் அப்படியே இருக்கிறதாம்.
மூன்று டிசைன்களில் போஸ்டர்கள் ரெடியாகின்றனவாம். ஆடியோவும் ஒரிஜினலாக நன்றாக இருக்கிறதாம்.
So நான் வாழ வைப்பேனுக்கு நாம் மிக விரைவில் ரெடியாகலாம். சந்தோஷம்தானே!
'நான் வாழ வைப்பேன்' திரைப்படத்திற்காக நான் ரெடி செய்த டிரைலர் ஒன்றை அனைவரும் முன்னமே பார்த்திருப்பீர்கள். இப்போது மீண்டும் ஒருமுறை அந்த டிரைலர் நம் பார்வைக்கு.
http://www.youtube.com/watch?feature...&v=BCl0pss-9zY
அருமைத் தம்பி செந்திலுக்கு,
மிக அழகாக தமிழில் பெங்களூரு அருணாவில் நடந்த வசந்த மாளிகை கொண்டாட்டங்களை பதிவு செய்து திரியை பரிமளிக்கச் செய்து விட்டீர்கள். அருமையாக எழுதுகிறீர்கள். ஆனால் அத்தி பூத்த மாதிரி. இந்தப் பதிவுதான் தாங்கள் அளித்ததிலேயே பெரிய பதிவு என்று நினைக்கிறேன். இனி எப்போதோ ஒருமுறை எழுதக் கூடாது. எப்பொழுதும் இது மாதிரி எழுத வேண்டும். தெரிகிறதா? இது என் அன்பு வேண்டுகோள். மனமுவந்த பாராட்டுக்கள் தங்கள் அட்டகாசப் பதிவுகளுக்கு.
Thanks for the info Mr Vasu Sir. Once more we can
meet at Chennai for the movie. Hope you will also
free to visit to Chennai for watching the movie.
வாசு சார்
நான் வாழ வைப்பேன் வெளியீட்டைப் பற்றிய தகவலைச் சுடச் சுட தந்து நம் உள்ளங்களையெல்லாம் குளிர வைத்திருக்கிறீர்கள். மிகவும் சந்தோஷமாயிருக்கிறது. ஆவலுடன் எதிர்பார்ப்போம்.
Dear Vasudevan sir,
Information & Trailor of Naan Vazhavaippen are very nice
Naan Vazha Vaipen
SCREENSHOTS
http://padamhosting.com/out.php/i716...nap-554375.png
http://i922.photobucket.com/albums/a...zhaVaippen.jpg
http://padamhosting.com/out.php/i716...nap-555411.pnghttp://padamhosting.com/out.php/i716...nap-555566.png
http://padamhosting.com/out.php/i716...nap-555802.pnghttp://padamhosting.com/out.php/i716...nap-556604.png
தனிப்பட்ட முறையில் என்னுடைய அபிப்ராயம் என்ன என்றால், எந்த பழைய படமாக இருந்தாலும் இருக்கும் வடிவிலேயே மிகச் சிறந்த பிரதியாக நகலெடுத்து அதனை நல்ல முறையில் மக்களிடம் சென்றடையும் வகையில் விளம்பரம் செய்தால் அதுவே நிச்சயம் நல்ல பலன் தரும். அது மட்டுமின்றி ஒலியளவில் வேண்டுமானால் நவீனப் படுத்திக் கொள்ளலாமே தவிர ஒரிஜினல் இசையினையும் ஒலியினையும் மாற்றம் செய்யாமல் இருப்பது அந்த படைப்பாளிகளுக்கு நாம் செய்யும் மரியாதையாகும்.
நான் வாழ வைப்பேன் படத்தைப் பொறுத்த வரை போட்டுப் பார்த்த சில நிமிடங்கள் வரையில் பிரதி நன்றாக இருந்தது. தற்பொழுது ரசாயன முறையில் சுத்தம் செய்யப் பட்ட பின்னர் அது நிச்சயம் இன்னும் மெருகேறியிருக்கும். அவ்வாறிருக்கும் பட்சத்தில் இதுவே ரசிகர்களின் திருப்தியைப் பெறும் அளவில் உள்ளது. எனவே இந்த பிரதியினையே திரையரங்கில் வெளியிடலாம். 35 எம் எம் வடிவில் பார்க்கும் திருப்தி அகலத் திரையில் கிடைப்பதில்லை - குறிப்பாக பழைய படங்களைப் பொறுத்த வரை.
எனவே நான் வாழ வைப்பேன் படம் தற்போதுள்ள நிலையிலேயே திரையிட்டால் போதும் நன்றாக இருக்கும்.
படத்தைப் பொறுத்த வரையில் மிகப் பெரிய வெற்றி பெற்ற படம். சித்ரா திரையரங்கு உரிமையாளர் மிகவும் சந்தோஷத்துடன் 100 வது நாள் விழாவில் பேசியது மறக்க முடியாது.
அதே போல் ரஜினி காந்த் என்ற கலைஞனுக்குள் இருக்கும் மற்றொரு பரிணாமத்திலான நடிப்பை வெளிக் கொணர்ந்த படம் நான் வாழ வைப்பேன்.
நண்பர்களின் முயற்சி வெற்றி பெற உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.