சுசிலா மேடம் பாடிய எனது ஐம்பதுகளின் விருப்ப பாடல்.ஆதி நாராயண ராவ் ஒரு அற்புதமான classical composer .(அடுத்த வீட்டு பெண் புகழ்)
மணாளனே மங்கையின் பாக்கியம்.
https://www.youtube.com/watch?v=8a91oS0B_B4
Printable View
சுசிலா மேடம் பாடிய எனது ஐம்பதுகளின் விருப்ப பாடல்.ஆதி நாராயண ராவ் ஒரு அற்புதமான classical composer .(அடுத்த வீட்டு பெண் புகழ்)
மணாளனே மங்கையின் பாக்கியம்.
https://www.youtube.com/watch?v=8a91oS0B_B4
72 இல் வந்த மாப்பிள்ளை அழைப்பு என்ற படத்தின் விசேஷங்கள்.
மருத நாட்டு வீரன் இயக்குனர் டி.ஆர்.ரகுநாத் (கார்த்திக் ரகுநாத் அப்பா) பாதை மாறி பயணம் செய்தார்.
படம் வெற்றி பெறா விட்டாலும் (1972),மெல்லிசை மாமணி குமாரின் பாடல்கள் படு ஹிட்.
விஜயலலிதா முழு கதாநாயகி வேஷம்.
இந்த படத்தில் ஆள தொட்டு தோள தொட்டு என்ற என் favourite பாடலை போட்டாயிற்று.
இப்போது கார்த்திக் சாரின் நட்புக்காக ,ஒரு விருப்பமில்லா காரியம் செய்கிறேன்.(தியாகம்!!!!)
https://www.youtube.com/watch?v=b0uYnVjZ498
டியர் கோபால்
உங்கள் தியாக உணர்வை பாராட்டி உங்கள் தலைவியின் பாடலை பரிசாக தருகிறேன் . ஏற்று கொள்ளவும் .
http://youtu.be/G9g29W9VYBk
மணலெடுத்து வீடு கட்டிய பட்டியலில் நம்ம தலைவர் படமும் உண்டே..
நல்ல வீடு திரைப்படத்தில் பால சிவாஜி பாடும் பாட்டு நல்ல நல்ல வீடு கட்டி நாம் மகிழ்வோமே... இந்தப் பாடல் எங்கும் கிடைக்கவில்லை.. ஏ.எம்.ராஜா பாடியது.
அது வரை நல்ல வீடு படத்தில் வேறொரு இனிமையான பாடல் ஏ.பி.கோமளா பாடிய கோவிந்தன் குழலோசை கேட்டு பாடலைக் கேட்டு இன்புறுவோம்.
http://www.inbaminge.com/t/n/Nalla%20Veedu/
பொங்கும் பூம்புனல்
இன்று நாம் காணவிருக்கும் பாடல் சிங்காரி படத்தில் இடம் பெற்ற ஒரு சாண் வயிறே இல்லாட்டா இந்த உலகத்தில் ஏது கலாட்டா.. பாட்டின் பல்லவியே சொல்லி விடும் பாடலைப் பற்றி..
அர்த்தமுள்ள வரிகள் எந்தக் காலத்திற்கும் பொருந்தும் பாடல்
http://www.youtube.com/watch?v=5k9AbTRHmmc
தேர்ந்த நடனக்கலைஞர் நடிகர் திலகம் என்பதற்கு அத்தாட்சியான பல பாடல் காட்சிகளில் இது குறிப்பிடத் தக்கதாகும். தூக்குத் தூக்கி திரைப்படத்தில் இடம் பெற்ற குரங்கிலிருந்து பிறந்தவன் பாட்டு, படம் வெளியான காலகட்டத்திலேயே பட்டி தொட்டியெங்கும் பேசப்பட்டது. பாடலின் பல கட்டங்களில் நடிகர் திலகம் நீண்ட நடனப் பகுதிகளை ஒரே ஷாட்டில் ஆடி நடித்திருப்பது பிரமிக்கத் தக்கதாகும். ஒரு திரைப்படத்தின் அனைத்து அம்சங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டும் அடக்கமாக வாழ்ந்தவர். பாருங்கள். கேளுங்கள்.
http://youtu.be/dUkEdNdxvoU
பொங்கும் பூம்புனல்
நாஸ்திகன் திரைப்படத்தில் திருச்சி லோகநாதன் பாடிய பாடல் மாநில மேல் சில மனிதர்கள் மாறுவதேனையா.... கு.மா.பா இயற்றி சி.ராமச்சந்திரா இசையமைத்த பாடல். இது ஒரு மொழிமாற்றப் படம்.
http://www.youtube.com/watch?v=vAuyp_bEwyk
பொங்கும் பூம்புனல்
நாட்டிய தாரா தெலுங்குத் திரைப்படத்தின் தமிழாக்கமும் அதே பெயரில் வெளிவந்தது. கண்டசாலா பாடிய துள்ளித் துள்ளி எங்கே போறாய் பாட்டு சிலோன் ரேடியோவில் மதிய வேளைகளில் 3 மணி வாக்கில் ஒலிபரப்புவார்கள். இன்றும் இனிக்கும் பாடல்.
http://www.youtube.com/watch?v=BOjYVutwaoQ
தெலுங்கு வீடியோவில் தமிழ் பாடலை இணைத்து தந்துள்ளார் நண்பர். அவருக்கு நமது பாராட்டுக்கள்.
அருமையான பாடல்கள் வாசு சார், கோபால் சார், ராகவேந்திரா சார்.
தேசுலாவுதே - தேஜஸ் அல்லது நல்லது என்று பொருள் என நினைக்கிறேன்
சரி ஒரு அருமையான நகைச்சுவை பாடலை கேட்டு கண்டு மகிழ்வோம்
ஆரவல்லி திரையில் ஜி.ராமனாதனின் இசையில் சீர்காழியாரும் திருச்சி லோகனாதனும் இசைத்த அழகான பாடல்
திரைல் கா கா செளந்தர், சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன், சி.எல்.ஆனந்தன்
பழக்கமில்லாத கழுதைகிட்ட கொஞ்சம் பார்த்து கறக்கனும் பால
http://www.youtube.com/watch?v=gSuPhqedWvU