http://i501.photobucket.com/albums/e...ps43ba29ce.jpg
Printable View
சிவாஜியின் காதல்கள்- 1
பராசக்தி- முதற்காதல்.
புது பெண்ணின் மனசை தொட்டு போன அந்த புத்தம் புது நாயகன்.
முதற்காதல் என்றால் எல்லோருக்குமே புது அனுபவம். ஐம்பதுகளின் இளைஞர்களுக்கு முதற்காதல் பிராணநாதா,பிரபோ என்ற ரேஞ்சில் இல்லாவிட்டாலும் அட்லீஸ்ட் ஒரு அத்தான்,மாமா,ஏன்னா ,என்னாங்க அளவிலாவது வாய்த்திருக்கும். ஆனால் அந்த இளைஞனுக்கு வாய்த்தது வா,போ,குணா என்று விளிக்கும் ஒரு பாரதி கனவு கண்ட புதுமை பெண்.பேஷ் பேஷ் அந்த இளைஞனின் முதற்காதலே மிக நன்றாக வாய்த்துள்ளதே? பத்மினியுடன் முதற்படம்.என்ன திகைக்கிறீர்கள்?படம் டைட்டில் கார்டு பண்டரி பாய்(பத்மினி)என்றே காட்டும்.விமலாவுடன் குணாவின் முதற்காதலை பார்க்கு முன் ஜாலியுடன் (கண்ணம்மா) ஜாலியாக பார்த்த முதல் நடனத்தை (சிவாஜியின் முதல் பாடல் காட்சி)பார்த்து விடலாமா?
அந்த பணக்கார ,பர்மா செல்ல பிள்ளை ,தமிழ் நாட்டில் முதல் குரலை ஏளனம் செய்து ,ஹோட்டல் paradise (பர்தேஸ்) நுழையும் அமர்க்களமாய். ஸ்டைல் ஆக அலட்சியம் கலந்த curiosity யுடன் அறையை ஒரு நோட்டம் விட்டு,காப்பி ஆர்டர் செய்து,ரூம் பாயிடம் காசை சுண்டி டிப்ஸ் கொடுக்கும் தோரணை!!என்ன சொல்ல?கீழே வந்து மஜுராவிற்கு டிக்கெட் கேட்க ,அன்றைக்கு டிக்கெட் இல்லாமல் ,மறுநாள்தான் ,பண்ணி விடலாமா என்று கேட்கும் reception ஆளிடம், ஓரிரு நொடி கடுப்பு கலந்து ஏமாற்றம் காட்டி சரி என்பான்.அறைக்கு திரும்பி வந்தால் ,படுக்கையில் ஒரு முன் பின் அறியாத பெண்.பட படப்புடன் வியர்வையை டையால் துடைத்து, பிறகு அந்த பெண் தன் தவறுதான் என்றதும் ,காப்பியை கொடுத்து உபசரித்து,ஒரு ஆர்வம்,தயக்கம்,தடுமாற்றம்,பயம் கலந்த akwardness என்ற எல்லா உணர்வும் காட்டி, நடனத்திற்கு செல்ல அரை மனதாக சம்மதம் கொடுக்கும் அழகு!!பின் அழைப்பது பெண்ணல்லவா?ஒரு பெண்ணின் அருகாமை ,அக்கால இளைஞர்களுக்கு(50 களின்) கொடுக்கும் உணர்வை பார்க்க விழைவோர் ,இக்காட்சியை பார்த்தே ஆக வேண்டும்.நெளிந்து கொண்டு நாட்டியத்தில் முள் மேல் அமர்வது போல ,நடுவில் போய் விடலாமே என்று தயக்கம் கலந்த அரை மனதை, உணர்த்தியும்,பெண்ணின் அருகாமை தரும் சிறு சலனத்தால் பாவம் இளைஞன்...
இந்த காட்சியில் நடித்தவன் யாரோ கணேசன் என்ற புது முகமாம்!!
அதே இளைஞன். கதாநாயகி அறிமுக காட்சியில் பெட்டியை பிடுங்கி வில்லன் ஓட ,கதாநாயகன் அவனுடன் போராடி ,பெட்டியை மீட்டு தந்து,காதலை பெறுவதையே பார்த்த நமக்கு ஒரு அதிர்ச்சி. பெட்டியை ,கதாநாயகியிடம் இருந்து பறித்து ஒடுபவனே நாயகன்தான்.பெட்டியை விட்டு ,சாப்பாட்டை எடுத்து ,காக்கைகளுடன் (முதல் பாடலுடன் பாடல் காட்சி-சிவாஜிக்கு)பகிர்ந்து பாடி, மகிழும் இடம் ,கதாநாயகியின் வீடாகவே இருக்க வேண்டுமா?அவளை கண்டதும் ஒரே ஓட்டம்.
பிறகு பௌர்ணமி நாளில்,ஒரு நதிக்கரையில் அதே பெண். அவள் நல்ல மனமறிந்து, அவள் அழைப்பை ஏற்று வீடு சென்றால்....
காதல் மொழியா பேசினாள் கட்டிளம் கன்னி?குணா என்றும்,வா,போ என்றும் டோஸ்தான்.பிச்சைஎடுக்க வெட்க படவில்லை.பைத்தியமாக நடிக்க வெட்க படவில்லை,திருட வெட்க படவில்லை ஆனால் நீ ஏமாந்ததை சொல்ல வெட்கம், உன்னை ஏமாற்றிய அந்த ஜால காரியை பாராட்டுகிறேன்,அவளால்தான் நீ இந்த உலகத்தை பார்த்தாய் என்றெல்லாம் lecture பாணியில் டோஸ்..ஆனால் கடைசியில் சிறிதே கனிந்து ஒருவரையொருவர் புரிவர்.(அண்ணாவிடம் கற்றவளாம்). பிறகு இரவு தூங்காமல் தங்கையை எண்ணி குணசேகரன் உருக... விமலாவோ குணசேகரனின் காதல் கனவில் உருக...
சிவாஜியின் கதாநாயகி மட்டும் பாடும் முதல் காதல் டூயட்.சுரிதாரில் அமர்க்களமாக முதல் பட கூச்சம் சிறிதும் இன்றி, கனவு காணும் கதாநாயகியின் எண்ண ஓட்ட படியே காதல் செய்வார்.(அந்த பாத்திர நடைமுறை சாயல் அற்று)
இந்த காட்சியில் நடித்தவன் யாரோ கணேசன் என்ற புதுமுகமாம்!!!
கடைசி காட்சியில் சுபம் போடும் முன்னால், நான் போகட்டுமா என தயங்கி கேட்கும் நாயகியை ,சோபாவின் கை பிடியில் காப்பி குடித்து கொண்டே தன் எண்ணத்தை உணர்த்தும் அழகு. பிறகு பெரிய நூலால் அவள் தலைப்பை இழுத்து சொந்த குரலில் பெண்ணின் மனதை தொட்டு பாடி கிண்டலிக்கும் இளமை.பார்த்து விட்டு சிறிய நூல் போதுமே என்று சொல்லும் அண்ணியின் முன் நாண சம்மதம்.
இந்த காட்சியிலும் யாரோ கணேசன் என்ற புதுமுகமாம்!!!!