-
http://i67.tinypic.com/2d1ptvn.jpg
உரிமைக்குரல் படத்தில் தலைவரின் அசத்தலான காட்சி! இப்படம் வெளிவந்த போது தலைவரின் வயது 57. ஆனால் 25 வயது இளைஞரைப்போல் இளமையாகவும், வலிமையாகவும் அசத்தியிருப்பார். ஸ்கிரீன் ஷார்ட் பின்னனியின்றி படம் முழுதும் ரேக்ளா வண்டி ஓட்டுவது, வண்டியில் உட்கார்ந்தபடியே எதிரிகளை சவுக்கால் விளாசுவது, ஏர்க்கலப்பையை அசால்ட்டாக சிலம்பம்போல் சுழற்றி சண்டை போடுவது என்று பட்டியல் நீளும். லதாவை திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வரும்போது அண்ணன் சகஸ்ரநாமம் தடுப்பார். அப்போது அவரிடம் தனது செயலை நியாயப்படுத்தி அழுத்தமாகவும், நிதானமாகவும் எம்ஜிஆர் கூறும் பதில் திரையில் மூன்று நிமிடம் வ*ரை ஓடும். இவை ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட காட்சியாகும்.
நன்றி சந்தானம் ஏடிஎம்கே முகநூல்
-
தலைவர் சுமார் 60 தெலுங்கு படங்களின் ரீமேக்குகளில் நடித்துள்ளார். பெரும்பாலும் என்.டி.ராமராவ் நடித்தது. உரிமைக்குரல் மட்டுமே நாகேஸ்வரராவ் நடித்து 1971ல் வெளிவந்த "தசரா புல்லொடு" மட்டுமே! இந்த கதையில் உள்ள அண்ணன், தம்பி, அண்ணி, முறைப்பெண் கேரக்டர்கள் மட்டுமே உரிமைக்குரலுக்கு பயன்படுத்த பட்டது. கோபி என்ற பெயரும், நாகேஸ்வரராவ் உடுத்தி வரும் வேஷ்டி, ஒற்றைக்காலர் வைத்த சட்டை டிசைன் தலைவரும் பயன்படுத்திகொண்டார். நாகேஸ்வரராவ் ஜீப்பில் சுற்றுவார். தலைவர் ரேக்ளா குதிரை வண்டியை பயன்படுத்துவார். தெலுங்கில் வாணிசிரி, சந்திரகலா என இரு நாயகியர். இருவரும் நாகேஸ்வரராவை விரும்புவர். ஆனால் நாகேஸ்வரராவும், வாணியும் காதலர்கள். இரு குடும்பங்களின் வற்புறுத்தலால் சந்திரகலாவை மணக்க நாகேஸ்வரராவ் தயாராவார். சந்திரகலாவிற்கு கேன்சர் நோய் வந்துவிடுவதால் இறுதியில் வாணி(vaneesri)யை நாகேஸ்வரராவிடம் சேர்த்து வைத்துவிட்டு சந்திரகலா இறந்து விடுகிறார். மொத்தத்தில் ஒருசில ஒற்றுமையைத் தவிர எம்ஜியாரின் உரிமைக்குரலுக்கும் தஸரா புல்லுடுவிற்கும் சம்பந்தமே இருக்காது. தலைவர் பாணியே தனிதான்!
http://i63.tinypic.com/i1hcna.jpg
-
கேள்வி – " உங்களுக்கு சேரும் கூட்டமெல்லாம் நீங்கள் பிரபல சினிமா நடிகர் என்பதால் இருக்கலாம் அல்லவா? "
எம்.ஜி.ஆர். – " நான் நடிகன், ஆனால் என்னைப்போல எத்தனையோ நடிகர்கள் உள்ளனர். இவர்கள் எல்லாம் என் போலவே இயக்கம் ஆரம்பித்தால் ஒவ்வொருவருக்கும் இப்படிக் கூட்டம் சேரும் என்று சொல்ல முடியுமா? "
http://i66.tinypic.com/m7vn1h.jpg
நன்றி சந்திரன் வீராசாமி முகநூல்
-
-
-
-
சினி சாரல் மாத இதழ் -ஜூன் 2017
http://i64.tinypic.com/11vqjqf.jpg
http://i64.tinypic.com/15evdk5.jpg
நேற்று இன்று நாளை -1974ல் வெளியான திரைப்படம் விடுபட்டுள்ளது
-
-
-
அச்சாரம் மாத இதழ் -மே 2017
http://i67.tinypic.com/20i89i9.jpg
அந்தக் கணமே தம்மையும் அறியாமல் இருக்கையில் இருந்து எழுந்த வாட்டாள்
நாகராஜ், மக்கள் திலகத்தின் கைகளை பற்றிக் கொண்டு "இனிமே உங்க படத்திற்கு நானே பேனர் கட்டுகிறேன் , போஸ்டரும் ஓட்டுகிறேன் " என்றார்
அதுதான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
விவரிப்பு : எம்.ஜி.ஆர். பிக்ச்சர்ஸ் ரவீந்தர்