-
நல்லது கண்ணே கனவு கனிந்தது
நன்றி உனக்கு
உறவில் எழுந்ததுஅன்பு விளக்கு
எனது மடியினில் வா..சீதா.. சீதா..சீதா.. சீதா...
நல்லது கண்ணா கனவு கனிந்தது
நன்றி உனக்கு
உறவில் எழுந்ததுஅன்பு விளக்கு
எனது மடியினில் வா..ராமா...ராமா..ஸ்ரீ ராமா...
காலோடு கால்கள் பின்ன
ஊர்கோலம் போகும் மேகம்
மாப்பிள்ளை பெண்ணோடு
பன்னீரில் நீராடச் செல்கின்றதோ
( நல்லது கண்ணே)
தேடும் உறவுகள் இரவை நினைந்து
வாடும் நிலை கண்டேன்
பாடும் பறவைகள் பனியில் விழுந்து
கூடும் சுவை கண்டேன்
தேவைகள் ஆயிரம்
பார்வையில் தீருமோ
( நல்லது கண்ணா)
மாலைப் பொழுதினில் மன்னனின் மார்பின்
மஞ்சள் பதியாதோ
காலைப் பொழுதில் கட்டி அணைத்துக்
கண்கள் சிவக்காதோ
நீண்ட நாள் வாழ்வினை
வேண்டினேன் வந்தது
( நல்லது கண்ணே)
-
மஞ்சள் முகமே வருக
மங்கள விளக்கே வருக
கொஞ்சும் தமிழே வருக
கோடானுகோடி தருக
(மஞ்சள்)
-
-
-
பாடல்: மஞ்சள் வெயில் செவ்வானத்தில்
திரைப்படம்: சங்கரி
இசை: வி.குமார்
பாடியவர்கள்: ராஜ்குமார் பாரதி & வாணி ஜெயராம்
மஞ்சள் வெயில் செவ்வானத்தில்
மின்னக்கண்டேன் சந்தோஷத்தில்
மஞ்சள் வெயில் செவ்வானத்தில்
மின்னக்கண்டேன் சந்தோஷத்தில்
புதுவித கவிதைகள் பலவித
பறவைகள் சொல்ல சொல்ல
மணிவிழி மயங்குது மலருடல்
தழுவுது மெல்ல மெல்ல
மஞ்சள் வெயில் செவ்வானத்தில்
மின்னக்கண்டேன் சந்தோஷத்தில்
மஞ்சள் வெயில் செவ்வானத்தில்
மின்னக்கண்டேன் சந்தோஷத்தில்
புதுவித கவிதைகள் பலவித
பறவைகள் சொல்ல சொல்ல
மணிவிழி மயங்குது மலருடல்
தழுவுது மெல்ல மெல்ல
உதடு எனும் கதவுகளை
திறந்துவிடு திறந்துவிடு
அன்பே நான் தேன் குடிக்க ஹா
இரவுவரை பொறுத்து இரு
தனிமையிலே தனிமையிலே
மெதுவாக நான் கொடுக்க
ஏராளம் இன்பம் உண்டு
இதழோரம் அள்ளித்தா
ஏராளம் இன்பம் உண்டு
இதழோரம் அள்ளித்தா
எல்லாமே உனக்காகத்தான்
மஞ்சள் வெயில் செவ்வானத்தில்
மின்னக்கண்டேன் சந்தோஷத்தில்
புதுவித கவிதைகள் பலவித
பறவைகள் சொல்ல சொல்ல
மணிவிழி மயங்குது மலருடல்
தழுவுது மெல்ல மெல்ல
பழுத்திருக்கும் பழம் நழுவி
பாலில் விழ பாலில் விழ
இந்நேரம் சுவைக்க ஹா
அனலில் விழும் மெழுகு என
உருகுவதேன் உருகுவதேன்
பொன்மேனி நான் அணைக்க
ஓயாமல் தொல்லை செய்யும்
விளையாட்டுப்பிள்ளை நீ
ஓயாமல் தொல்லை செய்யும்
விளையாட்டுப்பிள்ளை நீ
தாயாகித் தாலாட்டு நீ
மஞ்சள் வெயில் செவ்வானத்தில்
மின்னக்கண்டேன் சந்தோஷத்தில்
புதுவித கவிதைகள் பலவித
பறவைகள் சொல்ல சொல்ல
மணிவிழி மயங்குது மலருடல்
தழுவுது மெல்ல மெல்ல
மெல்ல மெல்ல…மெல்ல மெல்ல
மெல்ல மெல்ல…மெல்ல மெல்ல
-
கிருஷ்ணா ஜி அவர்களே
மஞ்சள் வெயில் மாலையிலே - பாடலும் , ஜெய்கணேஷ் சீமா ((பெரிதாக இருக்குமே அதுதான் உதடு) ஆடலும்
https://www.youtube.com/watch?v=2XMH6SyG538
சந்திர ஜோதி கிளம்பிய மாதிரி - என்கிற பாடல் மலேசிய வாசுதேவன் மற்றும் டி.கே.கலா பாடியது..
ஜெய்சங்கர் மற்றும் சீமா இருவரும் ஆடும் பாடல்
https://www.youtube.com/watch?v=yRVS2JqKpPQ
-
நன்றி தமிழ் ஹிந்து
http://tamil.thehindu.com/multimedia...o_2104618g.jpg
“ஷெரீப் பல நற்பண்புகளின் உறைவிடமாய் இருந்தார். திரையுலகத் தொடர்பிருந்தும் அதன் சீரழிவுகளில் சிக்கிக் கொள்ளாத உயர்பண்பு கவிஞர் கா.மு. ஷெரீப்பிடம் இருந்தது. ஒரு கவிஞன் வறுமையிலும் செம்மையாக எப்படி வாழ்வதென்பதை அவரிடமிருந்து நான் பயின்றேன். கவிஞர் ஷெரீப் ஒரு முஸ்லிமாக இருந்தபோதிலும் தீவிரமான சைவர். அதுகுறித்து அவரை நாங்கள் பரிகாசம் செய்வதுண்டு.
கள் வியாபாரம் செய்பவன் கள் அருந்த மாட்டான். அதுபோல் கசாப்பு வியாபாரம் செய்பவன் கறி சாப்பிட மாட்டானா? கவிஞர் ஷெரீப் கறி வியாபாரம் செய்பவராக இருந்தாலும் இருப்பாரே ஒழிய புலால் சாப்பிடமாட்டார். ஷெரீப் புகை பிடிப்பதில்லை. நான் அவர் எதிரில் ஒரு மரியாதைப் பண்பு கருதிப் புகை பிடிக்காமல் இருக்கும் பழக்கத்தை மேற்கொண்டேன்” என்று ஷெரீப்பின் நற்பண்புகளைப் பட்டியலிடுகிறார் எழுத்தாளர் ஜெயகாந்தன்.
பன்முகக் கலைஞன்
கவி கா.மு. ஷெரீப் கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர், பதிப்பக உரிமையாளர், அரசியல்வாதி, ஆன்மிகவாதி எனப் பன்முகத் தன்மை கொண்டவர்.
11.08.1914 அன்று கீழத் தஞ்சை மாவட்டம் அபிவிருத்தீஸ்வரம் என்ற கிராமத்தில், காதர்ஷா இராவுத்தர்-பாத்துமா அம்மா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் ஷெரீப். அவர் முறையாகப் பள்ளிக்கூடம் சென்று பயின்றவரல்ல. 5 வயது முதல் 14 வயதுவரை சொந்தமாகவே ஆசிரியர் ஒருவரிடம் தமிழ் கற்றார். தந்தையாரின் தூண்டுதல் காரணமாகத் தமிழ் இலக்கணத்தையும் இலக்கியங்களையும் கற்றார். இளமையிலேயே அவர் கவிதை இயற்றும் திறன் பெற்றிருந்தார்.
அவரது முதல் கவிதை 1933-ம் ஆண்டு பெரியாரின் குடியரசு நாளிதழில் வெளிவந்தது. அக்கவிதை பெரியாரைப் போற்றி எழுதப்பட்ட கவிதை. ஆரம்ப காலத்தில் பல சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது சிறுகதைகள் ஆனந்த விகடனில் வெளிவந்துள்ளன. காதல் வேண்டாம், காதலும் கடமையும், கனகாம்பரம் ஆகியன இவரது சிறுகதைத் தொகுப்புகளாகும். நல்ல மனைவி, விதியை வெல்வோம், தஞ்சை இளவரசி ஆகிய புதினங்களையும் எழுதியுள்ளார்.
எழுத்து - பேச்சு - அரசியல்
‘சிவாஜி’ என்ற இதழின் துணையாசிரியராகச் சில ஆண்டுகள் பணியாற்றிய இவர், 1948-ல் ‘ஒளி’ என்ற மாத இதழைத் தொடங்கினார். 1952-க்கும் 1969-க்கும் இடைப்பட்ட காலத்தில் சாட்டை, தமிழ் முழக்கம் ஆகிய இதழ்களை வெற்றிகரமாக நடத்தினார். ம.பொ.சி.யின் ‘செங்கோல்’ வார இதழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதியுள்ளார்.
சென்னை எல்லீஸ் சாலையை ஒட்டிய பச்சையப்ப செட்டித் தெருவில் இருந்த தனது இல்லத்தில் ‘சீதக்காதி பதிப்பகம்’ என்ற புகழ்பெற்ற நூல் வெளியீட்டகத்தைத் தொடங்கினார். அதற்கு முன்னர் தமிழ் முழக்கம் என்ற பதிப்பகத்தை நடத்தினார். அதன் மூலம் தான் எழுதிய வள்ளல் சீதக்காதி வரலாறு, ஆயிஷா நாச்சியார் பிள்ளைத் தமிழ், சீறாப்புராணச் சொற்பொழிவு, இறையருள் வேட்டல் ஆகிய நூல்களை வெளியிட்டார்.
தனது வாலிபப் பருவத்தில் காங்கிரஸின் தீவிர ஆதரவாளராக இருந்த அவர் ‘1942 வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் கலந்துகொண்டார். பின்னர் ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தில் சேர்ந்தார். அக்கட்சியின் பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். தமிழக எல்லைப் போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஆகிய போராட்டங்களில் கலந்துகொண்டார். பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகிய திராவிட இயக்கத் தலைவர்களுடன் நெருங்கிய உறவுகொண்டிருந்தார்.
1970-ம் ஆண்டுக்குப் பின் ஆன்மிகப் பாதைக்குத் திரும்பி சீறாப்புராணத் தொடர் சொற்பொழிவுகளைப் பாடகர் குமரி அபூபக்கருடன் இணைந்து தமிழகமெங்கும் நடத்தினார். சீறாப்புராணத்திற்கும் சிலப்பதிகாரத்திற்கும் உரைகள் எழுதினார்.
இறைவனுக்காக வாழ்வது எப்படி, இஸ்லாமும் ஜீவகாருண்யமும், இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா?, கிழக்கிலுள்ள பிறைக்கொடி நாடுகள், மகளே கேள், கண்ணகி, விபீஷணன் வெளியேற்றம் ஆகியன இவர் எழுதியுள்ள பிற நூல்கள். அமுதக் கலசம், ஆன்ம கீதம், ஆயிஷா நாச்சியார் பிள்ளைத்தமிழ், இறையருள் வேட்டல், ஒளி, நபியே எங்கள் நாயகமே, மச்சகந்தி, பல்கீஸ் நாச்சியார் காவியம், மச்சகந்தி, களப்பாட்டு, நீங்களும் பாடலாம் இசைப்பாட்டு ஆகியன இவரது கவிதைத் தொகுதிகள்.
திரைத் தமிழில் சாதனை
கவி கா.மு.ஷெரீப் தமிழக மக்களிடையே மிகவும் புகழ் பெற்றதற்குக் காரணம் அவரது திரைப்படப் பாடல்களே என்றால் அது மிகையில்லை. நாநூறுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை அவர் இயற்றியுள்ளார். அவரது முதல் பாடல் இடம்பெற்ற படம் ‘பொன்முடி’. காலத்தால் நிலைத்து நிற்கும் கா.மு.ஷெரிப்பின் பாடல்களை இங்கே பட்டியலிட இடம்போதாது. என்றாலும் சில:
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?, வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா, பணம் பந்தியிலே குணம் குப்பையிலே…, வானில் முழுமதியைக் கண்டேன்… வனத்திலொரு பெண்ணைக் கண்டேன், நான் பெற்ற செல்வம் நலமான செல்வம், ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே, ஒன்றுசேர்ந்த அன்பு மாறுமா உண்மைக் காதல் மாறிப்போகுமா?, அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை, பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமா, உலவும் தென்றல் காற்றினிலே, போன்ற பல பாடல்கள் இன்னும் ரசிகர்களின் இதயங்களை விட்டு நீங்கவில்லை.
“ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே... என்ற முதலாளி திரைப்படத்தில் வரும் பாடலை கிராமப்புறத்திலே உள்ளவர்களெல்லாம் பாடக்கேட்டு அவர்கள் அந்தப் பாடலிலே ஒரு மகிழ்ச்சியை உருவாக்கிக்கொண்டு நடப்பதைக் கண்டு நான் பூரிப்படைகிறேன். இலக்கியத்துக்கு நிகராகத் திரைப்படப் பாடல்களும்கூட நிலைத்து நிற்கமுடியும் என்பதற்கு அண்ணன் கா.மு.ஷெரீப் எழுதிய பல பாடல்களை எடுத்துக்காட்டலாம்.” என்று புகழாரம் சூட்டினார் மு.கருணாநிதி.
இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் குன்னாகம் என்ற ஊரிலுள்ள தேநீர்க் கடையொன்றில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தான் ஒரு இளைஞன். அப்போது அங்கிருந்த வானொலிப் பெட்டியில் ‘அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை, அவர் அடிதொழ மறுப்பவர் மனிதரில்லை’ என்ற கவியின் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அதைக் கேட்ட அந்த இளைஞன் உணர்ச்சி வயப்பட்டு “கெட்டவருடன் சேர்ந்து பெற்ற தாயின் மனதை நோகடித்தவன் நான்; நன்றி கெட்டவன்” என்று குமுறி அழுதிருக்கிறார்.
“இப்படி திடீரென்று தேநீர்க் கடையில்தான் உன் தவறு புரிந்ததா? “ என அவனிடம் கடைக்காரர் கேட்டபோது அதற்கு அவன், “ஆமாம், இந்தப் பாடல் என் மனத்தை மாற்றிவிட்டது. இனி என் தாயை உயிரினும் மேலாகக் கொண்டாடிக் காப்பாற்றுவேன். உங்களுக்கு என் நன்றி” என்று கூற, அதற்கு அந்தக் கடைக்காரர், “உன் நன்றிக்கு உரியவர் தமிழ் முழக்கம் கா. மு. ஷெரிப். அவர்தான் இந்தப் பாடலை எழுதியவர்” என்றாராம்.
சிலோன் விஜயேந்திரன் எழுதியுள்ள ‘அறுபதாண்டு காலத் திரைப்பாடல்கள்’ என்ற நூலில் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். “கவிஞன் என்பவன் ஒரு தாய் மாதிரி பத்தியம் இருக்கணும்; ரசிகனை அவன் புள்ள மாதிரி நேசிச்சு எதைக் கொடுக்கணும், எதைக் கொடுக்கக் கூடாதுங்கிற பொறுப்புணர்வோட எழுதணும்” என்றார் அவர். அவர் சொன்னதற்கேற்ப இந்தச் சம்பவமும் நடந்திருக்கிறது. இந்தப் பாடல் ‘அன்னையின் ஆணை’ படத்தில் இடம் பெற்றது.
பாடலாசிரியராக புகழ்பெற்ற அதேசமயம் அவர் பெண் தெய்வம், புது யுகம் படங்களுக்கான வசனத்தையும் எழுதினார். கா.மு. ஷெரீப் தனக்கென ஒரு கொள்கை வகுத்திருந்தார். “அழைத்தால் வருவோம், வாய்ப்பு கொடுத்தால் பாடுவோம், யாரையும் சார்ந்து வாழ மாட்டோம், யாரிடமும் எதையும் கேட்க மாட்டோம்” என்ற கொள்கைப்படியே வாழ்ந்த அவர் 1994-ஆம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி காலமானார். தமிழ்த் திரையிசையும், தமிழ்கூறு நல்லுலகும் கவி கா.மு.வை என்றென்றும் மறக்காது.
http://www.youtube.com/embed/U7LFlk8skas?
-
http://tamil.thehindu.com/multimedia...w_2104561g.jpghttps://encrypted-tbn1.gstatic.com/i...cPImL99mmVcZlyhttps://encrypted-tbn1.gstatic.com/i...LQ-K71aeXESA9Fhttps://encrypted-tbn3.gstatic.com/i...demeAUpPXKoB2v
தமிழ் சினிமாவின் கதைப்போக்கைத் தடம் மாற்றியவர்களில் முக்கியமானவர் ஸ்ரீதர். உணர்ச்சிபூர்வமான கதைகளைப் படமாக்கியது மட்டுமல்ல, நேர்த்தியான திரைக்கதைகளில் தமது கதாபாத்திரங்களைப் பொருத்தியவர் அவர். கதாபாத்திரங்களின் மீது நம்பகத்தன்மையை உருவாக்க மிகப் பொருத்தமான நட்சத்திரங்களை அவற்றுக்குத் தேர்வு செய்தார்.
ஸ்ரீதரின் நம்பிக்கையைப் பெற்ற நட்சத்திரங்களில் ஒருவர் தேவிகா. ஸ்ரீதர் இயக்கிய ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் சோகச் சுமையை ஏற்றி வைத்தது கல்யாண்குமார் – தேவிகா ஜோடி. அந்த இணைக்கு ரசிகர்கள் கொடுத்த இடத்தைப் பார்த்த இயக்குநர் ஸ்ரீதர், அவர்களை அடுத்த ஆண்டே ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் மீண்டும் இணைத்தார். அந்தப் படமும் மாபெரும் வெற்றிபெற்றது. ஸ்ரீதர் இயக்கத்தில் அடுத்து தேவிகா நடித்த ‘சுமைதாங்கி’ படமும் மறக்க முடியாத படமானது.
பாடியது சுசீலாவா? தேவிகாவா?
விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில் உருவான பல பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாத அமரத்துவம் பெற்றவை. தேவிகா நடித்த பெரும்பான்மையான படங்களில் இந்த மெல்லிசை மன்னர்களின் பாடல்கள் அமைந்துபோயின. “ நான் பாட வைத்தது சுசீலாவையா இல்லை தேவிகாவையா?” என்று எம்.எஸ்.வி.யே வியந்து கேட்கும் அளவுக்குப் பாடல்களுக்குத் தேவிகா வாயசைக்கிறாரா அல்லது நேரடியாகப் பாடுகிறாரா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு வந்தது. அந்த அளவுக்குச் சிறப்பானதொரு நடிப்பைப் படத்திற்குப் படம் வெளிப்படுத்தினார் தேவிகா.
நாட்டியப் பேரொளி பத்மினியும், நடிகையர் திலகம் சாவித்திரியும் நீயா, நானாப் போட்டியிட்டு வந்த 60களில் தனக்கு யாரும் போட்டியில்லை என்று தனித்து வெற்றிக்கொடி நாட்டியவர் தேவிகா. தெலுங்கு தேசத்திலிருந்து தமிழுக்கு வந்த அவர், இரு மொழிகளிலும் சுமார் 150 படங்களில் நடித்தார். ஒவ்வொரு படத்திலும் தேவிகா என்ற நட்சத்திரத்தின் ஒளிவட்டம் இல்லாமல் கதாபாத்திரமாகக் கூடு பாய்ந்துவிடும் மாயத்தைச் செய்து காட்டினார்.
பானுமதியின் தேர்வு
முதலாளி படத்தில் எளிய குடும்பத்தின் வள்ளி என்ற பெண்ணாகத் தோன்றிய தேவிகாவின் அழகில் சொக்கிப்போனார்கள் அன்றைய ரசிகர்கள். ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே’ என்று டி.எம்.எஸ் கம்பீரமாகப் பாடிய பாடலுக்கு எஸ்.எஸ். ராஜேந்திரன் ரொமாண்டிக் நடிப்பில் பின்ன, அந்தப் பாடலில் தேவிகா காட்டும் வெட்க அழகுக்குக் கொட்டிக் கொடுக்கலாம். அதே படத்தில் வரும் ‘குங்குமப் போட்டுக்காரா..’ பாடலில் காதலனைப் பகடிசெய்யும் சுட்டித்தனம் எந்தப் பெண் நட்சத்திரத்தையும் நினைவூட்டாத தனி வண்ணம் கொண்டது.
“சொன்னது நீதானா” “கங்கை கரைத் தோட்டம்”, “நெஞ்சம் மறப்பதில்லை”, “அமைதியான நதியினிலே”, “அலையே வா... அருகே வா”, “பாலிருக்கும் பழமிருக்கும்”, “கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே”, “இரவும் நிலவும் வளரட்டுமே”, “நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு”, “ சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?” போன்ற பாடல்களுக்கு அவர் காட்டும் முக நடிப்பில் சொக்கிப்போகாத ரசிகர்களே இருக்க முடியாது.
15 வயதில் அறிமுகம்
பிரமீளா தேவி என்ற இயற்பெயருடன் ‘நாட்டிய தாரா’ என்ற தெலுங்குப் படத்தில் 1956-ல் 15 வயதில் அறிமுகமாகியிருந்தார் தேவிகா. அதே ஆண்டு பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணா தயாரித்து இயக்கிய ‘மணமகன் தேவை’ படத்துக்கு இரண்டாவது கதாநாயகி தேவைப்பட்டார். படத்தின் நாயகன் சிவாஜி. நாயகி பானுமதி. இரண்டாவது கதாநாயகியைத் தேர்வு செய்யும் பொறுப்பை மனைவி பானுமதியிடம் ஒப்படைத்தார் இயக்குநர். அன்று பானுமதியின் சாய்ஸாக இருந்தவர் பிரமீளா தேவிதான். அந்தப் படத்தில் நடித்தபோது பானுமதி தந்த அறிவுரையை ஏற்று நடிகர்
எஸ்.வி. சகஸ்ரநாமம் நடத்தி வந்த ‘சேவா ஸ்டேஜ்’ நாடகக் குழுவில் சேர்ந்தார். சினிமாவில் நடித்துவிட்டு மேடை நாடகத்துக்குச் செல்வதாவது என்று நினைக்காமல் முத்துராமனுடன் இணைந்து நாடகத்தில் நடித்தார். நாடகத்தில் பிரமிளா தேவியைப் பார்த்த பட அதிபர் எம்.ஏ. வேணு முதல் முழுநீளக் கதாநாயகி வாய்ப்பைக் கொடுத்தார்.
முக்தா வி. சினிவாசன் இயக்குநராக அறிமுகமான அந்தப் படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நாயகனாக நடித்தார். 1957-ம் வருடம் தீபாவளிக்கு வெளிவந்த இப்படம், ஜெமினி - சாவித்ரி நடிப்பில் வெளியான சௌபாக்கியவதி படத்தை வசூலில் தோற்கடித்தது. சிறந்த படத்துக்கான தேசிய விருதும் கிடைத்தது. பிரமிளா தேவி என்ற பெயரையும் தேவிகா என்று மாற்றிக்கொண்டார். அந்தப் படம்தான் ‘முதலாளி’. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு முன்னணிக் கதாநாயகியாக உயர்ந்த தேவிகா, சிவாஜி கணேசன் ஜோடியாகப் பல படங்களில் இணைந்து நடித்தார். ‘பாவமன்னிப்பு’, ‘பந்தபாசம்’, ‘அன்னை இல்லம்’, ‘குலமகள் ராதை’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘சாந்தி’, ‘நீலவானம்’, ‘கர்ணன்’ ஆகிய படங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். நீலவானம் படத்தில் அன்று தேவிகாவின் நடிப்பைப் புகழாத பத்திரிகைகளே இல்லை.
குடும்பப்பாங்கு நட்சத்திரம்
கர்ணன் படத்தில் கர்ணம் குருசேஷத்திரப் போர்க் களத்துக்குப் புறப்படும் காட்சியில் மஞ்சள் நிறப் பட்டாடையில் நீராடிய கூந்தலைத் தளையவிட்டபடி தேவிகா வரும் அழகே தனி. ஆனால் அந்தக் காட்சியில் தேவிகா காட்டும் தவிப்பு இன்று பார்த்தாலும் பதறவைக்கும். நடிகர் திலகத்தோடு மட்டுமல்ல ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ஆர். உள்ளிட்ட அன்றைய முன்னணிக் கதாநாயகர்கள் பலருடனும் இணைந்து நடித்த தேவிகா, எம்.ஜி. ஆருடன் ‘ஆனந்த ஜோதி’ என்ற ஒரே ஒரு படத்தில் நடித்திருந்தார். அதில் சிறுவன் கமலஹாஸன் நடித்திருந்தார்.
இயக்குநர் பீம்சிங்கிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தேவதாஸுக்கும் தேவிகாவுக்கும் காதல் பிறந்தது. 1972-ம் ஆண்டு வாழ்விலும் இணைந்தது இந்த ஜோடி. தேவதாஸ் - தேவிகா தம்பதியின் ஒரே மகள் நடிகை கனகா.
தனது கணவரை இயக்குநர் ஆவதற்காக ‘வெகுளிப்பெண்’ என்ற படத்தைச் சொந்தமாகத் தயாரித்தார் தேவிகா. அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க தேவிகாவுக்கு வாய்ப்புகள் வந்துகொண்டே இருந்தன. ஆனால் கடைசிவரை கதாநாயகியாகவே வாழ்ந்து கடந்த 2002-ல் மறைந்த தேவிகா, குடும்பப் பாங்கான நாடகத் தன்மை மிகுந்த கதைகளில் நடிப்புச்சுமை மிகுந்த கதாபாத்திரங்களைத் தன் தோள்களில் தாங்கிய சுமைதாங்கியாக வலம் வந்தார்.
படங்கள் உதவி: ஞானம்
Thanks to Tamil Hindu 12/9/14
ராணி லலிதாங்கி திரை படத்தில் தேவிகா அவர்களை பிரமீள தேவி என்ற பெயரில் டைட்டில் கார்டு பார்த்த நினைவு. கட்டுரையாளர் அந்த படத்தை குறிப்பிடவில்லை
-
மிக்க நன்றி ராஜேஷ், மது, கோபால், சிக, கிருஷ்ணாஜி எஸ்வீ மற்றும் நண்பர்களுக்கு.
மஞ்சள் வெயில் என்றாலே என் மனதில் உடனே நினைவுக்கு வருவது இசைச் சித்தர் பாடி இசை மேதை ஜீயார் இசையமைத்து நடிகர் திலகத்தின் காவேரி திரைப்படத்திலிருந்து இப்பாடல் தான்..
http://www.youtube.com/watch?v=LkP5SCh71MY
இன்னும் பல்லாண்டுகளானாலும் சலிக்காத பாடல்...
-
1979-ல் வெளியான படம் ‘நான் வாழ வைப்பேன்’. அந்தப் படத்துக்கு இசை இளையராஜா. அதில், ‘என்னோடு பாடுங்கள்... நல்வாழ்த்துப் பாடல்கள்...’ என்று ஒரு பாட்டு. எஸ்.பி.பி. பாடிய பாட்டு அது. அந்தப் பாட்டு சிவாஜிக்கு என்பதால், முதலில் அதை டி.எம்.எஸ்ஸை வைத்து ரெக்கார்ட் செய்தார்கள். பிறகு, அது சரியாக இல்லை என்று எஸ்.பி.பி-யைப் பாட வைத்து, அதைத்தான் படத்திலும், இசைத்தட்டிலும் வெளியிட்டார்கள்.
இதில் டி.எம்.எஸ்ஸுக்குக் கோபமான கோபம். இருக்கத்தானே செய்யும்? அவர் கச்சேரிக்காக இலங்கைக்குப் போன இடத்தில் (மதுரை போல அங்கே டி.எம்.எஸ். ரசிகர்கள் அதிகம்.) இந்தத் தகவலைச் சொல்லி, அதே பாடலைப் பாடி, “நீங்களே சொல்லுங்க. இது நல்லாருக்கா, எஸ்.பி.பி. பாடியது நல்லாருக்கா?” என்று கேட்டாராம். ரசிகர்கள் ஏக மனதாக டி.எம்.எஸ். பாடியதுதான் நன்றாக உள்ளது என்று சொன்னார்களாம்.
இப்படியொரு செய்தியை அந்தக் காலத்தில் படித்து இருக்கலாம்
டி.எம்.எஸ்ஸுக்கும் இளையராஜாவுக்கும் இடையில் மனக் கசப்பு ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.
எஸ்.பி.பி-யின் பாடல் அளவுக்குச் சிறப்பானதா இளையராஜா அன்று எடுத்த முடிவு சரியா தவறா
என்றாலும், அதைக் கேட்கும்போது சிவாஜியின் நடிப்பு எப்படி இருக்கும் என்பதை மனக் கண் முன் கொண்டு வர முடிந்தது.
ஒரு வேளை டி.எம்.எஸ்., இளையராஜா இருவரும் அன்றைக்குக் கருத்தொருமித்து, விட்டுக் கொடுத்து, இன்னும் ஓரிரு தடவை முயன்றிருந்தால், நிச்சயம் டி.எம்.எஸ்ஸிடமிருந்து இதை விடச் சிறப்பான பாடல் நமக்குக் கிடைத்திருக்கக்கூடும்!
(டி.எம்.எஸ். பாடிய ‘என்னோடு பாடுங்கள்...’ பாடலைக் கேட்க விரும்பினால், கீழே உள்ள வரியில் சொடுக்கவும்.)
இப்பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்!
http://www.muziboo.com/mp3/ennodu-padungal-0/
https://www.youtube.com/watch?v=Evy-0ZwCkYE
எஸ் பி பாலசுப்ரமணியம் குரலில்
https://www.youtube.com/watch?v=pzO8BBL_Zu8
தகவல் தந்து உதவிய ஆனந்த விகடன் ரவி பிரகாஷ் அவர்களுக்கு நன்றி