-
இனிய நண்பர் எஸ்வி சார் தங்களின் தாயார் உடல்நிலை குறித்து இங்குள்ள பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். அவர் உடல்நலம் பெற்று மீண்டும் பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். அவர் நல்ல முறையில் உடல் நலம் தேறி இல்லம் வந்து உங்கள் குடும்பத்தார் அனைவரும் மகிழ்ச்சியுற எனது சிறப்பு பிரார்த்தனைகள்.
-
திரு. வினோத் சார். தங்கள் தாயார் நலம் பெற்றிட எல்லாம் வல்ல நம் ஆண்டவர் அருள்புரிவாராக.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
My sincere prayers for the speedy recovery of Vinod Sir Mother [ in fact it is even wrong to say Vinod Sir's Mother - because Mother is Mother to everyone]. With all good souls blessings she will be back to normalcy.
எத்தனை செல்வங்கள் வந்தாலுமே எத்தனை இன்பங்கள் தந்தாலுமே
அத்தனையும் ஒரு தாயாகுமா அம்மா ! அம்மா! அம்மா !
எனக்கது நீயாகுமா ?
https://www.youtube.com/watch?v=2K096xYEtsY
https://www.youtube.com/watch?v=QdC5hpVbTNM
-
என்னுடய தாயாரின் உடல் நலன் பூர்ண குணமடைந்து வருகிறது .
நண்பர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன் .
-
நான் கண்ட திரை அரங்கு திருவிழா
http://i715.photobucket.com/albums/w...nap-183550.png
வேலூர் - அப்சரா திரை அரங்கம்
11.1.1968
வேலூர் நகரம் முழுவதும் மக்கள் திலகத்தின் '' ரகசிய போலீஸ் 115 '' வருகிறது போஸ்டர்கள் ஜனவரி முதல் வாரத்தில் திரை அரங்கு பெயர் இல்லாமல் ஒட்டப்பட்டிருந்தது .படம் வெளி வருவதற்கு இரண்டு நாட்கள் முன்பு
அப்சரா அரங்கில் போட்டோ கார்ட்ஸ் - ஷோ கேசில் வைத்தார்கள்
http://i715.photobucket.com/albums/w...nap-182271.png
.திரை அரங்கில் வித விதமான வண்ணப்படங்கள் போஸ்டர்ஸ் ஒட்டியிருந்தார்கள் . இதை காண்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது . குறிப்பாக மக்கள் திலகத்தின் புதுமையான கூலிங் கிளாசில் பிரதிபலிக்கும் காட்சிகள் - வீல் சேரில் நம்பியாருடன் மோதும் காட்சிகள் பிரமிக்க வைத்தது .
அப்சரா அரங்கம் முழுவதும் படம் வெளியாகும் முதல் நாள் இரவில் திரை அரங்கம் முழவதும் தோரணங்கள் , திமுக கொடியுடன் கட்டப்பட்டிருந்தது . ராட்சச சைசில் ஸ்டார்கள் ,மக்கள் திலகம் படங்களுடன் கூடிய நூற்றுக்கணக்கான ஸ்டார்கள் அலங்கரிக்கபட்டிருந்தது .11.1.1968 விடியற்காலை முதல் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது .அப்சரா அரங்கில் 1966 தீபாவளி அன்று மக்கள் திலகத்தின் பறக்கும் பாவை வெளிவந்தது
பறக்கும் பாவை படத்திற்கு பின்னர் ரகசிய போலீஸ் 115 இத்திரை அரங்கில் வந்தது குறிப்பிடத்தக்கது .அப்சரா அரங்கம் திரை சீலை மிகவும் கண்கவர் வண்ணத்தில் அமைந்திருந்தது . திரை அரங்கம் நிரம்பி ரசிகர்கள் படத்தை காண ஆராவாரத்துடன் காத்திருந்தார்கள் . மிக புகழ் பெற்ற கம் செப்டம்பர் இசை ஒலித்தவுடன் திரை சீலை விலகிய பின் ரகசிய போலீஸ் 115 - படத்தின் வரவேற்பு மற்றும் வாழ்த்துக்கள் பல்வேறு அமைப்பினரின் ஸ்லைடு காண்பித்த போது விசில் சத்தத்தில் அரங்கமே அதிர்ந்தது .
ரகசிய போலீஸ் 115 சென்சார் தொடர்ந்து டைட்டில் காட்சி துவங்கியதும் அரங்கமே மகிழ்ச்சியில் ஆராவரம் செய்து கை தட்டி உற்சாகத்துடன் இருந்தார்கள் .டைட்டில்பின்னணி இசையில் மெல்லிசை மன்னரின் அட்டகாசமான ரீ ரெக்கார்டிங் ரசிகர்களை மேலும் பரவசபடுத்தியது . மக்கள் திலகம் எம்ஜிஆர் அறிமுக காட்சியில் ரசிகர்களின் விசில்கள் கேட்கவே வேண்டாம் .மக்கள் திலகம் எதிரிகளிடமிருந்து தப்பித்து இந்திய எல்லைக்குள் வரும் காட்சியில் இருந்து காட்சிக்கு காட்சி விறுவிறுப்பாக சென்றதால் படம் முழுவதும்காண்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது .
http://youtu.be/8x6MzTemBMw
ஓட்டலுக்கு மக்கள் திலகம் எம்ஜிஆர் வரும் காட்சி முதல் ஜஸ்டின் சண்டை காட்சி வரை இசையின் தாக்கம் - மக்கள் திலகத்தின் புதுமையான சண்டை காட்சிகள் - எம்ஜிஆர் - ஜெயா சந்திப்பு காட்சிகள் தொடர்ந்து வரும் கண்ணனே - கனியே பாடல் - வெண்ணிற ஆடை நிர்மலாவின் உன்னை எண்ணி என்னை மறந்தேன் பாடல் காட்சிகள் - எம்ஜிஆர் -நம்பியார் மோதும் சண்டை காட்சிகள்
http://youtu.be/n7Zz-yUTAfw
- என்ன பொருத்தம் நமக்குள் இந்த பொருத்தம் -கண்ணில் தெரிகின்ற வானம் பாடல் - பால் தமிழ் பால் பாடல் என்று ரசிகர்களை மகிழ்ச்சியின் எல்லைக்கே அழைத்து சென்ற படம் .
ரசிகர்களுக்கு முழு திருப்தி தந்த படம் .மக்கள் திலகத்தின் புதுமையான சண்டை காட்சிகள் - கண்ணை கவரும் வண்ண உடைகள் - சுறு சுறுப்பான நடிப்பு விறுவிறுப்பான காட்சிகள் - இனிய பாடல்கள் என்று ரசிகர்களை மகிழ்வித்த மக்கள் திலகத்தின் ரகசிய போலீஸ் 115 .முதல் நாள் முதல் காட்சி வேலூர் அப்சரா அரங்கில் திருவிழாவை காணும் பாக்கியம் எனக்கு கிடைத்தது .மறக்க முடியாத இனிய நாள் .
http://i57.tinypic.com/2rrwl0p.jpg
-
முதல் நாள் முதல் காட்சி படம் பார்த்த அனுபவம் பற்றிய பதிவு அருமையாக இருந்தது வினோத் சார் .
எங்கள் காஞ்சீபுரத்தில் கண்ணன் & கிருஷ்ணா இரண்டு திரை அரங்கில் படம் வெளியானது .இரண்டு திரை அரங்கிலும் ரசிகர்களின் கூட்டம் அலை மோதியது . ரகசிய போலீஸ் 115 -என் .எஸ். சி ஏரியாவில் பல இடங்களில் இரண்டு திரை அரங்கில் வெளியானது .பின்னர் தொடர்ந்து மக்கள் திலகத்தின் படங்கள் இரு அரங்கில் வெளிவந்தது . சென்னை அண்ணா சாலையில் பிளாசா &குளோப் இரு அரங்கில் திரையிட்டார்கள் .
-
காலம் சென்ற ஒளிப்பதிவாளர் திரு வின்சென்ட் பல படங்களில் அவர் சிறப்பாக பணியாற்றி இருந்தார் . எங்க வீட்டு பிள்ளை படத்தில் அவருடைய சிறப்பான காமிரா ஒளிப்பதிவை பல இடங்களில் மிகவும் அருமையாக இருந்தது . நான் ஆணையிட்டால் பாடலில் மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பை , எல்லா கோணத்திலும் மிக அழகாக காட்டியிருப்பார் .பாடல் முழுவதும் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஓடிக்கொண்டும் , துள்ளி குதித்தும் மாடிப்படிக்கட்டில் ஏறி இறங்கிய காட்சியிலும் , உடலை வில்லாக வைத்து திரும்பும் கட்சியிலும் , க்ளோஸ் அப் காட்சிகளிலும் எம்ஜிஆரின் திறமைகளையும் , எம்ஜிஆரின் பேரழகையும் காட்டிய பெருமை வின்சென்ட் அவர்களையே சேரும் .
-
வினோத் சார்
தங்கள் தாயார் முழுமையாக குணம் அடைந்து நலமுடன் வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்.
-
தெனாலி ராஜன்
தங்கள் உடல் நலமடைந்து வழக்கமான பணிகளைத் தொடர்வது மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துக்கள்.
உடல் நலத்தில் கவனம் வைத்துப் பேணவும்.
-
இப்போதெல்லாம் யாருமே சினிமா பாடல்களை படித்துப்பார்ப்பதில்லை. கேட்பதோடு நிறுத்திக்கொள்கிறார்கள். ஆனால், நானெல்லாம் எம்ஜிஆர் நடித்த படங்களின் பாட்டு புத்தகங்களை வாங்கி அதில் உள்ள பாடல்களை மனப்பாடம் செய்து கொள்வேன். எம்ஜிஆர் படங்களில் அனைத்து பாடல்களும் எனக்கு தெரியும். நான் பாடல்கள் எழுதுவதற்கு அவர் படங்களில் இடம்பெற்ற கவிஞர் கண்ணதாசனின் பாடல்களே முக்கிய காரணம்.
Kamal @ uthama villan audio function