Originally Posted by
makkal thilagam mgr
மற்றொரு திரியில், நமது புரட்சித்தலைவரின் புகழுக்கும் அவரது நற்பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் ஒரு சில பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்க ஒன்று.
திரு. கலைவேந்தன் அவர்கள், ஆக்ரோஷமான பதிவுகளிட்டிருந்தாலும் (புள்ளி விவரங்களில் சிறு தவறுகள் நீங்கலாக) அதில் உள்ள நியாங்களை புறந்தள்ள முடியாது. "சிவந்த மண்" படத்தின் மூலம் இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் எதிர்பார்த்த லாபம் அடையவில்லை என்று திரு. கலைவேந்தன் குறிப்பிட்டால், அதற்கு பதிலாக "சிவந்த மண்" படம் ஒடிய விளம்பரத்தை பதிவிடுகிறார் ஒரு அன்பர். கலைவேந்தன் குறிப்பிட்டது எதிர்பார்த்த லாபம் என்றுதானேயொழிய லாபமே கிட்ட வில்லை என்பதல்ல அதற்குள், அள்ளித்தெளித்த அவசரகோலப் பதிவு ஒன்று ! மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது என்பது இதுதான். இவர் மக்கள் திலகம் திரிக்குள் வந்து குழப்பத்தை ஏற்படுத்தியதன் விளைவு இரண்டு திரிகளின் அன்பர்களுக்குள் ஒரு சொற்போர்.
மற்றொரு அன்பர் " மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்" படத்தில் நம் தலைவரின் முதுமையை பழித்து கிண்டல் பதிவு செய்துள்ளார். முதுமை வருவது
எல்லோருக்கும் இயல்பு. ஒரு முதியவர் இளைஞர் வேடத்தில் நடிப்பது என்பது மிகவும் கடினம். ஆனால், ஒரு இளைஞர் முதியவர் வேடத்தில் நடித்து
விடலாம். அது மிகவும் சுலபம். நடிகர் திரு. சிவாஜி கணேசன் அவர்கள், படையப்பா, ஞானப்பறவை, பூப்பறிக்க வருகிறோம் முதலான படங்களில் நடித்த போது அவரது முதுமைத் தோற்றத்தை பார்த்த பின்பு நாங்கள் உண்மையிலேயே கவலை கொண்டோம். எப்படி இருந்தவர் இப்படி ஆகி விட்டாரே என்று !
1977ல் தமிழக முதல்வராக நம் பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்கள் பொறுப்பேற்றபோது கைவசம் சுமார் 25 புதிய படங்களை வைத்திருந்த விவரங்களை
ஏற்கனவே நமது மக்கள் திலகம் திரியில் பதிவிட்டுள்ளேன். அன்பர் திரு. சிவாஜி செந்தில் அந்த பட்டியலை (authenticated information) பார்த்து விட்டு இது ஒரு miracle என்று ஒப்புக்கொள்ளட்டும். பட்டியலை வேண்டுமானால் மீண்டும் ஒரு முறை பதிவிட தயாராகவுள்ளேன்.
இன்னொரு நண்பர், உணர்ச்சிகரமாக சில புண்படும் பதிவுகளை வழங்கி கொண்டிருக்கும் திரு.கோபால். தயாரிப்பாளர்கள் ஜி.என். வேலுமணி, பந்துலு, ஸ்ரீதர், ஏ. பி. நாகராஜன் , போன்றவர்கள்தான் தங்களுடைய முந்தைய படங்களின் தோல்விகள் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தை சரிக்கட்ட அவர்களாகவே எங்கள் மக்கள் திலகத்தை நாடி, தேடி, ஓடி வந்ததை அப்போது பத்திரிகைகள் பரபரப்பாக செய்திகள் வெளியிட்டன. அதற்கேற்றாற்போல், மக்கள் திலகமும் தன்னை நம்பிய தயாரிப்பாளர்களை, நல்ல லாபம் அளிக்க வைத்து அவர்களை கைதூக்கி விட்டார். இதை அந்த இயக்குனர்களும் நன்றி மறக்காமல் பேட்டிகளும் அளித்தனர்.
குறிப்பாக, மறைந்த இயக்குனர் ஏ.,பி. நாகரஜான் அவர்கள் "மற்ற நடிகர்களை வைத்து படம் பண்ணினேன் ஆனால், மக்கள் திலகத்தை வைத்து பணம் பண்ணினேன்" என்று பேட்டியளித்தார்.
இயக்குனர் ஸ்ரீதர் அவர்களும், 3 இந்தி படங்கள் மற்றும் 3 தமிழ் படங்கள் எடுத்து அடைந்த நஷ்டத்தை, மக்கள் திலகத்தின் "உரிமைக்குரல்" என்ற ஒரே
படத்தின் மூலமாக, அதுவும் பூஜை போடப்பட்ட அன்றே கடனிலிருந்து மீண்டதாக பேட்டியளித்துள்ளார்.
இந்த தயாரிப்பாளர்கள் எவரையும் எங்கள் புரட்சித் தலைவர் அவர்கள் எந்த காலத்திலும் நிர்பந்தப்படுத்தியது கிடையாது. அதற்கு அவசியம் இல்லை. மிரட்டுவதற்கு அவரோ அல்லது அவர் சார்ந்திருந்த கட்சியோ அதிகாரத்தில் இருந்ததில்லை.
பி. ஆர். பந்துலு அவர்களோ, "முரடன் முத்து" படத்துக்குப்பின் முகாம் மாறி மக்கள் திலகம் படங்களின் மூலம் மறு வாழ்வு பெற்றவர்.
ஜி. என். வேலுமணி அவர்கள், 1963லேயே " பணத்தோட்டம்" காவியத்தில் எங்கள் பொன்மனசெம்மலை நடிக்க வைத்து பெருமை பெற்றவர்.
கொழுத்த லாபத்துடன், முகாம் மாறிப்போன, ஜெயந்தி பிலிம்ஸ் கனகசபை அவர்கள், அதற்கு பிறகு பட்ட பாட்டினை தமிழ் திரையுலகமே அறியும்..
எங்கள் மன்னவனின் "ஆயிரத்தில் ஒருவன்" வெற்றிக்காவியம் வெள்ளி விழா காண்பதை தாங்க முடியாத எரிச்சலில், ஏதோ அவதூறு செய்தி பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் பதிவுகள் மேற்கொள்ளப்படுகிறது.
இனி மேலாவது, எங்கள் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றிய வீண் புரளிகளையும், பொய்யான தகவல்களையும் பரப்பவேண்டாம் என்று இந்தப்பதிவின் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்