http://oi67.tinypic.com/353bgye.jpg
Printable View
இன்றுமுதல் சென்னை ஆல்பட், பாரத் ஆகிய திரையங்குகளில், நவீன மயமாக்கப்பட்ட #வசந்தமாளிகை திரைப்படத்தின் #ட்ரைலர் காண்பிக்கப்படுகிறது..
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...44&oe=5D672873
நன்றி வான்நிலா
சிவாஜி, அதிசய திலகமாக இருந்தது மட்டுமல்ல..,
வித்தியாசமான பார்வைக்கும், அவர் உரியவராகிறார்....
திரைவாணில், ஒரு மறுமலர்ச்சியாக 1952 ல், மின்ன ஆரம்பித்தவர், கொஞசமும் தயங்காமல், வித்தியாசமான கலைஞனாக, "திரும்பிப்பார்", "அந்த நாள்" போன்ற, துணிச்சலான, ஒரு "நெகட்டிவ் ரோலை" செய்ய முன்வருவாரா..?
யோசித்துப் பாருங்கள்.....
உலகமே திரும்பிப் பார்க்கும் படி, "பராசக்தி" என்ற, புரட்சிகரமான நடிப்பாற்றலை வெளிக்காட்டி, செம்மையாக, ஒரு "ஹிட்" டை தந்து, "இமேஜ்" ஐ, உருவாக்கி, அந்த சுவடு, ஆறாமலே...யே, "நெகட்டிவ்" ரோல் செய்வதென்பது, எவ்வளவு துணிச்சலான முடிவு அது...
இதே போல் 1959 ல், வெளிவந்த, சாதனைப் படமான " பாகப் பிரிவினை " படத்தை எடுத்துக் கொண்டோமானால்,
மிகவும் ஆச்சரியமாக தோன்றும்...
தமிழகத்தில் மிகப் பெரிய ஹீரோவாக, கொடிகட்டிப் பறந்த காலம் அது...
" ஸ்டைலீஷ் " ஹீரோவாக, தன்னை நிரூபித்தவர்...
"பாகப் பிரிவினை" படத்தில், ஊனமுற்றவர் கதாபாத்திரத்தில் தன்னை, விகாரப்படுத்தி, வியப்பில் ஆழ்த்தியிருப்பார்...
யோசித்துப் பாருங்கள்...
அவருடைய சம காலத்தில் நடித்துக் கொண்டிருந்த மற்ற வேறெந்த ஹீரோவாவது, இந்த "ரிஸ்க்" எடுக்க
முன் வந்திருக்கிறார்களா...?
"கனவு" என்று சொல்லி, தன்னை அழகு படுத்திக் கொண்டு, "டூயட்" பாடிக் கொண்டிருந்தனர்....
இந்தப்படத்தில்,இறுதி வரை, அந்தப் பாத்திரத்தை விட்டு வெளியே வரவில்லை...
அவ்வளவு ஏன்...?
படத்தில் அவருக்கு, டூயட் சீனே இல்லை...
" தாழையாம் பூ முடித்து" என்ற ஜோடிப்மாட்டு மட்டுமே...
அதில் எருமை மாட்டின் மீது உட்கார்ந்து கொண்டு, மிக இயல்பாக நடித்திருப்பார்...
படம் முழுக்க, ஊனமாக காட்டும், அந்த விரல்களின் மடக்கல், சிறிது கூட, மாறாமல், ஒரே மாதிரியான "ஆங்கிளில்" செட்டாகியிருப்பதை தெளிவாக நாம் உணரலாம்....
சாதனைக்கு, ஒருவரே.... அது சிவாஜி....
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...26&oe=5D570BB9
நன்றி நிர்மல் தியாகராஜன்
மே 21 முதல் சென்னை ஆல்பட், பாரத் ஆகிய திரையங்குகளில், நவீன மயமாக்கப்பட்ட #வசந்தமாளிகை திரைப்படத்தின் #ட்ரைலர் காண்பிக்கப்படுகிறது..
http://oi64.tinypic.com/1zzj5oh.jpg