http://www.youtube.com/watch?v=tpt9x...ature=youtu.be
NAALAI NAMATHE - 7
Printable View
http://www.youtube.com/watch?v=tpt9x...ature=youtu.be
NAALAI NAMATHE - 7
மக்கள் திலகத்தின் படங்கள் .1967-1972
தாய்க்கு தலைமகன்
அரசகட்டளை
விவசாயி
தேர் திருவிழா
கண்ணன் என் காதலன்
புதிய பூமி
கணவன்
காதல் வாகனம்
தலைவன்
ஒருதாய் மக்கள்
அன்னமிட்டகை
விமர்சனம் - மக்கள் திலகத்தின் ரசிகனின் பார்வையில் .....
http://i42.tinypic.com/2dbmhe1.jpg
தாய்க்கு தலைமகன் -1967.
மக்கள் திலகம் குண்டடிபட்ட நேரத்தில் வந்த படம் .அண்ணன் -தம்பி பாசம் கொண்ட கதை . மக்கள் திலகம் அண்ணனிடமும் தாயிடமும் பாசத்துடன் நடித்த காட்சிகள் பிரமாதம் .இனிமையான பாடல்கள் .சென்னை நகரில் 10 வாரங்கள் ஓடிய படம் . மனோகருடன் மக்கள் திலகம் மோதும் சண்டை காட்சி
அமர்க்களம் .
மொத்தத்தில் தாய்க்கு தலை மகன்
மதிப்பெண் - 70/100.
விவசாயி -1967
http://i43.tinypic.com/k36cg1.jpg
மக்கள் திலகம் பட்டதாரி வாலிபராக , விவசாயியாக நடித்த படம் .எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் . நம்பியாருடன் மோதும் சண்டைகாட்சிகள் விறுவிறுப்பானவை .
மக்கள் திலகம் தந்து தந்தையுடன் நியாயத்திற்கு போராடும் காட்சிகள் அருமை .விவசாயிகளின் உழைப்பையும் உயர்வையும் , நாட்டு மக்களுக்கு நல்ல கருத்துக்களை எடுத்து காட்டிய படம் . சென்னையில் 50 நாட்களுக்கு மேல் ஓடிய படம் .
மொத்தத்தில் விவசாயி - தரமான நல்ல படம்
மதிப்பெண் -75/100
விமர்சனம் தொடரும்
தேர் திருவிழா -1968
http://i40.tinypic.com/2i6nkpc.jpg
மக்கள் திலகம் பரிசல் ஓட்டியாகவும் பின்னர் போலீஸ்-சினிமா நடிகராக நடித்த படம் .பாடல்கள் எல்லாமே சுமாரான ரகம் .
நாகேஷ் - மனோரமா நடித்த நாடக காட்சியில் மக்கள் திலகம்
ஒரு நடிகராகவே தோன்றி நாகேஷ் - மனோரமாவை பாராட்டும் காட்சி நன்றாக இருந்தது .
மொத்தத்தில் சுமாரான படம் ,
மதிப்பெண் -50/100.
கண்ணன் என் காதலன் -1968
http://i40.tinypic.com/335hatt.jpg
சத்யா மூவிஸ் படம் . மக்கள் திலகம் இந்த படத்தில் பல இன்னிசை வாத்திய கருவிகளை இசைத்து ரசித்து நடித்திருப்பார் .
எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .
மக்கள் திலகம் - வாணிஸ்ரீ ஜோடி இந்த படத்தில் மிகவும் பொருத்தமாக இருந்தது .
கண்களிரண்டும் விடி விளக்காக ........
கெட்டிக்காரியின் பொய்யும் புளுகும் .....
வாணிஸ்ரீயுடன் நடித்த பாடல் காட்சிகளில் இருவரின் இளமை துள்ளல்கள் அருமை .
13 வாரங்கள் ஓடிய வெற்றி படம் .
மொத்தத்தில் கண்ணன் என் காதலன் - மக்கள் இதயங்களில் நிரந்தர காதலன் .
மதிப்பெண்
65/100
திரி நண்பர்களுக்கு
சென்னையில் சக்ரவர்த்தி திருமகள் இரெண்டாம் நாள் வசூல்.
நேற்று சட்ரேறகுறைய ருபாய் 11,840 வ(மக)சூல் செய்துள்ளது.
வசூலுக்கு கருப்பு வெள்ளை, கலர் என்ற பாகுபாடுகள் இல்லை என்ற கோட்பாடில்லாத இரண்டு நடிகர்களில் ஒருவர் திரு.mgr என்பதை சொல்லவும் வேண்டுமோ ?
தகவல் திரு.தர்மேந்தர், உரிமையாளர் , மகாலட்சுமி திரை அரங்கம். !
நன்றி..!
அரசகட்டளை -1967
மக்கள் திலகம் அவர்களின் கத்தி சண்டைகள் - அட்டகாசம் .
http://i40.tinypic.com/orkll1.jpg
இனிய பாடல்கள் நிறைந்த படம் .ஏராளமான நட்சத்திர
பட்டாளங்களுடன் வந்த படம் .
ரசிகர்களுக்கு விருந்து படைத்த படம் .
மதிப்பெண்
55/100
புதிய பூமி -1968
மக்கள் திலகம் டாக்டராக நடித்த படம் .
http://i42.tinypic.com/2n718xe.jpg
பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட்
குறிப்பாக '' நான் உங்கள் வீட்டு பிள்ளை '' பாடல் எப்போது
கேட்டாலும் மனதுக்கு வலிமையையும் மகிழ்வையும் தரும்
பாடல் .
மொத்தத்தில் புதியபூமி - கருத்துள்ள படம்
மதிப்பெண்
65/100