http://i59.tinypic.com/4lftix.jpg
என் .டி . ராமாராவிடம் நடிகர் திலகம் கோபாலை பற்றி என்ன சொல்லி சிரிக்கிறார் ?
ஜெய் சங்கர் என்றாலே கொதிக்கிறான் இந்த கோபால் . பாவம் . சற்றும் முன் மண்டையை உடைத்து கொண்டதாக தகவல் . அவனை கவனிக்கிறேன் .
Printable View
http://i59.tinypic.com/4lftix.jpg
என் .டி . ராமாராவிடம் நடிகர் திலகம் கோபாலை பற்றி என்ன சொல்லி சிரிக்கிறார் ?
ஜெய் சங்கர் என்றாலே கொதிக்கிறான் இந்த கோபால் . பாவம் . சற்றும் முன் மண்டையை உடைத்து கொண்டதாக தகவல் . அவனை கவனிக்கிறேன் .
அன்பான அண்ணன்..அழ்கான அண்ணி.. அந்த யுவதிக்கு வாழ்க்கை நன்றாகத் தான் இருந்தது..பட் வாழ்க்கை நன்றாக ஓடிக் கொண்டிருந்தால் யாருக்குப் பிடிக்குமோ என்னவோ விதிக்குப் பிடிக்காது..
விதியின் காதில் யாரோ ஒரு மிகச் சிறந்த ஜோக்கைச் சொல்லிவிட்டார்களோ என்னவோ..ஹஹ்ஹா எனச் சிரிக்க..அன்பான அண்ணன் ஒரு விபத்தில் மரணிக்க..அண்ணியின் விதவைக்கோலம் அந்த யுவதியின் மனதை ஏதோ ஏதோ செய்து மனதைப் பிசைய..காலத்தின் சூழ் நிலையில் அவளுக்கும் மணமாக..மணவாழ்க்கையோ அவளுக்கு ருசிக்கவில்லை..பாவம் அவளை மணந்தவன்.. அவனது சாதாரண முழியே பேந்தப் பேந்த விழிப்பது போலிருக்கும்..இப்போது இந்த அழகியின் மனதில் என்ன நினைவுகளோ..என க் குழம்பித் தவிக்கிறான்..
இந்தச் சூழலில் அந்தப் பெண்ணும் பாடுகிறாள்.. ஒரு பாட்டு.. அவனது சந்தேகத்தைக் கிளறிவிடுவது போல இருக்கிறது..அவளுக்கு ஒரு காதலன் இருக்கிறான் போல எனச் சந்தேகத்தைத் தூண்டுகிறது அதன் வரிகள்
கட்டக் கடைசியில் அண்ணிக்கு இன்னொரு கல்யாணம் செய்வித்து..பின் கணவனிடம் கூறுகிறாள்..அவள் பாடிய பாட்டு அவள் அண்ணனைப் பற்றி என்று..பின் என்ன சுபம் தான்..
*
இதுவரை நீங்கள் கேட்டது தெய்வத்தின் தெய்வம் படத்தின் சுருங்கிய கதைச்சுருக்க்க்கம்..விஜயகுமாரி, எஸ்.எஸ்.ஆர் மட்டும் நினைவில்..அல்பாயுசு அண்ணனோ..அல்லது படத்தின் ஆரம்பத்தில் கண்ணன் மன நிலையைத் தங்கமே தங்கம் (அழகான பாடல்) பாடும் அண்ணியோ நினைவில் இல்லை..
அண்ணன் தங்கைப் பாடல் என வந்ததால் இந்தப் பாட்டு நினைவுக்கு வந்தது..இதோ அந்தப் பாட்டு..
*
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை உன்
நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை சிந்தனையில்லை
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை உன்னைக்
கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை பெண்ணுறங்கவில்லை
உன் முகத்தைப் பார்ப்பதற்கே கண்கள் வந்தது
உன் மார்பில் சாய்வதற்கே உடல் வளர்ந்தது
கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது - இந்தக்
காவல் தாண்டி ஆவல் உன்னைத் தேடி ஓடுது தேடி ஓடுது
பொன் விலங்கை வேண்டுமென்றே பூட்டிக் கொண்டேனே - உன்னைப்
புரிந்த போது சிறையில் வந்து மாட்டிக் கொண்டேனே
இன்று நாளை என்று நாளை என்று நாளை எண்ணுகின்றேனே - நான்
என்றும் உந்தன் எல்லையிலே வந்திடுவேனே வந்திடுவேனே
*
காதல் பாட்டு போலத் தான் தெரியும் பாடுகையில்..because of
கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது - இந்தக்
காவல் தாண்டி ஆவல் உன்னைத் தேடி ஓடுது தேடி ஓடுது - இந்த வரிகள்..
ம்ம் என்னவோ படத்தில் அண்ணனை நினைத்துத் தான் பாடினேன் என்று விஜயகுமாரி சொல்வதாக நினைவு..
நல்ல பாட்டு தான் இல்லை? :)
CK சார்,
அற்புதமான பாடல். சூழ்நிலை தான் நெருடும். ஜி. இராமநாதன் அவர்கள் ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர் இசையமைத்த படம் தெய்வத்தின் தெய்வம். உண்மையில் சொற்பமான படங்களுக்குத் தான் அவர் 1961-க்கு மேல் இசையமைத்தார். திரையிசைப்பாடல்களின் பாணி பாவ மன்னிப்பு படத்திற்குப் பின்னர் மாறிப்போனது. பாவ மன்னிப்பு தான் நிஜத்தில் மெல்லிசை மன்னர்களுக்கு திருப்பு முனை - மெல்லிசை பாடல்கள் - கர்நாடகமும் இல்லாமல், கிராமிய இசையும் இல்லாமல் - ஒரு புது இசை - கொஞ்சம் மேற்கத்திய பாணி, கொஞ்சம் கர்னாடக இசை பேஸ். இதில் தாக்குப் பிடித்தவர் கே.வி.மகாதேவன் மட்டுமே. ஜி. இராமநாதன் சமாதானம் செய்து கொள்ளாத மேதை - சூழலைப் புரிந்து மெல்ல ஒதுங்கிக் கொண்டார். (கோபால் அவர்கள் பிழை இருந்தால் திருத்தலாம்.)
இன்னொரு விஷயம். இந்தப் பாடல், மற்றும் சில முக்கியமான பாடல்கள் - வாராதிருப்பானோ, ஞாயிறு என்பது கண்ணாக, etc. - பாடல்கள் படங்கள் வரும் முன்னரே வந்து - நிறைய பேர் - யாருக்கோ என்று அந்தப் பாடல்களுக்கு கற்பனை செய்து... செய்து...செய்து...
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
https://encrypted-tbn1.gstatic.com/i...tnxW2kfeCvfwts
வாக்குறுதி (1973)
கதிர்வேல் முருகன் films எம். கே. துரை எச். பி. மணி தயாரிப்பு
ஜெய்ஷங்கர் நிர்மலா
மோகன் காந்திராமன் இயக்கம்
இன்னிசை வேந்தர்கள் சங்கர் கணேஷ் இசை
செப்டம்பர் 7 1973 வெளியீடு
இரண்டு டூயட்
'கண்ணே தேடி வந்தது யோகம் ' பாடகர் திலகம் கண்ணிய பாடகி
'பாடங்களை சொல்லிட வா பார்வையிலே '
'நல்லவர் வாக்கு நல்வாக்கு ' பாடகர் திலகம் சோலோ
http://www.inbaminge.com/t/v/Vakkuruthi/
http://www.videomix.cz/video/HS76I7cG8O0/
நேற்று இரவு சென்னை மெரீனா கடற்கரைக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். மகாத்மா காந்திஜியின் சிலையருகே வந்து மேற்கு நோக்கி நடிகர் திலகத்தின் சிலையையும் பார்த்து - உடனே என் நினைவுக்கு வந்த பாடல் - இந்தப் பாடலின் விமர்சனத்தை இங்கே தரவில்லை. ஏற்கனவே எழுதியது தான் - நடிகர் திலகத்தின் திரியில் மீள் பதிவு செய்கிறேன்.
கடற்கரை சாலை என்றவுடன் நினைவுக்கு வரும் முதல் பாடல் இது தானே!
"நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு வாழ்ந்தே தீருவோம்."
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
//இன்னொரு விஷயம். இந்தப் பாடல், மற்றும் சில முக்கியமான பாடல்கள் - வாராதிருப்பானோ, ஞாயிறு என்பது கண்ணாக, etc. - பாடல்கள் படங்கள் வரும் முன்னரே வந்து - நிறைய பேர் - யாருக்கோ என்று அந்தப் பாடல்களுக்கு கற்பனை செய்து... செய்து...செய்து...// பார்த்த சாரதி சார்.. விஷீவலில் நன்றாக இருக்கும், இருக்க வேண்டும், இப்படி இருக்கலாம் என எதிர்பார்த்து ஏமாற்றமடையச் செய்தபாடல்கள் பலப்பல உண்டு.. நீங்கள் சொன்ன இரண்டும் சூப்பர் பாட்டு..விஷீவலில் ஏ ஏ மாற்றமே..
கண்ணா பத்தி நிறைய்ய்ய்ய பாட்டு இருக்கு..ஆனா இப்போ மனசுல ஓடிக்கிட்டிருக்கறபாட்டுஎன்னன்னா..
கண்ணனை நினைக்காத நாளில்லையே
காதலில் துடிக்காத நாளில்லையே
உண்ணும் போதும் உறங்கும் போதும்
எண்ணம் முழுதும் கண்ணன் தானே..
ம்ம்..கோடு கொடுத்தாச்சு...ரோடு க்ருஷ்ணா கோபாலா வாசுதேவா பார்த்தான்னு விட்டுடலாம்..:)
ஆதெளகீர்த்தனாரம்பத்திலே..
என்னன்னு கேட்டேள்னா நம்ம மொழி இருக்கே..அதுலயும் பேச்சு வழக்கு இருக்கே.. அதுலயும் இந்த பெண்கள் பேசும் வழக்கம் இருக்கே..ம்ம்
என்னன்னாக்க..ஹஸ்பெண்ட் டையும் அத்தான் தான் கூப்பிடுவாங்க..சில வீடுகள்ள அக்கா கணவரையும் அத்தான்னு தான் கூப்புடுதாக (மோஸ்ட்லி தின்னவேலி ?)
அப்படி அத்தான் பாட்டெல்லாம் கொஞ்சம் யோசிச்சாக்க..
பொசுக்குன்னு வருவது..
அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்
எப்படிச் சொல்வேனடி அவர் என்னைத்தான்
தொட்டு மெல்லத்தான் வந்து ... எப்படிச் சொல்வேனடி
என அழகுத் தோழியிடம் (பின்ன) சாவித்திரி உருகும் பாடல் தான்..
அப்புறம் என்ன..
வியாபாரம் தான்..என்னல்லாம் சொல்ல வேண்டியிருக்கு.. டபக்குன்னு கண்ணாடிக் கூழை ஊற்றி
கலர் கலரா சேர்த்து மோல்ட் பண்ணி செய்யற வட்ட வட்ட வளையலுக்கு..
அத்தானின் காதல் முத்தாமல் இருந்தால் பித்தாக செய்யும் வளையல் - சில
சித்தானை உடம்பு வத்தாமல் இருந்தால் ஒத்தாசை செய்யும் வளையல்
அன்ன நடை பின்னி வர சின்ன இடை மின்னி வர முன்னாடி வரும் வளையல் - இது
அத்தை மகள் ரத்தினத்தின் அச்சடித்த சித்திரத்தின் கையோடு வரும் வளையல்
அந்தப் பொண்ணு டபக் டபக்குன்னு நடந்தா வளையல் அவள் சிரிக்காமலேயே சிரிப்பது போல ஒலி எழுப்பி வருமாம்..அதக் கேட்டு அத்தானுக்குப் பித்துப் பிடிக்குமாம்..ம்ம் வளையலொலில்லயா பித்துப் பிடிக்குது..நெற்றியிலிருந்து ஒரு ஒற்றை முடி கொஞ்சம் பொட்டை உரசி வளைய, கொஞ்சம் ஓரவிழிப் பார்வைபார்த்து கபக்குன்னு பூவைப்பூ மாதிரி கொஞ்சம் ஒற்றை இழையாய்க் குட்டி முறுவல் கொடுத்தா போதாதோ..
பாவம்...இந்தப் பொண்ணுக்கு வேற மயக்கம்...
மயங்குகிறாள் ஒரு மாது…
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது
மயங்குகிறாள் ஒரு மாது
திருவாய் மொழியாலே……
திருவாய் மொழியாலே அத்தான் அத்தான்
என்றால் நெஞ்சம் உருகாதா
உருகத் தான் செய்யும்..அதே இது.. இருபது வருஷத்துக்கு அப்புறம் இருக்குமான்னு பாக்கணும்..
இந்தப் பொண்ணு என்ன சொல்லுது..
அத்தான் நிறம் சிவப்பு அந்த
ஆங்கிலேயர் போல் உடுப்பு
கூந்தல் கொஞ்சம் வெளுப்பு அவர்
கூலிங்க் க்ளாஸ் தான் கருப்பு..
சரி சரி..இப்படிச் சொல்ற அவளே ஊடல் கொண்டா அத்தான் என்ன செய்வார்..கெஞ்சத்தான் செய்வார்..
குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை
மிரட்டுவதேனடியோ
உந்தன் துடியிடை இன்று படை கொண்டு வந்து
கொல்வதும் ஏனடியோ
சமாதனமும் சொல்லணும்ல
திருமண நாளின் மணவறை மீது
இருப்பவன் நான் தானே
எனை ஒருமுறைபார்த்து ஓரக்கண்ணாலே சிரிப்பவள் நீதானே
*
அவளுக்கோ ஒரே மையல் அவன் மேல அதாவது அத்தான் மேலே
அன்புள்ள அத்தான் வணக்கம்
உங்கள் ஆயிழை கொண்டாள் மயக்கம்
தென்னவர் கையிருக்கும் திருவாளைப் போலிருக்கும்
கண்ணிருந்தும் இல்லை உறக்கம்
அப்படியும் கண்டுக்காம அவளை விட்டுட்டு அத்தான் ஈவ்னிங்க் ஷோ புதுப்படத்துக்குப் போறார்னுவச்சுக்கோங்கோ
என்ன சொல்வா
மாலைபொழுது வந்து படைபோல் கொல்லும்
வருவார் வருவார் என்ற சேதியை சொல்லும்
ஆலிலை போன்ற உடல் ஆசையில் துள்ளும்
அந்தியிலே இயற்கை என்னையும் வெல்லும்
இதுக்கும் மேல என்னடி சொல்லப் போறேன்னு அத்தான் கேட்டார்னா..
பருவம் நிறைந்திருந்தும் எனக்கென்ன சுகமே
பருகும் இதழிரண்டும் இருந்தென்ன பயனே
கரங்கள் இரண்டிருந்தும் அணைப்பதற்கில்லை
கண்ணா இனி நான் பொறுப்பதற்கில்லை
சரி..ஒரே தொல்லையாப் போச்சு ஒன்மேல நா யு எஸ் போய் சம்பாதிச்சுட்டு வர்றேனே..நீ வெய்ட் பண்ணும்மா..என்றால் நோன்னு சொல்லி என்ன சொல்றா..
பொன் மணிமேகலை பூமியில் விழும்
புலம்பும் சிலம்பிரண்டும் என்னை விட்டு ஓடும்
கைவளை சேர்ந்து விழும் கண்களும் மூடும்
காண்பவர் உங்களைத்தான் பழி சொல்ல நேரும்
இந்தப் பாட்ட கன்னடப் பைங்கிளி நன்னாவே பண்ணியிருப்பாங்களாக்கும்
*
சரின்னு பார்க்கறார் அத்தான்..பச்சக்குன்னு போஸ்ட் ஆபீஸ்ல ஸ்டாம்ப்புக்கு முத்திரை குத்தறா மாதிரி இல்லாம கன்னியை மென்மையாய் இழுக்க.. அவளோட கண்களோ ஹார்ட் பீட் மாதிரி படபடன்னு அடிச்சுக்க இதயமோ ஆன்னுவல் ரிடர்ன் இன்கம்டாக்ஸீக்கு சப்மிட் பண்ற பிஸினஸ் மேனாட்டமா துடிதுடிச்சுக்கிட்டு இருக்க டபக்குன்னு மெல்லியளாள் மெல்லிதழில் மென் முத்தம் ஒன்றுக்கு மூன்றாய் போனஸ் கலந்து கொடுத்தா எனன் செய்வா..பாட்டுத் தான் பாடறா ஓய்..
அத்தானின் முத்தங்கள் அத்தனையும் முத்துக்கள்
அழ்கானக் கன்னத்தின் அடையாளச் சின்னங்கள்..
*
அப்புறம் தனக்குத் தானே சொல்லிக்கவும் செஞ்சுக்கறா..
அத்தைமகள் ரத்தினத்தை அத்தான் மறக்கவில்லை
அன்ன நடை சின்னை இடை எதையும் மறக்கவில்லை
*
இன்னொரு பொண்ணு..வித்தாரக் கள்ளி.. எப்படி வரா..அழகா கண்ட் ராங்கி ச் சேலை கட்டிக்கிட்டு சமத்தா பொட்டு வச்சு பவுடர் பூசி மல்லிப்பூல்லம் வெச்சுக்கிட்டு வர்றவ என்ன ஆனா..
சித்தாடை கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம்
அத்தானை பாத்து அசந்து போய் நின்னாளாம்
பாவம் நிக்காம..அவன் என்ன சொல்லுதான் வேற பாட்டில..
அலைகள் நீரோட்டம் அம்மன் தேரோட்டம்
பருவ பெண்ணாட்டமோ
பனி மலைகள் தாலாட்டும் மலர்கள் பாராட்டும்
கலைகள் வெள்ளோட்டமோ
அவ ஷ்ரூடாக்கும் ஓய்..
இது அத்தானின் முத்தாரமோ – இந்த
அத்தானின் அச்சாரமோ
ன்னு சொல்லிட்டுப் போய்டறா..
*
அதனால சொல்ல வந்தது என்னன்னா நிறைய புது (பாட்டு) அத்தான் இருந்தாலும் கொஞ்சம் பழைய அத்தான் பாட்டுக்களைத் தான் பாத்துருக்கோம்.. பிடிச்சுருக்குதோன்னோ
உருவாய் அருவாய் உளதாய் இலதா
..
அருள்வாய் குகனே..
மங்களம் :)
chinnakkaNNan: Now I know where you are hiding! :lol:
What next? machchaan? maaman? :)
அக்காவுக்கு வளைகாப்பு.. அத்தான் முகத்திலே புன்சிரிப்பு
அவசரமா.. அவசரமா.. ஆசை அத்தான் அவசரமா
இந்த அத்தானைப் பார்த்து மா.மா.. என்றாலும் துடிப்பேனே..
இப்படி எல்லாம் பாட்டுக்கள் இருந்தாலும்....
தங்கப்பதுமையில் கண்ணிழந்த சிவாஜியிடம் பத்மினி
"அத்தான் அத்தான்
உங்கள் மீது கொடும்பழி வந்திருக்கிறதே அத்தான்
என்மீது உண்மையாக அன்பிருந்தால்
அஞ்சாமல் உண்மையை சொல்லுங்கள்
யாருக்கும் அஞ்சாமல் சொல்லுங்கள் அத்தான்"
என்று கதறும் காட்சி இருந்தாலும்.....
எனக்கு இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தமிழ்ச்சேவையில் கேட்ட பழைய விளம்பரம்தான் நினைவுக்கு வருது...
அத்தானே.. அத்தானே.. எந்தன் ஆசை அத்தானே
கேள்வி ஒன்று கேட்கலாமா .. உனைத்தானே ..
தோழன் ஒருவன் தோள் தருவான்.. துணை புரிவான் கண்ணே..
அப்படின்னு சொல்லி.. கடேசில... "மக்கள் வங்கியே நம் தோழன்" அப்படின்னு பாடுவாங்க...
சிக்கா... நீங்க ஊருக்கு வந்துட்டு போனதிலே இருந்து ஒரு மாதிரிதான் இருக்கீங்க..
வாத்தியாரையா சொன்னபடி அடுத்தது... "மாமேன் மச்சான்.. ஏய் நீதானா.. ஆசை வச்சா ..ஏன் ஆகாதா" அப்டீன்னு ஆரம்பமா ?