http://i66.tinypic.com/f52duh.jpg
வி.எஸ்.ராகவன் ! சிறந்த குணச்சித்திர நடிகரான இவர் புரட்சித்தலைவரின் அபிமானத்தை பெற்றவர்களில் முக்கியமானவர். எம்ஜியாரின் நூறாவது படமான ஒளிவிளக்கில் இன்ஸ்பெக்ட*ராக நடித்ததுதான் இருவரும் சேர்ந்து நடித்த முதல்படம். அதன்பின் எம்ஜிஆர், வி.எஸ். ராகவனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் ஏற்படுத்தி தந்தார். புரட்சித் தலைவர் சில காட்சிகளில் நடித்த அண்ணா நீ என் தெய்வம் படத்தை கதையை மாற்றி அவர் மறைவுக்குப் பின் பாக்கியராஜ் எடுத்து வெளியிட்ட அவசரபோலீஸ் 100 படத்திலும் லதாவின் தந்தையாக வருவார். வி.எஸ். ராகவன் கூறியது:
திரு. எம்ஜிஆர் படங்களில் நடிப்பது எனக்கு மட்டுமல்ல. பிற நடிகர்களுக்கும் பிடிக்கும். மற்ற படங்களை விட இரு மடங்குவ*ரை சம்பளம் கிடைக்கும். சம்பளபாக்கி பிரச்சனை எழாது. தலைவரே எல்லோருக்கும் சம்பளம் செட்டிலாகிவிட்டதை உறுதி செய்தபின்தான் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிப்பார்.
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனில் எனக்கு பேசிய தொகையைவிட தயாரிப்பாளர் குறைவாக கொடுத்து ஏற்றுக்கொள்ளும்படி கூறினார். எனக்கு சங்கடமாக போய்விட்டது. நான் தயாரிப்பாளரிடம், எம்ஜிஆர் எனது சம்பளத்தை நிர்ணயித்தார். அவர் சொன்னால் நான் வாங்கிக்கொள்கிறேன் என்றேன். உடனே மறுபேச்சின்றி எனக்கு பேசிய தொகையை கொடுத்தார்.
.....தலைவர் பேச்சிற்கு மறுபேச்சு இல்லை என்பது இதுதானோ!
தனக்கு மட்டும் சம்பளம் கிடைத்தால் போதும் என்று நினைக்கும் உலகத்தில் எல்லாருக்கும் நியாயமான சம்பளம் கிடைக்க வேண்டும் என்று அக்கறையோடு செயல்பட்டிருக்கிறார் புரட்சித் தலைவர். எல்லாருக்கும் சம்பளம் கிடைத்ததை உறுதி செய்த பிற்பாடுதான் படத்தை ரிலீஸ் செய்ய புரட்சித் தலைவர் அனுமதிப்பார். இதை விஎஸ் ராகவனும் கூறியிருக்கிறார்.
புரட்சித் தலைவர் எதனால் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்கவில்லை என்ற செய்தி வெளியில் வராது. அல்லது பாதிக்கப்பட்ட தயாரிப்பாளரே, தான் மற்ற நடிகர்களுக்கு சம்பளம் ஒழுங்காக தரவில்லை என்பது போன்ற உண்மையை சொல்லாமல் புரட்சித் தலைவர் தாமதப்படுத்துகிறார் பழிவாங்குகிறார் என்று கிளப்பிவிட்டுவிடுவார். அதற்காகவே காத்திருக்கும் சில பத்திரிகைகளும் அதை பெரிதாக போடுவார்கள். பழி புரட்சித் தலைவர் மீது விழும்.
ஆனால், புரட்சித் தலைவர் இதற்கெல்லாம் கவலைப்பட்டதில்லை. தன்னிலை விளக்கமும் கொடுத்தது இல்லை. அவர் மக்களை நம்பினார். மக்கள் புரட்சித் தலைவரை நம்பினார்கள்.