http://i125.photobucket.com/albums/p...ps253fc67c.jpg
Printable View
மக்கள்திலகம் தனது இயற்கையான நடிப்பாலும்..சண்டை காட்சிகளில் வீரத்தாலும்..காதல் காட்சிகளில் இனிமையான நளினத்தாலும் கோடான கோடி ரசிகர்களை தன்னகத்தே கொண்டு ஈடு இணையற்றவராக விளங்கினார்..அதனால் தன்னுடைய படங்களில் காதல் காட்சிகளில் பெரிதும் முக்கியத்துவம் கொடுத்தார்..அந்த காதல் காட்சிகளை காணும் ஒவ்வொருக்கும் அது நடிப்பாக தெரியாது..இயற்கையாக தோணும்..அதுவும் அவருடன் ஜோடியாக நடித்த..சரோஜாதேவி, ஜெயலலிதா, மஞ்சுளா, லதா போன்ற நாயகிகளின் காதல் காட்சிகளில் உண்மையான காதலர்களை போலவே நடித்து தனக்கு ஈடு இணை இல்லை என திரைப்படங்களில் நடித்தார் என்று சொல்லாமல் காதலனாகவே வாழ்ந்தார் என்று அனைவரும் சொல்லும் அளவிற்கு வெற்றி படங்களை தந்தார்..மேலும்..சரோஜாதேவி நாயகியாக நடிக்கும்போது தோன்றும் உணர்வுகளை சொல்ல முடியாது..இப்போது சொல்கிறார்களே..கெமிஸ்ட்ரி.என்று..இந்த ஜோடிக்கு இடையில் உருவான கெமிஸ்ட்ரி...யாருக்கும் கிடைக்கவில்லை..மற்ற நடிகர்கள் ஜோடிக்கிடையே காணப்படும் காட்சிகளில் ஒன்று அந்த ஈர்ப்பு இல்லாமல் இருக்கலாம் அல்லது கொஞ்சம் விரசமாக கூட இருந்திருக்கிறது..அதற்கு நிறைய உதாரணங்களை கூற முடியும்..அனால் நமது காதல் சக்கரவர்த்தி தன்னுடைய காதல் காட்சிகளில் எவ்வளவு நளினத்தை கையாண்டார் என்பது அவருடைய படங்களை ரசித்து பார்க்கும்போது புரியும்..ஆகவே எப்போதுமே காதல் மன்னன்...இல்லை..இல்லை..காதல் சக்கரவர்த்தி நமது எம்ஜிஆர்தான்...
http://i45.tinypic.com/2j2djwi.jpg
காதல் காவியத்தில் சரித்திரம் படைத்த அன்பே வா படத்தில் ஒரு காட்சி
http://i50.tinypic.com/xgmnog.jpg
காதலரின் இதயத்துடிப்பை இப்படிதான் கண்டுபிடிப்பதா
http://i47.tinypic.com/2i6gqds.jpg
ஈடு இணையில்லா ஜோடி
http://i48.tinypic.com/vsj413.jpg
காதலர்கிடையே ஊடலா அல்லது சொல்ல முடியாத காதல் செய்தி ஏதாவதா
http://i50.tinypic.com/34fyy9t.jpg
ஆறுதல் அளிக்கும் இந்த காதல் உணர்வின் காட்சிக்கு நிகருண்டோ
http://i47.tinypic.com/148krk5.jpg