http://i68.tinypic.com/zmnsrk.jpg
Printable View
http://i68.tinypic.com/xe30n9.jpg
புது டில்லி தமிழ்ச்சங்கத்தில் புரட்சித்தலைவரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 15/1/2017 அன்று மூன்று காட்சிகள் ஆயிரத்தில் ஒருவன் திரையிடப்பட்டது. இலவச அனுமதியும், சாக்லேட்டுகளும் அனைவருக்கும் வழங்கப்பட்டதாம். என் டெல்லி நண்பர் அனுப்பிய அறிவிப்பு பலகை!
நன்றி சந்தானம் ஏடிஎம்கே முகநூல்
-----------------------------------
ஆயிரத்தி்ல் ஒருவன் படம் பற்றி ஒரு குறிப்பு.
2014ம் ஆண்டு அதற்கு முன்பும் சரி, பின்பும் சரி இனிமேலும் யாரும் தகர்க்க முடியாத சாதானையாக சென்னையில் ஆயிரத்தில் ஒருவன் படம் சத்தியம் தியேட்டரில் 160 நாட்கள் ஓடியது. (அதே நேரத்தில் ஆல்பட் காம்ப்ளெக்சிலும் ஓடியது. அது பற்றி கீழே தனியாக) 150வது நாளை முன்னிட்டு தினத்தந்தி பேப்பரில் வெளியான விளம்பரம். இதில் ஆலபட் காம்ப்ளெக்ஸ் பெயரும் இடம் பெற்றுள்ளது.
http://i63.tinypic.com/10gw87m.jpg
சத்தியம் தியேட்டரில் ஓடிக் கொண்டிருந்தபோதே ஒரே நேரத்தில் அதே சமயத்தில் ஆல்பட் தியேட்டரில் வெள்ளி விழாவை தாண்டி 190 நாட்கள் ஓடியது. இதற்காக வெள்ளி விழாவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.
சத்தியம் தியேட்டரில் இன்னும் 15 நாள் ஓடியிருந்தால் இரண்டு தியேட்டரில் வெள்ளி விழா கண்டு புதிய சாதனை பெற்றிருக்கும். என்றாலும் ஆல்பட் தியேட்டரில் மட்டுமே வெள்ளி விழா கொண்டாடினாலும் மறுவெளியீட்டில் வெள்ளி விழா கண்ட ஒரே படம் ஆயிரத்தில் ஒருவன் என்ற சரித்திரம் படைத்தது. இது தகர்க்க முடியாத ஒரு உலக சாதனை.
சத்தியம் தியேட்டரில் வாரத்தில் ஒரு நாள் இங்கிலீஸ் படம் போடுவார்கள். அந்த நாட்களில் மட்டும் படம் ஆயிரத்தில் ஒருவன் படம் திரையிடப்படவில்லை. இது அங்கு ஓடிய ஓடும் எல்லாப் படங்களுக்கும் பொருந்தும்.
ஆனால், ஆல்பட் தியேட்டர் வளாகத்தில் தொடர்ந்து 190 நாட்கள் இடைவெளி இல்லாமல் ஒரு காட்சி கூட ரத்தாகாமல் ஆயிரத்தில் ஒருவன் படம் வெற்றிகரமாக ஓடி புதிய சரித்திர சாதனை படைத்தது.
190வது நாளை முன்னிட்டு தினத்தந்தி பேப்பரில் வெளியான உலக சாதனை படைத்த ஆயிரத்தில் ஒருவன் விளம்பரம்.
http://i63.tinypic.com/ix6wcm.jpg
மய்யம் திரியில் 15,000 பதிவுகளை வழங்கிய இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்களுக்கு என்னுடைய நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றிய செய்திகள்
தின இதழ்கள்
வார இதழ்கள்
மாத இதழ்கள்
வெளியிட்ட கட்டுரைகள் செய்திகள்
மற்றும் எம்ஜிஆர் படங்கள் மறு வெளியீடுகளின் முழுத்தகவல்கள் போஸ்டர்கள் திரை அரங்க நிழற்படங்கள் அனைத்தையும் தவறாமல் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் பதிவிட்டமைக்கு நன்றி
தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் . .
ஒருமுறை திருச்சிக்கு எம்.ஜி.ஆர் காரில் செல்கிறார் . வழியில் ஒரு ரயில்வே கேட். கார் நிற்கிறது. எம்.ஜி.ஆர். வந்த செய்தியறிந்து பக்கத்து வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த மக்கள் பறந்து வருகிறார்கள். அத்தனை பேரும் காரைச் சூழ்ந்து கொண்டு பாசத்தைக் கொட்ட திக்குமுக்காடிப் போகிறார் எம்.ஜி.ஆர். எல்லாரும் நல்லா இருக்கீங்களா? என்று அன்போடு விசாரிக்கிறார். பதிலுக்கு அந்த மக்களோ மகராசா நீங்க நல்லா இருந்தாலே போதும், நாங்க நல்லா இருப்போம் என்று அந்த உழைக்கும் மக்கள் கையெடுத்துக் கும்பிட்டுச் சொல்ல அவர்கள் அத்தனை பேரின் கைகளைப் பற்றிக்கொண்டு நெகிழ்ந்து போகிறார் எம்.ஜி.ஆர். கார் நகர்கிறது. சில நிமிடங்கள் மௌனமாக வந்த எம்.ஜி.ஆர். உருகிப்போய் சொன்னார்: நான் நல்லா இருந்தாலே தாங்களும் நல்லா இருப்போம்னு சொல்ற இந்த மக்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போறேன்!'' மக்கள் தன் மீது காட்டிய பாசத்தைப் போலவே, மக்கள் மீது அவர் காட்டிய அன்பையும் அக்கறையையும் அளவிடமுடியாது.
அவரது ஆட்சியின்போது ஒருமுறை ராமேஸ்வரத்தில் கடுமையான புயல் மழை. குடியிருப்புப் பகுதிகளில் பலத்த சேதம். தகவல் கிடைத்ததும் உடனே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றார் எம்.ஜி.ஆர். அவருடன் நானும். சேறும் சகதியுமாக நீரோடிய வீதிகளில், கண்ணீரும் கம்பலையுமாக நின்றிருந்தனர் மக்கள். அவர்களைப் பார்த்ததுமே காரிலிருந்து இறங்கிய எம்.ஜி.ஆர். கொஞ்சம்கூட யோசிக்காமல் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு முழங்கால் அளவு தண்ணீரில் நடக்க பதறிப்போன மக்களோ அய்யா, எங்களுக்கு ஒண்ணும் பிரச்னையில்ல, உங்களப் பாத்ததே போதும், சகதியில நடக்காதீங்க என்று தடுத்தும் கேளாமல், அவர்களது அருகில் போய் ஆறுதல் கூறினார். அதேஜோரில் மின்னல் வேகத்தில் நிவாரணப்பணிகளுக்கும் உத்தரவிட்டார். மக்களின் குறைகளை கோட்டையில் உட்கார்ந்து கேட்டவர் அல்ல தெருவுக்கே வந்து தீர்த்து வைத்தவர் எம்.ஜி.ஆர்..
http://i64.tinypic.com/ipzih2.jpg
நன்றி MGR இணையதளம்
முதல்வராக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள்முதல் அவர் அமரராகும் வரை அந்த 11 ஆண்டுகளில் 1 சென்ட் நிலமோ அல்லது வீடோ..இந்தத் தமிழ்நாட்டிலோ, வேறெந்த மாநிலத்திலோ அவர் வாங்கியது கிடையாது. அதேசமயம் திரையுலகில் இருந்தபோது தான் சம்பாதித்த சொத்துக்களை மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் நலனுக்கும், கட்சிக்கும் என தமிழக மக்களிடமே திருப்பிக் கொடுத்து லட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் அவர்போல இடம் பிடித்தவர் வேறு யாரும் கிடையாது. ஏனெனில் தான் சம்பாதித்த மாபெரும் சொத்து மக்கள் செல்வாக்கு என்பதைத்தான் அவர் மதித்தார், அதில் துளிகூட கீறல் விழாமல் கடைசிவரை காத்தார்.
இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் எம்.ஜி.ஆருடன் காரில் செல்கிறேன். சாலையில் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் தலைவா வாழ்க! எம்.ஜி.ஆர். வாழ்க என்று கோஷமிடுகிறார்கள். இதைப் பார்த்த எம்.ஜி.ஆர். என்னிடம் எல்லாருமே எம்,ஜி,ஆர், வாழ்கன்னுதானே வாழ்த்தறாங்க. ஒருத்தர்கூட முதலமைச்சர் வாழ்கன்னு சொல்லலை. ஏன் தெரியுமா? என்று கேட்டார். உங்க மூன்றெழுத்துப் பெயர்தான் அவங்களுக்கு மந்திரம் மாதிரி. அதனாலதான் என்றேன். அதுமட்டுமல்ல, முதலமைச்சர் வாழ்கன்னு சொன்னா அது பதவியை வாழ்த்தற மாதிரி, எம்.ஜி.ஆர். வாழ்கன்னு சொன்னாதான் அவங்களுக்கு என்னை வாழ்த்தற திருப்தி. இதுதான் நான் சம்பாதிச்ச சொத்து. இதைத்தான் நான் பத்திரமா காப்பாத்தியாகணும்! என்றார். இறுதிவரை சொன்னது போலவே நின்றார்.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் சென்னை வருகை தந்தபோது முதல்வர் எம்.ஜி.ஆரை கோட்டையில் சந்தித்தார். இருவரும் உற்சாகமாக உரையாடினார்கள். சந்திப்பு முடிந்து இளவரசரை ஆளுநர் மாளிகைக்கு திரும்ப அழைத்து வருகிறேன். அப்போது சார்லஸ் என்னிடம் எம்.ஜி.ஆரின் பின்னணி என்ன? இவர் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவரா? என்று வியப்போடு விசாரிக்கிறார். நான் அவரது குடும்பப்பின்னணி பற்றி விவரித்தேன். ஆனாலும் ஆச்சரியம் விலகாமல் சார்லஸ் சொன்னார்:
ஒருவேளை போன பிறவியில் இவர் அரசராக இருந்திருக்கலாம்!. அப்படியே நான் மெய்சிலிர்த்துப் போய்விட்டேன். தமிழக மக்கள் மட்டுமல்ல உலகையே ஆண்ட அரச குடும்பத்தின் இளவரசர்கூட, நம் எம்.ஜி.ஆரைப் பார்த்து அரசர் என்று வியக்கிறாரே அந்த அதிசயம்தான் எம்.ஜி.ஆர்.!
தகவல்: சு. திருநாவுக்கரசர் , (புரட்சித் தலைவர் ஆட்சியில் மந்திரியாக இருந்து இப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருப்பவர்)
நன்றி: புதிய தலைமுறை
http://i64.tinypic.com/1672tye.jpg
நன்றி MGR இணையதளம்
Andrea Jeremiah's photo.
7 June at 21:59
Actress & Singer Andrea Jeremiah near #MGR #KudiyirundhaKoyil wall poster 😍 😘
Andrea Jeremiah
7 June at 21:46
http://i63.tinypic.com/o5xrtx.jpg
The King & I 😊
#SetLife
--------
நடிகை ஆண்ட்ரியா சென்ற 7-ம் தேதி தனது பேஸ்புக் பக்கத்தில் மக்கள் திலகத்தின் குடியிருந்த கோயில் படத்தின் போஸ்டருக்கு அருகில் தான் நிற்கும் படத்தை வெளியிட்டுள்ளார். அந்த படத்துக்கு கீழே The King & I என்று (மன்னரும் நானும் என்று) குறிப்பிட்டிருக்கிறார்.
முந்திய பதிவில், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், புரட்சித் தலைவரை பார்த்து இவர் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவரா என்றும் ஒருவேளை போன பிறவியில் அரசராக இருந்திருக்கலாம் என்றும் தன்னிடம் கூறியதை திருநாவுக்கரசர் சொல்லியிருப்பதை படித்துப் பாருங்கள். நடிகை ஆண்ட்ரியாவும் புரட்சித் தலைவரை மன்னர் என்று தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
இங்கிலாந்து இளவரசர் முதல் நடிகை வரை எல்லார் மனதிலும் புரட்சித் தலைவர் மன்னர் என்றே கருதப்படுகிறார். உண்மையும் அதுதான்.
நமது புரட்சித் தலைவர் சினிமாவில் மட்டுமே மன்னனாக நடிக்கவில்லை. நிஜத்திலும் தமிழ்நாட்டை தொடர்ந்து 3 முறை ஆண்ட மன்னாதி மன்னன்.
MGR என்ற பெயரில் பேஸ்புக்கில் இணையதளம் ஒன்று செயல்படுகிறது. பேஸ்புக்கில் ஆங்கிலத்தில் MGR என்று டைப் செய்து பாருங்கள், வரும்.
இந்தப் பக்கத்தை 69,088 பேர் லைக் செய்திருக்கிறார்கள்.
இந்தப் பக்கத்தை 70,323 பேர் ஃபாலோ செய்கிறார்கள்.
கீழே உள்ள இந்தப் படத்தை மாத்திரம் 3,600க்கும் மேற்பட்ட நமது ரத்தங்கள் லைக், லவ், ஆச்சரியம் போன்றவற்றை சொடுக்கி தங்கள் விருப்பத்தை தெரிவித்திருக்கிறார்கள்.
http://i66.tinypic.com/34i0j90.jpg
இது மாதிரி இப்போதைய நடிகர்கள் உட்பட எந்த நடிகருக்கும் இவ்வளவு லைக்குகள், பாலோயர்கள் ஒரு தளத்தில் இருப்பதாக தெரியவில்லை.
முகநூல் உலகிலும் சக்கரவர்த்தியாக விளங்குகிறார் புரட்சித் தலைவர்.
15,000 பதிவுகள் போட்டு புரட்சித் தலைவரின் புகழுக்கு தொண்டாற்றி வரும் லோகநாதன் அவர்களுக்கு பாராட்டுக்கள். நன்றி.
எம்ஜிஆர் ரசிகர்களுக்கு எம்ஜிஆரிடம் பிடித்தது என்ன ?
டைட்டில் கார்டில்எம்ஜிஆர் என்ற பெயரை காட்டியவுடன் ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள் படம் முடியும் வரை எம்ஜிஆர் என்ற தனி மனிதரின் சாகசங்களை காட்சிக்கு காட்சி ரசித்து வரவேற்கும் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு எம்ஜிஆரிடம் பிடித்தவை
எம்ஜிஆரின் , வசீகர தோற்றம் , சுறுசுறுப்பான நடிப்பு , விறுவிறுப்பான திரை காட்சி அமைப்புகள் , வியக்க வைக்கும் சண்டை காட்சிகள் என்று படத்திற்கு படம் விருந்தது படைத்த
எம்ஜிஆரை யுகங்கள் பல கடந்தாலும் மறக்க முடியுமா ?
7