http://i50.tinypic.com/2mh79d0.jpg
Printable View
மக்கள் திலகம் 25 வது ஆண்டு நினைவு நாளை ஒட்டி நடை பெற்ற நிகழ்வுகள் குறித்து நிழற் படங்களையும் , செய்திகளையும் உடனுக்குடன் திரியில் பதிவிட்ட அனைவருக்கும் நன்றி .
பேராசிரியர் செல்வகுமார் - சென்னை அனுப்பிய செய்தி .
மக்கள் திலகம் திரியில் அவரது நினைவு நாள் அன்று நடை பெற்ற எல்லா செய்திகளின் தொகுப்பு நன்றாக இருந்தது .
குறிப்பாக வேலூர் நகரம் அதனை சுற்றியுள்ள இடங்கள் எல்லாம் சென்று படம் பிடித்து உடனே பதிவிட்ட நண்பர் இராமமூர்த்தி அவரின் பங்களிப்பு பிரமிக்க வைக்கின்றது .
மக்கள் திலகத்தின் புகழ் பாடு சேலம் திரு ஜெய்சங்கர் - மற்றும் அவரது புதல்வன் செல்வன் வள்ளிநாயகம் இருவரின் பதிவுகள் மக்கள் திலகத்தின் மேல் அவர்கள் வைத்திருக்கும் அன்பினை காட்டுகின்றது .
மின்வெட்டு என்ற மீளா துயரத்தின் நடுவிலும் ,பல்வேறு பணிகளுக்கு இடையிலும் தொடர்ந்து பதிவுகள் வழங்கிடும்
திருப்பூர் ரவிசந்திரன் சார் பாராட்டுக்குரியவர் .
மக்கள் திலகம் திரியில் பல பதிவுகள் செய்த திரு tfmlover
கார்த்திக் - குமார் - திருமாறன் -திரு நெய்வேலி வாசுதேவன்
கல்நாயக் - ஆகிய நண்பர்களின் பதிவுகள் சமீப காலங்களில் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கின்றது .
மக்கள் திலகம் திரி வெகு சிறப்பாக உங்கள் அனைவரின்
பதிவுகளால் அதி வேகமாக முன்னேறி செல்கின்றது .
வினோத் சார்
உங்களின் புள்ளி விவரங்கள் அருமை .
தொடர்ந்து அசத்துங்கள்
பேராசிரியர் செல்வகுமார்
இன்றைய நாளில் பெண்கள் மேல் நிலைப் பள்ளியாக விளங்கி வரும் காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளி உருவான விதம் பற்றித் தெரிந்து கொண்டால்தான் தாளாளர் அவர்களின் தொலை நோக்குச் சிந்தனை எத்தகையது என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும். அதிராம்பட்டினத்து மக்களின் குடி நீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் மேலத் தெருவில் அமைந்துள்ள குடி நீர்த் தொட்டியைத் திறந்து வைப்பதற்காக அப்போதைய தமிழக முதல்வர் M.G.R. அவர்கள் அதிரைக்கு வருகை தந்தார். அப்போது அவரிடம் ‘பெண்களுக்காகத் தனியாக உயர் நிலைப் பள்ளி வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்து அதிரை மக்களால் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. விழா மேடையிலேயே அவ் விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்த முதலமைச்சர், அப்போது மேடையில் வீற்றிருந்த தமிழக அமைச்சர் மாண்புமிகு S.D. சோம சுந்தரம் அவர்களிடம் விண்ணப்பத்தைக் கொடுத்து, அதிரைக்குப் பெண்கள் உயர் நிலைப் பள்ளி அமைவதற்கு உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்! அமைச்சர் S.D. சோம சுந்தரம் அவர்களின் முயற்சியால் அரசுப் பெண்கள் உயர் நிலைப் பள்ளி உருவாவதற்கான பணிகள் தீவிரமாக நடை பெற்று வந்தன!
courtesy - thendral.
courtesy- ARULMOZHIVARMAN
என் சிறு வயதில் அப்பாவுடன் தொலைக்காட்சி பார்க்கும்போது, பழைய பாடல்களில் இத்தகைய ஆபாச வரிகளை கேட்டதாக நினைவில்லை. பழைய பாடல்களில் இருந்த அந்த தெளிவு தற்போதுள்ள சினிமா பாடல்களில் தெரிவதில்லை. எனது லேப்டாப்பில் முன்பு சேகரித்த பழைய பாடல்களைக் கேட்கும் பொழுது கிடைக்கும் ஒருவித மன அமைதி இன்றைய சினிமா பாடல்களில் தவறிவிடுகிறது.
தற்போது தமிழில் சினிமா பாடலாசிரியர்கள் நூற்றுக் கணக்காக இருந்தாலும், அவர்களது பாடல்களில் ஆபாசமில்லா வரிகளைக் கேட்பதென்பது கடினமான ஒன்று. சமீபத்திய இந்தி பாடல்களில் உள்ளது போன்றே ஆங்கில வரிகளின் ஆதிக்கம் இன்றைய *தமிழ் பாடல்களில் உள்ளதை உணர முடிகிறது. இது வளர்ச்சியா அல்லது சாபமா?
விடை கிடைக்கப் பெறவில்லை.
என் மனதைக் கவர்ந்த ஒரு பழைய பாடலை இப்பதிவில் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். மக்கள்திலகம் MGR நடித்த 'பணம் படைத்தவன்' என்ற திரைப்படத்தில் வரும் கவிஞர் வாலி எழுதி, திரு. T.M. செளந்தரராஜன் பாடிய பாடல் பின்வருமாறு:
"கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
பொய்யான* சில பேர்க்கு புது நாகரிகம்
புரியாத பல பேர்க்கு இது *நாகரிகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரிகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரிகம்
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உறவுகள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்"
இப்பாடலை கேட்கும்போதெல்லாம் ஏதோ ஒருவித ஈர்ப்பு உருவாகிறது. நாகரிகம் என்ற பெயரில் நாம் அனைவரும் தவறிப்போவதாக உணர்கிறேன். அன்று சொல்லப்பட்ட இந்த உண்மை இன்றும் நினைக்கப்பட வேண்டிய ஒன்று. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக எத்தனையோ பழைய பாடல்களைச் சொல்ல முடியும்.
MGR RAJKUMAR SAIDAPET CHENNAI-THANKS
http://i45.tinypic.com/6jhp53.jpg
MGR RAJKUMAR & SELVAKUMAR SIR-THANKS
http://i47.tinypic.com/353b581.jpg