-
9.7.1965
http://i44.tinypic.com/oamyo6.jpg
மக்கள் திலகத்தின் ''ஆயிரத்தில் ஒருவன் ''
49 வது ஆண்டு துவக்க தினம் .
தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக வெளிவந்த கடல் கொள்ளை சம்பவம் கொண்ட பிரமாண்ட வண்ணப்படம் .
மக்கள் திலகத்தின் படங்களிலே அதிக முறை மறு வெளியீடு செய்யப்பட்டு ரசிகர்களால் அதிக முறை பார்க்கப்பட்ட வெற்றி காவியம் .
மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு
அட்டகாசமான சண்டை காட்சிகள்
இனிமையான பாடல்கள் -மெல்லிசை மன்னர்களின் பிரமாதமான பின்னணி இசை .
மக்கள் திலகத்தின் கட்டழகு -புதுமையான உடை அலங்காரம்
எழில் கொஞ்சும் கார்வார் -கோவா கடற்கரை படப்பிடிப்பு
விறுவிறுப்பான காட்சிகள்
அருமையான வசனங்கள்
பிரமாண்ட படைப்பு
பந்துலுவின் இயக்கம்
பத்மினி நிறுவனத்தின் என்றென்றும் அமுத சுரபி
1965ல் எங்க வீட்டு பிள்ளை சரித்திர சாதனை படைத்த பின் வந்த அடுத்த வெற்றி படைப்பு ''ஆயிரத்தில் ஒருவன் ''
2014ல் 'ஆயிரத்தில் ஒருவன் '' புதுமை படைப்பாக டிஜிட்டல்
மெருகேற்றி தமிழகமெங்கும் வெளிவர உள்ளதாகஇனிய தகவல் கிடைத்துள்ளது .
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்த நேரத்தில் வந்த ஆயிரத்தில் ஒருவனின் ஓட்டம் பற்றி கேட்கவே வேண்டாம் .திரையிடாத அரங்கமே இல்லை என்ற அளவிற்கு 48 ஆண்டுகள் ஓய்வில்லாமல் மணிமாறன் மக்களை மகிழ்வித்தார் .
மக்கள் திலகம் தன்னுடைய நடிப்பை மிகவும் சிறப்பாக
காட்சிக்கு காட்சி பலவித பரிமாணங்களில் பிரகாசமாக நடித்து காண்போர் உள்ளங்களை கொள்ளை அடித்திருப்பார் .
எந்த கோணத்தில் பார்த்தாலும் எத்தனை கோணத்தில் பார்த்தாலும் நம் மக்கள் திலகம் இந்த படத்தில் அத்தனை
கோணத்திலும் ஜொலித்திருப்பார் .
படம் வெளியான நேரத்தில் அத்தனை பத்திரிகைகளும் -திரை உலக பிரமுகர்களும் - விநியோகஸ்தர்களும் - ரசிகர்களும் - பொது மக்களும் - திரை அரங்கு உரிமையாளர்களும் என்று எல்லா தரப்பினரும் மனமகிழ்வுடன் படத்தை பார்த்து மீண்டும் மீண்டும் படத்தை பல முறை பார்த்து ஒரு சரித்திர நிகழ்வினை நடத்தி காட்டினார்கள் .
http://i43.tinypic.com/119zf4m.jpg
எம்ஜிஆர் படங்களில் மிகவும் பொழுது போக்கு படமாக கருத பட்ட படம் .
படத்தின் தலைப்பிற்கு தக்கவாறு 'ஆயிரத்தில் ஒருவன் ''
என்று வாழ்ந்த ஒரு மாபெரும் உலக பேரழகன் எங்கள் எம்ஜியார் இன்று உலகமெங்கும் உள்ள பல கோடிக்கணக்கான
உள்ளங்களில் வாழ்கிறார் என்றால் அந்த பெருமை அவருக்கு மட்டுமே உண்டு
.http://i40.tinypic.com/2enotac.jpg
-
http://i41.tinypic.com/eb6f6w.jpg
திருமதி ஜெயந்தி கண்ணப்பன் மற்றும் உரிமைக்குரல் இதழ் ஆசிரியர் பி.எஸ்.ராஜ்
-
http://i39.tinypic.com/2hhiow2.jpg
திருமதி ஜெயந்தி கண்ணப்பன் மற்றும் திரை வெளியீட்டாளர் திரு. நீலகண்டன்
-
-
நெல்லை நகர பேருந்து நிலையத்திற்கு மக்கள் திலகம் பெயர்
வைத்த செய்தி .
சக்கரவர்த்தி திருமகள் - - சென்னை நகர மகாலட்சுமி அரங்கின்
சாதனை - படங்கள் பதிவுகள் அருமை
நன்றி திரு கலியபெருமாள் சார்
-
-
http://i39.tinypic.com/wlxjc0.jpg
திருமதி ஜெயந்தி கண்ணப்பன், திரு. லோகநாதன், மற்றும் பேராசிரியர் திரு. செல்வகுமார்
-
-
கலியபெருமாள் ஸார்,
சக்கரவர்த்தி திருமகள் திரையரங்க படங்கள் அருமை.
-
வினோத் ஸார், ஆயிரத்தில் ஒருவன் மக்கள் திலகம் பற்றிய தகவல் பதிவுக்கு நன்றி.