மார்ச்.16 2014 திகதியிட்ட தினத்தந்தி சினிமா வளம்பரம்
இன்றதான் எனக்குக்கிடைத்தது
அதில் இருந்து
http://i157.photobucket.com/albums/t...ps74e07831.jpg
Printable View
மார்ச்.16 2014 திகதியிட்ட தினத்தந்தி சினிமா வளம்பரம்
இன்றதான் எனக்குக்கிடைத்தது
அதில் இருந்து
http://i157.photobucket.com/albums/t...ps74e07831.jpg
அன்புள்ள சிவா சார் , மிகவும் நன்றி NT யின் படங்கள் ஸ்ரீலங்காவில் ஓடிய நாட்கள் , திரை அரங்குகள் எல்லாவற்றையும் அழகாக சிரமப்பட்டு எங்களுக்கு தொகுத்து அளித்துள்ளீர்கள் - மீண்டும் மீண்டும் உண்மை செய்தியை எவ்வளவு போட்டாலும் கோட்சே வை சுட்டது காந்தி என்று சொல்லும் கூட்டம் உள்ளவரை எதிரும் புதிருமாகத்தான் அந்த பக்கத்திலிருந்து பதிவுகள் வந்து கொண்டிருக்கும் - என்ன செய்வது கட்டபொம்மன் பிறந்த மண்ணில் தான் எட்டப்பனும் பிறந்தான் - ஆனால் கட்டபொம்மன் புகழ் நிலைத்திருக்கும் - எட்டப்பன் புகழோ உலகம் சொல்லட்டும்
Ravi
எல்லோருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ( one day in advance )-
"எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு இல்லாதார் இல்லாத நிலை வேண்டும்!"
அன்புடன் ரவி
பார்த்ததில் பிடித்தது - 24
மாடி வீடு ஏழை
பல நண்பர்கள் பார்த்து இருக்க வாய்ப்பு கிடைக்காத படங்களில் இதுவும் ஒன்று , கலைஞர் கருணாநிதின் திரை கதை வசனத்தில் , அமிர்தத்தின் இயக்கத்தில் வந்த படம்
கதை :
மகனின் மேல் உயிரே வைத்து இருக்கும் ஒரு பெரிய பணக்கார தந்தை பரமாந்தம் (அப்பா சிவாஜி ), மகனின் பிறந்தநாள் விழாவுக்கு வர வேண்டும் என்று ஒரு தனி விமானத்தை ஏற்பாடு செய்து வரும் அளவுக்கு மகனின் மேல் பாசம் , மோகன் (சின்ன சிவாஜி ) வாழ்கையை உல்லாசமாக கழிப்பவர் , மகனின் எதிர்காலத்தை நினைத்து கவலை படும் அப்பா , அவரை காஷ்மீர் செல்ல பணிகிறார் , காஷ்மீர் செல்லும் மோகன் அங்கே தன் காதலி ஆனந்தியுடன் (ஸ்ரீ பிரியா ) ஆடி பாடி கொண்டு இருப்பதை தன் secretary சொக்கநாதன் (நாகேஷ்) மூலம் அறிந்து கொள்ளும் பரமாந்தம் தன் மகனின் காதலுக்கு குறுக்கே நிற்கிறார் , ஆனந்தி தான் காதலில் ஜெய்த்து காட்டுவாதாக சவால் விடுகிறார்.
தன் அறைக்கு வரும் பரமாந்தம் தன் கடந்த கால நினைவுகளில் மூழ்குகிறார் . அவர் மனைவி , அவருடன் பேசுவதாக நினைத்து கொள்ளுகிறார் . கதை சற்று பின் நோக்கி செல்லுகிறது
வையாபுரி (VKR ) ஒரு பெரிய பணக்காரர் , அவரின் ஒரே மகள் தான் லக்ஷ்மி (சுஜாதா ) , வேலை தேடி வரும் பரமாந்ததை ஜமிந்தார் என்று தவறாக நினைத்து , அவரை வீட்டில் தங்க வைத்து , வேலை கொடுத்து , லக்ஷ்மியுடன் பழக சந்தர்பத்தை ஏற்படுத்தி கொடுக்கிறார்
வையாபுரி. இருவரும் காதலிக்கிறார்கள் , பரமாந்தம் ஜமிந்தாரின் வாரிசு அல்ல என்பதை அறிந்து கொள்ளுகிறார் வையாபுரி. பரமாந்ததை வீட்டை விட்டு அனுபிவிடுகிறார் , லக்ஷ்மி கூட சென்று விடுகிறார் , வேலை இல்லாமல் கஷ்ட படும் பரமாந்தம் மாசிலாமணி (மேஜர் ) வீட்டில் தங்கி வேலை தேடுகிறார் , தன் எதிரில் நடந்து வந்தால் சகுனம் நன்றாக இருந்து வேலை கிடைத்து விடும் என்று சொல்லும் மனைவின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து பரமாந்தம் நேர்முக தேர்வுக்கு செல்ல , அங்கே மீண்டும் ஏமாற்றம் , அதை மறைக்க தனக்கு வேலை கிடைத்து விட்டது என்று மனைவிடம் பொய் சொல்லி விடுகிறார் கணவன்
தன் தோழியின் கல்யாணத்துக்கு செல்லும் லக்ஷ்மி , அங்கே எடுபுடியாக வேலை செய்யும் தன் கணவரை பார்த்து அதிர்ச்சி அடைகிறார் . கொஞ்சம் காலம் கழித்து பரமாந்தம் ஒரு பெரிய land deal யை முடிக்க , 5 லட்சம் சம்பளமாக கிடைகிறது , அதை வைத்து பெரிய தொழில்சாலை தொண்டங்கிரர் . தன் மனைவியை நன்றாக வைத்து கொள்ள வேண்டும் என்று உழைக்கிறார் , தனக்கு உதவிய மாசிலமணியை மேனேஜர் ஆக வைத்து கொள்ளுகிறார்
CUT
காதல் தோல்வியில் தன் மகன் விஷம் குடித்த செய்தி கேட்டு அவரை பார்க்க விரைகிறார் பரமானதம் . தன் மகனின் பிடிவாதத்தை சகிக்க முடியாமல் ஆனந்தி வீட்டுக்கு பெண் கேட்டு செல்லுகிறார் பரமானதம். ஆனந்தியின் தந்தை தான் மாசிலாமணி (மாஜி மேனேஜர் ) பெண் தர மறுக்கிறார் , காரணம் தன் மனைவியை சரியாக பார்த்து கொள்ள முடியாதவரின் மகனும் அப்படி தானே இருப்பன் என்பது அவர் வாதம்
பரமானதம் மீண்டும் பழைய நினைவுக்கு போகிறார்
வெறி வந்த மாதிரி உழைக்கும் பரமானதம் தன் மனைவியை பார்க்க கூட நேரம் இல்லாமல் , ஒதுக்க முடியாமல் இருக்கிறார் , அவரின் ஒரே லட்சியம் வியாபாரம் , இதற்கு நேர் எதிர் மாசிலாமணி ,குடும்பத்துக்கு அதிக நேரம் செலவு செய்கிறார் , இதனால் இவர்கள் உறவில் சிறு விரிசல் , இந்த நேரத்தில் லக்ஷ்மி தாய்மை அடைகிறார் , அப்போதும் பரமானதம் அவரை கவனிக்க நேரம் இல்லாமல் ஓடுகிறார் .
கட்
பரமானதம் ஆனந்தி தன் மகனை காதலிப்பதாக எடுத்து சொல்லி , கல்யாணத்தை நடத்தி வைக்கிறார் , கல்யாணமான சில நாட்களில் சந்தோசமாக இருக்கும் தம்பதிகள் ,பிறகு difference of opinions வந்து சண்டை போட்டு கொள்ளுகிறார்கள் , காரணம் மோகன் தொழிலில் கவனம் செலுத்தும் அளவுக்கு குடும்பத்தை கவனிக்க நேரம் ஒதுக்கவில்லை என்பது தான் , விவகாரம் முற்றி ,ஒரு நாள் மோகன் ஆனந்தியை அடிக்க அவர் தன் பிறந்த வீட்டுக்கு போக , பரமானதம் தன் மகனுக்கு தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை உதரணமாக எடுத்து சொல்லுகிறார்
கட்
பெரிய தொழிலதிபராக வளரும் பரமாந்தம் தன் மனைவியின் பிரசவத்துக்கு கூட வர நேரம் ஒதுக்க முடியாமல் இருக்கிறார் , ஆபரேஷன் செய்ய வேண்டிய நேரத்தில் கூட அங்கே வர முடியாமல் மீட்டிங் ல் இருக்கிறார் , இதை போன்ற ஒரு dedication யை மாசிலமனிடம் எதிர்பார்க்க அவர் வேலையை ராஜினாமா செய்து விடுகிறார் , டாக்டர் லக்ஷ்மி க்கு jaundice இருபதாக கூறி நன்றாக கவனித்து கொள்ளும் படி கூறுகிறார் , பரமாந்தம் தன் மனைவியை நன்றாக கவனித்து கொள்ளுகிறார் , ஆனால் ஒரு நாள் அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் லக்ஷ்மி பத்திய சாப்பாட்டை மீறி நெய் ,வடை , இனிப்பு அனைத்தையும் சாப்பிட அவர் உயிர் பிரிகிறது
இதை சொல்லி , குடுமபத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க சொல்லுகிறார் அப்பா , மோகன் தன் மனைவியுடன் சேர்ந்து வாழுகிறார் .
சுபம்
படத்தை பற்றி :
கலைஞர் கருணாநிதி உடன் நடிகர் திலகம் என்று சொன்ன உடன் நம் நினைவுக்கு வரும் படங்கள் ஏராளம் , ஆனால் இந்த படத்தில் அதற்கு ஈடு இல்லை .இந்த படத்தின் கதை திரு தாசரி நாராயண ராவ் .
நடிகர் திலகம் :
படத்தின் பலம் infact ஒரே பலம் நடிகர் திலகத்தின் பங்களிப்பு . மோகன் , பரமானதம் இரு வேறு பாத்திரம் , மோகன் பாத்திரத்தில் , ஆடி ,பாடுகிறார் , கொஞ்சம் அதை குறைத்து இருக்கலாம் , காதல் வசனத்திலும் கவித்துவம் , ராஜா ராணி காலத்து வசனங்கள் . அப்பா சிவாஜி வழக்கம் போல் கம்பீரம்
சுஜாதா :
எனக்கு பிடித்த பழைய நடிகைகளில் ஒருவர் , பாந்தமான நடிப்பு ,
பாடல்கள் :
இங்கே இந்த உலகத்தின் : SPB
ஏன் ஏன் ஏன் வசந்த மாளிகையின் சாயல்
படகு வீடுகளில் -Love song
முத்தமிழ் சொந்தங்கள்
மாடி வீடு ஏழை - pathos சாங்
நடிகர் திலகத்தின் படங்களின் எண்ணிகையில் ஒரு படம்
Next
1. Naam pirantha mann
2. Kalyaniyin kanavan
3. Mudhal thedi
4. Vangamudi
5. Illara jothi
6. Anbalippu
7. Manamagan thevai
8. Ilayathalaimurai
9. Chinna marumagal
10. Oorum uravum
11. Viswaroopam
Dear Sivaa sir,
You are fabulous , great hard work
Dear Murali sir,
Hats off to your meticulous work
Can anybody share the experience of watching THANGASURANGAM in theatre , PRINT QUALITY , response
அனைவருக்கும் இதயம் நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
7 ஆண்டுகளுக்கு முன் இதே தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று உதயமாகி இன்று 8வது ஆண்டில் பெருமையுடன் அடியெடுத்து வைக்கிறது நமது நடிகர்திலகம் இணையதளம் (www.nadigarthilagam.com). இந்நன்னாளில் அனைத்து சிவாஜி ரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆதரவு தந்து ஊக்குவித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதோடு தொடர்ந்து தங்கள் ஆதரவைத் தரவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்