-
கோபால் சார்
மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி பற்றிய அலசல் தூள்
ரவி எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ .. மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, நாலும் தெரிந்தவன்,குமரிப்பெண்,எதிரிகள் ஜாக்கிரதை,அதே கண்கள் என எல்லாமே தூள்
அந்த வசீகர முகம் என்றுமோ பளிச் பளிச்
ரவிக்கு மிகவும் பொருத்தமான ஜோடி பாரதி மற்றும் நிர்மலா
-
-
'சத்தியம் தவறாதே' இசையமைப்பாளர் சி.என்.பாண்டுரங்கன் கோபால் சொல்வது போல் வெகுவாக என்னைக் கவர்ந்தவர்.
இவரது பாடல்களில் நல்ல வித்தியாசங்களை உணரலாம்.
இப்படத்தின் பாடல்கள் அருமை.
மாஸ்டர் ஸ்ரீதர் பீச்சில் சுண்டல் விற்றுக் கொண்டே பாடும் ஒரு சோஷலிச பாடல். அருமையான கருத்துக்கள் நிறைந்தது.
சத்தியம் தவறாதே
தாய் நாட்டினை மறவாதே
தட்டிப் பறிக்காதே
தன்மானம் இழக்காதே
கட்டுமரத்தினை நம்பும் மனிதனுக்கு
காற்று வீசினால் வாட்டம்
புயல் காற்று வீசினால் வாட்டம்
சூரியன் ஒளியும் மழையும் காற்றும்
தெய்வம் தந்த சோஷலிசம்
நாட்டை சுரண்டும் கூட்டம்தான்
டோட்டலிசம்
http://www.inbaminge.com/t/s/Sathiyam%20Thavarathe/
-
வாசு சார்,
ராஜேஷ், மது என அனைவரையும் வசீகரிக்கும் திரியாக இதை மாற்றி அமர்க்களமாக்கி விட்டீர்கள். ஒரு நாள் தவறினாலும் ஏராளமான பக்கங்கள்... எந்தப் பதிவிற்கு நன்றி தெரிவிப்பது என்பதே புரியாமல் அனைத்துமே சூப்பராக அனைவருமே கொண்டு செல்கிறீர்கள். பாராட்டுக்கள்.
-
Rajesh,
I prefer to cut Sirs in the thread . If I address you by name,it is the best respect shown to individual. Address you by Short name best intimacy and friendship.(Like vasu's Go)
Irrespective of Age,Caste,creed,education,status, let us follow this uniformly. Probably ,I think differently from Indian culture owing to my alternate exposures. This is only my suggestion and request. Atleast I don't need Sir.(probably doesn't deserve it too!!!)Thanks for enriching the thread Sir.(this is honorary)
-
சி.என். பாண்டுரங்கன் ..தமிழ்த் திரையுலகின் சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவர்..
திருவல்லிக்கேணியில் என் நண்பன் ஒருவன் சி.என்.பாண்டுரங்கன் வீட்டின் மாடியில் குடியிருந்தபோது அடிக்கடி பார்க்கவும் ஓரிரு முறை உரையாடவும் வாய்ப்புக் கிடைத்தது. ஒரு சில பாடல்களை நினைவில் வைத்து அவரிடம் சொன்ன போது நன்றி சொன்னார். படிக்க வேண்டும், சினிமாவெல்லாம் அப்புறம்.... அந்தக் காலத்தில் சினிமாக் கலைஞர்களே சமுதாய அக்கறையுடன் மாணவர்களை அறிவுரை சொல்லி வந்ததற்கு இவரும் ஒரு சான்று.
இன்றைக்கு அந்த வாய்ப்பெல்லாம் மனதில் இன்ப நினைவுகளாக நிழலாடுகின்றன
-
உள்ள[த்]தை அள்ளித்தா
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்து 1982ல் வெளிவந்த திரைப்படம் வெற்றி நமதே. ராஜேஷ், வனிதா, பி.எஸ்.வீரப்பா உள்பட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு இசை சங்கர் கணேஷ். இந்தப் படத்தில் மெலோடி என்ற வகையில் ஒரு பாடலும் இல்லை. இருந்தாலும் இலங்கை பாய்லா மெட்டில் அமைத்திருந்த பாடல் பேபி பேபி, கேட்கலாம். மலேசியா வாசுதேவன் எல்.ஆர். அஞ்சலி ... பாடகர்கள் பெயர் தவறிருந்தால் திருத்தவும்... பாடிய இப்பாடலை நம்முடன் பகிரந்து கொள்கிறேன்.
பேபி பேபி ... வெற்றி நமதே 1982
-
Goடா (Goக்கு தமிழ் வார்த்தை 'போடா'மல் இருந்தால் சரி) என்று அழைத்தால் என்னாவது... வாசு சார் ப்ளீஸ்..
-
பி.பி.எஸ்சுக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று சத்தியம் தவறாதே படத்தில் இடம்ப பெற்ற எதுடா வாழ்க்கை...
-
சி.என்.பாண்டுரங்கன் இசையமைப்பில் சோலை மலை ராணி என்று ஒருபடம் வெளிவந்தது.
அதிலிருந்து ஒரு அற்புதமான பாடல்.
'அன்பான மொழி பேசும் வனமோகினி'
'மென்மைப் பாடகர்' ஏ .எம்.ராஜாவும், ராதா ஜெயலஷ்மியும் இணைந்து அளிக்கும் அற்புத பாடல்.
பாடல் காட்சியை பார்க்க முடியாவிட்டாலும் கேட்டு இன்புறலாம்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=6qZqt7bzd9g