சில பாடல்களை அப்படியே கேட்டுவிட்டு சாதாரணமாக கடந்து போக முடியல. காந்தம் போல கவர்ந்து இழுத்துக் கொள்கிறது. ராஜாவின் இசையில் வாணி ஜெயராம் பங்கேற்ற ஜோடிப்பாடல்களை கேட்கலாம் என்ற யோசனையில் ஆரம்பமாக சாதனை - "இங்கே நான் கண்டேன்" பாடலிலிருந்து கேட்க ஆரம்பித்தேன். இதைத் தாண்டி வேறொரு பாடலுக்கு செல்லவே முடியவில்லை. கடந்த இரு நாட்களாக திரும்ப திரும்ப..
http://www.thiraipaadal.com/tpplayer...161%27&lang=en
வாணி - ம.வாசுதேவன்..மகத்தான இரு பாடகர்கள்....இப்பாடலை ஒரு சிற்பமாக செதுக்கியிருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும். சக வாத்தியக் கருவிகளோடு ஒன்றாய் கலந்து இணைந்துவிடும் இருவரது குரல்களையும் நான் இரு துளைக்கருவிகளாகவே கருதுகிறேன். ஆளுக்கொரு சரணம் எனப் பிரித்து எடுத்துக்கொண்டதால் இரு சரணங்களும் காவியமாக மலர்கிறது. சரணத்தின் உச்சத்திலிருந்து பல்லவிக்கு திரும்பி வருவது.. இவர்கள் எங்கே கடைசியில் மூச்சை இழுத்தார்கள் என தேட முற்பட்டால் எனக்கு முச்சு வாங்குகிறது.
காதல் ஜோடிகள் ஒருவரையொருவர் தேடும் சூழ்நிலையில் இது சிறந்த உருவாக்கம். நன்றி ராஜா!