-
MGR SONG ANALYSIS IN THE NET. எம்.ஜி.ஆர். சட்டசபையில் கேட்ட கேள்விகள்தான் அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தின.
கேள்வி கேட்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் அவர் பாடிய ‘ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை’ பாடல் என் அபிமானப் பாடல்களில் ஒன்று. அதிலும் அந்த பாடலில் வருகிற ‘முன்னேற்றம் என்பதெல்லாம் கேள்விகள் கேட்பதனாலே’ என்கிற வரிகள் சரித்திரத்தில் இடம் பெற வேண்டியவை.
ஏன் என்று சொல்கிறேன்.
http://youtu.be/2wX5E6qlqdI
பொறியியல் துறையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய போது பலவிதமான ஆய்வுகளை மேற்கொள்வோம். அவற்றில் ஒன்று 5 Why and 1 How Analysis.
ஏன் ஏன் என்று கேட்டுக் கேட்டு ஒவ்வொரு ஏனின் பதில் மீதும் மறுபடி ஏன் கேட்க வேண்டும்.
நூடில்சில் முடிச்சுப் போட்ட மாதிரியான நிரடலான பிரச்சினைகள் கூட ஐந்து ஏன்களைத் தாங்காது. மாத்திரை சாப்பிட்ட குழந்தை மாதிரி காரணத்தைக் கக்கி விடும். அதற்கப்புறம் ஒரு ஹவ் – எப்படி சரி செய்வது என்பதற்கு.
ஐ.எஸ்.ஒ., டிஎஸ் 16949 போன்ற தரச் சான்றிதழ் வழங்கும் நிறுவனங்கள் தகுதிக்கு முன் வைக்கிற விஷயம் continual improvement. அதாவது தொடர்ச்சியான மேம்பாடுகள்.
அதை எப்படிச் செய்வது என்று மண்டையை உடைத்து கொண்டு யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
முன்னேற்றம் என்பதெல்லாம் கேள்விகள் கேட்பதனாலே என்று ரத்தினச் சுருக்கமாக சொன்னவர், சின்னவர்தானே?
அதுவும் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்!
-
06/06/14 முதல் சென்னை பைலட்டில் புரட்சி நடிகர் எம்.ஜி. ஆர்.முதல் முறையாக துப்பறியும் அதிகாரியாக நடித்து மெகாஹிட் வெற்றி பெற்ற
தேவரின் "தாய் சொல்லை தட்டாதே " தினசரி 2 காட்சிகள் (பகல் 1 மணி,
மாலை 4 மணி ) வெற்றி நடை போடுகிறது.
1961-ல் தீபாவளி வெளியீடாக வந்து வசூல் சாதனை செய்த படம்.
http://i60.tinypic.com/izaykl.jpg
-
-
-
சன் லைப் - இன்று இரவு 7 மணிக்கு - எங்க வீட்டு பிள்ளை .
விரைவில் கூண்டுக்கிளி - சன் லைப் தொலைக்காட்சியில் .....
மக்கள் திலத்தின் படங்கள் வெள்ளி திரையிலும் .... ஊடகங்களிலும் ...வலம் வருகிறது .
-
பொன்மனச்செம்மல் போப் ஆண்டவருக்கு மாலை அணிவிக்கிறார்.http://i58.tinypic.com/24vmvpz.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
-
-
-