Quote:
ஜி டிவியில் ஒளிபரப்பாகிவரும் அழகான ராட்சசி தொடர் சின்னத்திரை நேயர்களின் அதிக பட்ச விருப்பத் தொடராகியிருக்கிறது. "வித்தியாசமான கதைகளுக்கு எப்போதுமே ரசிகர்கள் அதிகம். அழகான ராட்சசி கதையிலும் அதன் கதைப்பின்னணி ரசிகர்களை ஈர்த்திருக்கிறது. துணிச்சல்மிக்க ஒரு பெண்ணின் சாகசங்கள்தான் கதையின் முடிச்சு. நாயகி உட்பட அத்தனை நட்சத்திரங்களும் கதையோடு பொருந்திப்போனார்கள்'' என்கிறார், தொடரின் இயக்குனர் பிரபுநேபால்.
கிராமத்தில் பாட்டியின் அரவணைப்பில் ஜாலியாக சுற்றித் திரிந்து சுதந்திரக்காற்றை அனுபவித்துவந்த இளம் பெண் ஷக்தி, பாட்டி இறந்ததும் வேலைதேடி பட்டணம் வருகிறாள். வானொலி நிலையத்தில் வேலை கிடைக்கிறது.
அம்மா சிவகாமியிடம் இருக்கும் திரண்ட சொத்துக்காக மகன் கிஷோர் அடிதடி வரை இறங்கத் தயாராகிறான். சிவகாமியோ, "எப்போது உனக்கு திருமணம் ஆகிறதோ, அப்போது உன் பாகத்தை பிரித்துக் கொடுக்கிறேன்'' என்று கூறிவிடுகிறாள். ஊதாரி இளைஞனுக்கு யார் துணிந்து பெண் கொடுப்பார்கள்?
இந்நிலையில் சாலை விபத்துக்குள்ளாகும் கிஷோருக்கு ஷக்தி ரத்தம் கொடுக்கிறாள். இந்த புதிய ரத்தபந்தம் அவர்களை மணமேடை வரை கொண்டுபோகிறது. அதற்குள் அந்த இளைஞனின் அடாவடி விஷயங்கள் அத்தனையும் ஷக்திக்கு தெரிந்து போகிறது.
திருமணம் நடக்கிறது. மனைவிக்கு தன்னைப்பற்றி எதுவும் தெரியாது என்று கணவன் கிஷோர் நினைத்திருக்க, ஷக்தியோ கணவனின் நடவடிக்கைகளில் கவனம் பதிக்கிறாள்.
இதற்கிடையே சிவகாமியின் தம்பி மனைவி காஞ்சனாவுக்கு கிஷோரின் கணக்கில்லாத சொத்தின்மீது ஒரு கண். சிவகாமிÛயும் ஷக்தியையும் கொன்றுவிட்டு தன் மகள் பூஜாவை ஷக்திக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிடுகிறாள். துணிச்சலே உருவான ஷக்திக்கு இது தெரிந்து விட, தன் முழுபலத்தையும் பிரயோகித்து இந்த `வாழ்வா...சாவா' போராட்டத்தை எதிர்கொள்கிறாள். சதியை முறியடிக்க அவளால் முடிந்ததா என்பது தொடரின் அடுத்தடுத்த பரபரப்பு காட்சிகள்'' என்கிறார், பிரபுநேபால்.
தொடரின் நட்சத்திரங்கள்: ஷியாமந்தா, சுரேஷ்குமார், பிரியா, அப்சர்பாபு, ஜெயரேகா.
திரைக்கதை: தேவிபாலா. கதை பிரபுநேபால். வசனம்: கஜேந்திரன், ஜீ.கே. தயாரிப்பு, இயக்கம்: பிரபுநேபால்.