-
மதுரையம்பதியின் 'சென்ட்ரல் சினிமா' திரையரங்கில், நாளை 1.4.2011 வெள்ளி முதல், தினசரி 4 காட்சிகளாக, சிங்கத்தமிழனின் "சிவகாமியின் செல்வன்".
சாக்லெட் தகவலை வழங்கிய அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கும், மதுரை நல்லிதயம் திரு.வேலாயுதம் அவர்களுக்கும் ஸ்வீட் நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
சென்ற வெள்ளி [25.3.2011] முதல் வியாழன் [31.3.2011] வரையிலான ஒரு வார காலகட்டத்தில், சென்னை பிராட்வே பகுதியிலுள்ள 'நியூபிராட்வே' திரையரங்கில், முற்பகல் 11:30 மணிக் காட்சியாக சாதனைச் சக்கரவர்த்தியின் "உயர்ந்த மனிதன்" வெளியாகி கணிசமான வரவேற்பைப் பெற்றது.
முத்தான தகவலை வழங்கிய ரசிக நல்லிதயம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு மணியான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
எத்தனை வசூலை அள்ளிக் குவிக்குது
மதுரை 'சென்ட்ரல் சினிமா' [தினசரி 4 காட்சிகள்]
சிங்கத்தமிழனின் "சிவகாமியின் செல்வன்"
கலெக்ஷன் ரிப்போர்ட்
1.4.2011 : வெள்ளி : ரூ.10,082/-
2.4.2011 : சனி : ரூ.7,192/-
3.4.2011 : ஞாயிறு : ரூ.10,961/- [மாலைக் காட்சி வரை]
1.4.2011 முதல் இன்றைய [3.4.2011] மாலைக் காட்சி வரை "சிவகாமியின் செல்வன்" அள்ளி அளித்துள்ள மொத்த வசூல் ரூ.28,235/-.
படத்தில் எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது; படமோ எத்தனை வசூலை வாரிக் குவிக்குது.
2011 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் இந்நேரத்தில் இது போன்ற கலெக்ஷன் எல்லாம் சாதனைகளின் சிகரம்!
அதனால் தானே கூறுகிறோம்,
"சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே" என்று.
பெருமிதத்துடன்,
பம்மலார்.
-
கர வருட தமிழ்ப் புத்தாண்டு தினம் மற்றும் சித்திரைத் திருநாளான 14.4.2011 வியாழன் முதல், சென்னை 'சாந்தி' காம்ப்ளெக்ஸில், கலையுலக மகானின் "திருவருட்செல்வர்" திரைக்காவியம் திரையிடப்பட உள்ளது.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இவ்வார இறுதியில் வெளியாகும் என்று தெரிகிறது.
இந்த அருமையான செய்தியை அளித்த அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு கனிவான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
மதுரையில் இன்று முதல் [டிசம்பர் 5,2014 வெள்ளி] சென்ட்ரல் திரையரங்கில் அண்ணன் ஒரு கோவில் திரையிடப்படும் விவரத்தை இங்கே பதிவு செய்திருந்தோம்.
கார்த்திகை மாதமடி கல்யாண சீசனடி என்பது வழிமுறை நிகழ்வு.
கார்த்திகை மாதம் மணிகண்ட சுவாமியின் மாதம் என்பதும் நடைமுறை நிகழ்வு.
கார்த்திகை தீபம் என்றால் வீட்டிலே தீபம், ஆலயத்திலே தீபம் என்பதும் நிகழ்முறையே!
இருந்தால் என்ன நடிகர் திலகத்தை காண வேண்டும் என்று நினைத்து விட்டால் இயல்பாகவே மக்கள் வந்து விடமாட்டார்களா என்ன?
கார்த்திகை தீபத்தன்று அண்ணன் தங்கை(களு)க்கு கார்த்திகை சீர் (பணம்) கொடுப்பது வழக்கம்!
மதுரை சென்ட்ரலிலோ தங்கைகள் அண்ணனை காண சீர் கொடுத்திருக்கின்றனர்!
ஆம்! கணிசமான மக்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் இன்று சென்ட்ரல் திரையரங்கிற்கு வந்து Dr. ரமேஷ் அவர்களை கண்டு மகிழ்ந்திருக்கின்றனர்!
இது போன்ற பண்டிகை நாட்களில் கூட பொது மக்கள் தியேட்டருக்கு வருகிறார்கள் என்று சொன்னால் அது நம் நடிகர் திலகத்திற்கு மட்டும்தானே!
படத்தின் வெளியீட்டை முன்னிட்டு மதுரை சென்ட்ரல் திரையரங்கில் அமைக்கப்பட்டிருக்கும் பானர் மற்றும் வரவேற்பு போஸ்டர்கள்.
http://www.thalaivansivaji.com/wp-co...1/DSC00041.jpg
http://www.thalaivansivaji.com/wp-co...1/DSC00050.jpg
சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்
-
-
மதுரை சென்ட்ரலில் காட்சியளித்துக் கொண்டிருக்கும் Dr. ரமேஷ் அவர்களை காண இன்றும் கணிசமான மக்கள் வந்திருந்து சிறப்பு செய்திருக்கின்றனர். class actor மற்றும் மாஸ் ஹீரோ என்ற இரு வேறு கூறுகளையும் ஒரே நேரத்தில் திறம்பட கையாளும் தகுதி படைத்த ஒரே நடிகன் நடிகர் திலகம், அண்ணன் ஒரு கோவில் படம் வெளிவந்து 37 ஆண்டுகள் கழித்தும் அதை செவ்வனே நிரூபித்திருக்கிறார். வரவேற்பு கூடி கூடி வருகிறது என்ற சந்தோஷ செய்தியை நம்முடன் பகிர்ந்துக் கொண்டார் படத்தை வெளியிட்டவர்.
இந்த இனிமையான தொடக்கம் அவர் முயற்சி செய்யும் நடிகர் திலகத்தின் பல்வேறு திரைப்படங்களுக்கும் இதே போல் தொடர்ந்து வரட்டும் என்று வாழ்த்தினோம்
அன்புடன்
-
சென்னை சாந்தி சினிமாஸ் : சிவாஜி பிலிம்ஸ் "புதிய பறவை"
[முதல் நாள் 23.7.2010 வெள்ளிக்கிழமையின் மொத்த வசூல் (சற்றேறக்குறைய)]
பிற்பகல் 3:00 மணிக் காட்சி : ரூ.16,100/- (ரூபாய் பதினாறாயிரத்து ஒருநாறு)
மாலை 6:30 மணிக் காட்சி : ரூ. 13,000/- (ரூபாய் பதிமூன்றாயிரம்)
இரவு 10:00 மணிக் காட்சி : ரூ.7,200/- (ரூபாய் ஏழாயிரத்து இருநூறு)
மொத்தம் : ரூ.36,300/- (ரூபாய் முப்பத்து ஆறாயிரத்து முந்நூறு)
அன்புடன்,
பம்மலார்.
-
-