-
பணம் படைத்தவன் படத்தில் தாஜ்மாகாலில் „பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்.. „ .
நல்ல மெலடி நிறைந்த பாடல். முகலாய உடையில் எம்ஜிஆர், கே.ஆர். விஜயா பாடுவதாக படத்தில் அமைந்திருக்கும் இந்தப் பாடலில் எல்.ஆர்.ஈஸ்வரியின் ஹம்மிங் அருமையாக இருக்கும்.
„பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்...'
„எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்..'
இந்தப் பாடலில் காக்கை இனம் வாழும் வாழ்க்கை முறை பார்த்து மனித குலம் வாழ உழைப்பான் என்ற பாடல் வரி வரும். அன்றைய காங்கிரஸ்காரருக்கு காக்கைகள் என்று சொன்னால் பிடிக்காது. காக்கைளைக் காங்கிரஸார் தணிக்கை செய்ய, நேற்று நாம் வாழ்ந்த வாழ்க்கை விதம் பார்த்து மனித குலம் வாழ உழைப்பான் என்று படத்தில் பாடல் இடம் பெற்றிருக்கும்.
தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்... அன்றைய காதலில் தோல்வி அடைந்த பெண்களுக்கான சோகம் ததும்பும் கண்ணீர்ப் பாட்டு. எம்ஜிஆருக்கு சோகம் வெகு தூரம் என்பதாலோ என்னவோ அநேக காட்சிகளில் எம்ஜிஆரை தூரத்தில் வைத்தே காட்சியை அமைத்திருக்கிறார்கள்.
மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க மன்னவன் மட்டும் அங்கிருக்க...
பாடல் காட்சியில் வெளிச்சம் கொஞ்சம் கம்மியாக இருக்கும்.
பருவத்தில் கொஞ்சம் உருவத்தில் கொஞ்சம் பெண்ணுக்கு அழகு வரும்.. பாடலில் சௌகார்ஜானகியை ஆட விட்டு பார்வையாளர்களுக்குக் கொஞ்சம் சிரமத்தை உண்டாக்கி இருப்பார்கள்.
டி.ராமண்ணா எம்ஜிஆரை வைத்து „ப' வரிசையில் புதுமைபித்தன், பாசம், பெரிய இடத்துப் பெண், பணக்காரக் குடும்பம், பணம் படைத்தவன், பறக்கும் பாவை படங்களை இயக்கினார் (குலேபகாவலி, கூண்டுக்கிளி ஆகிய இரண்டு படங்கள் விதிவிலக்கு) ஏ.பீம்சிங், டி.ராமண்ணா இருவரும் இயக்கிய இந்தப் 'ப' வரிசையில் வந்த எல்லா படப் பாடல்களும் செம ஹிட்.
விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கண்ணதாசன் என்ற கூட்டணி, பணம் படைத்தவன் திரைப்படத்தில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, வாலி என்று சற்று மாறிப் போயிருந்தது. ஆனாலும் பாடல்கள் இனிமையாகவே இருந்தன. இன்றும் மறக்க முடியாத அளவுக்கு மனதில் நிற்கின்றன.
Courtesy - thiru ayya pillai - net
-
28.3.1936
மக்கள் திலகம் எம்ஜிஆர் சிறு வேடத்தில் நடித்த முதல் படம் ''சதிலீலாவதி '' வெளிவந்த நாள். இன்று 82 ஆண்டுகள் நிறைவு பெற்று உள்ளது .
-
என்றும் வாழும் மனித குலத்தின் ஏக சக்ரவர்த்தி சரித்திர சகாப்த சாதனைகள் வரிசையில் வைர விழா காணும்போதும் மக்கள் எழுச்சியுடன் வெற்றி நடை போடுகின்ற நிழலை நிஜமாகிய உலகளவில் ஒரே காவியம் "நாடோடி மன்னன்" தினசரி தரிசித்து கொண்டிருக்கும் நண்பர்கள் குழு பலவித சிறப்புகளை பகிரும்போது ஏராள மகிழ்ச்சி...
-
http://i63.tinypic.com/23utzbm.jpg
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நல்லாசியுடன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியில்
20,000 பதிவுகளுடன் பயணித்து வருவதற்கு பேராதரவு அளித்து பாராட்டுக்களும் , நல்வாழ்த்துக்களும் வழங்கிய நண்பர்கள் திருவாளர்கள் : வினோத், சி.எஸ். குமார் ,
கா. நா. பழனி, ரவி, (பெங்களூரு ), ரவிச்சந்திரன் (நெறியாளர் -திருப்பூர் ),எஸ்..குமார் , தமிழ் நேசன் (மதுரை ) , மலரவன், குமரவேல் (திண்டுக்கல் ), ராஜா (நெல்லை ),
கலீல் பாட்சா (திருவண்ணாமலை ), ஓமப்பொடி பிரசாத், சுரேந்திரபாபு, தம்பாச்சாரி ,
இளங்கோவன், பி.ஜி.சேகர், மோகன்குமார் (வழக்கறிஞர் ),யுகேஷ் பாபு, சாமுவேல் (சத்தியமங்கலம் ) வி.கிருஷ்ணமூர்த்தி (கோவை ).ஏ.பி.பாபு (பெங்களூரு ), சுகாராம் ஜி.வெங்கடேச பெருமாள்,சேர்மக்கனி (எ .வீ..பிள்ளை -விநியோகஸ்தர் ), பாண்டியராஜ் (ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு நிர்வாகி ), சுந்தர் (மடிப்பாக்கம் ), ராமு (மின்ட் ), ரவிசங்கர் , ம. சோ. நாராயணன் (மதுரை ) ,சங்கர் (கள்ளக்குறிச்சி ), விஜயமுரளி (பம்மல் ),சுவாமிநாதன் (பம்மல் )
மற்றும் அலைபேசி, தொலைபேசி , வாட்ஸ் அப் மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்த
நண்பர்கள் அனைவருக்கும் ஏகோபித்த நன்றி .
உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு, இதயக்கனி ஆசிரியர் திரு.விஜயன்,
திரு.சிரஞ்சீவி அனீஸ் , திரு.துரை கருணா, திரு.இளவேனில் (எம்.ஜி.ஆர். 100-ஜெயா டிவி), திரு.ஆதவன் (மெகா டிவி ) ஆகிய பத்திரிகை ஆசிரியர்களுக்கும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கும் பாராட்டுக்கள் தெரிவித்தமைக்கு மனமார்ந்த நன்றி .
-
-
-
-
-
-