Originally Posted by Shakthiprabha
March 30th
__________
நம் ஒவ்வொருவர் வாழ்விலும், ஏறக்குறைய நடைபெறும் எல்லா தவறுகளும் மறந்தும் மன்னித்தும் விடக்கூடியவையே. எனினும் 'சுயத்தால்' பாதிக்கப்பட்டு, அகம் எனும் மாயை கண்களை மறைக்க, நமக்கு மன்னிக்கவும் மறக்கவும் எளிதில் கைவருவதில்லை. அகந்தையின் மாயை தலைக்கேறும் போது இன்னொருவனிடம் குறைந்தபட்சம் "மன்னிப்பு" கோரும் வழக்கமும் அறவே இல்லாதொழிகிறது. இதனால் ஒவ்வொருவரும் படும் இன்னல்கள் சொல்லி மாளாது. நம்மை நாமே வருத்திக்கொண்டு, பிறரையும் துன்புறுத்துகிறோம்.
மன்னிப்பதும் மறப்பதும் சிறந்த மனித குணங்கள். மன்னித்து விடுவதால் நம் அஹம் அமுக்கப்பட்டு, ஆத்மா உயர்ந்து நிற்கிறது. தவறை உணர்ந்து "என்னை மன்னித்து விடு" என்று கேட்கும் மனிதனோ களங்கள் கழுவப்பட்டு உயர்ந்து விடுகிறான். தவறு யாருடையாதாய் இருப்பினும் விட்டுக்கொடுத்து மன்னிக்கும் குணம் இருக்கும் மனிதனுக்கு பூலோகமே சொர்கம்.
(வளரும்)