-
நூற்பயன்:
ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, அங்கையில் பாசாங்குசமும் கரும்பு வில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.
உலகத்து அன்னையும், அகில அண்டங்களையும் படைத்து காத்தருளும் மாதுளம்பூ நிறம் கொண்ட அபிராமவல்லியை, திருக்கரங்களில் மலர் அம்புகள் ஐந்தையும், பாசத்தையும், அங்குசத்தையும், கரும்பு வில்லையும் வைத்திருப்பவளை, மூன்று கண்களையுடைய தேவியைத் தொழுபவர்க்கு ஒரு தீங்கும் நேராது, உலகில் எல்லா நலமும்,வளமும் பெற்று வாழ்வர்.
aaththaaLai, enkaL abiraama valliyai, aNdam ellaam
pooththaaLai, maathuLam poo nNiRaththaaLai, puvi adankak
kaaththaaLai, amkaiyil paachankuchamum karuppuvillum
chErththaaLai, mukkaNNiyaith, thozhuvaarkku oru theenku illaiyE.
-
-
Where are u shankar? (wrap)
missing u.
-
-
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.
-
விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில் பணிமின் கனிந்து.
-
முன்னவனே, யானை முகத்தவனே, முத்தி நலம்
சொன்னவனே, தூய் மெய் சுகத்தவனே,
மன்னவனே, சிற்பரனே, ஐங்கரனே, செஞ்சடையுஞ் சேகரனே,
தற்பரனே நின் தாள் சரண்.
-
அல்லல் போம், வல்வினை போம், அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணம் அதிகமாம் அருணைக் கோபுரத்துள்
மேவும் கணபதியைக் கைதொழுதக் கால்.
-
திகடச் சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவோம்.
-
// wb shankar :D //
//வல்வினை போம், அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணம் அதிகமாம்//
:bow: :bow: