-
-
என்ன ஆச்சு ... கோபால்
கடந்த கால சம்பவங்கள் உங்களை மிகவும் யோசிக்க வைக்கிறது
என்றே நினைக்கிறேன் .எல்லோரும் நல்லவரே .
இறைவன் படைப்பில் பேதமில்லை .கவலையை விடுங்கள் .
யாருக்கு என்னென்ன கிடைக்குமோ அது கிடைத்தே தீரும்
கிடக்கவில்லை என்பதற்காக ........................
நீங்கள் குறை கூறுவதால் ஜெய் புகழ் குறைய போவதில்லை .
ரசியுங்கள் - நடிப்பை .... யாராக இருந்தாலும் ..
.
-
http://padamhosting.com/out.php/i554...nayiram-00.jpg
My favorite SPB song: நேற்று வரை விண்ணில் இருந்தாளோ...
கிணற்று தண்ணீர் போல் குளிர் காலத்தில் வெப்பமாக இருக்கிறாள் கோடையில் குளிருகிறாள்..
மழை துளிகள் முத்து முத்தாக விழுவதை போன்ற சிரிப்பு என் கவிதையின் வடிவம் அவளே..
http://www.youtube.com/watch?v=hmfxY...yer_detailpage
அந்தக் காலத்தில் மிகவும் புகழ் பெற்ற பாடல். இதை பாடாத வாயும் உண்டோ!
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=nZ3pEwAG5Jk
-
-
-
-
திரு ஜெய்ஷங்கர் - இவரை சந்திப்பேன் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. சென்னை சித்ரா திரைஅரங்கில் முதன்முதலாக இரவும் பகலும் திரைப்படம் எனது தாயாருடன் சென்ற ஞாபகம் இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது.
பதினோராம் வகுப்பில் முதல் நாள் பள்ளி திறந்தவுடன், Assemblyil எங்களுடைய பள்ளி முதல்வர், பேசுகையில்.." இன்று நம் பள்ளியில் ஒரு பிரபலமான மனிதாபிமானம் உள்ள மிகபெரிய நட்சத்திரத்தின் மகன் First Group (Maths Physics Chemistry Computer ) பிரிவில் சேர்ந்துள்ளார். அவரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறி திரு.சஞ்சய் அவர்களை அறிமுகபடுத்துகிறார்.
எங்கள் அனைவர்க்கும் ஒரே ஆச்சர்யம்..கிட்டத்தட்ட பாயும் புலி திரைப்படத்தில் வரும் ஜெய் போல ஒரு Miniature வடிவில் ஒருவர் மேடையில் சென்று அந்த ஜெய் யின் அக்மார்க் சிரிப்புடன் ...Hi ...am sanjay ...i did my schooling upto 10 standard in Don Bosco ..am happy to be part of all of you here என்று எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் வெகுளியாக பேசியவிதம் ஆச்சர்யமாக இருந்தது. !
அவருடன் போக போக நட்புகொண்டு பின்பு ஆழமான ஒரு பந்தம் உருவானது இன்றளவும் மறக்க முடியாத ஒன்று..
திரு.ஜெய்ஷங்கர் அவர்களை ஜூலை மாதம் 1989 (அவருடைய பிறந்தநாள்) சஞ்சய் அழைத்ததன் பேரில் காலேஜ் ரோடு "ஜெய் வில்லா" விற்கு முதன்முறையாக சென்றேன்.
பிறந்தநாள் என்பதால் நல்ல கூட்டம்...திரு.SA Chandrasekar along with Vijay (small boy), Mr.Arjun, Mr.A.V.M Saravanan, Mrs. Lakshmi, Mr.T.P.Gajendran, Makeupman Mr.Manickyam மற்றும் சிலர் வந்திருந்தனர்.
என்னை சஞ்சயுடன் பார்த்ததில் அவருக்கு சிறு குழப்பமா கேள்விய என்று தெரியவில்லை...யார் இந்த பய்யன் புதுசா இருக்கானே என்ற கேள்விமட்டும் கண்களில் தெரிந்தது..!
முன்னரே எனக்கு அவருக்கு பிறந்தநாள் என்று தெரியாததால் ஒன்றும் கொண்டு செல்லவில்லை. அவரையே பார்த்துகொண்டிருந்ததில் சற்று என்னை மறந்த நிலையில், "வாப்பா" என்று கணீர் குரல்..!
தயங்கி தயங்கி சென்று என்ன பேசுவது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு நின்றேன்..! ஒருவித வழிந்த சிரிப்பு தான் என் முகத்தில் படர்ந்து இருந்தது !
உடனயே சஞ்சய் அவர்கள்...அப்பா..! இதுதான் சுப்பிரமணி commerce group 11th C section என் close friend என்று என்னை அவரிடம் மற்றவர்கள் முன்னால் அறிமுகபடுத்தியபோது எனக்கு பெருமை தாங்கவில்லை.
அப்டியா ? என்று கேள்வியுடன் "வாப்பா சுப்புணி" warm welcome to our home ! என்று வரவேற்று சட்டென்று என் தோள்மேல் கையிட்டு..இன்னிக்கு தான் நான் பொறந்தேனாம் ! என்றார் !
என்னுடைய சங்கோஜத்தை புரிந்துகொண்டு என்னை சகஜநிலைக்கு கொண்டு வந்த அந்த பாங்கு அவருக்கு கை வந்த கலை என்று நினைகிறேன்.
சட்டென்று நான் என்னுடைய பேனாவை எடுத்து அவரிடம் கொடுத்து "ஹாப்பி பர்த்டே சார் " என்றேன் உடனயே "சார் இல்லப்பா Unclenu கூப்பிடு ! என்றார் !
என்னுடைய Hero Pen ஐ சிரித்தபடியே வாங்கி...oh ..so nice ! தேங்க்ஸ் போர் தி beautiful gift ! என்றார் !
பின்பு..ஜெயராஜ் (அவருடைய காரியதரிசி) என்று அழைத்து அங்கிருந்த ஸ்டில் போடோக்ராபரை அழைத்துவர செய்து ..என் தோள்மீது அன்புடன் கைவைத்து புகைப்படம் எடுக்க செய்தார்..!
மதிய உணவு அருந்துகையில்...அவரே எனக்கு பரிமாறினார் என் வாழ்நாளில் மறக்க முடியாத முதல் அனுபவம் !
உணவு அருந்துகையில் அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது..! என் நண்பர் சஞ்சய், நான், மக்கள் கலைஞர், அவர் துணைவியார், சஞ்சய் அவர்களின் தமக்கையார், அண்ணன் விஜய் அனைவரும் உணவருந்தி கொண்டு இருந்த நேரம் ....என் நண்பர் சஞ்சய் .."அப்பா ..சுப்பு பயங்கர சிவாஜி fan என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம் ! எனக்கு சர்வமும் அடங்கியது போல ஒரு அதிர்ச்சி !
இதை கேட்டவுடன்..சிரித்துகொண்டே திரு ஜெய் அவர்கள் என்னை திரும்பி பார்த்து "அப்போ என் படம் உனக்கு புடிக்காதா சுப்புணி ? என்று கேட்க ..
நான் அவசரம் அவசரமாக...ஐயோ uncle அப்புடி இல்ல ..உங்க படம் fights எல்லாம் எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் ..நான் பட்டணத்தில் பூதம், துணிவே துணை, வல்லவன் ஒருவன், இரவும் பகலும் என்று கூரிகொண்டிருக்கும்போதே என்னையும் அறியாமல் "அன்பளிப்பு" என்றும் கூற ....
உடனே, அதுல உன்னோட favourite ஹீரோ ரொம்ப handsome எ இருப்பாருப்பா ! என்றாரே பாருங்கள்...!
ஹ்ம்ம்...! அப்படி தொடர்ந்த அந்த பந்தம்.எனது திருமணத்திற்கு (பிப் 24 2000) அவர் வந்து ஆசிர்வதித்து பின்னர் அதே வருடம் ஜூன் 3 2000 அன்று விடியற் காலை 2-45am நானும் அவருடைய மகன் திரு.சஞ்சயும் அப்போல்லோவில் சென்று அவருடைய உயிரற்ற உடலை ஆம்புலன்ஸ் மூலம் அவருடைய அடையார் இல்லம் கொண்டு சென்றதுவரை தொடர்ந்தது..!
வாழும் வரையில் உண்மையான ஒரு பரோபகாரியாக இருந்தார் அந்த மனிதருள் மாணிக்யம் திரு.ஜெய்ஷங்கர் அவர்கள் !
நினைக்கும்போது என் தொண்டைக்குழியில் இப்பொழுதும் ஒரு அடைப்பு !!
-
-
Jai Shankar remains unique for his titile Thennagaththu James Bond since he is the perfect tamil equivalent to Sean Connery's James Bond image. His Bond pattern movies Vallavan Oruvan, Nilgiri Express, Nil Gavani Kadhali, CID Shankar.. thunivae thunai...are sheer entertainment on par with Bond movies. He was also a perfect fit for the cowboy genre to as equivalent for Clint eastwood. Films like Nootrukku Nooru paraded his acting skills. He lives in our hearts as a philanthropist without a tomtom.
-
MANY MORE HAPPY RETURNS OF THE DAY TO illaya Makkal Kalaignar Sanjai Shankar
http://www.youtube.com/watch?v=i-jlk4dEFLY