கர்நாடகா, கேரளா, உருது, துளு, இந்தி, கூம்பா - கூம்பா ஆகிய மாநிலங்களிருந்து வந்திருக்கும் மணமக்களை வாழ்த்திப் பேசுகின்ற இந்த பொன்னான நேரத்திலே ...
நமது கட்சியின் மகளிர் அணி தலைவியும், மாநிலம் போற்றும் சமூக சேவகியும், மக்கள் பணியே மகேசன் பணி என்றிருக்கும் தானைத் தலைவி, காற்புக்கரசி, எழிலரசி, எழில் கொஞ்சும் அரசி, அவர்களுடைய சீரிய பணியை பாராட்டுகின்ற இந்த நேரத்திலே ...
தியாகங்களை, செய்த இந்த பொன்னுரங்கத்திற்கு தமிழகமே, தமிழகமே, என்ன பரிசு தரப்போகிறாய் எனக்கு?
தமிழகத்தின் வரலாற்றிலே பொன்னுரங்கத்தின் பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பபடவேண்டிய நாள் தொலைவில் இல்லை
நான் பேசப்பேச என் அருமைத்தம்பி உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விடுகிறான். தம்பீ அழாதே! நீ பட்ட ரணம் வீண் போகாது. அண்ணன் விரலசைதால் நீ வீறு கொண்டு எழுவாய் :rotfl3: என்பது எனக்கு நன்றாகத் தெரியும் என்று சொல்லிக்கொண்டு உங்களிடமிருந்து நான் வடை பெறுகிறேன்.