நிதி சிக்கலில் விருது கம்பெனி!!
மரிக்காதவன் படத்தை தயாரித்த விருது கம்பெனி அந்தப் படத்தை ரொம்பவே நம்பி இருந்ததாம். மரிக்காதவன் காலை வாரிவிட்டதால் விருது கம்பெனி இப்போது நிதி சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கிறதாம். 7 படங்கள் வரை ஒரே நேரத்தில் தயாரித்து வரும் இந்த நிறுவனம் எந்தப் படத்தையும் முடிக்க முடியாமல் இருக்கிறது. குறிப்பாக பிரமாண்ட இயக்குனரின் ஒரு எழுத்து படத்தில் பணியாற்றிவர்களுக்குகூட சரியாக சம்பளம் கொடுக்க முடியவில்லையாம். இதனால் அந்தப் படத்திற்கு வேலை செய்ய செல்லவே தயங்குகிறார்களாம். ஒரு காலத்தில் பேமெண்டுக்கு பேர்போன அந்த நிறுவனம் அகலகால் வைத்து தடுமாறுவது தான் கோடம்பாக்கம் முழுவதும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
http://cinema.dinamalar.com/entertai...ne-Gossips.htm