-
-
இணையதளத்திலும் 'கர்ணன்' சாதனை. ('இதயக்கனி' சினிமா ஸ்பெஷல், July 2012)
http://i1087.photobucket.com/albums/...5/6_0001-1.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
-
டியர் esvee சார்,
கலக்குகிறீர்கள் சார். அருமையான நடிக மன்னரின் நிழற்படங்கள். பார்க்க பார்க்க திகட்டவில்லை. உங்கள் நல்ல அன்பு மனம் "இன்று போல் என்றும் வாழ்க"
நன்றியுடன்,
வாசுதேவன்
-
பண்டைய இலக்கியங்கள்.. குறிப்பாக பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் உருவான இலக்கியங்களை நாம் அறிவது எப்படி ... அவர்கள் உயிருடன் நம்மிடம் வந்து சொல்கிறார்களா...அந்த இலக்கியங்களின் அருமையை அறிந்தவர்கள் அவை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்கிற கலையார்வத்தோடும் உள்ளன்போடும் செய்யும் தொண்டுகளால் தான் அவை இன்றளவும் மக்களிடம் சென்று சேர்கின்றன. ஒரு உ.வே.சாமிநாதய்யர் இன்று நம்மிடம் இல்லை, ஆனால் அவருடைய தலைமுறையினர் அவருடைய சிறப்பை அடுத்தடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்ததன் மூலமாகத் தான் இன்று ஓலைச் சுவடிகளாயிருந்த இலக்கியங்கள் நம்மிடையே புதினங்களாக வருகின்றன. இந்த நிலை அனைத்துக் கலைகளுக்கும் பொருந்தும். தொல்காப்பியர் காலத்தவர்கள் செய்த தொண்டின் பயனாகத் தான் இன்று நம்மிடையே தமிழ் இலக்கணம் இன்றியமையா இடம் பெற்றுள்ளது. இந்த அடிப்படையில் தான் நடிகர் திலகம் என்கிற மாமனிதரின் மாபெரும் கலைஞனின் சிறப்பையும் நோக்க வேண்டும். அவருடைய திறமையை அவருடைய படங்கள் பறை சாற்றும். ஆனால் அவற்றை அடுத்தடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் பணி காலங்கடந்து நிற்கும். அது மட்டுமல்ல, நடிகர் திலகம் இன்றும் தன்னுடைய ஆளுமையை ஆணித்தரமாய் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். இதனை அவருடைய படைப்புகள் பெருகின்ற மாபெரும் வரவேற்புகள் பறை சாற்றுகின்றன. அவருடைய வெற்றிகள், அவருடைய நற்பண்புகள், அவருடைய ஈகை போன்றவை மக்களிடம் கொண்டு செல்வது ஒவ்வொரு சிவாஜி ரசிகனின் கடமையாகும். பல்வேறு கால கட்டங்களில் அவருடைய வெற்றிகளும் சாதனைகளும் மக்களின் சிந்தனைக்கு சரியான முறையில் எடுத்துச் செல்லப் படாததன் விளைவுகள் தான் முதல் வெளியீட்டில் கர்ணன் தோல்வி என்று பொதுவாக நிலவும் கருத்துக்களுக்குக் காரணம்.
பம்மலாரும் வாசுதேவனும் மேற்கொண்டுள்ள இந்தப் பணி கடல் கடந்து வாழும் தமிழர்களால் பெரிதும் விரும்பப் படுகிறது.
இன்றைக்கும் கர்ணன் வெற்றி பற்றிய செய்திகள் அதிக அளவில் மக்களை சென்றடையாமல் செய்ய முயற்சி மேற்கொள்ளப் பட்டும் வளர்ந்து விட்ட விஞ்ஞான யுகத்தில் இது நடைபெறாத காரணத்தால் மக்களிடையே கர்ணனின் மிகப் பெரிய வெற்றி முழு அளவில் கவனத்தை ஈர்த்ததும் நாம் பார்க்கிறோம். இது தான் நமக்கு காலம் கனிந்து வருவதன் அடையாளம். இன்றைக்கு மேற்கொள்ளப் பட்ட முயற்சிகள் மூலமாக எதிர்காலத்தில் நடிகர் திலகத்தின் படங்கள் மட்டுமல்ல, அவருடைய படங்களின் வெற்றி மூலம் அவர் எப்படிப்பட்ட சாதனைகளையெல்லாம் செய்துள்ளார் என்பதை வரும் தலைமுறையினர் தெளிவாகத் தெரிந்து கொள்வர்.
இந்த அடிப்படையில் தான் திரிகளின் வரவேற்பினைப் பற்றிய புள்ளி விவரங்கள் தரப்பட்டுள்ளன என்பதைப் பணிவோடு கூற விரும்புகிறேன்.
அன்புடன்
-
நடிக தெய்வத்தின் பதினோராம் ஆண்டு நினைவு தினம் புதுவை மாநிலத்தில் (உழந்தைகிரப்பாளையம்) அகில இந்திய புதுவை மாநில சிவாஜி மன்ற பொதுச் செயலாளர் திரு A.கமலக்கண்ணன் அவர்கள் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது. நினைவாஞ்சலி தினத்தன்று பள்ளி மாணவிகளுக்கு பேனா, பென்சில், நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டதோடு ஏழை,எளிய மக்களுக்கு சிக்கன் பிரியாணி பொட்டலங்களும் வழங்கப்பட்டன. பேதங்கள் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் நமது இதய தெய்வத்திற்கு அஞ்சலி செலுத்தியதாக திரு.கமலக்கண்ணன் அவர்கள் தெரிவித்தார்.
நினைவாஞ்சலி நிழற்படங்கள் சில
http://i1087.photobucket.com/albums/...355/6_0002.jpg
http://i1087.photobucket.com/albums/...5/6_0003-1.jpg
சுவரொட்டிகள் சில
http://i1087.photobucket.com/albums/...5/IMG0175A.jpg
http://i1087.photobucket.com/albums/...5/IMG0170A.jpg
-
Great Gesture
Quote:
Originally Posted by
esvee
Dear Esvee Sir,
So many thanks for uploading the pictures of Nadigar Thilagam. "THILAGASANGAMAM" objective is getting fulfilled. So nice of your kind gesture
:smokesmile:
-
http://i45.tinypic.com/1yidz.png[QUOTE
Dear BR SIR
thanks for your compliments.
-
-
அன்புள்ள பம்மலார் சார்,
1964 பேசும்படம் இதழில் வெளிவந்த 'கர்ணன்' திரைக்காவியத்தின் நிழற்படங்களை அள்ளி வழங்கி ஆனந்தப்படுத்தி விட்டீர்கள். இன்றைக்கு நாம் பலமுறை கர்ணன் படத்தைப்பார்த்தபின்னும் இப்படங்கள் நமக்கு சுவையூட்டுகின்றன என்றால், படம் வெளிவருவதற்கு முன் இவற்றைப்பார்த்த ரசிகர்களுக்கு இவை எவ்வளவு பரபரப்பையும், எதிர்பார்ப்புகளையும் தூண்டியிருக்கும் என்று ஊகிக்க முடிகிறது. அது ஒரு காவியப்படைப்பு என்பதனால்தான், தொடர்ந்து ஆண்டுகள் பலவாக மக்களைக் கவர்ந்து வருகிறது. முன்னர் பேசும்படம் இதழில் வெளியான 'கர்ணன் உருவான வரலாறு' பதிவுகளுடன் இவற்றையும் சேமித்து விட்டோம்.
Lots and Lots of Thanks for your great efforts.
-
அன்புள்ள பம்மலார் சார், வாசுதேவன் சார், ராகவேந்தர் சார், சந்திரசேகர் சார், பாரிஸ்ட்டர் சார் மற்றும் எஸ்வீ (வினோத்) சார்......
தங்கள் எல்லோருடைய அனைத்துப்பதிவுகளையும் பார்த்து, பரவசமடைந்து மகிழ்கிறேன். அனைத்தையும் தனித்தனியே பாராட்டி மகிழ என் மனம் துடிக்கிறது. ஆனால் எனது கணிணியில் பதிவுகளை இடுவது பெரிய பகீரதப்பிரயத்தனமாக இருக்கிறது. ஒரு பதிவை இட குறைந்தது முப்பது நாற்பது முறை போராட வேண்டியுள்ளது. எப்போது பதித்தாலும் 'the page cannot be displayed' என்ற வாசகம் வந்து பாடாய் படுத்துகிறது.
எனவே இதையே அனைவரது அற்புதப்பதிவுகளுக்கும் எனது பாராட்டாக, நன்றியாக எடுத்துக்கொள்ளுங்கள்.
பம்மலார் சார், 'குமுதம்' இதழுக்கு தலைவர் அளித்திட்ட மனக்குமுறல் பேட்டியை தாங்கள் வெளியிட்டிருப்பது டைம்லி ஆக்ஷன். சித்தூர் ராணி பத்மினி முதல் வெளியீடு மற்றும் என்னைப்போல் ஒருவன் மறு வெளியீடு விளம்பரங்கள் தூள்.
ராகவேந்தர் சார், தங்கள் அனைத்துப்பதிவுகளுக்கும் பாராட்டுக்கள்.
சந்திர சேகர் சார், திருச்சி விழா நிகழ்ச்சிகளும், சிலைதிறப்புக்கான முயற்சிகளும் அற்புதம். பேரவையின் சீரிய முயற்சியால் விரைவில் தலைவரின் கம்பீர சிலையை திருச்சி மக்கள் தரிசிக்க வழிபிறக்கும் என்று நம்புவோம்.
எஸ்.வீ.சார், நடிகர்திலகம் திரியிலும் மக்கள் திலகம் திரியிலும் தங்கள் ஆவணப்பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை. தங்கள் சேவை தொய்வின்றித் தொடர வாழ்த்துக்கள்.