http://i1170.photobucket.com/albums/...ps7b38cd98.jpg
Printable View
இந்த வேட்டிப் பிரச்சனை வந்தாலும் வந்துச்சு , அதை
வச்சே M C R ன்னு வேட்டிக் கம்பெனிக்காரன் ,
காந்தி , காமராஜ் , அண்ணா , எம்ஜியார் எல்லார் கட்டியதும்
வேட்டிதான்ன்னு டிவி யில் விளம்பரம் .
## ஓசியிலே எவ்வளவு பெரிய விளம்பரம் !
courtesy net
செல்வக்குமார் சார் தலைவரின் மாட்டுகார வேலன் படத்தின் மறுவெளியீடு சாதனைகளை வெளியிடுமாறு கேட்டு கொள்கிறேன் .
Yukesh Babu Sir,
I remember seeing Mattukara Velan was shown in Select theatre during 1981-82[?]. It was housefull all shows. Further, Nerkundram Balamurali [?], matukara velan was the 1st movie to be screened in the mid 1970's. Apart from that have seen MV many times @ Aminjikarai Lakshmi, Palaniappa, Muralikrishna, Saravana......... amongst other Cinemas.
மதுரை - மீனாக்ஷி அரங்கில் இன்று முதல் மக்கள் திலகத்தின் ''ரகசிய போலீஸ் 115''..
http://i58.tinypic.com/t65rt3.jpg
ஆயிரத்தில் ஒருவன் 20 வது வாரம் சத்யம் மற்றும் பேபி ஆல்பர்ட்
தெய்வத் தாய் பிராட்வே திரை அரங்கில் 25.07.2014 முதல் மூன்று காட்சிகள்
இப்பேர்ப்பட்ட சாதனை தலைவருக்கு மட்டும் சாத்தியம் இந்த திரை உலகில்
மக்கள் எங்கே துன்பப்பட்டாலும் அவர்கள் துயர் தீர்க்கும் ஆண்டவனாக அங்கே வந்து நின்றதால்தான் புரட்சித்தலைவரை மக்கள் திலகம் என அன்போடு அழைத்தனர். இயற்கை சீற்றங்கள், பேரிடர்கள் என எது ஏற்பட்டாலும், பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மற்றவர் படும் துன்பத்தை தனதென்று எண்ணி அவர் ஓயாமல் உழைத்தார். அதனால்தான் அவர் இன்றளவும் ஏழைகளின் இல்லங்களில் எல்லாம் இதய தெய்வமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 1964ம் ஆண்டு தனுஷ்கோடியில் ஏற்பட்ட புயல் சேதம் உலகம் அறிந்த ஒன்றாகும். அப்போது தமிழக முதல்வராக பக்தவத்சலம் இருந்தார். புயல் ஏற்பட்டவுடன் பாதிக்கப்படவர்களுக்கு ஆறுதல் கூற பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, திரு. நெடுஞ்செழியன், திரு. கக்கன் முக்கியமாய் எம்ஜிஆர் வந்தார் என அப்போதைய நாட்டுபுறப்பாடலில், வேம்பர் பாக்கியம் என்ற பனைத்தொழிலாளி பாடியுள்ளார். இன்றைய 'தி இந்து' தமிழ் நாளிதழில் வந்த செய்தி உங்கள் பார்வைக்கு:
http://i62.tinypic.com/30vi4ap.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
kaiaperumal sir super postings
கொடுப்பவன் தானே மேல் ஜாதி
கொடுக்காதவனே கீழ் ஜாதி (2)
படைத்தவன் பேரால் ஜாதி வைத்தான்
பாழாய்ப்போன இந்த பூமியிலே (2)
நடப்பது யாவும் விதிப்படி என்றால்
வேதனை எப்படி தீரும் (2)
உடைப்பதை உடைத்து வளர்ப்பதை வளர்த்தால்
உலகம் உருப்படியாகும் .ம் ...உலகம் உருப்படியாகும் ..........
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எங்கள் குலம் என்போம்
தலைவன் ஒருவன் தான் என்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எங்கள் குலம் என்போம்
தலைவன் ஒருவன் தான் என்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
ஆண்டவன் ஒருவன்... இருக்கின்றான்...
அவன்... அன்பு மனங்களில்... சிரிக்கின்றான்....
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
வேண்டுதல் வேண்டாமை ஆத்திர மெய்சுடராய்
வேண்டுதல் வேண்டாமை ஆத்திர மெய்சுடராய்
விளக்கிட முடியாத தத்துவ பொருளாய்
விளக்கிட முடியாத தத்துவ பொருளாய்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
நல்லவர்போல் வெளி வேஷங்கள்
அணிந்து நடிப்பவர் நடுவில் இருப்பதில்லை
நாணயத்தோடு நல்லறம்
காத்து நடப்பவர் தம்மை மறப்பதில்லை
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
தன்மானம் காப்பதிலே
அன்னை தந்தையை பணிவதிலே
பிறந்த பொன்னாட்டின் நல்ல முன்னேற்றம்
காண பொதுப்பணி புரிபவர் மகிழ்ச்சியிலே
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
சத்தியத்தின் எல்லையிலே
உயர் சமரச நெறிகளிலே ஆஆ....
சத்தியத்தின் எல்லையிலே
உயர் சமரச நெறிகளிலே
அன்பின் சக்தியிலே தேச பக்தியிலே
உண்மை சமத்துவம் காட்டும் சன்மார்கத்திலே
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவனென்று போற்றுவோம்
அன்னை இதயமாக அன்பு வடிவமாக வந்து வழிகாட்ட வேண்டும் என்று வணங்குவோம்
கடவுளிலே கருணை தனை காணலாம்
அந்த கருணையிலே கடவுளயும் காணலாம்
நல்ல மனசாட்சியே தேவன் அரசாட்சியம்
அங்கு ஒருபோதும் மறையாது அவன் சாட்சியாம்
பாவம் என்ற கல்லறைக்கு பலவழி
என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி
இந்த வழி ஒன்று தான் எங்கள் வழியென்று நாம்
நேர்மை ஒருநாளும் தவறாமல் நடை போடுவோம்
இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்
அந்த ஒளி காணலாம் சொன்ன வழிபோகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்
VELLAI ILLA PATTADHAI - SONG - AYE INGE PAARU SONG SEQUENCE - THALAIVAR DVD'S
http://i62.tinypic.com/2z9bh51.jpg
http://i58.tinypic.com/2qdzg53.jpg
http://i61.tinypic.com/2eoxu2c.jpg
சென்னை மாநகரில், மக்கள் திலகத்தின் "மாட்டுக்கார வேலன்" நிகழ்த்திய மகத்தான மறு வெளியீட்டு சாதனை :
http://i62.tinypic.com/fd4vsx.jpg
03-04-1981 சென்னை பிளாசா (தினசர் 4 காட்சிகள்), சரவணா (தினசர் 4 காட்சிகள்) மற்றும் ராம் (தினசரி 3 காட்சிகள்) ஆகிய அரங்குகளில் வெளியாகி முறையே 28, 28 மற்றும் 21 காட்சிகள் (அனைத்து காட்சிகள்) அரங்கு நிறைந்தன. ஆனால், திரையரங்க நிர்வாகத்திடம் முன்னரே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி
22-05-1981ல் சென்னை ஸ்ரீனிவாசா அரங்கில் (தினசர் 3 காட்சிகள்) மாற்றப்பட்டது.
29-05-1981 அன்று செலக்ட் அரங்கில், தினசரி 4 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.
12-06-1981 அன்று சயானி அரங்கில் (தினசரி 3 காட்சிகள்) வெளியிடப்பட்டது.
03-07-1981 முதல், குளிர் சாதன வசதியுள்ள தமிழ்நாடு அரங்கில் தினசரி 4 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.
24-01-1981 அன்று குளிர் சாதன வசதி கொண்ட அசோக் அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.
31-08-1981 அன்று கபாலி அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.
02-10-1981 அன்று சன் அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.
09-10-1981 முதல் குளிர் சாதன வசதியுள்ள முரளிகிருஷ்ணா அரங்கில் தினசரி 4 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.
16-10-1981 முதல் சரஸ்வதி அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.
30-10-1981 முதல் தங்கம் அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் வெளியிடப்பட்டது.
13-11-1981 முதல் வீனஸ் அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் வெளியிடப்பட்டது.
27-11-1981 முதல் பிரைட்டன் அரங்கில் தினசரி 4 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.
18-12-1981 முதல் ஈராஸ் அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் வெளியிடப்பட்டது.
25-12-1981 முதல் பிராட்வே அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் வெளியானது.
சற்று குறுகிய கால இடைவெளிக்குப்பின், மீண்டும்
05-02-1982 முதல் சென்னை பத்மநாபா அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது
26-02-1982 முதல் பழனியப்பா அரங்கில், தினசரி 3 காட்சிகளுடன் வெளியானது.
சிறிது இடைவெளியில், மீண்டும் -
21-05-1982 சித்ரா ஆரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் வெளியாகி மொத்தம் 21 காட்சிகள் வெற்றிகரமாக ஓடியது. அதில் 19 காட்சிகள் அரங்கு நிறைந்தன. நிர்வாகத்துடன் முன்னரே செய்து கொண்ட ஒப்பந்தப்படி திரைப்படத்தை தொடர முடிய வில்லை.
11-06-1982 முதல் காமதேனு அரங்கில் மாற்றப்பட்டது.
30-07-1982 முதல் ஸ்ரீ முருகள் அரங்கில் வெளியிடப்பட்டது.
13-08-1982 முதல் ஜெயராஜ் அரங்கில் திரையிடப்பட்டது.
1981 ஏப்ரல் மாதம் தொடங்கி 1982 ஆகஸ்ட் மாதம் வரை, இந்த வெற்றிக்காவியம் சென்னை நகரை ஒரு கலக்கு கலக்கி வெற்றிகரமாக வலம் வந்தது.
அடுத்து தொடர்வது, உலகின் 8வது அதிசயம் புரட்சித் தலைவரின் "அடிமைப்பெண்" காவிய சாதனை.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i1170.photobucket.com/albums/...ps3c2eb826.jpg
தலைவரின் திரைப்படங்கள் விநியோகஸ்தர்களுக்கு கிடைத்த தங்க புதையல்
http://i57.tinypic.com/xpxans.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Indian Movie News, Tmt. Sheela, Johor Bahru, Malaysia
http://i61.tinypic.com/2vrxum1.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Indian Movie News, Tmt. Sheela, Johor Bahru, Malaysia
http://i58.tinypic.com/20kagit.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Indian Movie News, Tmt. Sheela, Johor Bahru, Malaysia
தாய்க்குலத்தின் மீதும் பெற்ற தாயின் மீதும் அளவற்ற பாசம் கொண்டவர் பொன்மனச்செம்மல் என அனைவரும் அறிந்ததே. தன்னுடன் நடிக்கும் சக நடிகர்கள் மட்டுமல்லாது மற்றவர்களின் தாயாரை தன்னுடைய தாயாக நினைத்து அவர்களிடம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவர் புரட்சித்தலைவர். திருமதி சரோஜா தேவியின் தாயாருடன் ஒரு புகைப்படம்.
http://i61.tinypic.com/8yvvo6.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Indian Movie News, Tmt. Sheela, Johor Bahru, Malaysia
விடுதலைப்புலிகளும் எம்ஜிஆரும்...,
இக்கட்டுரை நான் 2007 மார்ச் மாதம் என்னுடைய "ஈழம் வெல்லும்" என்கிற பிளாக்ஸ்பாட் பகுதியில் எழுதியதாகும்.
காலத்தின் தேவைக்கருதியும், எம்ஜிஆர் தமிழீழப்போராட்டத்திற்க்கு செய்த அளப்பறிய வரலாற்று சான்றுகளை தெரிந்து கொள்ளாதும் சிலர் அவரை பற்றி சமீபத்தில் உளறி கொண்டிருப்பதை மனதில் வைத்து, அவர்களுக்காக இந்த பதிவு...,
இக்கட்டுரை தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய "விடுதலை" என்னும் கட்டுரைத் தொகுப்பு நூலில் இருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகளை உள்ளடக்கியதாகும்..,
------------------------------------
விடுதலைப்புலிகள் தலைமை தாங்கி முன்னெடுத்து வரும் தமிழீழ சுதந்திர இயக்கத்திற்கு எம்.ஜி.ஆர். அவர்கள் நல்கிய உதவி அளப்பரியது. எல்லாவற்றையுமே முழுமையாக இங்கு ஆவணப்படுத்த முடியாதபோதும், ஒரு சில முக்கிய சம்பவங்களையாவது பதிவு செய்வது வரலாற்று ரீதியாகப் பயன்படும் எனக் கருதுகிறேன். இப்பொழுது தமிழ் நாட்டில் விடுதலைப் புலிகள் என்ற சொல்லை உச்சரிப்பதே சட்ட விரோதமான ஒரு குற்றச் செயலாகக் கருதப்படுகிறது. எம்.ஜி.ஆர். அவர்கள் வளர்த்து விட்ட அ.தி.மு.க. கட்சியும், அதன் தலைமையும் இன்று விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தி நிற்கின்றன. ஆனால் அன்று எம்.ஜி.ஆர். அவர்கள் ஈழ மக்களின் விடுதலைக்காக மிகவும் துணிச்சலான காரியங்களைப் புரிந்து எமக்கு கை கொடுத்து உதவியிருக்கிறார்.ஒரு தடவை சென்னைத் துறைமுகம் ஊடாக ஆயுதங்களை தருவிக்க முயன்றோம். எமக்கான நவீன ஆயுதங்கள் அடங்கிய கொள்கலனுடன் வெளி நாட்டுக் கப்பல் ஒன்று சென்னைத் துறைமுகம் வந்தடைந்தது. துறைமுகம் ஊடாக ஆயுதக் கொள்கலனை வெளியே எடுக்க நாம் செய்த பகீரத முயற்சிகள் பயனளிக்கவில்லை. சரியாக ஒரு மாதத்திற்கு முன்புதான் உமா மகேஸ்வரன் ஒழுங்கு செய்த ஆயுதக் கப்பல் ஒன்று இந்தியப் புலனாய்வுத் துறையினரால் கைபற்றப்பட்டது. பல கோடி பெருமதியான ஆயுதங்களை புளொட் இயக்கம் இழக்க நேரிட்டது. புலிகளுக்கும் இந்தக் கதி நேரக் கூடாதென விரும்பினோம். ஆயுதங்களை பறி கொடுக்காமல் வெளியே எடுப்பதற்கு எம்.ஜி.ஆரின் உதவியை நாடுவதே ஒரேயொரு வழியாக எனக்குத் தென்பட்டது. பிரபாகரனும் நானும், எம்.ஜி.ஆரிடம் சென்றோம். நிலைமையை எடுத்து விளக்கினோம்.“நீங்கள் கொடுத்த பணத்தில் இந்த ஆயுதங்களை வாங்கியிருக்கிறோம். சென்னைத் துறைமுகத்தில் ஒரு கப்பலில், ஒரு கொள்கலனுக்குள் இந்த ஆயுதங்கள் இருக்கின்றன. எப்படியாவது அதனை வெளியே எடுத்துத் தர வேண்டும். நீங்கள் மனம் வைத்தால் முடியும்” என்று கேட்டோம். எதுவித தயக்கமோ, பதட்டமோ அவரிடம் காணப்படவில்லை. “இதுதானா பிரச்சினை? செய்து முடிக்கலாம்” என்று கூறிவிட்டு, துறைமுக சுங்க மேலதிகாரிகளுடன் தொலைபேசியில் கதைத்தார். பின்பு எம்மிடம், ஒரு சுங்க அதிகாரியின் பெயரைக் குறித்துத் தந்து, அவரைச் சந்தித்தால் காரியம் சாத்தியமாகும் என்றார் முதலமைச்சர். அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு நாம் மகிழ்வுடன் வீடு திரும்பினோம்.சென்னைத் துறைமுகத்திலிருந்து ஆயுதக் கொள்கலனை மீட்டு வரும் பொறுப்பை கேணல் சங்கரிடம் கையளித்தார் பிரபாகரன். ஒரு சில தினங்களுக்குப் பின்னர் ஒரு நாள் இரவு தமிழ்நாட்டுக் காவல்துறையினரின் பாதுகாப்புடன் பாரம் தூக்கி பொருத்திய கனரக வாகனத்தில் எமது ஆயுதக் கொள்கலன் சென்னை நகரம் ஊடாகப் பவனி வந்து நாம் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இறக்கப்பட்டது. அதில் ஒரு தொகுதி ஆயுதங்கள் திருவான்மியூரில் நாம் வசித்த வீட்டில் குவிக்கப்பட்டன. ஏவுகணைகள், தானியங்கித் துப்பாக்கிகள், ரவைப் பெட்டிகள், கைக்குண்டுகளாக வீடு நிறைந்திருந்தது. அவை வீட்டிலிருந்து அகற்றப்படும் வரை என்னால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை.எந்தப் பிரச்சினையுமின்றி பாதுகாப்பாக ஆயுதங்களாகப் பெற்றுத் தந்ததற்காக எம்.ஜி.ஆருக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார் பிரபாகரன். அந்தப் பேருதவியின் நினைவுச் சின்னமாக இறக்கப்பட்ட ஆயுதங்களிலிருந்து ஒரு புதிய ஏ.கே.47 ரக தானியங்கித்துப் பாக்கியை எம்.ஜி.ஆரிடம் கையளித்தார் பிரபா. அந்தத் துப்பாக்கியை கழற்றிப் பூட்டி அதன் செயற்பாட்டு இயக்கத்தையும் விளங்கப்படுத்தினார். எம்.ஜி.ஆருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.இந்தச் சம்பவம் நிகழ்ந்து நீண்டகால இடைவெளியின் பின்னர் ஒரு தடவை சுகவீனமுற்றிருந்த முதலமைச்சரை நான் சந்திக்கச் சென்றேன். பிரபாகரனை சுகம் விசாரித்தார். தமிழீழத்தில் சௌக்கியமாக இருக்கிறார் என்றேன். அப்பொழுது தனது படுக்கையில் தலையணிகளின் கீழ் வைக்கப்பட்டிருந்த ஒரு ஏ.கே.47 துப்பாக்கியை எடுத்துக் காண்பித்து, “இது பிரபாகரன் தந்த நினைவுப் பரிசு” என்று பெருமிதத்துடன் சொன்னார்.எமக்கு தேவை ஏற்பட்ட வேளைகளில் எம்.ஜி.ஆர். அளித்த நிதி உதவிகளை ஆதாரமாகக் கொண்டே இயக்கம் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு தடவை எமக்கு பெருமளவில் நிதி தேவைப்பட்டது. தலைவர் பிரபாகரன் அவர்கள் என்னை எம்.ஜி.ஆரிடம் தூது அனுப்பினார். நான் எம்.ஜி.ஆரை சந்தித்த பொழுது முதல்வருடன் அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரனும் இருந்தார்.“இராணுவ - அரசியல் ரீதியாக எமது விடுதலை இயக்கம் பெருமளவில் வளர்ச்சி கண்டுவிட்டது. பல்வேறு வேலைத் திட்டங்களை நிறைவு செய்ய வேண்டி இருக்கிறது. இம்முறை பெரிய தொகையில் பணம் தேவைப்படுகிறது. தம்பி பிரபாகரன் உங்களைத் தான் நம்பியிருக்கிறார்” என்றேன்.“பெரிய தொகையா? எவ்வளவு தேவைப்படுகிறது?” என்றார் முதல்வர்.“ஐந்து கோடி வரை தேவைப்படுகிறது” என்றேன்.எம்.ஜி.ஆர். அவர்கள் திரு. பண்ருட்டி இராமச்சந்திரனைப் பார்த்து, “மாநில அரசு மூலமாக ஏதாவது செய்யலாமா?” என்று கேட்டார்.அமைச்சர் சில வினாடிகள் வரை சிந்தித்து விட்டு, “போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்து மக்களுக்கென தமிழ்நாட்டு அரசால் திரட்டப்பட்ட நிதி இருக்கிறது. நான்கு கோடிக்கு மேல் வரும். அந்த நிதியை இவர்களுக்குக் கொடுக்கலாமே? ஈழ மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு இந்நிதி வழங்கப்படுவதில் தப்பில்லை அல்லவா?” என்றார்.“அப்படியே செய்யுங்கள். இந்த விசயத்தை உங்கள் பொறுப்பில் விடுகிறேன்” என்றார் எம்.ஜி.ஆர்.இதனையடுத்து அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரன் அவர்களின் இல்லத் திற்கு இரவு பகலாக அலைய வேண்டியிருந்தது. “தமிழ்நாட்டு அரசின் பொறுப்பிலுள்ள நிதி என்பதால், ஒழுங்கான முறையில் செய்ய வேண்டும். வேலைத் திட்டம் ஒன்று தயாரித்துத் தாருங்கள். இத் திட்டம் நான்கு கோடி ரூபா வரையிலான செலவீனங்களைக் கொண்டிருக்க வேண்டும்” என்றார் அமைச்சர். அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஒரு மருத்துவமனை நிர்மாணத்திற்கான வேலைத் திட்டத்தைத் தயாரித்து அமைச்சரிடம் கையளித்தேன். இறுதியாக ஒரு அரச செயலகத்தில் வைத்து நான்கு கோடி ரூபாவுக்கான காசோலை எனக்கு கையளிக்கப்பட்டது.இந்த நிதி விவகாரத்தில் அரச அதிகாரிகள் பலர் ஈடுபட்டதால், தமிழ்நாட்டு ஊடகங்களுக்கு செய்தி கசிந்து விட்டது. மறுநாள் காலை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கிலப் பத்திரிகையின் தலைப்புச் செய்தியாக இவ் விவகாரமும் அம்பலமாகியது. அது ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு தமிழ்நாட்டு அரசு நிதியுதவி செய்வதாகவும், தமிழக முதலமைச்சர் இலங்கையின் இறைமையை மீறுவதாகவும், ஜனாதிபதி ஜெயவர்த்தனா இந்தியப் பிரதமர் திரு.ராஜீவ் காந்தியிடம் கடுமையாக ஆட்பேசம் தெரிவித்தார். ராஜீவ் காந்தி உடனடியாகவே எம்.ஜி.ஆரிடம் தொடர்பு கொண்டு தமது ஆட்சேபத்தைத் தெரிவித்தார்.அன்று மாலை தன்னை அவசரமாக சந்திக்குமாறு எம்.ஜி.ஆர். எனக்கு அழைப்பு விடுத்தார். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கவலையோடு நான் முதலமைச்சரின் இல்லத்திற்குச் சென்றேன். அங்கு முதல்வருடன் அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரன் இருந்தார்.ஆத்திரத்துடன் காணப்பட்டார் எம்.ஜி.ஆர். ஜெயவர்த்தனா ராஜீவிற்கு முறையிட்டதையும், ராஜீவ் தனக்கு ஆட்சேபணை தெரிவித்ததையும் விவரமாகச் சொன்னார். சிங்கள வெறியன் என்றும், ஈழத் தமிழர்களுக்கு கொடுமை இழைப்பவன் என்றும் முதலில் ஜெயவர்த்தனாவைத் திட்டித் தீர்த்தார். ராஜீவையும் விட்டு வைக்கவில்லை. துணிவில்லாதவர் என்றும், பயந்த பேர்வழி என்றும் ராஜீவிற்கும் திட்டு விழுந்தது. “ஈழத் தமிழர்களுக்கு திரட்டிய நிதியை அந்த மக்களின் உரிமைக்காகப் போராடும் விடுதலை இயக்கத்திற்கு கொடுப்பதில் என்ன தவறு? இதனை பிரதம மந்திரி புரிந்து கொள்ளவில்லையே” என்று ஆதங்கப்பட்டார் முதல்வர்.“அந்தக் காசோலையை வைத்திருக்கிறீர்களா? வங்கியில் போடவில்லை அல்லவா?” என்று கேட்டார்.“அந்தக் காசோலை என்னிடம் தான் இருக்கிறது” என்றேன். அதனை அமைச்சரிடம் திருப்பிக் கொடுக்கும்படி சொன்னார்.“நாளை இரவு வீட்டுக்கு வாருங்கள். எனது சொந்தப் பணத்திலிருந்து நான்கு கோடி தருகிறேன்” என்றார். போன உயிர் திரும்பி வந்தது போல இருந்தது. ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் எம்.ஜி.ஆருக்கும், அமைச்சர் பண்ருட்டிக்கும் நன்றி சொல்லி விட்டு புறப்பட்டேன். வீடு திரும்பியதும், நடந்ததை எல்லாம் பிரபாகரனுக்கு எடுத்துச் சொன்னேன். முதல்வரின் பெருந்தன்மையைப் பாராட்டினார் பிரபாகரன். மறுநாள் இரவு எம்.ஜி.ஆரின் பாதாளப் பண அறையிலிருந்து நான்கு கோடி ரூபாய் புலிகளின் கைக்குக் கிட்டியது.விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் தமிழ்நாட்டு அரசுக்கும் மத்தியில் நல்லுறவு நிலவியது. எமது இயக்கத்தின் மீதும் தலைவர் பிரபாகரன் மீதும் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் கொண்டிருந்த அன்பும் மதிப்புமே இந்த நல்லுறவுக்கு ஆதாரமாக விளங்கியது.
courtesy net
கேரளத்தில் ஒத்தப்பாலம் என்ற மாகாணத்தில் உள்ள ஊர் நல்லேபள்ளி.அந்த ஊரில் அனைவரும் பொதுவாகப் பயன்படுத்துவதற்காக ஒரு குளம் உண்டு.அதில் குளிக்கப் போவதென்றால் நம்பூதிரிகள் என்று அழைக்கப்படும் அந்தணர்களின் வீடுகள் அமைந்திருக்கும் தெருவைத் தாண்டித் தான் செல்ல வேண்டும்.தாழ்த்தப்பட்ட மக்கள் அவ்வழியே செல்லும் போது தங்களின் மேலாடைகளைக் கழற்றி இடுப்பில் சுற்றிக்கொண்டு தான் செல்ல வேண்டும்.ஒரு நாள் அவ் வழியே சென்று கொண்டிருந்தாள் ஒரு அரிசனப் பெண்.அப்போது அங்கே வந்த கொழுப்பேறிய நம்பூதிரி ஒருவன் அவள் முன்னால் வந்து தனது வேட்டியை ஒரு புறமாக அவிழ்த்து ஆபாசமாக உடலசைவுகள் செய்தபடி வம்பு செய்ய ஆரம்பித்தான்.அந்த நேரத்தில் அங்கே வந்து நின்றது ஒரு கார். அதிலிருந்து இறங்கினார் ஒரு பெரிய மனிதர். தன் காரில் இருந்து சவுக்கு ஒன்றை எடுத்தார்.சிறிது நேரத்தில் அந்த நம்பூதிரியின் பின்புறம் செதில் செதிலாகப் பிய்ந்து போயிருந்தது.தப்பித்தால் போதுமென்று அவன் ஓடி மறைந்த கதை நீண்ட நாட்களுக்கு நல்லேபள்ளி அரிசனக் காலனியில் பிரபலம்.அந்த மனிதர் வேறு யாருமல்ல. எம்.ஜி.ஆரின் தந்தை கோபாலமேனன் தான்.1974 ம் ஆண்டு வெளியான "உரிமைக்குரல்" திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் அறிமுகக் காட்சி கிட்டத்தட்ட இதுவே தான்.குளத்தில் தண்ணீர் பிடிக்கச் செல்லும் அரிசனப் பெண்ணை வில்லன் நம்பியாரின் ஆட்கள் வம்பு செய்வார்கள். அப்போது அங்கு வரும் எம்.ஜி.ஆர் தனது குதிரைச் சவுக்கால் அவர்களை விளாசி எறிந்து விடுவார்.தமிழ் சினிமாவின் பிரபலமான எம்.ஜி.ஆர் பார்முலாவின் இந்தக் கூறு அவர் தந்தையிடம் இருந்தே வந்தது. எம்.ஜி.ஆரின் இரத்தத்திலேயே இருந்தது.
எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர்.
புரட்சிதலைவர் எம்ஜிஆர் ஒரு முறை அமெரிக்கா வில் நெடுஞ்சாலையில் பயணம் செய்து கொண்டு இருக்கின்றார், வழியில் ஒரு சாலை விபத்தில் கார் ஒன்று அடிபட்டு கிடக்கின்றது .உடனே தன் காரை நிறுத்தச்சொல்லி காரில் அடிபட்டு கிடந்தவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் .
எம்ஜிஆருடன் இருந்தவர்கள் எவ்வளவோ சொல்லியும் பிடிவாதமாக அடிபட்டவருக்கு உதவி செய்து விட்டுதான் அடுத்த நிகழ்ச்சிக்கு மிகவும் தாமதமாக சென்று உள்ளார் .
அந்த விழாவில் தாமதமாக வந்ததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு நடந்த சம்பவத்தை விவரித்து சொல்லி இருக்கின்றார் .அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது .
தொடர்ந்து பேசிய தலைவர் ஒரு விபத்து நடந்துவிட்டது யாரும் உதவிக்கு வரவில்லை சாலையில் சென்ற கார்கள் எல்லாம் நிற்காமல் விரைகின்றன.
ஆனால் இப்படி ஒரு விபத்து நடந்தால், தங்கள் உறவினர்கள் நண்பர்கள் அடிபட்டுக் கிடப்பதுபோல் நினைத்து ஓடோடி வந்து உதவி செய்யக்கூடிய மனிதாபிமானம் உள்ளவர்கள் .உலகிலேயே எங்கள் தமிழ்நாட்டினர்தான், என்று பெருமையோடு தெரிவித்துகொள்கின்றேன் என்று பேசியபொழுது அரங்கமே எழுந்து நின்று எழுப்பிய கரவோசை அடங்க வெகுநேரமானது .
http://i62.tinypic.com/14dljit.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i61.tinypic.com/30rp2jm.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i59.tinypic.com/2yjsuwk.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i61.tinypic.com/2002t8n.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i62.tinypic.com/2w50djo.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i58.tinypic.com/241wm13.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i62.tinypic.com/2l6p7l.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
OUR GOLD IS EVER GOLD AND NEVER TOLD..'NO'
http://i58.tinypic.com/2jg2nw1.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்