மக்கள் திலகத்தின் ''தொழிலாளி '' 1964 நேற்று ஒரே நாளில் வசந்த் , ஜெயா , 7s மியூசிக் மூன்று தொலைக்காட்சிகளில் ஒளி பரப்பானது .
இனிய நண்பர் திரு செல்வகுமார் பதிவிட்ட அடிமைப்பெண் -கட்டுரை அருமை .
Printable View
மக்கள் திலகத்தின் ''தொழிலாளி '' 1964 நேற்று ஒரே நாளில் வசந்த் , ஜெயா , 7s மியூசிக் மூன்று தொலைக்காட்சிகளில் ஒளி பரப்பானது .
இனிய நண்பர் திரு செல்வகுமார் பதிவிட்ட அடிமைப்பெண் -கட்டுரை அருமை .
"நாடோடி மன்னன்' திரைப்படத் தயாரிப்புக்குப் பிறகு மிகுந்த பொருள் செலவில் எடுக்கப்பட்ட தனது இரண்டாவது திரைப்படமான "அடிமைப்பெண்' படத்தின் கலைஞர்களுக்கு, தயாரிப்பாளர் என்ற வகையில் எம்.ஜி.ஆர் மேற்கொண்ட செலவுகளையும், சிறப்பான பணிகளையும் யாரும் மறக்க இயலாது. ஒரு தயாரிப்பாளர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார் எம்.ஜி.ஆர்.
இத் திரைப்படம்÷எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் ஒரு மைல்கல் என்பது நிதர்சனமான உண்மை. படம் மிகச் சிறப்பாக அமைய வேண்டும் என்பதிலும் பாடல்களும் சண்டைக் காட்சிகளும் மிகச் சிறப்பாக அமைய வேண்டும் என்பதிலும் எம்.ஜி.ஆர் மிகுந்த ஆர்வம் காட்டினார். அதற்காகச் செலவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் பணத்தைத் தண்ணீராகச் செலவழித்தார். படத்தில் ஒரு புதுமையைப் புகுத்த எண்ணி ராஜஸ்தானின் பாலைவனப் பகுதியில் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்தார்.
""மிகவும் கடினமான முயற்சி, தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும், மிகுந்த சிரமங்கள் ஏற்படலாம்'' என்று எம்.ஜி.ஆரது அண்ணன் சக்ரபாணியும், இயக்குநர் கே.சங்கரும் எம்.ஜி.ஆரிடம் எடுத்துக்கூறியும், எம்.ஜி.ஆர் கேட்கவில்லை. தான் எடுத்த காரியத்தை முடித்தே தீருவது என்று பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் உறுதியுடன் இருந்தார் எம்ஜிஆர். அதன்படி இந்தியா-பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள பாலைவனத்துக்குப் படப்பிடிப்புக்குழு சென்றது.
இந்தப் பாலைவனப் பகுதியில் படப்பிடிப்பு நடத்த இயலாதவாறு குறைகள் அதிகம் இருந்ததேயொழிய நிறைகள் அதிகம் காணப்படவில்லை. காரணம் தங்குவதற்கு வசதியான இடங்களோ சாப்பிட நல்ல உணவகங்களோ இல்லை. மனிதனின் அத்தியாவசியத் தேவையான தண்ணீர்கூடத் தேவைக்குக் கிடைக்காத இடம். வெப்பத்தைப் பற்றிக் கூறவே வேண்டாம். அந்த அளவுக்குக் கடுமையான வெப்பம். படப்பிடிப்புக்குச் சற்றும் பொருந்தாத இடத்தைத் தேர்வு செய்தார் எம்ஜிஆர்.
இங்கு வந்த படப்பிடிப்புக் குழுவினர் அனைவருக்கும் வயிறு கலங்கியது என்பது உண்மையே. எவ்வாறு படப்பிடிப்பைச் சிரமம் இன்றி நடத்தி முடித்துத் திரும்பிச் செல்வோம் என்ற பயம் அனைவரையும் பிடித்துக் கொண்டது.
அனைவரது எண்ண ஓட்டங்களுக்கும் மாறாக அமைந்தன. எம்.ஜி.ஆரது செயற்கரிய செயல்கள். அனைவரது அதிருப்தியும் எம்.ஜி.ஆருக்கு மிகச் சவாலாக அமைந்த போதும், அவற்றை இன் முகத்துடன் ஏற்றுக்கொண்டு யாருக்கும் சற்றும் சிரமமோ, முகச் சுழிப்போ ஏற்படாதவாறு மிகச் சிறப்பாகக் கவனித்துக் கொண்டார். குறிப்பாக தண்ணீர் இங்கு அதிகமாக கிடைக்காத காரணத்தால் முதலில் செய்தது அங்கிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து லாரிகளில் ஏராளமான கொ கொ கோலா, போன்ற குளிர்பானங்களை வரவழைத்தது. தேவைக்கு அதிகமாகவே அவை தருவிக்கப்பட்டன. கூடவே ஐஸ்சும்.
மற்றொரு பிரச்னையும் அங்கு ஏற்பட்டது. இரவு நேரங்களில் அங்குள்ள மணல் பரப்பில் கைவிரல்கள் அளவுள்ள சிறிய பாலைவனப் பாம்புகள் உள்ளிருந்து வெளியே வரும் என்றும், அவை விஷம் வாய்ந்தவை என்றும்,அங்கிருந்தவர்கள் கூறினார்கள். உடனே எம்.ஜி.ஆர் படப்பிடிப்பு நடைபெறும் வரையிலான பகுதிக்கு மணலில் மேற்பரப்பில் பாம்புகள் வெளிவராத வகையில் உடனடியாக மிக கனமான தரை விரிப்புகளை வரவழைத்து அதை விரித்து அவற்றின் தொந்தரவு இல்லாதவாறு பார்த்துக் கொண் டார்.
அதேபோல் மொத்த யூனிட்டுக்குமே நம் ஊர் சாப்பாடு தயாரித்து வழங்கியாக வேண்டும். எத்தனை நாள்தான் சப்பாத்தி மட்டுமே சாப்பிட்டு அங்கே படிப்பிடிப்பில் இருப்பது? இதற்காகவே ஓர் ஊரில் சமையல் செய்ய கேண்டீன் நிறுவினார். அங்கிருந்து நேரா நேரத்திற்கு வண்டிகளில் எல்லோருக்கும் டிபன், சாப்பாடு, நொறுக்குத்தீனி எல்லாமே வரவழைத்தார். இதற்காக அந்த ஊர்க்காரர்களையே வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு உணவும், ஊதியமும், அவர்களது எதிர்ப்பார்ப்புக்கு அதிகமாகவே வழங்கினார்.
அங்குள்ளவர்களுக்கு இந்தி மட்டுமே தெரியும். எம்.ஜி.ஆருக்கும் ஓரளவு இந்தி புரியும். தமிழ், இந்தி பேசும் ஓரிருவர் எம்.ஜி.ஆருக்கு உதவியாக இருந்தனர். படப்பிடிப்புக்குச் சுமார் 300 - க்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் தேவைப்பட்டன. அவற்றிற்கு தினமும் 500- ரூபாய் வாடகை நிர்ணயிக்கப்பட்டதோடு அல்லாமல் அதன் மீது சவாரி செய்யும் நபர்களுக்கும் தினசரி சம்பளம், சாப்பாடு வழங்கப்பட்டது. இதுவரை சினிமாவைப் பற்றியே தெரியாத இவர்களைக் கொண்டு படப்பிடிப்பு நடத்துவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. பொறுமையுடன் கோபம் கொள்ளாமல் அவர்களுக்குப் புரியும் வகையில் சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்தனர் எம்.ஜி.ஆரும் இயக்குனர் சங்கரும்.
இப்படத்தின் ஆரம்பக் காட்சியில் இடம்பெற்ற சண்டை, மிகவும் புதுமையானது. அதாவது ஈட்டிகள் வரிசையாக அமைக்கப்பட்டு அதன் மீது வலை கட்டப்பட்டு, அந்த வலை மீது ஒற்றைக்காலுடன் எம்.ஜி.ஆரும், அசோகனும், மோதும் வாள்சண்டை மிக பிரமாதமாக அமைந்தது. முதலில் தரைத் தளத்திலேயே அமைக்கலாம் என்ற இயக்குனர் சங்கரின் யோசனையை ஏற்காத எம்.ஜி.ஆர்., தான் விரும்பியவாறு ஒரு புதுமையான சண்டை காட்சி அமைக்க வேண்டும் என்று நினைத்து அதன்படி அவரே அமைத்த சண்டைக் காட்சி அது.
இந்தச் சண்டைக் காட்சியின் ஒரு கட்டத்தில் காலில் எம்.ஜி.ஆருக்கு அடி ஏற்பட்டு பிளாஸ்டர் போடப்பட்டு சுமார் 2 மணி நேரம் கழித்து மீண்டும் முழு உத்வேகத்தோடு சண்டைக் காட்சிகளில் நடித்தார். இந்தப் படப்பிடிப்பில் வேறு யாருக்கும் கிடைத்திராத ஒரு சிறப்பு எம்.ஜி.ஆருக்குக் கிடைத்தது. அதுவரை ஜெய்ப்பூர் அரண்மனையின் சில பகுதிகளில் யாருக்கும் அனுமதி தரப்படுவதில்லை. ஆனால் அந்த இடங்களில்கூடப் படப்பிடிப்பை நடத்த எம்.ஜி.ஆருக்கு விஷேச அனுமதியை வழங்கினார்கள்.
ஜெய்ப்பூர் அரண்மனையின் ஆறாவது மாடியில் மன்னனின் படுக்கை அறை உள்ளது. முதலில் அங்கு பார்வை இடச் சென்ற எம்.ஜி.ஆருக்கு அந்த அறை மிகவும் பிடித்துப்போனது. இயக்குனர் சங்கர் எம்.ஜி.ஆரிடம், "இங்கு சில காட்சிகளை எடுத்தால் நன்றாக இருக்கும், ஆனால் செலவு அதிகமாகும்' என்றார். "என்ன செலவு?' என்று எம்.ஜி.ஆர். கேட்டார். "அதாவது தரையில் விரிக்கப்பட்டுள்ள கார்பெட்டுக்குப் பதிலாக சன்மைக்கா போன்ற பளபளக்கும் விரிப்புகள் அமைத்தால் பாடல் காட்சிகளின் மெருகு ஏறும்' என்றார். உடனே எம்.ஜி.ஆர். "செலவு பற்றி கவலை வேண்டாம்' என்று கூறியதுடன், உடனடியாக உயர்தர சன்மைக்கா கிடைக்க டெல்லிக்கு ஒரு ஆளை அனுப்பி வைத்தார். விதவிதமான சன்மைக்காக்களை வரவழைத்துவிட்டார். இதன் மதிப்பு அப்போதே சுமார் 50 ஆயிரம் என்று கணக்கிடப்பட்டது. "ஆயிரம் நிலவே வா' பாடல் காட்சிகளில் பெரும்பாலானவற்றை அங்கு எடுத்தார்.
அந்த அரண்மனைக்கு உள்ளேயே தனது ஆலோசனைப்படி ஒரு அரண்மனை போன்ற அரங்கை அமைக்கும்படி ஆர்ட் டைரக்டர் அங்கமுத்துவைப் பணித்தார். அவ்வாறு ஒரு புதுமையான செட் போடப்பட்டு அப்பாடலின் மீதக் காட்சிகளும், மற்ற சில காட்சிகளும் அங்கு எடுக்கப்பட்டன. இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாகப் படப்பிடிப்பிற்கு ஜெய்ப்பூர் சென்றவுடனேயே எம்.ஜி.ஆர். செய்த முதல் நல்ல காரியம் ராஜஸ்தான் வறட்சி நிதிக்காக ரூ.50 ஆயிரம் நிதியை வழங்கியதுதான். இது அங்கு அவருக்கு மிகப் பெரிய பாராட்டை ஏற்படுத்தியது மட்டுமின்றி ஜெய்ப்பூரில் எங்கு வேண்டுமென்றாலும் படப்பிடிப்பு நடத்தலாம் என்ற நிலையையும் உருவாக்கியது.
இப்படத்தின் பெரும்பான்மையான எடிட்டிங் மேற்பார்வையை எம்.ஜி.ஆரே மேற்கொண்டதும், இப்படத்தின் சிறப்பு அம்சம். எடிட்டிங் கலையில் எம்.ஜி.ஆர் மிகச் சிறந்த நிபுணரும்கூட. படப்பிடிப்பின் இறுதி நாளில் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் ஏராளமான அன்பளிப்புகளை அள்ளிக் கொடுத்து மகிழ்ந்தார் எம்.ஜி.ஆர்.
இப்படத்தின் நாயகி ஜெயலலிதாவிற்கு இரட்டை வேடம். இப்படத்தில் அவர் ஒரு பாடலைப் பாட வேண்டும் என்று விரும்பினார், எம்.ஜி.ஆர். இதை ஜெயலலிதாவிடம் எம்.ஜி.ஆர் தெரிவித்தபோது அவர் முதலில் மறுப்பு தெரிவித்தார். எம்.ஜி.ஆர் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனை அழைத்துப் பேசி டியூன் தயார் செய்யும்படி கூறினார். கவிஞர் வாலியிடம் பாடல் எழுதும்படி பணித்தார். பின்னர் கே.வி.மகாதேவனும், எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவைச் சம்மதிக்க வைத்தனர். ஜெயலலிதாவின் அந்தப் பாடல் மிகச் சிறப்பாக அமைந்து அனைவரும் பாராட்டும்படி ஆனது. ""அம்மா என்றால் அன்பு'' என்ற பாடல்தான் அது. அதேபோல் எல்லாப் பாடல்களும் சிறப்பாக அமைய வேண்டும் என்று விரும்பிய எம்.ஜி.ஆர்., கே.வி.மகாதேவனிடம் "செலவு பற்றி கவலை கொள்ளாதீர்கள், எத்தனை வாத்தியக் கருவிகள் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளுங்கள். எனக்குப் பாடல்கள் சிறப்பாக அமைய வேண்டும்,அவ்வளவே' என்று கேட்டுக்கொண்டதுடன், அவருக்கு முழு சுதந்திரமும் ஒத்துழைப்பும் கொடுத்தார்.
ராஜஸ்தானில் படப்பிடிப்பு நடைபெற்றபோது அனைவருக்கும் தண்ணீர் விநியோகம் செய்ய ஒரு வட நாட்டு வாலிபனை நியமித்தார் எம்.ஜி.ஆர். அவ்வாறே அவ்வாலிபனும் தனது குதிரை வண்டியில் (அவரது பெயர் நினைவில்லை) வெகுதூரம் சென்று தண்ணீர் கொண்டு வந்து அனைவரது தேவைகளையும் பூர்த்தி செய்தார். அவ்வாலிபனின் சுறுசுறுப்பையும், நேர்மையையும் கண்டு வியந்த எம்.ஜி.ஆர். படப்பிடிப்பு முடியும் தருவாயில் அவரை அழைத்துப் பாராட்டியதோடு ரூ.10 ஆயிரம் பரிசாக அளித்தார்.
Courtesy- net
இந்த சம்பவத்துக்கு பிறகு, அந்த வட இந்திய வாலிபர் தனது குதிரை வண்டியில், நம் புரட்சித்தலைவர் அவர்களின் நினைவாக அவரது புகைப்படத்தினை ஒட்டி வைத்து ஜெய்பூர் நகர வாசிகளின் கவனத்தை ஈர்த்ததாகவும் ஒரு தகவல். தற்போது அவர் உயிருடன் இருக்கிறாரா என்ற தகவல் இல்லை.
பதிவினை மேற்கொண்ட வரதகுமார் சுந்தராமன் அவர்களுக்கு நன்றி !
உலகம் சுற்றும் வாலிபன் -டிஜிடல் பணி தற்போது பெங்களூரில் நடைபெற்று வருகிறது .இம்மாத இறுதிக்குள் பணி நிறைவடையும் என்று தெரிகிறது.அநேகமாக ஜூன் மாதத்தில் டிரைலர் வர உள்ளதாக ரிஷி மூவிஸ் திரு நாகராஜ் தெரிவித்தார் . தொழில் நுட்பத்தில் உலகம் சுற்றும் வாலிபன் புதிய மெருகுடன் சினிமாஸ்கோப் வடிவில் ,நம்மை எல்லாம் மகிழ்விக்க வருகிறார் .மேலும் இப்படத்தில் இடம் பெற போகும் சிறப்புகளை திரு நாகராஜ் விரைவில் அறிவிப்பார் .
courtesy - facebook
http://i61.tinypic.com/sebmeq.jpg
இலங்கை பத்திரிகை ஒன்றில் பிரசுரமான புகைப்படம் : ஈழத்தமிழர்களை ஆதரித்த காரணத்தால், நம் தலைவரை பற்றி, காழ்ப்புணர்ச்சியுடன், CONTROVERSIAL CHIEF MINISTER என்று விமர்சித்து உள்ளது அந்த பத்திரிகை. நம் இதய தெய்வம் புரட்சித்தலைவர் அவர்களுடன் அப்போதைய இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் லலித் அதுலத் முதலி.
http://i62.tinypic.com/29wkgia.jpg
http://i57.tinypic.com/2aiknwo.jpg
Courtesy : Times Content.com
http://i61.tinypic.com/15xpt6u.jpg
கழக தொண்டர் குடும்ப உறுப்பினர் ஒருவர் மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மக்கள் தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள்
Courtesy : Times Content.com
http://i59.tinypic.com/jaxj0k.jpg
ரசிகர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் நம் மக்கள் திலகம்
Courtesy : Facebook
http://i61.tinypic.com/349ciko.jpg
தமிழ் திரையுலகில் SUPER STAR என்று முதன் முதலில் அழைக்கப்பட்ட ஏழிசை வேந்தர் எம்.கே. தியாகராஜ பாகவதர் அவர்களுடன் நம் மக்கள் திலகம்
http://i62.tinypic.com/ay3rk7.jpg
மக்கள் திலகத்தின் மூலம் தான் நட த்தி வரும் ஒரு பள்ளிக்கு இடம் பெற்ற திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதி - ஒய். ஜி. பார்த்தசாரதி (நான் சுவாசித்த சிவாஜி என்ற கட்டுரை எழுதிய நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் பெற்றோர்) மணி விழாவில் (ஒய். ஜி. பார்த்தசாரதியின் 60ம் ஆண்டு பிறந்த நாள் விழா) கலந்து கொண்ட நம் மக்கள் திலகம் எம். ஜி. ஆர்.
http://i61.tinypic.com/k20mzp.jpg
மக்கள் திலகத்துடன் அவரது MAKE-UP MAN திரு. பீதாம்பரம் அவர்கள்
http://i61.tinypic.com/veyjq9.jpg
எழுத்தாளர் கமலா சடகோபன் அவர்கள் நம் மக்கள் திலகத்திடம் விருது பெறுகிறார். உடன் அப்போதைய கல்வி அமைச்சர் திரு. அரங்கநாயகம்
http://i62.tinypic.com/dm31oz.jpg
டி.கே. ஷண்முகம் அவர்களின் மணிவிழாவில் (60வது பிறந்த நாள் விழா) கலந்து கொண்ட மக்கள் திலகம். உடன் சிலம்பு செல்வர் ம.பொ.சி. அவர்கள்
http://i62.tinypic.com/2utoy7q.jpg
தமிழ் நாட்டில், மருத்துவ பல்கலைகழகம் ஒன்று துவக்க, மருத்துவர்கள் குழு ஒன்று 05-07-1983 அன்று நம் புரட்சித்தலைவரை சந்தித்து, கோரிக்கை மனு அளிக்கும் புகைப்படம்.
இடமிருந்து வலமாக : மருத்துவர்கள் எஸ். ஆறுமுகம், எச். வி. ஹண்டே (அப்போதைய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்), எம். நடராஜன், எஸ். காமேஸ்வரன் முதலானோர்.
இந்த வார பாக்யா இதழில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்து வெற்றிக் கொடி நாட்டிய தேவரின் "வேட்டைக்காரன் " திரைப்பட கதையை விரிவாக பிரசுரித்துள்ளனர்.
http://i57.tinypic.com/1fwnr8.jpg
http://i62.tinypic.com/50ibyp.jpg
http://i61.tinypic.com/24v1un9.jpg
http://i59.tinypic.com/5lozyc.jpg
http://i62.tinypic.com/aqezm.jpg
http://i58.tinypic.com/juc0t2.jpg
நேற்று உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மெகா தொலைகாட்சியில் அமுத கானம் நிகழ்ச்சியில் மக்கள் திலகத்தின் மகத்தான பாடல்களை ஒளிபரப்பினர்.
விவசாயி - கடவுள் என்னும் முதலாளி.
பணக்கார குடும்பம் - ஒன்று எங்கள் ஜாதியே
உழைக்கும் கரங்கள் - நாளை உலகை ஆளவேண்டும்.
மக்கள் திலகம்
தமது வழிகாட்டி
என்கிறார் பிரபல பட்டிமன்ற
பேச்சாளர் ராஜா.
நன்றி - அந்திமழை இதழ்.
மக்கள் திலகத்தின்
பேரன்பை பெற்றவரும்
மக்கள் திலகத்தின்
திரைக்காவியங்களில்
புகழ் பெற்ற பல பாடல்களை எழுதியவரும்
புரட்சித் தலைவர் ஆட்சியில் சட்ட மேலவையின் துணைத் தலைவர் பதவி வகித்தவரும்
தமிழக அரசின் முன்னாள்
அரசவைக்கவிஞரும் என் மேல் என்றும் பாசம் கொண்டவருமான புலமைப்பித்தன் அய்யா அவர்கள் அலைபேசியில் இன்று அழைத்தார். மக்கள் திலகத்துடன் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை மிக விரிவாக எழுதி வருவதாகவும் விரைவில் அதை நூலாக வெளியிட உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை பதிவிடுவதில் பெருமகிழ்வு அடைகிறேன்.
'அண்ணாவின் வாழ்விலே' என்ற நூலிலிருந்து:
காரைக்காலில் பொதுக்கூட்டம் முடிந்து, அண்ணா காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அவருடன், கவிஞர் கருணானந்தம் மற்றும் கொத்தங்குடி ராமச்சந்திரன் போன்றோரும் இருந்தனர். திருநள்ளாறில் கார் பழுதாகியது. வேறு சக்கரம் மாட்டி பயணத்தை தொடர்ந்து, பேரளம் என்ற ஊருக்கு வந்த போது, அங்குள்ள திரையரங்கு அருகே காரை நிறுத்தச் சொன்ன அண்ணா, 'நம்ம எம்.ஜி.ஆர்., நடிச்ச படம் போட்டுருக்காங்க; பாத்துட்டுப் போகலாம்...' என்றார்.
'திரையரங்கு மேலாளர் எனக்குத் தெரிஞ்சவர்; இடம் இருக்குதான்னு பாத்துட்டு வர்றேன்...' என்று சொல்லிப் போனார் கருணானந்தம்.
அவர் திரும்பி வந்த போது, அவருடன் திரையரங்கு உரிமையாளரும், மேலாளரும் பரவசத்துடன் ஓடி வந்து, அண்ணாதுரைக்கு வணக்கம் தெரிவித்து அழைத்துச் சென்றனர்.
'படம் ஆரம்பித்த பின் வந்தது நல்லதாப் போச்சு. இல்லன்னா, கூட்டம் கூடியிருக்கும்...' என்றபடியே படம் பார்த்துக் கொண்டிருந்தார் அண்ணா.
அப்போது, படம் நிறுத்தப்பட்டு திரையில், எங்கள் திரையரங்கிற்கு வருகை தந்திருக்கும் அறிஞர் அண்ணா அவர்களை அன்புடன் வரவேற்கிறோம் வணக்கம், நன்றி — என்று, 'ஸ்லைடு' போட்டனர். 'அறிஞர் அண்ணா வாழ்க' என்று ஒரே கைதட்டல்! ஆரவாரத்தில் திரையரங்கம் அதிர்ந்தது.
படமும் துவங்கப்பட்டது. படத்தை முன்பே பார்த்திருந்த கருணானந்தம், படம் முடிய ஐந்து நிமிடங்கள் இருக்கும் போதே, அண்ணா அழைத்துக் கொண்டு வெளியேறினார்.
நடுத்தெரு நாராயணன்
dinamalar-3.5.2015
Coimbatore டிலைட் திரை அரங்கில்
விரைவில் நீதிக்கு தலை வணங்கு