http://i61.tinypic.com/2s5z3t5.jpg
Printable View
http://i59.tinypic.com/2rcwmky.jpg
Courtesy : Facebook
http://i57.tinypic.com/2u4h8js.jpg
Courtesy : Facebook
http://i60.tinypic.com/2agw0g9.jpg
புகழின் உச்சியில் இருந்த போதும், மிக மிக BUSY ஆக இருந்த போதும், ரசிகர்களை மதித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட மக்கள் திலகம்
http://i58.tinypic.com/mww6fs.jpg
மற்றொரு ரசிகருடன் நம் பொன்மனச்செம்மல்
Courtesy : Facebook
http://i60.tinypic.com/jhswlf.jpg
இன்னொரு ரசிகருடன் புரட்சித்தலைவர் !
Courtesy : Facebook
http://i58.tinypic.com/2l91wft.jpg
பொம்மை மாத இதழிலிருந்து - வாசகர் சந்திப்பில் நம் நடிகப் பேரரசர்
http://i59.tinypic.com/2uzauxs.jpg
COURTESY : FACEBOOK
http://i58.tinypic.com/2wbxchi.jpg
Courtesy : Facebook
http://i58.tinypic.com/oupfe9.jpg
Courtesy : Facebook
http://i58.tinypic.com/k1axb9.jpg
http://i62.tinypic.com/2vchyso.jpg
வள்ளல்களுக்கேல்லாம் வள்ளல் இவர் தான் என்பதால் தானோ என்னவோ இவருக்கு அளிக்கப்பட்ட பட்டங்கள் :
1. கொடை வள்ளல்
2. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வள்ளல்
3. கலியுக கர்ணன்
4. எட்டாவது வள்ளல்
5. கொடுத்து சிவந்த கரங்கள்
கடையேழு வள்ளல்கள் எழுவரும் மன்னர்களாய் இருந்து, அரசுக் கருவூலத்திலிருந்து வாரி வழங்கினார்கள். ஆனால், நம் புரட்சித்தலைவர் அவர்களோ, தான் உழைத்து சம்பாதித்த பணத்தில் அள்ளிக்கொடுத்து அனைவரையும் ஆனந்தப்படுத்தினார்.
"கலியுக கர்ணன்" என்று இவரை போற்றி, நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த "கர்ணன்" திரைப்படத்துக்கு, 1987ல் வெளியிடப்பட்ட ஒரு நாளிதழ் விளம்பரம் :
http://i61.tinypic.com/33xaaea.jpg
மக்கள்திலகம் அவர்களின் மகத்தான மாண்பினை அருமையாக பறை சாற்றும் அன்பு சகோதரர்கள் திருவாளர்கள் கலைவேந்தன்,பேராசிரியர் செல்வகுமார், கோவிந்தராஜ் kp ஆகியோருக்கு இனிய நன்றிகள்...
திரை உலக சக்கரவர்த்தி - மக்கள்திலகம் மாண்புகளை உரக்க கூறும் நற்பதிவாளர் பாச சகோதரர் திரு சைலேஷ்பாசு அவர்கள் சக தோழர்கள் யார் எவர், என்ன சொன்னாலும் அவற்றை அப்புற படுத்திவிட்டு மீண்டும் இங்கு நற்பதிவு காண விரும்பும் திரி தோழர்கள் சார்பாக வேண்டி கொள்கிறோம்...
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் இணைந்திருக்கும் திரு மயில் ராஜ் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன் .
அக்னி மலர்கள் - திரு கோவிந்தராஜ் அவர்களின் பதிவுகள் மகவும் அருமையாக உள்ளது .
திருவண்ணாமலையில் நடைபெற்ற மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றம் பொன்விழா பற்றிய நிழற்படங்கள் அனைத்தும் அருமை . நன்றி திரு லோகநாதன் சார் .
இனிய நண்பர் திரு கலைவேந்தனின் கட்டுரை - யதார்த்தத்தை எடுத்து காட்டியது . நன்றி .
இனிய நண்பர் திரு செல்வகுமாரின் அபூர்வ தகவல்கள் , நிழற்படங்கள் எல்லாமே சூப்பர் .
படகோட்டி
கவிதைபோல் தமிழ் மணம் கனிந்துருக வைத்துவிடும்
இளமைபோல் இனிமைநலம் என்றென்றும் பாடிவிடும்
அருமையெனச் சொல்லாதார் எவர் இருக்க முடியும்? – கவிஞர்
திறமைதனை மெச்சித்தான் ஊர் புகழும் உன்னை!!
படகோட்டி என்னும் ஒரு திரைப்படத்தில் எட்டுப் பாட்டு
மெட்டுக்குள் நம்மையும் கட்டிப்போடும் முத்துப் பாட்டு
வட்டமிடும் வாலிபர் முதல் பாங்கான காளையர் வரை
வஞ்சியர் முதல் வளையல் கொஞ்சிடும் மங்கையர் வரை
மனதுக்குள் கொண்டாடும் மயக்கம் தரும் பாட்டு.
இதுவரைக்கும் வந்த பாடல்களையெல்லாம் வென்றெடுக்கும் பாட்டு!!!!
தொட்டால் பூ மலரும்தொட்டால் பூ மலருமாம்! தொட்டவர்கள் அறிவார்கள். இசை மெட்டால் நமை மீட்டும் இருவர் விஸ்வநாதன் ராமமூர்த்தி, திரையில் தோன்றிய வெற்றிச் சரித்திரம் எம்.ஜி.ஆர். – சரோஜாதேவி. கற்பனைகளின் உச்சம் தொட்டு கவிஞரின் எழுதுகோல் நகர, அற்புத இயக்கம் தந்த பிரகாஷ்ராவ் இயற்கையின் வனப்பைக்காட்டும் காமிரா இத்தனையையும் கூட்டணி அமைத்து நம்மைக் கொள்ளையடிக்க, பாடலின் தொடக்கத்தில் ஓடிவந்த நாயகன் நாயகியைத் தொட்டுவிடும் அழகு.
பாடல் முழுவதும் ஓடிவருகிற வண்ணத்தை என்ன சொல்ல? கைகளால் காதலனும் காதலியும் தட்டிக்கொள்ள. ஒவ்வொரு வரியும் உள்ளத்தில் ஓராயிரம் சுகம் பிறக்க வைக்கிற உண்மையை மீண்டும் இப்பாடலைக் கேட்கும்போது உணரலாம். வண்ணத்தில் வரைந்து வைத்த காவியமாம் இத்திரைப் படம் நம் எண்ணத்தில் என்றும் முன்னணியில்… இது போன்ற இனிய பாடல்களால்.
படம்: படகோட்டி (1964)
வரிகள்: வாலி
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், பி.சுசீலா
ராகம் : சுத்ததன்னியாசி
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்
கண்கள் படாமல் கைகள் தொடாமல்
காதல் வருவதில்லை
நேரில் வராமல் நெஞ்சைத் தராமல்
ஆசை விடுவதில்லை ஹோ!
ஆசை விடுவதில்லை
[தொட்டால்…]
இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால்
இளமை முடிவதில்லை ஹோ!
இளமை முடிவதில்லை
எடுத்துக் கொண்டாலும் கொடுத்துச் சென்றாலும்
பொழுதும் விடிவதில்லை ஹோ!
பொழுதும் விடிவதில்லை
[தொட்டால்…]
பக்கம் இல்லாமல் பார்த்து செல்லாமல்
பித்தம் தெளிவதில்லை ஹோ!
பித்தம் தெளிவதில்லை
வெட்கம் இல்லாமல் வழங்கிச் செல்லாமல்
சொர்க்கம் தெரிவதில்லை ஹோ!
சொர்க்கம் தெரிவதில்லை
[தொட்டால்…]
பழரச தோட்டம் பனிமலர் கூட்டம்
பாவை முகமல்லவா ஹோ!
பாவை முகமல்லவா
அழகிய தோள்கள் பழகிய நாட்கள்
ஆயிரம் முகமல்லவா ஹோ!
ஆயிரம் முகமல்லவா
[தொட்டால்…
courtesy - கவிஞர் காவிரிமைந்தன்.
புரட்சித் தலைவரின் புகழ் பாட வந்திருக்கும் சகோதரர் திரு.மயில்ராஜ் அவர்களை மகிழ்ச்சி பொங்க வரவேற்கிறேன்.
முகநூலில் உங்கள் பதிவுகளை திரு.சைலேஷ் சார் நமது திரியில் பதிவிட்டிருக்கிறார். அவற்றை படித்து ரசித்திருக்கிறேன். குறிப்பாக பெற்றால்தான் பிள்ளையா படப்பிட்டில் மூக்கு ஒழுகிக் கொண்டிருந்த குழந்தையின் மூக்கை தலைவர் சுத்தம் செய்தது பற்றி திருமதி.சரோஜா தேவி அவர்கள் கூறியதைப் பற்றிய உங்கள் பதிவு. ‘இவர் திரிக்கு வந்து தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்குமே’ என்று நினைத்தேன். வந்துவிட்டீர்கள். மிக்க மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
//படகோட்டி என்னும் ஒரு திரைப்படத்தில் எட்டுப் பாட்டு
மெட்டுக்குள் நம்மையும் கட்டிப்போடும் முத்துப் பாட்டு
வட்டமிடும் வாலிபர் முதல் பாங்கான காளையர் வரை
வஞ்சியர் முதல் வளையல் கொஞ்சிடும் மங்கையர் வரை
மனதுக்குள் கொண்டாடும் மயக்கம் தரும் பாட்டு.
இதுவரைக்கும் வந்த பாடல்களையெல்லாம் வென்றெடுக்கும் பாட்டு!!!!
தொட்டால் பூ மலரும்தொட்டால் பூ மலருமாம்! தொட்டவர்கள் அறிவார்கள். இசை மெட்டால் நமை மீட்டும் இருவர் விஸ்வநாதன் ராமமூர்த்தி, திரையில் தோன்றிய வெற்றிச் சரித்திரம் எம்.ஜி.ஆர். – சரோஜாதேவி. கற்பனைகளின் உச்சம் தொட்டு கவிஞரின் எழுதுகோல் நகர, அற்புத இயக்கம் தந்த பிரகாஷ்ராவ் இயற்கையின் வனப்பைக்காட்டும் காமிரா இத்தனையையும் கூட்டணி அமைத்து நம்மைக் கொள்ளையடிக்க, பாடலின் தொடக்கத்தில் ஓடிவந்த நாயகன் நாயகியைத் தொட்டுவிடும் அழகு.//
திரு.எஸ்.வி. சார்,
தொட்டால் பூ மலரும் பாடல் குறித்து இணையத்தில் இருந்து தாங்கள் எடுத்து போட்டிருக்கும் பதிவு அற்புதம். ஓடிவந்து மூச்சிறைக்க சரோஜாதேவி அவர்களைப் பார்த்து தலைவர் ‘ஏன் தொடக்கூடாதா?’ என்று ரகசிய குரலில் கேட்டு பாடலை ஆரம்பிக்கும் அழகு கண்களில் நிற்கிறது. நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்