http://i66.tinypic.com/2cgoirn.jpg
Printable View
வெள்ளி முதல் (04/01/19) மதுரை ராமில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
தகவல் உதவி : மதுரை பக்தர் திரு. எஸ். குமார்.
http://i66.tinypic.com/2hoe2k8.jpg
புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல்
கவிஞரா - இல்லை
பாடகரா - இல்லை
இசை அமைப்பாளரா - இல்லை
ஒரு சில வரிகள் பாட்டு பாடியுள்ளார் மற்றும் தான் நடிக்கும் காவியங்களின் பாடல் வரிகளில் என்ன கருத்து வரவேண்டும் என்று கவிஞர்களிடம் சொல்லுவதுண்டு. இசை ஞானம் உண்டு, எந்த கருத்தை எப்படி சொன்னால் மக்களிடையே சென்றடையும் என்று இவரை விட இன்றுவரை திரைத்துறையில் யாருக்கும் தெரியாது.
உண்மை இப்படி இருக்க இந்த தினத் தந்தி விளம்பரத்தில் உள்ளவர்கள் அனைவரும் பல பாடல்கள் பாடியவர்கள். அவர்களுடன் புரட்சித்த்லைவர் படம் மட்டுமே இடம்பெற்றுள்ளது என்றால் [ சிவாஜி, ரஜினி, கமல்ஹாசன், விஜய், அஜித் அவ்வளவு ஏன் டி,எம்.எஸ், சீர்காழி, எஸ்.பி.பி படங்கள் கூட இல்லை] அதற்கு என்ன பொருள்?
ஒன்று ஒரு பொருளை விற்கவேண்டும் என்றால் அதில் புரட்சித்தலைவர் படம் இடம்பெற வேண்டும் மேலும் சொல்லுங்கள் பார்ப்போம்:
உறவார் பகையார் உண்மையை உணரார்
உனக்கே நீ யாரோ ?
வருவார் இருப்பார் போவார் -
"நிலையாய் வாழ்வார்" யார்?........... Thanks...........
[1/1, 7:56 PM] C S Kumār: PANATHOTTAM PREMIERE SHOW TODAY.
[1/1, 7:56 PM] C S Kumār: மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த பணத்தோட்டம் 11-1-1963 வெளியானது.
[1/1, 7:56 PM] C S Kumār: சென்னை பிளாசா 84 நாள் கிரவுன் 70 நாள் மேகலா 70 நாள் ஓடியது.
[1/1, 7:56 PM] C S Kumār: பணத்தோட்டம் நான் சின்ன வயதில் என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே பாடல் என்னை எம்ஜிஆர் ரசிகன் ஆக்கியது.இந்த படத்தில் ஒவ்வொரு பாடலிலும் எம்ஜிஆர் பல வித உடைகளில் நடனம் ஆடி நம்மை மகிழ்விப்பார். சங்கர் - எம்ஜிஆர் கூட்டணி இனித்தது.
[1/1, 7:57 PM] C S Kumār: கவியரசர் கண்ணதாசன் பாடல் எப்போது கேட்டாலும் இனிமை நிறைந்த நான் மிகவும் ரசித்த பாடல் காட்சி. எம்ஜிஆர் சரோஜாதேவி ஜோடி என்றும் ரசிக்கலாம்.
[1/1, 9:12 PM] C S Kumār: 1980 புரட்சித்தலைவர் ஆட்சியை கவிழ்த்த சில நாட்களில் தேவி பிலிம்ஸ் வசம் உள்ள பணத்தோட்டம் படத்தை சென்னை சத்யம் அரங்கில் மூன்று காட்சிகள் திரையிட்டார்கள். ஒரு வாரம் நன்றாக ஓடியது..... Thanks
வாலி எம்.ஜி ஆரைப் பற்றி
எழுதிய அருமையான கவிதை.
-------------------------
நீ
இந்தியாவில் பிறந்து
இலங்கைக்கு சென்ற-
இராமச்சந்திரனல்ல;
இலங்கையில் பிறந்து
இந்தியா வந்த
இராமச்சந்திரன்.!
அந்த இராமச்சந்திரன்
சூரிய குலத்தில் வந்தவன்.
நீயும்-
உதய சூரியனின்
வழித்தோன்றல்தான்.
அவனும்
ஜானகி மணாளன்.
நீயும்
ஜானகி மணாளன்.
அவனும்
பதவி ஆசை பிடித்தவர்களால்
வெளியேற்றப்பட்டான்.
நீயும் அப்படியே.
அவனும்
நாடோடியாகத் திரிந்து
மன்னனானான்.
நீயும்-
நாடோடி மன்னன்தான்.
அவனிடத்தில்
இருந்தது போலவே
உன்னிடத்தில்லும்
"வில் பவர்" இருந்தது.
அந்த இராமச்சந்திரன்
தெய்வமாக இருந்து
மனிதனாக மாறியவன்.
நீ-
மனிதனாக இருந்து
தெய்வமாக மாறியவன்.
இதனால்தான் உன்னை
இதய தெய்வம் என்கிறோம்.
ஆனால் ஒன்று
அவன்
வாலியை
அம்பு கொண்டு வீழ்த்தியவன்.
நீயொ
வாலியை
அன்பு கொண்டு வாழ்த்தியவன்....
௮ந்த ராமச்சந்திர மூர்த்தி ௭டுத்தது பத்து ௮வதாரம்.பத்தாது நீ ௭டுத்த ௮வதாரம்.மீண்டும் தமிழகத்திற்கு வருக ௭ன் தலைவா.
(மேற்க*ண்ட க*டைசி நான்கு வ*ரிக*ள் மட்டும் வாலி ம*றைந்துவிட்ட*தால் அவ*ர் சார்பாக முக*நூல் ந*ண்ப*ர் எஸ். காளிமுத்து எழுதிய*து. வாலியே அக*மகிழ்வார் இவ்வ*ரிக*ளால்..ந*ன்றி காளிமுத்து அவ*ர்க*ளே.).......
[1/6, 7:19 AM] C S Kumār: சென்னை சித்ரா 91 நாள் பிரபாத் 77 நாள் சரஸ்வதி 77 நாள் ஓடியது.
[1/6, 7:19 AM] C S Kumār: புரட்சிநடிகர் எம்ஜிஆர் நடித்த அலிபாபாவும் 40 திருடர்களும் 12-1-1956 வெளியானது.
[1/6, 7:19 AM] C S Kumār: மதுரை சிந்தாமணி 154 நாள் ஓடியது. கோவை ராஜா சேலம் ஓரியண்டல் திருச்சி வெலிங்டன் 100 நாள் ஓடியது.
[1/6, 7:19 AM] C S Kumār: அலிபாபா படம் எம்ஜிஆர் அழகை மேலும் கலரில் ஜொலித்தது. அசல் முஸ்லிம் ஆகவே காட்சி அளிப்பார். பெரியவர் எம்ஜிசி அவர்களின் பண்பட்ட நடிப்பு நன்றாக இருந்தது.
[1/6, 7:19 AM] C S Kumār: இன்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் மாசிலா உண்மை காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே என்ற பாடல் பாடப்படுகிறது ஒன்றே இந்த பாடலின் இனிமை புதுமை......
சென்னை- பாலாஜி அரங்கில் கடந்த வாரம் திரையிடப்பட்ட திரையுலக வசூல் சக்ரவர்த்தி மக்கள் திலகம் "ஒளிவிளக்கு" காவியம் ஏறத்தாழ ரூபாய் 75000.00 வசூலாகி பக்கத்தில் ஓடிய சர்க்கார் வசூலை முறியடித்துள்ளது..........
ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆருடன் ஒரு நாள்!
பரங்கிமலையிலிருந்து பூவிருந்தவல்லி போகும் சாலையிலிருக்கும் தமது தோட்டத்தில், எங்களை இன்முகத்தோடு கை கூப்பி வரவேற்றார் திரு. எம்.ஜி.ராமச்சந்திரன். படப்பிடிப்பு முடிந்த களைப்பு தீரக் குளித்துவிட்டு 'ஜில்'லென்று காட்சி தந்த அவரைப் பார்த்ததுமே மனத்திற்குக் குளிர்ச்சியாக இருந்தது. 'எம்.ஜி.ஆர். தோட்டம்' என்று புகழ்பெற்ற அந்த இடத்தைக் காண வேண்டும் என்ற ஆவலில் 'தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கலாமா?' என்று கேட்டோம்.
''தோட்டத்திலே என்ன இருக்கு? ரொம்ப சாதாரணமா ஏதோ...'' என்று அடக்கத்துடன் கூறினார் அவர்.
''ஒரு கரடி இருக்கிறதாமே...''
''இருந்தது. பாவம், அது பத்து நாட்களுக்கு முன்னே இறந்துவிட்டது. அது ரொம்பப் பொல்லாத குட்டி! அடங்கவே இல்லை. மூக்கு குத்தி வளையம் மாட்டி, கயிறு கட்டினால்தான் வழிக்கு வரும்னு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிச்சேன். அங்கே துளை போட்டதும், ரத்தம் கொட்டி செத்துடுத்து. அதை மிருகக் காட்சி சாலைக்குக் கொடுக்கணும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்... என்ன செய்யறது? இதோ பார்த்தீங்களா, மான் குட்டிங்க. அறந்தாங்கி தோழர்கள் அன்புடன் கொடுத்தாங்க'' என்று அருகிலிருந்த மான்களைச் சுட்டிக் காட்டினார். அந்தக் குட்டிகளும் ஒரு துள்ளுத் துள்ளி எழுந்து, கண்களை உருட்டிப் பார்த்தன!
ஏழரை ஏகரா பரப்புள்ள அந்தத் தோட்டத்தில் வாழை மரங்களையும் மாமரங்களையும் தவிர, காய்கறிகளும் பயிரிடப்படுகின்றன. நெல் விளைச்சலும் உண்டு. மத்தியில் ஒரு நீச்சல் குளம் இருக்கிறது. படம் போட்டுப் பார்க்க ஒரு சிறு தியேட்டரும் இருக்கிறது. தேகப் பயிற்சி செய்வதற்காக ஓர் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
''அண்ணாச்சிக்கு எடை அதிகமாயிடுச்சுன்னா இங்கேதான் எக்ஸர்ஸைஸ் செய்வார்'' என்று, உடன் வந்த பழைய நடிகர் திருப்பதிசாமி விளக்கம் கொடுத்தார்.
அந்தத் தோட்டத்தினுள் இருக்கும் அழகான பங்களாவுக்குத் தாயின் நினைவாக 'அன்னை நிலையம்' என்று பெயரிட்டிருக்கிறார் எம்.ஜி.ஆர். அதற்குக் கிழக்கே ஒரு மண்டபம் தென்பட்டது.
''அது என்ன மண்டபம்?'' என்று கேட்டேன் நான்.
''அதுதான் கோயில்?''
''என்ன கோயில்?''
''என் தாயாருடைய கோயில். அங்கே என் அன்னையின் படம் தான் இருக்கிறது. அவர்தான் நான் வணங்கும் கடவுள்.''
''அவங்களைக் கும்பிடாம அண்ணாச்சி வெளியே கிளம்பமாட்டார். வாரத்திற்கு இருமுறை படத்திற்குப் பூ மாலை போடுவோம். தினமும் விளக்கேற்றி வைப்போம்'' என்று கூறினார் திருப்பதிசாமி.
''சினிமாவில் கோயில் காட்சிகளில் தோன்றி நடிப்பதில்லை என்று ஒரு கொள்கையை வைத்துக்கொண்டிருக்கிறீர்களே, ஏன்?'' என்று, பெற்ற தாய்க்குக் கோயில் கட்டிக் கும்பிடும் எம்.ஜி.ஆரிடம் கேட்டேன்.
''அப்படியரு கொள்கையே எனக்குக் கிடையாதே! எதனால் இப்படிக் கேட்கிறீர்கள்?'' என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.
'' 'காஞ்சித் தலைவ'னில், நீங்கள் கோயிலுக்குள் நுழைவது போலவும், உடனே வெளியே வருவது போலவும் ஒரு காட்சி வருகிறதே..?''
''அந்தக் காட்சியை முதலில் நினைத்தபடி எடுக்க முடியாமல் போனதுதான் அதற்குக் காரணம். என்னைப் பற்றி ஒரு தவறான எண்ணம் பரவியிருக்கிறது. நானோ, கழகமோ கோயிலுக்குப் போகக்கூடாது என்றோ, கடவுள் இல்லையென்றோ பிரசாரம் செய்ததில்லை. கடவுள் பெயரால் நாட்டில் மூட நம்பிக்கைகள் பெருகுவதையும், சோம்பேறித்தனம் வளருவதையும்தான் எதிர்த்து வந்திருக்கிறோம். 'ஜெனோவா' படத்தில் நான் நடிக்கவில்லையா! இப்போது 'பரம பிதா'வில் நடிக்கிறேனே, அதுவும் மத சம்பந்தமான கதைதானே? 'பெரிய இடத்துப் பெண்'ணில் எல்லோரையும் நான் கோயிலுக்குள் அழைத்துச் செல்வது போல் ஒரு காட்சி வருகிறதே! சினிமா இருக்கட்டும். சமீபத்தில் மருத மலை கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வைத்தேனே, அதற்கு என்ன சொல்கிறீர்கள்?''
நான் ஒன்றும் சொல்லவில்லை.
பேசிக்கொண்டே மேற்குப்புறமிருந்த ஒரு சிறு வீட்டினுள் நுழைந்தோம். அது ஒரு 'அவுட் ஹவுஸ்' மாதிரி இருந்தது. அறை முழுதும் சாம்பிராணி புகைப்படலம் சூழ்ந்திருந்தது.
''இந்த இடத்தை ஒரு கலைக்கூடமாக்கத் திட்டமிட்டிருக்கிறேன். இன்னும் படங்களெல்லாம் வரவில்லை'' என்று எம்.ஜி.ஆர். சொன் னதும், அந்த அறையில் ஒரு வெளவால் பறந்து வந்து எங்களை வட்ட மிட்டது!
நாங்கள் அமர்ந்தோம். சிற்றுண்டி வந்தது. ஐஸ்கிரீமும் காபியும் வந்தன. அவற்றைக் கொண்டு வந்த தோழரைப் பார்த்து எம்.ஜி.ஆர், ''இவங்க வந்த டாக்ஸி வெளியே நிக்குதே, அந்த டிரைவருக்குப் பலகாரம் கொடுத்தீங்களா?'' என்று குரலைச் சற்று தாழ்த்திக் கேட்டார்.
''ஓ! கொடுத்துவிட்டேனே!'' என்றார் அனுபவமிக்க அந்தத் தோழர்.
சிற்றுண்டிக்குப் பிறகு ''வருகிறீர்களா, என் பாதாள அறையைக் காட்டுகிறேன்'' என்று அழைத்தார் எம்.ஜி.ஆர்.
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.
'' 'ரகசிய அறையைக் காட்டுகிறேன், வாருங்கள்' என்று அழைக்கும் துணிச்சல் உங்களுக்குத்தான் வரும்'' என்று நான் சொன்னதும், ''வந்து பாருங்கள், மறைப்பதற்கு ஒன்றுமில்லை'' என்றார் அவர் புன்முறுவலுடன்.
அவரைப் பின் தொடர்ந்தோம். அடுத்த அறைக்குள் சென்று தரையில் இருந்த ஒரு கதவைத் திறந்தார் அவர். ''பின்னாலேயே வாருங்கள்'' என்று சொல்லியபடியே கீழே இறங்கினார். சினிமாவில் 'க்ளைமாக்ஸ் சீன்' சண்டை நடப்பதற்காக ஒரு படிக்கட்டு வழியாகக் கீழே இறங்கிப் போவார்களே, அது மாதிரி சென்றோம்.
கீழே இருந்த அறையில் எம்.ஜி.ஆர். மறைத்து வைத்திருந்த 'செல்வங்க'ளைக் கண்டு மலைத்துப்போனோம். அழகான அந்த அறையின் சுவரை மகான்களின் படங்கள் அலங்கரித்திருந்தன. காந்திஜி, நேருஜி, தாகூர், விவேகானந்தர், ஏசுநாதர், புத்தர், ராமலிங்க சுவாமிகள், சாரதாமணி அம்மையார், பாரதி, திருவள்ளுவர் என்று வரிசையாக அங்கு கொலுவீற்றிருந்த காட்சி உள்ளத்தைக் கொள்ளை கொண்டு, எங்களை ஆனந்தப் பரவசத்தில் ஆழ்த்தியது.
''கீழே கட்டி வைத்திருக்கும் புத்தகங்கள் எல்லாம் என்ன?'' என்று கேட்டேன்.
''அத்தனை நூல்களும் இம்மகான்களைப் பற்றிய கருத்தோவியங்கள். அவர்கள் சிந்தனையில் பிறந்த அறி வுரைகளும் இருக்கின்றன'' என்று சொன்னார் அருகிலிருந்த வித்வான் வே.லட்சுமணன்.
''இந்த இடத்தை ஒரு சிறந்த நூல் நிலையமாக்க வேண்டும் என்பது என் அவா. இங்கு சற்று உரக்கப் பேசி னாலும் எதிரொலி எழும்பும். ஆகவே இங்கு வருபவர்கள் பேசாமல் அமைதி யாக அறிவுச் செல்வங்களில் மனத் தைப் பறிகொடுக்கவேண்டும் என்றே இப்படியரு அறையைக் கட்டச் சொன்னேன். புற வாழ்க்கையிலிருந்து நிம்மதி பெறுவதற்காக எனக்கு மட்டு மின்றி, என் அருமைத் தோழர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்நூல் நிலையத்தை அமைத்திருக்கிறேன். என் காலத்திற்குப் பிறகு இதுவும், மேலேயுள்ள கலைக் கோயிலும் பொதுச்சொத்தாக ஆவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வைத்திருக்கிறேன்'' என்று புன்முறுவலுக்கிடையே தன்னடக்கத்துடன் கூறினார் அவர்.
அறிவும் ஆன்மிகமும் இணைந்து புனிதமாக்கப்பட்ட அந்த இடத்தை விட்டுப் பிரிய மனமில்லாமல் மேலே ஏறி வந்தோம்.
எம்.ஜி.ஆர். காபி அருந்துவதில்லை; வெற்றிலை போடுவதில்லை; புகை பிடிப்பதில்லை. ஆகவே, அவருடைய நண்பர்களில் சிலர் தம் எதிரில் புகை பிடிக்கத் தயங்குவதாகக் கூறினார் அவர். இவரிடம் பெருமதிப்புக் கொண்ட ஒரு மதுரை நண்பர், எம்.ஜி.ஆரின் உருவத்தைப் போஸ்டரில் கண்டால் கூட சிகரெட்டை மறைத்துக் கொண்டு விடுவாராம்!
''நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தீர்களே, இரண்டுக்குமிடையே நீங்கள் கண்ட வேற்றுமை என்ன?''
''நிறைய இருக்கிறது. ஓர் உதாரணம் மட்டும் சொல்கிறேன். நான் நாடகங்களில், முக்கியமாக 'என் தங்கை' நாடகத்தில் நன்றாக அழுவேன். வேண்டும்போது உணர்ச்சி வசப்பட்டு துயரத்தை வரவழைத்துக் கொள்வேன். அது ரொம்பவும் இயற்கையாக இருக் கும். சினிமாவிலும் அம்மாதிரியே இயற்கையாக அழவேண்டும் என்ற ஆசை எனக்கு! ஆகவே 'கிளிசரின்' போட்டுக் கொள்ள மாட்டேன் என்று முதலில் பிடிவாதமாக இருந்தேன். அதே போல் படப்பிடிப்பின்போது இயற்கையாகவே அழுதேன். அந்தக் காட்சியைத் திரையில் பார்க்கும்போது நான் அழுத மாதிரியே தெரியவில்லை. ஏனெனில், இயற்கையாக அழுததால், அந்த விளக்குச் சூட்டில் கண்ணீர் கன்னத்துக்கு வரும் முன்பே உலர்ந்து போய்விட்டது! பிறகுதான் சினிமா வேறு, நாடகம் வேறு என்று புரிந்துகொண்டேன். நானும் பிறரைப்போல் 'கிளிசரின்' போட்டுக் கொள்ள ஆரம்பித்தேன்.''
''கல்கியின் நாவலான 'பொன்னியின் செல்வனை'ப் படமாக்கப் போவதாக அறிவித்திருந்தீர்களே, அது எந்த நிலையில் இருக்கிறது?''
''படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கான வேலைகள் மும்மரமாக நடந்துகொண்டிருக்கின்றன. அதை கலரில் எடுக்கப்போகி றேன். ஆங்கிலத்திலும் எடுக்க வேண்டும் என்று ஓர் எண்ணம் இருக்கிறது. ஆங்கில வசனங்களை அண்ணாவை எழுதித் தரும்படி கேட்கப் போகிறேன்!''
''வெளிநாடுகளுக்குப் போக வேண்டும் என்ற விருப்பம் இல்லையா உங்களுக்கு?''
''நிறைய இருக்கிறது. நாடகக் கம்பெனியுடன் ஒரு முறை பர்மா சென்றிருக்கிறேன். வேறு எங்கும் போனது கிடையாது. இலங்கையிலிருந்து ஒரு முறை அழைப்பு வந்தது. 'விசா'வும் கிடைத்தது. ஆனால், நமது சர்க்கார் என்ன காரணத்தாலோ 'பாஸ்போர்ட்' கொடுக்க மறுத்துவிட்டார்கள். இந்த வருஷம் செப்டம்பர் மாதம் மலேசியாவில் ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி அழைப்பு வந்திருக் கிறது. மறுபடியும் சர்க்காரை அனுமதி கேட்கப் போகிறேன். பாஸ்போர்ட் கிடைத்தால் போய் வருவேன்!'' என்றார் புன்னகையோடு.
அவரிடம் விடைபெற்றுக் கிளம்பினோம். சினிமாவில் குத்துச் சண்டையும் கத்திச் சண்டையும் போடும் புரட்சி நடிகர், நேரில் பார்க்க இத்தனை சாதுவாக இருக்கிறாரே என்று வியந்து கொண்டே வீடு திரும்பினோம்................ Thanks Friends.....
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களின் அன்பான வேண்டுகோள் .
1. தமிழக அரசின் செய்தி அறநிலைத்துறை பெட்டகத்தில் இருக்கும் எம்ஜிஆர் ஆட்சி காலத்தின் 1977-1987 நிழற்படங்கள் மற்றும் விடியோக்கள் பெற்று நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும் .
2. எம்ஜிஆர் திரைப்படங்களின் நெகட்டிவ் காப்பாற்றப்படவேண்டும் .
3. சென்னை நகரில் ஆலந்தூர் சட்ட மன்ற தொகுதிக்கு ''எம்ஜிஆர் சட்டமன்றம் '' என்ற பெயர் வைக்க வேண்டும் .
4. எம்ஜிஆர் படங்கள் அனைத்தும் தமிழகம் முழுவதும் உள்ள வணிக வளாக திரை அரங்கிலும் மற்ற குளிர் சாதன அரங்கிலும் குறைந்த கட்டணத்தில் திரையிட வேண்டும் .
5. தமிழக அரசின் விளமபரங்களில் எம்ஜிஆர் படங்களை அறவே இல்லை .இந்த நிலை மாறவேண்டும் .மாற்ற வேண்டும் . ...... Thanks...
.
ஜனவரி 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று, "அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை" சார்பில் நடந்த "மலேசியாவில் மக்கள் திலகம"் மறு வெளியீட்டு மலர் விழாவில்..... திராவிட கழகத்தின் ஆணிவேர் தந்தைப் பெரியாரின் கொள்கை வழியில் உழைத்து கொண்டிருக்கும், காதர்சரீப் தோட்டப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் திரு. மா. ராவணன் அவர்கள், புரட்சித்தலைவரின் திருவுருவம் பதித்த பஞ்சலோக மோதிரம் ஒன்றை, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கானா. க. பழனிக்கு வழங்கியது.
நன்றி
திரு. மா. ராவணன்
அவர்களுக்கு......... Thanks...
மாலை முரசு -24/12/18
http://i65.tinypic.com/1zb9b8i.jpg
http://i68.tinypic.com/2ex7vw2.jpg
மாலை மலர் -24/12/18
http://i67.tinypic.com/eg3906.jpg
http://i68.tinypic.com/op9pxc.jpg
மக்கள் குரல் -24/12/18
http://i67.tinypic.com/2ytte04.jpg
http://i64.tinypic.com/vevo7a.jpg
குமுதம் வார இதழ் =16/01/19
http://i65.tinypic.com/24kxtlz.jpg
http://i64.tinypic.com/fnfzwl.jpg
தினத்தந்தி -08/01/19
http://i64.tinypic.com/33eubv6.jpg
மக்கள் குரல் -09/01/19
http://i68.tinypic.com/2a9uwrk.jpg
தினத்தந்தி -10/01/19
http://i64.tinypic.com/311s46v.jpg
''மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வாழ்ந்த காலத்தில்,
அவரை எதிர்த்தவர் நீங்கள். அதற்காக, இப்போது வருத்தப்படுகிறீர்களா?''
''தி.மு.கழகத்தில் அடங்காப் பற்றும் தணியா வேட்கையும் கொண்டவனாக இயங்கிய காலத்தில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை நெஞ்சிலே போற்றியது உண்டு. தி.மு.கழகத்தில் இருந்து கலைஞர் கருணாநிதி அவரை வெளியேற்றியபோது, கட்சிக்கும் தலைமைக்கும் நான் கொண்டு இருந்த விசுவாசத்தின் காரணமாக, எம்.ஜி.ஆர். அவர்களை எதிர்த்து மேடைகளில் விமர்சித்தேன். கடுமையாக விமர்சித்துவிட்டு மேடையை விட்டுக் கீழே இறங்கி காரில் ஏறினால், அவரது 'நாடோடி மன்னன், 'மன்னாதி மன்னன் பாடல்கள்தாம் இரவு முழுக்கப் பயணத்தில் ஒலித்துக்கொண்டு இருக்கும். 'நாடோடி மன்னன், 'மதுரை வீரன், 'தாய்க்குப் பின் தாரம், 'எங்க வீட்டுப் பிள்ளை படங்களை எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாது!
அவர் முதல் அமைச்சராக இருந்தபோது, டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா, 'இலங்கையில் ஈழத் தமிழர் பிரச்னையை எம்.ஜி.ஆர்-தான் தூண்டுகிறார் என்று அந்நாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு குற்றம் சாட்டினார். மறுநாள் நாடாளுமன்றத்தில், இலங்கை அதிபர் மீதும் இந்தியப் பிரதமர் மீதும் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து நான் பேசினேன். காங்கிரஸோடு கூட்டணி இருந்ததால், அண்ணா தி.மு.க. எம்.பி-க்கள் வாய் திறக்கவில்லை.
'என்ன, உங்களுக்கு எம்.ஜி.ஆர். மீது திடீர்க் காதல்? என்று காங்கிரஸ்காரர்கள் கேட்டார்கள். 'அவர் எங்கள் முதல் அமைச்சர். அவரை இலங்கை அதிபர் விமர்சிப்பதை, எள் அளவும் பொறுத்துக்கொள்ள முடியாது. எங்களுக்குள் இருக்கின்ற அரசியல் போராட்டத்தை, தமிழ்நாட்டில் பார்த்துக்கொள்வோம் என்றேன்.
அதன் பிறகு, 1989-களின் தொடக்கத்தில், இலங்கையில் வன்னிக் காட்டில் மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களோடு இருந்த நாட்களில், எம்.ஜி.ஆர். அவர்கள் விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் ஈழத்துக்கும் செய்த உதவிகளை அவர் விவரித்தபோது, நான் மெய்சிலிர்த்துப்போனேன். அதில் இருந்து மேடைகளில் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி, விமர்சிப்பதை விட்டுவிட்டேன்.
தொடக்க நாட்களில் அவரை விமர்சித்ததற்காக நான் வருந்துகிறேன்!''
- ' விகடன் மேடை ' யில் வைகோ ..... Thanks..........
Greetings and good day to everyone. In remembrance of philanthropy Makkal Thilagam Dr. MGR 102nd birthday, we would like to extend our food charity programme invitation to you which will be conducted by MGR Punitha Mandram members which will be held on 19th January 2019 Saturday from 11am onwards at MALAYSIA ASSOCIATION FOR THE BLIND.
Address :13, Jalan Tun Sambanthan 4, Brickfields, 50470 Kuala Lumpur, Wilayah Persekutuan Kuala Lumpur, Malaysia.
As this will be our 3rd successful year of food charity, we thank our past generous contributors who has made possible towards achieving the food charity movement. With a great heart i hope you would kindly accept this as a personal invitation towards the programme. We are also looking forward to your.kind and generous contribution towards the food charity for the Blind. With warm wishes we are looking forward to your generous support and looking forward towards your presence on 19th January 2019 to Celebrate the 3rd consecutive year celebration in the name of our Noble hearted Evergreen Dr.MGR the Mahaan. Thank you.
Warmest & Kind Regards
MGR Punitha Mandram Members /
Singapore MGR /
Dr. MGR Kalaimagal Poonkodi...... Thanks..........
அனைவருக்கும் 2019 புத்தாண்டு, பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்......... மக்கள் திலகம் புகழ் என்றும் வாழியவே....
பலருக்கு தெரியாத புது விஷயம்...
எம்ஜிஆர் படத்தை அறிஞர் அண்ணா திறந்துவைத்தார்...
வடசென்னை-பழைய வண்ணாரப்பேட்டையில்
சர்.தியாகராயா கலை கல்லூரி உள்ளது..
இது 1950 ல் ஆரம்பிக்கப்பட்டது...
நீதிக்கட்சி தலைவரின் பெயரில் இது உள்ளதால் இக்கல்லூரி
நிதி நெருக்கடியில் தவித்தபோது
அப்போதைய காங்கிரஸ் அரசு மூட திட்டமிட்டது..
அக்கல்லூரி தாளாளர்கள் இதை
பேரறிஞர் அண்ணாவிடம் தெரிவித்தனர்..
பேரறிஞர் உடனே எம்ஜிஆரை அழைத்து இப்பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்றார்...அதற்கு எம்ஜிஆர் உடனே ஒரு கலைநிகழ்ச்சியை நடத்தி அதன் மூலம் வந்த வசூலுடன் தனது பணத்தையும் போட்டு நிதி நெருக்கடியிலிருந்து அக்கல்லூரியை காப்பாற்றினார்...
அந்த விழாவில் பேசிய அண்ணா அவர்கள், அக்கல்லூரி ஸ்திரமான நிலையை அடையும் வரை எம்ஜிஆரை அக்கல்லூரியின் அறங்காவலர் குழு தலைவராக இருக்கும்படி கேட்டு கொண்டார்..
அதன் படி எம்ஜிஆர் அக்கல்லூரியின் அறங்காவலராக
1960 முதல் 1962 வரை இருந்தார்...
அந்த சமயத்தில் எம்ஜிஆர் அவர்களின் படத்தை அக்கல்லூரி வளாகத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் திறந்துவைத்தார்...அக்கல்லூரி இன்னும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது... நன்றி:......... Thanks...
கடந்த வாரம் காரைக்கால் P.S.R. DELUX A/C-4K DOLBY DIGITAL அரங்கில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த டிஜிட்டல் "ஆயிரத்தில் ஒருவன் " தினசரி 3 காட்சிகளில் ஒரு வாரம் திரையிடப்பட்டது .
http://i64.tinypic.com/w0g5zc.jpg
கடந்த வாரம் மதுரை ராம் அரங்கில் (04/01/19) முதல் மீண்டும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டது .
http://i66.tinypic.com/289zy90.jpg
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.