https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...64&oe=5E815BBD
Printable View
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...c0&oe=5E81DB24
நன்றி Vcg Thiruppathi H O S
நவம்பர் 24, நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்களால் சி.த என்று செல்லமாக அழைக்கப்பட் திரு.வி.என்.சிதம்பரம் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாள். திரு.வி.என்.சி அவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்காராக அன்றைய முதல்வர் திரு.எம்.ஜி.ஆர் அவர்களால் நியமிக்கப்பட்டார். திரையுலகைச் சேர்ந்த அனைவரும் இவருக்கும் நண்பர்கள். காரைக்குடியில் இவருடைய வீட்டில் நமது இளையதிலகம் நடித்த ராஜகுமாரன், அஜித் நடித்த ராசி ஆகிய படங்களின் படபிடிப்பு நடந்துள்ளது. சென்னையில் உள்ள கமலா தியேட்டர் இவருடையது என்பத...ு குறிப்பிடத்தக்கது.
பல பேர் இவரிடம் பழகினாலும் நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்களிடம் இவர் கொண்டிருந்த அன்பு கர்ணன் கதாபாத்திரத்தை நினைவுபடுத்தும். இவர் வெற்றிக்கு ஒருவன் படத்தில் நமது தலைவர் கமலா தியேட்டருக்கு படம் பார்க்கச் செல்வது போல் வரும் காட்சியில் இவர் நடித்திருப்பார் அதேபோல் ராசி படத்திலும் இவர் நடித்திருப்பார். மேலும் சமீபத்தில் மாபெரும் வெற்றிபெற்ற துாங்காநகரம் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருப்பார்.
மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் இல்லாமல் இவர் வீட்டில் எந்த நிகழ்ச்சியும் நடந்தது கிடையாது. இவரிடம் ஒரு மணி நேரம் பேசினால் 59 நிமிடம் தலைவர் சிவாஜி அவர்களைப் பற்றித்தான் பேசுவார். தான் வாழும் மதுரையில் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களுக்கு தன் சொந்த செலவில் சிலையினைச் செய்தவர் திரு.வி.என்.சி. அவர்கள்.
திரு.வி.என்.சி. அவர்கள் இறக்கும் தருவாயில் தமது புதல்வரிடத்தில் கூறியது, எனக்குப் பிறகும் நான் சிவாஜி அவர்களுக்கு என்னென்ன செய்வேனோ அதைத் தாங்களும் தொடர்ந்து செய்யவேண்டும். நீங்கள் யாரை நம்புகிறீர்களோ இல்லையோ சிவாஜி ரசிகர்களை முழுமையாக நம்புங்கள் எந்தக் காலத்திலும் அவர்களை நம்பலாம். உலகத்திலே சிவாஜி ரசிகர்கள் மட்டும் தான் காசுக்காக இல்லாமல் உண்மையான அன்பு செலுத்துபவர்கள் மேலும் இந்தக் காலத்திலும் நன்றிமறவாத ஒரு கூட்டம் இருக்கிறது என்றால் அது சிவாஜி ரசிகர்கள் கூட்டம் தான்என்று கூறியுள்ளார்.
தற்போது தனது தந்தை விட்டுச் சென்ற பணியினை அவரது தவப்புதல்வர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். திரு.வி.என்.சி வள்ளியப்பன் அவர்கள் நமது மக்கள்தலைவர் சிவாஜி ரசிகர்களிடம் அளவு கடந்த அன்பைப் பொழிகிறார், நமது ரசிகர்களும் வி.என்.சி. அவர்களின் புதல்வர்களை தங்களது உடன்பிறந்த சகோதரர்களாகத் தான் பார்க்கின்றனர்.
திரு.வி.என்.சி அவர்களின் இந்த ஏழாமாண்டு நினைவுநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதை பெருமையாக நினைக்கின்றோம்.
அவருடைய நினைவு நாளில் திரு.வின்.சி புகழ் என்றென்றும் காப்போம் என்று சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை சார்பில், உறுதி ஏற்போம்.
இவண்- கா.சுந்தராஜன், நா.ரமேஷ்பாபு, சோமசுந்தரம்.
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...b0&oe=5E4435F0https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...64&oe=5E4D689F
நன்றி சுந்தர்ராஜன்
மீண்டும் வசந்தமாளிகை வெற்றிவிழா தொடங்கியது.சென்ற வாரம் ஓசூரில் தொடங்கி இந்த வாரம் திருவள்ளூர் மீராவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.அடுத்த வாரம் ஊத்துக்கோட்டை.மீண்டும்...மீண்டும்.....சென்னையில்.. ...விரைவில்.....
நன்றி K S Narsimhan
"ஆல்ப்ஸ் மலையின்சிகரத்தில்...அழகிய ரெய்ன் நதி ஓரத்தில்...மாலைப் பொழுதின் சாரத்தில் மயங்கித் திரிவோம் பறவைகள் போல ". !!!
இன்று 24/11/2019 மெகா டிவி யில் மாலை 04.00 மணிக்கு நடிகர் திலகம் நடித்த மெகா ஹிட் படம். !!!
" சிவந்த மண் " கண்டு களியுங்கள். !!!
... இதில் சிவாஜிகணேசன், காஞ்சனா மற்றும் பலரும் நடித்துள்ளனர். !!!
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...d5&oe=5E40EE83
நன்றி Jeyavel Kandaswami
Thanks to Mr Gopal
over Acting ,Under Play ,natural Acting என்பதை கவனிப்போம்.
முக்கியமாக கவனிக்க வேண்டியது ,ஒரு நல்ல நடிகன் ,இந்த மூன்று முறைகளையும் கையாண்டே ஆக வேண்டும்.மூன்றுமே நடிப்பின் பரிமாணங்களை விளக்கும் மூன்று உத்திகள். இவை எது ,எப்போது பயன் பட வேண்டும் என்று தீர்மானிப்பது ஒரு நடிகர் அல்லது இயக்குனரின் பணியே .ரசிக்க வேண்டியது அல்லது புறம் தள்ளுவது மட்டுமே விமர்சகனின் ,ரசிகனின் வேலை.
நாம் வாழ்க்கையிலேயே ,இந்த மூன்றையும் செய்து கொண்டிருப்போம். ஒருவன் நம்மை இகழ்ந்து விட்டால் ,சட்டையை பிடித்து பாய்ந்து அடிப்பது முதல் வகை. பதிலுக்கு இகழ்வது இரண்டாம் வகை. சீ...போ...என்று அசட்டையாக செல்வது மூன்றாம் வகை.
over acting - ஒரு நடிகன் செய்யக் கூடிய நடிப்பு வகைகளில் மிக கடினமானது ,இந்த வகை நடிப்பை கச்சிதமாக கையாளுவதுதான்.
ஒரு சினிமா என்பது ,ஒரு பெரிய வாழ்க்கையின் முக்கிய பதிவுகளை மட்டுமே தேர்வு செய்து கொடுப்பது. compressed mode எனப்படும் விதத்தில். அப்போது பல வருட நிகழ்வுகளின் விளைவை ஒரே காட்சியில் உணர்த்த விரும்பினால்?வாழ்க்கையில் போல உணர்வுகளை படி படியாக காட்டும் கால அளவு ,திரையில் சாத்தியமில்லை.
வேறு பட்ட மனிதர்களையோ,சரித்திர புருஷர்களையோ,மனநிலை பாதிக்க பட்ட,வினோத குணநலம் நிறைந்த சராசரியிலிருந்து வேறு பட்ட தன்மை உள்ளவர்களையோ,idio -syncrasy ,eccentricity என்பதை உணர்த்தும் போது ,முக்கியமாய் ஸ்டெல்லா ஆல்டர் முறை larger than life பாத்திரங்கள்,chekov முறை மனோ-தத்துவ ஆழம் செல்லும் interpret பண்ண வேண்டிய பாத்திரங்கள் ,Astraud முறையில் உள் மன வேதனையை முகத்தில் cruelty முறை பிரதிபலிப்பு இவற்றில் இந்த மறை நடிப்பு வகை தேர்வு செய்ய பட்டே ஆக வேண்டும்.
காமெடி என்பதில் ,முக்கியமாக slapstick ,situational என்றால் உடல் மொழி,உச்சரிப்பு முறையில் ஈர்க்க,இந்த வகை நடிப்பு அவசியமே.
நோயுற்றவனின் வேதனை, அதீத மனநிலை கொண்ட காதலன் ,இயல்பு மாறி தடம் புரண்டவன்,இவற்றையெல்லாம் காட்ட அவசியம்.
முக்கியமாக ,வேறு பட்ட நடிப்பை தர விரும்பும் எந்த நடிகருமே ,பின் பற்ற வேண்டிய பாணி. ஆனால் இதை நன்கு செய்ய, அங்கீகரிக்க வைக்கும் வகையில் நடிக்க,தேர்ந்த,மிக சிறந்த நடிகர்களால் மட்டுமே முடியும்.
Natural Acting - இது ஒரு சில படங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஒரு சம கால பாத்திர proto -type சித்தரிப்பு, ரியலிஸ்டிக் படங்கள், மற்றும் தன் இயல்பை மீறி வேறு பட்டு நடிக்க தெரியாத நடிகர்களை இயக்குனர் பயன் படுத்தும் போது ,இதை தவிர வேறு வழியில்லை.இது மிக சுலபமானது.தன்னை போலவே,வந்து போய் கொண்டிருப்பது கஷ்டமா என்ன?
ஆனால் இதிலும், ஒரு புது பரிமாணம் காட்டும் வித்தை ,தேர்ந்த கலைஞனால் மட்டுமே முடியும். உதாரணம் சமகால சரித்திர நாயகர்கள் வ.வு.சி ,ஒரு சமகால கலைஞன் தில்லானா சண்முக சுந்தரம், ஒரு வாழ்க்கை பிறழ்வு கொண்ட கிராம பெரிய மனிதர் முதல் மரியாதை ,என்று பாத்திரங்களுக்கேற்ற வேறு படுத்தல் ,உன்னத உயர்ந்த நடிகர்களுக்கே சாத்தியம்.
underplay - இது கம்பி மேல் நடக்கும் வித்தை. ஆனால் இத்தகைய நடிப்பை ,ஒரு தேர்ந்த கதாசிரியர்,இயக்குனர்,காமெரா கலைஞர்,எடிட்டர் தங்கள் பணியை செவ்வனே செய்தால் மட்டுமே ,நடிகனுக்கு சாத்திய படும் ஒன்று. அமைதியான கதாபாத்திரங்களுக்கு,மற்ற படி இயக்குனர்களின் நடிகனுக்கென்று ,அமைந்த பாணி. deliberate under play ,non -Acting அல்லது non -performance என்பதோடு குழப்பி கொள்ள கூடாது.
இந்த மூன்றையும் தேர்ந்து செய்ய தெரியாதவன் ,நடிகன் என்று சொல்லவே யோக்யதை அற்றவன்.
அத்துடன் எப்படி இந்த மூன்றை இணைப்பது ,அல்லது எந்தெந்த படத்திற்கு எவை என்பதை ,நடிகர்திலகம் அளவு புரிந்து வைத்த நடிகர்கள் உலகளவில் யாருமில்லை.(இத்தனைக்கும் இயக்குனர் பங்கில்லாமல்)
மிக வலுவான கதைக்கு,அல்லது தணிய வேண்டிய பாத்திரங்களுக்கு natural Acting .(தில்லானா மோகனாம்பாள்,மோட்டார் சுந்தரம் பிள்ளை)
வேறு பட்ட பாத்திரத்தின் மீது மட்டும் சுமையேற்ற பட்ட படங்களுக்கு over Acting முறை(வியட்நாம் வீடு,கவுரவம்,தங்க பதக்கம் )
இயக்குனர்களின் பணி செவ்வனே நிறையும் படங்களுக்கு underplay .(தேவர் மகன்,உயர்ந்த மனிதன்,முதல் மரியாதை,அந்த நாள்,ராஜபார்ட் ரங்கதுரை )
ஒரு காட்சியில் ,இந்த மூன்றையும் கலப்பார். நீலவானம் ஆபரேஷன் செல்லு முன் குரூப் போட்டோ எடுக்க ஆசைபடும் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற அவர் மாமனாரிடம் வேண்டும் காட்சி. முதலில் natural Acting பாணியில் மாமனாரிடம் வேண்டுவார்.மறுக்கும் மாமனாரிடம் பொங்கி உணர்ச்சி வசப் படுவார் over acting பாணியில். திரும்பி நடக்க முற்பட்டு ,மறுபடியும் திரும்பும் போது ,கீழ்குரலில் வந்துருங்க என்று underplay செய்வார். இந்த சீன் மெருகு பெற்று விடும்.என்ன நடிகரைய்யா?
ஆனாலும் ஒரு ஸ்டார் என்ற விதத்தில் ,சில சராசரி படங்களில்,சராசரி இயக்குனர்களுடன் பணியாற்றும் போது (தமிழ் படங்கள்)அவர் மேல் நாட்டு நடிகர்கள் மாதிரி ,அந்த பாத்திர இயல்பை மட்டும் சித்தரித்து கடந்து செல்ல முடியாது.(அதுவும் அரசியல்,போதனை,கொள்கை,தற்புகழ்ச்சி என்ற பஞ்ச்கள் நிறைந்து கலையை ஆக்கிரமித்து நின்ற தமிழ் பூமியில் , சி சென்டர் ரசிக கண்மணிகள் வேறு,அறியாமை நிறைந்த பூமி) .இங்கே சில நடிப்பை மீறிய சில scene capturing gimmicks ,inappropriate Acting செய்ய பட்டால்தான் ஸ்டார் ஆக நிலைக்க முடியும். அறிந்தே செய்த தவறுகளும் ரசிக்க பட்டன பலரால். இதை
புன்(ண்)முறுவலுடன் நடிகர்திலகமே சொல்லியுள்ளார் பலரிடம்.
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...ee&oe=5E4DEF5C
நன்றி Vasudevan Sri
நடிகர்திலகத்தின் அரைநூற்றாண்டு
கலைப்பயணத்தின் ஒன்பதாம் ஆண்டில்
சில நிகழ்வுகளின் பதிவுகள்...
#1960ம் ஆண்டின் இறுதி நாளில் வெளியான விடிவெள்ளி நூறுநாள் ஓடி வெற்றி கண்டது.
மற்றவை நிழற்படத்தில்...
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...fb&oe=5E8CB8A3
நன்றி Nilaa
சிவந்த மண் பொன்விழா
-------------------------------------------
எப்படி சிவந்த மண் திரைப்படம் 9-11-69 அன்று வெளியான போது கொட்டும் மழையோ அதே போல் நேற்று பொன்விழாவின் போதும் விழாவே நடத்த முடியாத அளவு கொட்டும் மழை.
கடுமையான மழையையும் பொருட்படுத்தாமல் நடிகர் திலகத்தின் அன்பு இதயங்கள் மற்றும் இளைய திலகம் பிரபு மன்ற அனைத்து நிர்வாகிகள் ,சென்ட்ரல் திரையரங்கு உரிமையாளர்கள் , ஊழியர்கள்,மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவுக்கு சிறப்பு சேர்த்தனர்.அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்...றிகள்.
தியேட்டர உரிமையாளரகளுக்கு மரியாதை செய்யப்பட்டு பொன்விழா ஷீல்டு வழங்கப்பட்டது..அதன் பின் 20 ஊழியர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.பின்பு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது்.விழா எளிமையாக இனிதே முடிவு பெற்றது.இத்தகைய சிறப்பான விழாவிற்கு ஒத்துழைத்து கொடுத்த நல் உளளங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
அன்புடன்
மதுரை சிவாஜி ஃபைன் ஆர்ட்ஸ்
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...9a&oe=5E859A1B
நன்றி Chandrasekaran Veerachinnu
தன் தோல்வியிலும் மற்றவர் உயர்வுக்கு ஏணியாய் இருந்தவரை
என்றும் வணங்குவோம்.
இனிய காலை வணக்கம்.
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...80&oe=5E495698
நன்றி குப்புசாமி குருஷ்ணமூர்த்தி
இன்று 26.11.2019 (செவ்வாய்) தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள நடிகர் திலகத்தின் காவியங்கள் ..
காலை 8.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில்.....#நீதிபதி,
நண்பகல் 12.05 மணிக்கும்... மீண்டும் இரவு 11 மணிக்கும்...
பொதிகை தொலைக்காட்சியில்...#குலமகள்ராதை,
நள்ளிரவு 11 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில்.....#திருமால்பெருமை
காவியங்களை காண்போம்!
கலையுலக பிதா மகனை போற்றுவோம்!!
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...d4&oe=5E3E8FFAhttps://scontent.fyzd1-2.fna.fbcdn.n...5a&oe=5E3EA268
நன்றி Sheik Ali
1988 ல் மறு வெளியீடு
திரிசூலம்
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...11&oe=5E7B8EFF
நன்றி நிலா