-
புதிய மாணவ மாணவிகளுக்கு ஹாஸ்டல் விதிகளை விளக்கினார் Dean.
"Ladies ஹாஸ்டல்ல பசங்க யாரும் போகக்கூடாது.யாராவது அத்துமீறிப் போனா முதல் தடவை 100 ரூபா ஃபைன் கட்டணும்.
மறுபடியும் ரெண்டாவது தடவையா நுழைஞ்சா 200 ரூபாய் கட்டணும்.
மூணாவது தடவையா மாட்டினா 500 ரூபா கட்டணும்.ஜாக்கிரதை " என்றார் .
மாணவன் "சீசன் பாஸுக்கு எவ்வளவு ஆகும்
-Madurai Medicos.
-
பிச்சைக்காரன்: ஐயா பிச்சை போடுங்கய்யா.
வீட்டுக்காரர்: வந்திருவீங்களே. திருவோட எடுத்துக்கிட்டு!!!. காலம் மாறினாலும் நீங்க மாற மாட்டீங்களா?
பிச்சைக்காரன்: சரி. இந்தாங்கய்ய..
வீட்டுக்காரர்: என்ன? என்ன நம்பர் இது?
பிச்ச்சைக்காரர்: என் பேங்க் அக்கவுண்ட் நம்பர். ஆன்லைன் ட்ரான்ஸ்சாக்சன் பண்ணிடுங்க..
-
மேடம் ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்? வழி சொல்றீங்களா?
Timeline ல நேரா போயி அப்படியே "Right Click" பண்ணி அப்படியே "Like" பண்ணினா ஹாஸ்பிட்டல் வரும் சார்...
-Madurai Medicos
-
டாக்டர் ; உங்க புருஷனுக்கு எங்கெல்லாம் காயம் இருக்குங்கறதை எப்படி இவ்வளவு கரெக்ட்டா சொல்றீங்க?
மனைவி; கடிச்ச எனக்குத் தெரியாதா ?
-
நோயாளி : ஹலோ டாக்டர்... உங்களை வந்து பார்க்கணும்... நீங்க எப்ப ஃப்ரீ?
டாக்டர் : எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடயாது... பீஸ் வாங்குவேன்.....
-
வக்கீலும் டாக்டரும்
வக்கீல்: டாக்டர்! பிரேதப் பரிசோதனை செய்றதுக்கு முன்னாடி நாடித்துடிப்பை செக் பண்ணிப் பார்த்தீங்களா?
டாக்டர்: இல்லை
வக்கீல்: ரத்த அழுத்தத்தை சோதிச்சீங்களா?
டாக்டர்: இல்லை
வக்கீல்: மூச்சுக்காத்து வருதான்னு பார்த்தீங்களா?
டாக்டர்: இல்லை
வக்கீல்: அப்ப உயிர் இருந்திருக்கிற வாய்ப்பு இருக்குதானே!
டாக்டர்: இல்லை
வக்கீல்: எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?
டாக்டர்: ஏன்னா அந்த பேஷண்டோட மூளை என் முன்னாடி ஒரு ஜார்லே இருந்தது.
வக்கீல்: மூளை இல்லாம கூட உயிர் வாழ வாய்ப்பு இருக்கிறதல்லவா?
டாக்டர் (கிண்டலாக): இருக்கு. வக்கீலா பிராக்டிஸ் செய்யக்கூட வாய்ப்பிருக்கு.
-
டாக்டர்: இந்த நோய் குணமாகணும்னா தினமும் 10 டம்ளர் தண்ணீர் குடிக்கணும்!
Mr X: அது மட்டும் முடியாது டாக்டர்!
டாக்டர்: ஏன்?
Mr X: எங்க வீட்டுல 4 டம்ளர்தான் இருக்கு.
-
ஜிட்டு : எதுக்கு ரத்த சம்பந்தமான புத்தகங்களை விழுந்து விழுந்து படிக்கறே?
பிட்டு : நாளைக்கு எனக்கு ப்ளட் டெஸ்ட்!!!!!!!
-
ஜிட்டு : எதுக்கு ரத்த சம்பந்தமான புத்தகங்களை விழுந்து விழுந்து படிக்கறே?
பிட்டு : நாளைக்கு எனக்கு ப்ளட் டெஸ்ட்!!!!!!!
-
உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை..
ஏன் தெரியுமா?
“பேனா” முனை உன்னை குத்திவிடுமோ என்று..
-
டாக்டர்: "பீட்ரூட்டை பச்சையா சாப்பிடச் சொன்னேனே சாப்பிட்டாயா ?"
பாலு: "இல்லை"
டாக்டர்: "ஏன் ?"
பாலு: "அது முடியாதே டாக்டர் !"
டாக்டர்: "ஏன் முடியாது ?"
பாலு: "நீங்களோ பீட்ரூட்டை பச்சையா சாப்பிட சொல்றீங்க. ஆனா அது சிவப்பா இல்லே இருக்கு!
-
1 சிறுவன்"எங்க பாட்டிக்கு 3 காது."
2 சிறுவன்"அது எப்படி.?"
1 சிறுவன்"ஒன்னு வலது காது. இன்னொன்னு இடது காது . மூனாவது கேட்காது."
-
சான்டா - "டாக்டர், நான் தெரியாம சாவியை முழுங்கிட்டேன்"
டாக்டர் - "எப்போ நடந்தது?"
சான்டா - "அது ஆச்சு மூணு மாசம்"
டாக்டர் கோபமாக - "இத்தனை நாள் என்ன செஞ்சீங்க?"
சான்டா - "டூப்ளிகேட் சாவி உபயோகபடுத்தினேன், இப்போ அதுவும் தொலைஞ்சி போச்சு"
-
கணவர்:"கமலா, இந்த பொடுகு மருந்தை தேய்ச்சி விடேன்..!"
மனைவி: "ஏன், நீங்களே தேய்க்க கூடாதா..?"
கணவர்: "அரக்கி தேய்க்கணும்னு டாக்டர் சொல்லி அனுப்பினார்.. அதான்..!"
-
டாக்டர்..- உங்கதூக்கத்திலே நடக்கிற வியாதிக்கு
மருந்து எழுதிக்கொடுத்தேனே..நல்லா வேலை செய்யுதா? எப்படிஇருக்கு?
பேஷன்ட் டாக்டர் சார் - முன்னைக்கு இப்ப நல்ல இம்ப்ரூவ்மென்ட் தெரியுது . இப்போ தூக்கத்துல நடக்கிறதில்லை. பைக்கையெடுத்துக்கிட்டு பெரிய ரவுண்டு போயிட்டு வந்திடறேன் !!??!!??….
-
திருமணமானவர்கள் * கீழே படிக்கவேண்டாம் :
ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்..!
வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததை*க் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது.
அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் * கண்டார்.
மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று, இதமாகக் கையைப் பிடித்து, “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார்.
கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா..?
20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே..?
மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது.
கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே..?
மனைவி: ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்)
கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து “மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா..?
இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?” என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா..?
மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன..?
கணவன் கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்...!
Sandiya Sankar
-
கணவர்: "எதிர்த்த வீட்டுப்பெண் ரொம்ப மோசம். வாய்க்கு வாய் கணவன் பெயரைச் சொல்லியே கூப்பிடுகிறாள். அது நல்லாவா இருக்கு.??!"
மனைவி: "அடுத்த வீட்டுப் பிரச்சனை நமக்கு எதற்கு ? நீங்க சாப்பிட வாங்க பாலா."
-
-
-
என்ன சார்! காகிதப்பூ வாங்கிட்டு போறீங்க?
என் wife dress பண்ணிட்டு கிளம்புறதுக்குள்ள நிஜப்பூ வாடிப் போயிடுமே அதான்!
-
அம்மா: “ஏன்டா அழுவுற..!”
மகன்: “அப்பா எனக்கு kiss கொடுக்க மாட்டேங்குறார்.”
அம்மா: “நீ.. நல்லா படிடா.. அப்பா கொடுப்பாரு..”
மகன்: “நம்ம வீட்டுக்கு வேலைக்கு வர பொம்பள மட்டுமென்ன iasசா படிச்சிருக்கு..? அதுக்கு கொடுக்குறாரு..!”
-
கணவன்: "என்னடி, இப்படிக் குரங்கு மாதிரி குழந்தையை கருப்பா பெத்திருக்கே .?"
மனைவி: "என்ன செய்யறது, குழந்தையாவது நல்ல அழகா பிறக்கணும்னு நினைச்சேன். அதுவும் உங்களமாதிரியே பிறந்திருக்கு..."
-
மனைவி: “உங்களுக்கு ‘ராணி’ன்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு ஏன் என்கிட்ட சொல்லல.?”
கணவர்: “சொல்லலையா.? உன்னை ராணி மாதிரி வெச்சிருப்பேன்னு அன்னிக்கே சொன்னேனே.!”
-
ஒருவர்: “நேற்று சாய்ந்தரம் என் மனைவி வாக்கிங் போனபோது மனைவி கண்ணில் தூசி பட்டு நூறு வெள்ளிக்கு மேல செலவு.!”
இன்னொருவர்: “நீ எவ்வளவோ கொடுத்து வெச்சவன்டா. நேற்று மாலை மனைவியின் கண்ணுல பட்டுப்புடவைப் பட்டு ஆயிரம் வெள்ளி செலவு.!”
-
"டாக்டர் என் மனைவிக்கு ஞாபகமறதி அதிகமாயிருச்சு"
"என்ன செய்றாங்க"
"நான்னு நினைச்சி பக்கத்து வீட்டுக்காரரை அடி பிச்சி எடுத்துட்டாளே.!"
-
"எனக்கு மாமியாரால் எந்தப் பிரச்னையும் இல்லை. அவருக்கு 'ஆடியோ'வும் இல்லை.. 'வீடியோ'வும் இல்லை."
"இது புதுசா இருக்குதே.?"
"மாமியாருக்கு கண்ணும் தெரியாது, காதும் கேட்காது என்பதைத்தான் நாகரீகமாகச் சொன்னேன்."
-
மனைவி: "நம்ம பையன் என்னவாக வரணும்னு ஆசைப்படுறீங்க.?"
கணவர்: "அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும், யாருக்கும் புருசனா மட்டும் ஆகக்கூடாது. நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்!!"
-
பிச்சைக்காரன்: "ஐயா..டீ குடிக்க நாலு வெள்ளி தாங்க ஐயா"
நம்மாள்: "ஏன்யா, ஒரு டீ ரெண்டு வெள்ளிதானே, நீ நாலு வெள்ளி கேட்கிற..?"
பிச்சைக்காரன்: "என் கேர்ள் பிரண்டுக்கும் சேர்த்துதான்யா."
நம்மாள்: "அடப்பாவி. நீயே பிச்சைக்காரன் . உனக்கு கேர்ள் பிரண்டா ."
பிச்சைக்காரன்: "காதலிச்சப்புறம்தான்யா இந்த நிலமைக்கு வந்துட்டேன் .."
-
"கண்டக்டரைக் கட்டிக்கிட்டது தப்பாப் போச்சு"
"ஏன்..?"
"அவர் வேலைக்குப் போகும்போது, வாசற்படியில் நின்னு நான் கைகாட்டினா... உள்ளே போ படியில் நிக்காதேன்னு கத்துறார்"
-
-
தாத்தாவுக்கு 60ம் கல்யாணம் அன்று...
பேரன்: "கல்யாணத்துக்கு நேரமாகுது. உடனே வாங்க தாத்தா, புதுவேட்டி புதுசட்டையெல்லாம் எடுத்திருக்கோம். வந்து போட்டுக்குங்க தாத்தா."
தாத்தா: "போங்கடா.. வேட்டி சட்டை மட்டும் புதுசா எடுத்திருக்கீங்க. பொண்ணு மட்டும் அதே பழசுதானா.!"
-
ஒருவரது தென்னந்தோப்பில் மரத்தில் ஏறி ஒரு சிறுவன் தேங்காய் திருடிக் கொண்டிருந்தான்...
“டேய், தேங்காயா திருடுறே? இரு. உன் அப்பாக்கிட்ட சொல்லி உதைக்க சொல்றேன்”
“போய் சொல்லு. எங்க அப்பா இங்க இருக்கிற பத்தாவது மரத்துலதான் தேங்காய் பறிச்சிக்கிட்டு இருக்காரு.”
-
"படத்துல பித்துப்பிடித்து ஒரே திசையில பார்த்திட்டு இருக்கற மாதிரி ஒரு கேரக்டர் வருது.. யாரைப் போடலாம் ?”
“ஏன் உங்களுக்கு முன்பு வாய்ப்பு கொடுத்த படத்தயாரிப்பாளரையே போடலாமே.”
-
என்ன சார்! காகிதப்பூ வாங்கிட்டு போறீங்க?
என் ஒயிஃப் ட்ரெஸ் பண்ணிட்டு கிளம்புறதுக்குள்ள நிஜப்பூ வாடிப் போயிடுமே அதான்!
-
கல்யாண வீட்டில் செருப்பை தொலைத்தவன் எழுதிய கவிதை
*********
"உள்ளே ஒரு ஜோடி சேர்ந்துவிட்டது"
"வெளியே ஒரு ஜோடி தொலைந்துவிட்டது"
-
சுகிரி: முன் வைத்தகாலை பின் வைக்க கூடாது. ஏன்?
இடிபிஎஸ்:தெரியலை
சுகிரி:பின்னு குத்திடும்.
மாலதி: :bigsmile:
-
நானும் அவளும் ரொம்ப
நெருங்கின நண்பர்களும் இல்லை.
ஆனால் இதுவரைக்கும் எங்க ரெண்டு பேர் நடுவுல
இதுவரைக்கும் ஒரு சின்ன சண்டை
கூட வந்தது இல்லை.
கோவம் கூட வந்தது இல்லை.
அவ எனக்கு எந்த உறவு முறை என்று
இதுவரைக்கும் தெரியவில்லை.
ஆனால் அவள் ரொம்ப நல்லவள் !
ஏன் தெரியுமா ?
" நான் யார் கூடவும் பேசக் கூடாதுன்னும்,
நான் யார் கூடவும் போன்ல பேச
முயற்சி பண்ணினாலும் "
என்ன சொல்லுவா தெரியுமா ?
"Your Account Balance is too low to make a call...."
-
மிஸ்டர் பீன் ஒரு நேர்முக தேர்விற்கு செல்கிறார்.
கேள்வி : 'Ford' என்பது என்ன?
திரு பீன் : அது ஒரு வண்டி.
கேள்வி : 'Oxford' என்பது என்ன?
திரு பீன் : மாட்டு வண்டி.
நன்றி *: கௌஷ்
-
(விமான நிலயத்தில்...)
வடிவேலு:சென்னையில் இருந்து மும்பை செல்ல எவ்வளவு நேரம் ஆகும்??
Receptionist :Plz one minute sir...
வடிவேலு:அடங்க் கொக்கமக்கா..என்ன speed...
Receptionist : :cry2: ....
-