re directed to harish :D He is the one who asked this ques.Quote:
Originally Posted by RAGHAVENDRA
Printable View
re directed to harish :D He is the one who asked this ques.Quote:
Originally Posted by RAGHAVENDRA
I like this particular scene in “ Vaa Kanna Vaa”. As you all know, NT plays the character of a telugu speaking (Naidu ??) old man living with his wife and is yearning for love and affection.
The ladies organize “ valaikaapu” in his house and a granny in the crowd asks him to sing a song. NT just excels in this scene as he beautifully brings out the telugu speaking nature of the character on screen by saying with all shyness, “ Sigguga undhi avva “ :) . Just wonderful to watch an old man in a child’s shoes.
:clap:
மன்னிக்க வேண்டுகிறேன் ... ஐயா... ஆவலில் தவறி விட்டேன்Quote:
Originally Posted by rangan_08
ராகவேந்திரன்
இது எல்லா ஊருக்கும் பொருந்தி வரக்கூடியதுதான். தமிழகமெங்கும் பிரம்மாதமாக ஓடிய super hit - class movie முதல் மரியாதை சென்னையில் உதயம் தியேட்டரில் 5 வாரமே ஓடியது என்பதைக் கேள்விப்பட்டுருக்கிறேன். அதைவிட கொடுமை, முதல் மரியாதையை எடுத்துவிட்டு போட்ட ஒரு பாடாவதி மசாலா படம் 7 வாரம் உதயத்தில் ஓடியது தான். (இத்தனைக்கும் அந்த ப்டம் முதல் மரியாதை 100 நாட்கள் ஓடிய - மசாலா படங்களை பொதுவாக ரசிக்கும்- சிறு ஊர்களில் கூட 3 வாரம் தாண்டவில்லை).Quote:
Originally Posted by saradhaa_sn
சென்னையே இப்படி என்கிற போது மற்ற ஊர்கள் ரசனையும் இப்படித்தான் மாறுபடும். எங்கள் நெல்லையில் சில படங்கள் ஓடிய நாட்களை நம் சென்னை நண்பர்கள் சிலரிடம் சொன்ன போது அதிர்ச்சியே அடைந்துவிட்டார்கள். என்னை அடிக்காத குறைதான் போங்கள்.
டியர் ராகவேந்திரன் சார்,
தாங்கள் அளித்த விளக்கத்திற்கு நன்றி!
டியர் செந்தில் சார்,
'தெய்வமகன்' ஆஸ்கார் பட விழாவுக்கு அனுப்பப்பட இருப்பதைத்தான் கேள்வி கேட்ட திரு.எஸ்.எஸ்.மணி அவர்கள் உலகப்பட விழா என்று கேட்டிருக்கிறார்.
அன்புடன்,
பம்மலார்.
முதல் மரியாதை சென்னை சாந்தியில் வெள்ளிவிழா கண்டது.Quote:
Originally Posted by Mahesh_K
hi let me introduce my self iam kumareshan president karnataka state prabhu fans welfare assn Banglaore.
can any one discuss about One song in Rajapart Rangadurail
Yes. I was told by a friend that the collections improved later and the film had a very good run with houseful shows even during 20th- 21st weeks.Quote:
Originally Posted by joe
HI MAHESH. iam from Bangalore, those days in Bangalore there was no simaltaneous relase like now, i still remember when we all went to salem towatch this movie. we were so upset, after a week or so again we went to salem we were shocked to see the response, thats why we call him the great NT
One more important message recently kamal hassan had spoken in the function, he mentioned that 12 films were continiously flop of NT other NT nobody colud survive if 12 films flops were given and the 13th movie Mudhal Maryadai was a hit , he says only one actor who can do all this is the great men Dr,Sivajiganesan
இளைய திலகம் பிரபு அவர்களின் இனிய ரசிகர்களின் படைப்புகளுக்கு மேலும் ஒரு பங்களிப்பாக வந்திருக்கும் குமரேசன் அவர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள். தங்கள் வருகையாலும் பதிவுகளாலும் இத்திரி மென்மேலும் மெருகேறட்டும் வளரட்டும்.
ராகவேந்திரன்
திரு கமல்ஹாஸன் அவர்கள் மட்டுமல்ல பலர் இதைப் போன்ற தகவல்களை கூறி வருகிறார்கள். தயவு செய்து அந்த படங்களைத் தேதி வாரியாகவும் எத்தனை நாட்கள் ஓடியது என்றும் அவர்கள் விளக்கினால் நன்றாக இருக்கும். நமக்கும் உதவியாக இருக்கும்.
ராகவேந்திரன்.
raghavendra please help me how to add a image
Kumaresan,
How to add image ..answer is already given to you in Prabhu thread and someone even send Personal Message to you .
Kindly don't digress NT thread ..If any help ,pls send PM to any of us . :)
காலத்தை வென்ற காவியம். உடன் பிறந்தவர்கள் பாசத்திற்கு இலக்கணம் வகுத்த ஓவியம் அன்று முதல் இன்று வரை ஏன் தமிழ் கூறும் நல்லுலகம் இருக்கும் வரை அண்ணன் தங்கை அன்பை அடையாளப்படுத்தவும் அளவுக்கோலாக கொள்ளவும் விளங்கப் போகும் நடிப்பின் நாயகனின் பாசமலர் தனது பொன் விழா ஆண்டில் இன்று [27th May] அடியெடுத்து வைக்கிறது. இந்நாளில் இந்த திரைக்காவியத்தை நமக்கு வழங்க உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி சொல்வோம்.
அன்புடன்
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 25
கே: கலைக்குரிசில் கணேசனின் அன்றைய நடிப்பிற்கும், இன்றைய நடிப்பிற்கும் காணப்படும் வித்தியாசம் என்ன? (க.ஏ.தாசன், மா.சூசைநாதன், தங்கவயல்)
ப: அன்றைய நடிப்பு சுவையான பால். இன்றைய நடிப்போ அதோடு தேனும், முக்கனியும் கலந்தது. சுவைக்கு கேட்க வேண்டுமோ!
(ஆதாரம் : சினிமா கதிர், ஜூன் 1964)
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 26
கே: சிவாஜிக்குக் கொடுக்கப்படும் வசனத்தை அவர் மனப்பாடம் செய்வாரா? (சிவாஜி சுந்தர், குரோம்பேட்டை)
ப: ஒரு முறை படிக்கச் சொல்லிக் கேட்பார். அப்புறம் மளமளவென்று பேசி விடுவார். புதிதாக நடிக்க வருபவர்கள் தான், அவர் படங்களில் பேசிய வசனங்களை மனப்பாடம் செய்து வைத்துக் கொண்டு, நான் அவரைப் போலவே வசனம் பேசுவேன் என்று பேசி நடித்துக் காட்டுவதுண்டு.
(ஆதாரம் : பொம்மை, மே 1981)
அன்புடன்,
பம்மலார்.
Som time back I read this
Who is No.1 Great Actor ?
Don't you/we think Actor means variety without any restriction of acting character/pair/duet/image/cooperation and THAN popularity.
One and only IT WAS and IS SivajiGanesan
Not many know that Kannada and Telugu star Saikumar is an avid fan of Tamil legend Sivaji Ganesan. His video library at home has a record collection of Sivaji's films. The collection has video CDs and cassettes of all of Sivaji's films, right from his debut "Parasakti" down to his cinematic swansong, "Poopparikkar Varugiroam". He is also acted in Tamil films as villain.
Recently he is hosting WOW A game show in Eenadu Telugu TV. During the shows, he often mentioned about NT and he always says he a great fan of NT though he acting career very limited in TF.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 27
கே: சிவாஜி கணேசனின் சீரிய பண்புகளில் சிலவற்றைக் கூறுங்கள்? (ப.பூலோகநாதன், சென்னை - 1)
ப: நண்பர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல நோக்கம் கொண்டவர். எஸ்.வி.சுப்பையாவின் 'காவல் தெய்வத்தில்' இலவசமாகவே நடித்துக் கொடுத்தார். அவர் தன்னடக்கம் நிறைந்தவர்.
(ஆதாரம் : பொம்மை, ஜூலை 1969)
அன்புடன்,
பம்மலார்.
ஆசிய ஜோதி பற்றி நடிப்புலக ஜோதி:
(பிரதமர் நேருஜி மறைந்த சமயத்தில் வானொலியில் 31.5.1964 அன்று நடிகர் திலகம் விடுத்த இரங்கல் செய்தி)
(சினிமா கதிர் ஜூன் 1964 இதழிலும் வெளியானது)
"உலகத்தில் உள்ள பூசல்களையெல்லாம் ஒழிக்கப் பாடுபட்டார் நேரு. நேருவைப் போன்ற ஒரு மாபெரும் தலைவரைக் கண்டதும் இல்லை. கேட்டதும் இல்லை. நான் வெளிநாடு போய் இருந்த போது என்னை வெளிநாட்டார் வரவேற்றார்கள். 'நேரு நாட்டில் இருந்தா வருகிறீர்கள்' என்று கேட்டார்கள். நேருவின் பெருமையை நினைத்து பூரிப்படைந்தேன். நம்மையெல்லாம் தவிக்க விட்டுவிட்டு நேரு மரணமடைந்தார். தாயை இழந்ததைப் போல், தந்தையை இழந்ததைப் போல் நாம் தவிக்கிறோம்; அழுகிறோம்; கண்ணீர் வடிக்கிறோம். நேருவின் கொள்கையைப் பின்பற்றி இந்தியாவைக் காப்பாற்றுவோம்."
இன்று 27.5.2010 அமரர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 46வது நினைவு தினம்.
ஆசிய ஜோதிக்கு நமது ஆத்மார்த்தமான அஞ்சலி!
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
பாசத்திலகத்தின் "பாசமலர்" திரைக்காவியத்திற்கு இன்று (27.5.2010) பொன்விழா ஆண்டின் தொடக்கம். அண்ணன் - தங்கைப் பாசம், கூட்டுக்குடும்பத்தின் மகத்துவம், பந்தபாசங்களின் முக்கியத்துவம் போன்ற பாரத புண்ணிய பூமியின் ஆணிவேராக விளங்கும் பாரம்பர்ய பாச உணர்வுகளை உயர்த்திக் காட்டிய உயர்ந்த காவியம் "பாசமலர்". எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும், இம்மலர் ஒரு வாசமிகு வாடாமலர்.
"பாசமலர்" பற்றிய தகவல்களுக்கு, புகைப்படங்களுக்கு கீழ்க்காணும் சுட்டியைச் சொடுக்கவும்:
http://www.paasamalar69.webs.com/
பாசப்பெருக்கில்,
பம்மலார்.
nice one pammalar
hi abkhlabhi i am also from Bangalore, what you said about sai kumar was right, one more information i want to share with all of u in the hub, after NT Passed away he went to chennai to NT house, he was talking with nt family he rquested with kamalamma, that he wanted the CHAPPALS of NT WHICH HE WAS WEARING,
AND HE TOOK THE CHAPPALS AND HE HAS TOLD THEM THAT THIS CHAPPALS ARE IS PRECIOUS THING WHICH HE HAS GOT IN IS LIFE,
WE ARE ALL ARE GREAT TO BE A FANS OF SUCH WONDERFUL HUMAN BEING AND GREATEST ACTOR IN THE WORLD OUR NADIGAR THILGAM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 27
கே: சிவாஜி கணேசனின் சீரிய பண்புகளில் சிலவற்றைக் கூறுங்கள்? (ப.பூலோகநாதன், சென்னை - 1)
ப: நண்பர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல நோக்கம் கொண்டவர். எஸ்.வி.சுப்பையாவின் 'காவல் தெய்வத்தில்' இலவசமாகவே நடித்துக் கொடுத்தார். அவர் தன்னடக்கம் நிறைந்தவர்.
(ஆதாரம் : பொம்மை, ஜூலை 1969)
அன்புடன்,
பம்மலார்.
டியர் பம்மலார் சார்,
நானும் இதை V.K ராமசாமி அவர்களின் பேட்டியில் படித்திருக்கிறேன் S.V சுப்பையா காவல் தெய்வம் படம் முடித்தவுடன் NT அவர்கள் வேறு ஷூட்டிங்கில் இருக்கும் போது ஒரு டிபன் பாக்சை கொடுத்து உங்களுக்கு பிடித்த டிபன் வைத்திருக்கிறேன் என்று கொடுத்தாராம். NT அவர்கள் பிரித்து பார்த்தால் அதில் பணம் இருந்தது. அதை அவர் வாங்க மறுத்தார் என்று படித்திருக்கிறேன்
-deleted due to a hubber's request-
GIRIJA's interview in CNNIBN About NT
http://www.youtube.com/watch?v=HF5o8...eature=related
DEAR KUMARESAN SIR,
HEARTY WELCOME TO OUR THREAD.Even I stay in bangalore in RTnagar area.I have seen you in newspapers in NT and prabhu related functions.Infact I have attended many functions including the one in townhall in 2003 and NT birthday functions which will be held every year in sivanchetty garden area ,prakashnagar area and cottonpet area.I feel very happy to meet you thro' this thread.Expecting many details about NT movies bangalore records.
இன்று முதல் புரசைவாக்கம் சரவணா திரையரங்கில் நடிகர் திலகத்தின் 125-வது திரைக்காவியமான உயர்ந்த மனிதன் தினசரி மூன்று காட்சிகளாக திரையிடப்பட்டிருக்கிறது. இந்த செய்தியை அனுப்பி வைத்த நண்பர் மோகன்[ரங்கன்] அவர்களுக்கு நன்றி.
அன்புடன்
சகோதரி சாரதா, திரு.ஜேயார்,
அசத்தல் தகவல்களுக்கு அன்பான நன்றிகள்!
திரு.குமரேசன் பிரபு அவர்களே, "வருக!, வருக!". தங்களது பாராட்டுக்கும், தகவலுக்கும் நன்றி!
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 28
கே: நீங்கள் கலந்து கொண்ட திரைப்பட விழாக்களிலேயே மறக்க முடியாத விழா எது? (பி.சிவகுமார் பிரபு, திருப்பூர் - 6)
ப: தமிழ்த் திரைப்பட விழாக்களிலேயே பிரம்மாண்டமான விழா சிவாஜிக்கு செவாலியே விருது வழங்கப்பட்ட விழா தான். இனி அப்படி விழாக் கொண்டாடவே முடியாது.
(ஆதாரம் : பிலிமாலயா, செப்டம்பர் 1995)
அன்புடன்,
பம்மலார்.
சிங்கப்பூர் வசந்தம் தொலைக்காட்சியில், வசந்தம் பாக்ஸ் ஆபீஸ் நிகழ்ச்சியில் இன்று 30.05.2010 இரவு சிங்கப்பூர் நேரம் 9.00 மணிக்கு நடிகர் திலகம் இரு வேடங்களில் நடித்த என்னைப் போல் ஒருவன் ஒளிபரப்பாகிறது.
ராகவேந்திரன்
Watched Shanti on Astro Vellithiri today :thumbsup:
Amazing that one movie has ALL great songs. Kannadhasan and V-R were rocking. :2thumbsup:
Film starts with Santhanam (Sivaji) and Ramu (SSR) finishing college and travelling to Trichy - வாழ்ந்து பார்க்க வேண்டும், அறிவில் மனிதனாக வேண்டும்.
Santhanam and mother go for bride-seeking to Madurai and meet Shanti (Vijayakumari). Before that Santhanam meets Mallika (Devika) and is drawn to her.
Discovering that Shanti is blind, the mother rejects the proposal. Devika then consoles Shanti - ஊரெங்கும் மாப்பிளை ஊர்வலம்.
In the meantime, Santhanam meets Devika in Trichy and proposes to her - நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்.
The next scene has Santhanam informing his mother of thier love. You must watch the scene to enjoy it. :rotfl:
Ramu leaves with his greedy Sithappa (MR Radha) who arranges Ramus marriage to Shanti without informing him of her handicap.
Both Shanti and Ramu are happy with the impending wedding - செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன்
Immediately after the wedding, Ramu learns of Shanti's blindness and leaves in a fury.
Santhanam traces him and persuades him to return. Ramu requests for some time and writes to his father in law, that he is returning.
Shanti is overjoyed and sings செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன். A new doctor arrives from Delhi and manages to cure her blindness.
However, Ramu dies in an unfortunate hunting accident and Santhanam comes to deliver the news to Shanti's father (Nagiah) who unable to take the shock, dies of hear attack.
The scheming MR Radha, not wishing to forego the wealth of Shanti, manages to persuade Santhanam to pretend that he is Ramu! Shanti blissfully unaware of the drama, openly welcomes Santhanam into her life.
Thus a web of deceit is built - யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு காலம் செய்த கோலம் நான் வந்த வரவு!
Watch Shanti, to discover how the knot is untied, by master story-teller Bhim Singh!
Yesterday they have shown 'Padithal mattum pothuma'Quote:
Originally Posted by RAGHAVENDRA
இன்று ஞாயிறு [30.05.2010] மாலைக்காட்சி புரசைவாக்கம் சரவணா திரையரங்கில் நடிகர் திலகத்தின் 125-வது திரைக்காவியமான உயர்ந்த மனிதன் படத்திற்கு சென்றிருந்தோம். எங்கள் தங்க ராஜா, பாசமலர் படங்களுக்கு வந்த அந்தளவு கூட்டம் இல்லையென்றாலும் கணிசமான ஆட்கள் வந்திருந்தனர். விளம்பரமே இல்லாமல் இந்தளவு ஆட்கள் வந்தது பெரிய விஷயம்தான். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல் அலப்பறைக்கு எந்த குறையுமில்லை. எத்தனை போஸ்டர்கள் இருந்தனவோ அத்தனைக்கும் மாலைகள், பாலாபிஷேகம், மணி அடித்து சூட தீபாராதனை, 5000 வாலா சரம் வெடித்தல், தேங்காய் உடைத்தல் போன்ற சம்பிரதாயங்கள் பெரும் ஆரவாரத்துடன் அரங்கேறின.
தியேட்டர் அமைந்திருக்கும் ரோடு [Brickline ரோடு?] எப்போதும் மிகுந்த போக்குவரத்து நடைபெறும் சாலை. அது வழியாக சென்ற பேருந்து பயணிகள், காரில் சென்றவர்கள், இரு சக்கர வாகனங்களில் பயணித்தவர்கள் எல்லோரும் ஒரு நிமிட நேரம் நின்று மிகுந்த ஆச்சர்யத்துடனும் மகிழ்ச்சியுடனும் பார்த்து சென்ற காட்சி, அதைப் பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கு களிப்பை உருவாக்கின. இந்த காட்சிகள் எல்லாம் விரைவில் ராகவேந்தர் சார் மூலமாகவும் சுவாமி வழியாகவும் இங்கே இடம் பெறும்.
பிறகு அரங்கத்தில் படம் ஓடிய போது ரசிக கண்மணிகள் எல்லாம் உள்ளே வந்து விட்டனர். ரசனையை பொறுத்த வரை ரசிகர்கள் advanced. எனவே நடிகர் திலகம் அறிமுக காட்சியில் ஆரம்பித்த ஆரவாரம் காட்சியின் தன்மைக்கேற்ப தொடர்ந்தது. கொடைக்கானலுக்கு கார் ஒட்டி வரும் மேஜரிடம் சிகரெட்டை கொடுத்து விட்டு அசோகனிடம் மேஜர் தன் கூடப் படித்ததையும் தன் அப்பாவால் மேஜரின் படிப்பு நின்று போனதையும் சொல்லிவிட்டு bloody fools என்று வெகு இயல்பாக சொல்லுவார் அந்த வசனத்திற்கு, வாணிஸ்ரீயை தேடி வது பேசும் போதும் காட்டும் ஸ்டைல் இவை எல்லாம் ஒரு ரகம் என்றால் பாடல் காட்சிகள் கேட்கவே வேண்டாம். நாளை இந்த வேளை பார்த்து பாடலில் அவரின் துள்ளலான நடைக்கும் துடிப்புக்கும் கைதட்டல், குறிப்பாக பெண்மையே உன் மென்மை கண்டு என்ற வரிகளுக்கு ஒரு சின்ன முகட்டில் தாவி ஏறுவார் அதற்கெல்லாம் அமர்க்களம் என்றால் வெள்ளிக் கிண்ணம்தான் பாடல் அட்டகாசத்தின் உச்சக் கட்டம். முதல் சரணத்தில் [சித்திர விழிகளென்ன மீனோ மானோ] படகு ஒட்டிக் கொண்டே காட்டும் ஸ்டைல் சரணம் முடிந்தவுடன் சுசீலாவின் ஒரு ஹம்மிங் மட்டும் வரும் அது முடிய இரண்டு கைகளையும் ஒன்று மாற்றி ஒன்று முன்னே நீட்டி ஒரு ஸ்டெப் போடுவார். தட்டி தீர்த்து விட்டார்கள். ஒன்றுக்கு மூன்று சூட தட்டுகள் திரைக்கு முன் சுற்றப்பட, படம் நிறுத்தப்பட்டு விட்டது. சில ரசிகர்கள் சென்று பேசி மீண்டும் படத்தை தொடர செய்தனர். ஆனால் ரசிகர்கள் உடனே மீண்டும் ஆரவாரத்தை ஆரம்பித்து விட்டனர்.
அதன் பிறகு அரங்கத்தில் அமைதி திரும்பியது என்று சொன்னாலும் படத்தின் ரசனையான காட்சிகளை ரசிக்க ஆரம்பித்தனர். ரசிக்க ஆரம்பித்தனர். வாணிஸ்ரீயை எரித்து விட்டு ராமதாஸ், சௌகாரை மணந்து கொள்ள மிரட்டும் போது நடிகர் திலகம் கொடுக்கும் ரியாக்ஷன், கண்ணீர் முட்டி நிற்க அதை மறைக்கும் புன்னகையோடு என் இஷ்டமா எல்லாமே எங்க அப்பாவோட இஷ்டம்தான் என இடறும் குரலில் பதில் சொல்வதற்கு, சொல்லிவிட்டு நடப்பதற்கு, பிறகு வரும் மத்திய வயது industrialist ராஜலிங்கத்தின் அறிமுகம், அவர் வீட்டுக்குள் நடந்து வரும் ஸ்டைல், கடைதெருவில் சண்டை போடும் சிவகுமாரை சமாதானப்படுத்தி விட்டு நெற்றியை தொட்டு பார்த்து விட்டு வலிக்கிறதா என கேட்பது, காதலித்தவளை கைப்பிடிக்க முடியாமல் காரணம் சொல்லும் ஜெயசந்திரனை கண்டிப்பது, அவர்கள் சென்றவுடன் தன்னை குத்திக் காட்டும் அசோகனின் வார்த்தைகளால் ஏற்படும் வேதனையை வெளிப்படுத்துவது போன்ற காட்சிகளிலெல்லாம் நல்ல வரவேற்பு. அது போல வேலையிலிருந்து ஓய்வு பெறும் நாகையா நடிகர் திலகத்திடம் கண்ணீர் விட அவர் கையை ஆதரவாக அமுக்குவதன் மூலம் மன உணர்வுகளை வெளிபடுத்தும் காட்சி அப்போதும் நல்ல ஆரவாரம்.
அத்துடன் இடைவேளை. தவிர்க்க இயலாத வேலை இருந்ததால் நான் தியேட்டரிலிருந்து கிளம்பி விட்டேன். சுவாமி அவர்கள் அதற்கு பிறகு நடந்த சுவாரஸ்யங்களை விவரிப்பார்.
அன்புடன்
தியேட்டரில் கிடைத்த செய்திகள்.
சென்னை அமிஞ்சிக்கரையில் அமைந்துள்ள முரளிகிருஷ்ணா அரங்கம் மூடப்படுகிறது. ஆகையால் இந்த வாரம் தினசரி ஒரு நாள் ஒரு படம் திரையிடப்படுகின்றது. அந்த வகையில் வரும் வியாழன் அன்று நடிகர் திலகத்தின் சரஸ்வதி சபதம் திரையிடப்படுகின்றது.
அடுத்த வாரம் இதே சரவணா அல்லது அருகில் இருக்கும் பாலாஜி திரையரங்கில் ராஜபார்ட் ரங்கதுரை வெளியாகலாம் என தெரிகிறது.
வரும் ஜூன் மாதம் 2-வது அல்லது 3-வது வாரம் மகாலட்சுமி திரையரங்கில் நடிகர் திலகத்தின் என்னைப் போல் ஒருவன் வெளியாகிறது
ஜூலை மாதம் அநேகமாக புதிய பறவை பைலட் திரையரங்கில் வெளியாகலாம் என தெரிகிறது..
இது தவிர கர்ணன் மற்றும் சவாலே சமாளி படங்களும் திரையிட தயாராக இருக்கின்றன.
அன்புடன்
NOV,
Thanks for Shanthi - a movie worth watching.
முரளி சார் சொன்னது போல் நம் மக்களின் அளப்பரை இங்கும் தொடர்ந்தது. தகவல் நகரின் பிற பகுதிகளில் அதிகமாகத் தெரியாத காரணத்தால் கூட்டம் ஓஹோ என்று இல்லை. இருந்தாலும் அதையும் மீறி கணிசமான மக்கள் படத்தைக் கண்டு களித்து வருகிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமை 30.05.2010 அன்று மாலைக் காட்சியில் கண்டகாட்சிகள் உங்கள் முன் ஒளிப்படமாக இந்த இணைப்பில் தரப்பட்டுள்ளது
http://ntfans.blogspot.com/
இந்த முறை நல்லபடியாக யாரும் திரைக்கு அருகில் சென்று சூடம் தீபம் காட்டாமல் தொலைவிலேயே காட்டினர். ரசிகர்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். காரணம் நம் மக்கள் உணர்ச்சியின் வேகத்திற்கு கடிவாளம் போடத் தெரியாதவர்கள். பாசமும் நேசமும் அந்த அளவி்ற்கு அவர்களுக்குள் வியாபித்துள்ளன. அவர்களுக்கு நம் உளமார்ந்த பாராட்டுக்கள்.
சரவணா திரையரங்கு என்றுமே எம்.ஜி.ஆர். அவர்களின் திரைப்படங்களின் கோட்டை என அழைக்கப்படும் அரங்காகும். நமது ரசிகர்கள் அங்கே அதிகம் சென்றதில்லை. நிறைய பேருக்கு அந்த அரங்கம் எங்கே உள்ளது எனவும் தெரியாது. நமக்கு தெரிந்த நமது நடிகர் திலகத்தின் முதல் வெளியீ்ட்டுத் திரைப்படம் என்றால் அது நீதி மட்டும் தான். என்னைப் பொறுத்த வரையில் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு முன்னர் காலைக் காட்சியில் அதாவது 10.30 மணி, நடிகர் திலகத்தின் அபூர்வமான படங்கள் திரையிடப் படும். அப்போது பார்த்த பாக்கியவதி படம் தான் நான் அந்த திரையரங்கிற்கு கடைசியாக சென்றது. அதன் பின்னர் நேற்று தான் சென்றேன். அந்த நாளைய நினைவுகள் வந்து போயின. நல்ல வீடு, பாக்கியவதி, போன்ற அபூர்வமான படங்கள் அப்படி காலைக் காட்சியில் பார்த்தது தான்.
திரையரங்கில் ஒரு விநியோகஸ்தரைச் சந்தித்தோம். விடைபெறும்போது அவர் ஆவலோடு சொன்னது மணியான வார்த்தைகள் -
1960-1970 ஆண்டுகளின் எம்.ஜி.ஆர்.-சிவாஜி காலகட்டத்தை மீண்டும் கொண்டு வந்து விடுவோம்.
இடைவேளையின் போது பாடற் காட்சிகள் குறிப்பாக வெள்ளிக் கிண்ணம் தான் மற்றும் அந்த நாள் ஞாபகம் பாடற் காட்சிகள் தனியாக ஒளிபரப்பப் பட்டது குறிப்பிடத் தக்கது.
சரவணா திரையரங்கிற்கு நமது நன்றிகள்.
ராகவேந்திரன்
:shock: In photos ,screen looks like color movie ..how ? :roll:Quote:
Originally Posted by RAGHAVENDRA
Forgot that it was by Bhim Singh, a non-Pa varisai film. Caught it on TV here and there.Quote:
Originally Posted by NOV
A typical comment from my wife, which we fans keep hearing again, and again, "Sivaji looks stylish!!!", and she was especially awed by "Yar Antha nilavu" song, I told her the background story on how NT wanted to better MSV/Kavignar/TMS and ended with just a ciggie prop and overshadowed the rest :lol:
டியர் முரளி....Quote:
Originally Posted by RAGHAVENDRA
டியர் ராகவேந்தர்...
நடிகர்திலகத்தின் திரைப்பட மறுவெளியீடுகளுக்கு நேரில் சென்று நடப்புகளையும், ரசிகர்களின் ஆரவாரங்களையும் இங்கு தொகுத்தளித்து, பங்கேற்க முடியாதவர்களை பரவசமடையச்செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளமைக்கு பல்லாயிரம் நன்றிகள். சென்னை திரையரங்குகளில் நடிகர்திலகத்தின் திரைப்படங்களை ரசிகர்கள் கண்டு களிக்கும் காலம் வராதா என்று ஏங்கி நின்றோரின் ஏக்கங்களைத் தீர்த்து வைக்கும் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் நன்றிகள் பல. 'உயர்ந்த மனிதன்' வெளியீடு பற்றி தினத்தந்தியில் சிறிய விளம்பரம் கொடுத்திருந்தாரானால், பல்வேறு இடங்களிலும் உள்ள ரசிகர்களுக்கும் விவரம் தெரிந்து குவிந்திருப்பார்கள். விளம்பரப்பணத்தைப்போல பல மடங்கு அவருக்கும் வசூலாகியிருக்கும்.
கூட்டம் குறைந்தாலும் அலப்பரைகள் குறையவில்லை என்பதையறிந்து மகிழ்ச்சி.
'சரவணா' திரையரங்கம் அமைந்திருக்கும் ஒட்டேரி ஏரியா மக்களின் ரசனைக்கு ஏற்ப படங்களைத்திரையிடுவதை அத்திரையரங்க நிர்வாகம் வழக்கமாக வைத்துள்ளனர். அதாவது, அடிதடி சண்டைக்காட்சிகள், பொழுதுபோக்கு அம்சங்கள், தடாலடியான காட்சிகள் நிறைந்த படங்களுக்கு அங்கு மவுசு அதிகம். எண்பதுகளின் மத்தியில் நடிகர்திலகத்தின் ராஜா, தங்கச்சுரங்கம், சொர்க்கம் படங்கள் மறுவெளியீடு செய்யப்பட்டபோது அரங்கு நிறைந்த கூட்டத்துடன் பெரிய வரவேற்பைப்பெற்றன. அதே சமயம் நிச்சயதாம்பூலம் திரையிடப்பட்டபோது போதிய வரவேற்பு இல்லை. சமீப காலமாக தொடர்ந்து மக்கள் திலகம் திரு எம்.ஜி.ஆரின் படங்கள் அங்கு வெளியாகி ஓடின. (தொடர்ந்து பதினைந்து வாரங்கள் எம்.ஜி.ஆரின் பல்வேறு படங்களே ஒடியதாகக்கேள்வி). தற்போது நடிகர்திலகத்தின் படங்களுக்கு வழி திறந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ராகவேந்தர் அவர்கள் சொன்னது போல 'நீதி' அங்கு முதல் வெளியீட்டில் 77 நாட்கள் ஓடி வெற்றியடைந்தது. (தேவி பாரடைஸ்- 99, பிரபாத்- 70).Quote:
Originally Posted by RAGHAVENDRA
பொற்காலம் திரும்பட்டும்.Quote:
Originally Posted by RAGHAVENDRA
அடுத்தடுத்த திரையரங்குகளில் நடிகர்திலகம், மக்கள் திலகம் படங்கள் வெளியாகி, இருதரப்பு ரசிகர்களும் அடித்துக்கொள்ளும் கண்கொள்ளாக் காட்சியை மீண்டும் காண ஆவல் :lol: . (ஆனால் இப்போது நிலைமை மாறி விட்டது. நடிகர்திலகத்தின் படங்களுக்கு எம்ஜியார் ரசிகர்கள் தோரணம் கட்டுவதையும், அவர் படத்துக்கு இவரது ரசிகர்கள் கொடி கட்டுவதையும் பார்க்க முடிகிறது. ஆக, இவர்களின் பொது எதிரி புதுப்படங்கள்).