-
-
-
Dear Pammalar vasudevan raghavendra sir
hats off to you all great work
regards
kumareshan prabhu
-
அன்பு பம்மலார் சார்,
நமது நற்றமிழ் நாயகரின் "நவராத்திரி" தசாவதாரம் புகைப்படங்களுக்கு பிடியுங்கள் ஒரு கோடி சபாஷ். தெள்ளத் தெளிவான புகைப் படங்கள். நவரசங்களையும் பிழிந்து காட்டும் நமது நாயகரின் அற்புத முக பாவங்கள் அசரவைக்கின்றன. பதிவிட்டமைக்கு பல்லாயிரம் கோடி பாராட்டுக்கள். மனமுவந்த நன்றிகள்.
"நவராத்திரி"யின் சாதனைகளை சான்றுகளுடன் வெளியிட்டு கூக்குரலிட்ட கோட்டான்களின் வாய்களை அடைத்து விட்டீர்கள்.
நடிகர்திலகத்தின் அனைத்து சாதனைகளையும் உண்மையான ஆதாரங்கள் மூலம் ஊரறிய, உலகமறியச் செய்யும் அரும்பணியில் ஈடுபட்டு அதில் முழு வெற்றியும் பெற்று, எங்களையெல்லாம் தலைநிமிர்ந்து 'நாங்கள் நடிகர் திலகத்தின் ரசிகர்களாக்கும்' என்று பெருமிதத்துடன் உலா வரச் செய்கிறீர்களே....நாங்கள் உங்களுக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்?
நன்றிகளுடன்,
வாசுதேவன்.
-
டியர் சதீஷ் சார்,
தங்கள் மனமுவந்த அன்புக்கு நன்றி. தாங்கள் எங்கள் மேல் வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கைக்கும் நன்றி. தங்கள் எண்ணம் ஈடேற நிச்சயம் முயற்சி செய்கிறோம்.
அன்புடன்,
வாசுதேவன்.
-
டியர் குமரேசன் பிரபு சார்,
தங்கள் அன்பான பாராட்டுதல்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி.
'வசந்த மாளிகை' என்னவாயிற்று?
அன்புடன்,
வாசுதேவன்.
-
டியர் ராகவேந்திரன் சார்,
"வெள்ளை ரோஜா' பதிவுகள் தங்கள் வெள்ளை மனது போலவே எங்கள் உள்ளம் கொள்ளை கொண்டன. பதிவுகளுக்கு பாசமான நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்.
-
Dear sankara1970,
Thank you very much !
vasudevan.
-
சதீஷ் சார்,
நீங்கள் சொல்லியிருக்கும் விவரம் காலம் காலமாக நடந்து வரும் சதி வேலை. அந்த மாயவலையில் விழுந்த இன்றைய தலைமுறையினரும், தங்கள் வலைப்பூக்களிலும், மற்ற பிற இடங்கள் செய்யும் பதிவுகளிலும், ஏதோ ரொம்பத்தெரிந்தவர்கள் போல நடிகர்திலகத்தின் திரைப்பட வெற்றிகளைப் பற்றித்தெரியாமல், அவரை 'சிறந்த நடிகர், திறமையாளர்' என்பதோடு நிறுத்திக்கொண்டு, 'சாதனையாளர்' என்ற பட்டத்தை வேறொருவருக்குக் கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஏன், இவையனைத்தையும் தெரிந்து வைத்திருக்கும் திரையுலகினரும் அப்படித்தான் பேசுகின்றனர்.
இதில் நம்மவர்களின் மெத்தனமும் அதிகம் இருக்கிறது. இதுபோன்ற சாதனைகளைப் பற்றிய ஆதாரச்செப்பேடுகளை வெளியிட்டு, அவர்மீது வேண்டுமென்றே சுமத்தப்பட்டு வரும் களங்கத்தை துடைத்தெறிய வேண்டும் என்று நமது பம்மலார் அவர்களுக்கும், முரளி சார் அவர்களுக்கும், ராகவேந்தர் அவர்களுக்கும் ஏற்பட்ட ஆதங்கமும் அக்கறையும் தலைமை மன்றத்துக்கு எப்போதாவது ஏற்பட்டதுண்டா?. தலைமை மன்றம் எப்போதுமே காங்கிரஸ் கொடிபிடித்து, காங்கிரஸ்காரர்களை அரியணை ஏற்றுவதிலேயே குறியாக இருந்தது. ஒரு படத்தின் 100-வது நாள் விளம்பரத்தில், அப்படம் 100 நாட்கள் ஓடிய அனைத்து அரங்குகளின் பெயர்களும் இடம் பெற்றிருக்கிறதா என்பதைக்கூட பார்ப்பது கிடையாது. தமிழ்நாட்டில் சென்னைக்கு வெளியே ஒரு படம் 100 நாட்களைக்கடப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம். அதை வெளியிடுவதில் தலைமை மன்றம் கவனமாக இருந்து வந்திருக்கிறதா?. இதுவே 'அந்தப்பக்கம்' என்றால் தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும் செத்தான். இதுதான் R.M.வீரப்பனுக்கும், V.C.சண்முகத்துக்கும் இருந்த வித்தியாசம். இதுதான் முசிறி புத்தனுக்கும், சின்ன அண்ணாமலைக்கும் இருந்த வித்தியாசம். ரசிகர்களின் மனநிலை அறிந்து செயல்பட்டவர்கள் அந்தப்பக்கம் இருந்தவர்கள்.
என்னவோ நாம் செய்த பெரும் அதிர்ஷடம், பம்மலார் என்ற மாமனிதர் நம்மிடையே கிடைத்துள்ளார். அவர் அள்ளித்தரும் ஆதாரங்கள் அனைத்தும் வெறுமனே பார்த்து ரசித்து விட்டுப்போவதற்கல்ல. நடிகர்திலகத்தின் ஒவ்வொரு ரசிகரும் தங்கள் கணிணியில் மட்டுமல்ல, தனிப்பட்ட பிளாஷ் மெமோரிகளிலும் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற சந்தர்ப்பம் இனியொருமுறை வாய்ப்பது மிக மிக அரிது.
நம்மவர்கள் தங்கள் இதைப்பட்ட வலைப்பூக்களிலும் இவற்றைக் குறிப்பிட வேண்டும். நமது கணினி வல்லுனர்கள் 'கூகிள் சர்ச்' பகுதியில் Shivaji Movie Ads என்ற பகுதியைத் துவக்கி இவற்றை அதில் இடம்பெறச்செய்ய வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
(வெற்றிக்கேடய்ங்களின் (ஷீல்டுகள்) வரிசையும் இடம்பெற வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை நானும் வழிமொழிகிறேன். நம்மவர்கள் நிச்சயம் செய்வார்கள். போதிய அவகாசம் எடுத்துக்கொள்ள வேண்டுவோம்).
-
அன்புள்ள பம்மலார் சார்,
நடிகர்திலகத்தின் 100-வது வெற்றிக்காவியம் 'நவராத்திரி' படத்தின் வெற்றிச்சான்றிதழ் வரிசை வெகு அற்புதம். ஆறு திரையரங்குகளில் 100 நாட்களைத்தாண்டி ஓடி பெரும் வெற்றிபெற்ற காவியத்தின் சாதனைகளை (இத்துடன் வெளியான முரடன் முத்துவும் 9 வாரங்களைக்கடந்தது) மறைக்க முயற்சித்ததோடல்லாமல், இதற்கு போட்டியாக வந்த வண்ண 'ஓடக்காரனை' ஒரு அரங்கிலாவது 100 நாட்கள் கரைசேர்க்க, படாத பாடுபட்டு, சென்னை அண்ணாசாலை அரங்கில் மட்டும் ஒரு வழியாக ஓட்டி, பட்டியலில் சேர்த்த கதையை ஏற்கெனவே முரளிசார் தெரிவித்துள்ளார். அந்த ஒரே தியேட்டர் பெயரோடு வந்த விளம்பரம் வேறொரு இடத்தில் பார்த்தேன். பிற்காலத்தில் அது வழக்கம்போல மாபெரும் வெற்றிப்படமாக கதை திரிக்கப்பட்டது.
நவராத்திரியின் ஆறு விளம்பரங்களும் அறுசுவை விருந்தாக அமைந்தது. தேடியெடுத்து, பத்திரப்படுத்தி, பறிமாறிய உங்களுக்கு அதிகமான பாராட்டுக்கள். அதைவிட அதிகமான நன்றிகள்.
-
பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் நவராத்திரி திரைக்காவியத்தை சென்னை மிட்லண்ட் திரையரங்கில் நடிகர் திலகத்துடன் பார்த்து அவரை வெகுவாகப் பாராட்டினார். இதைப் பற்றிய ஒரு நிழற்படம், பேசும் படம் ஜனவரி 1965 இதழில் வெளிவந்தது, இங்கே நம் பார்வைக்கு. வெகுநாளானதால் சற்று புள்ளி புள்ளியாகக் காட்சி அளிக்கிறது. இதனை சரி செய்ய முயன்றால் படத்தின் தெளிவு அடிபடுகிறது. எனவே முடிந்த வரை தெளிவாக்கித் தரப்பட்டுள்ளது.
http://i872.photobucket.com/albums/a...amarajNTfw.jpg
-
ராகவேந்திரன் சார் பதிவிட்ட அதே அரிய நிழற்படம் எமது அடுத்த பதிவில், 'பேசும் படம்' ஜனவரி 1965 இதழிலிருந்து...
-
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்
சாதனைச் சிகரத்தின் 100வது திரைக்காவியம்
நவரசத் திலகத்தின் "நவராத்திரி"
[3.11.1964 - 3.11.2011] : 48வது ஆரம்பதினம்
நவரத்தினங்களை மிஞ்சும் பொக்கிஷம்
நவராத்திரியை கர்மவீரர் கண்டுகளிக்கும் நிழற்படம் : பேசும்படம் : ஜனவரி 1965
http://i1110.photobucket.com/albums/...GEDC4968-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
-
Dear goldstar Sathish,
Thank you very much !
With regard to 100 Day - Silver Jubilee Shields, we will try our level best !
Regards,
Pammalar.
-
Dear kumareshanprabhu Sir,
Thank you very much !
Regards,
Pammalar.
-
டியர் வாசுதேவன் சார்,
தங்களைப் போன்றவர்கள் காட்டும் அபரிமிதமான அன்பிற்கும், அளவில்லா பாசத்திற்கும், அளிக்கும் புகழுரைகளுக்கும் நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்?!
தங்களுக்கு எனது சிரம் தாழ்த்திய வணக்கங்களுடன் கூடிய இதயபூர்வமான நன்றிகள் !
"வெள்ளை ரோஜா", மணம் கமழ்கிறது !
அன்புடன்,
பம்மலார்.
-
டியர் mr_karthik,
தங்களின் அன்பான பாராட்டுக்களுக்கு எனது கனிவான நன்றிகள் !
நமது நடிகர் திலகத்தின் 99வது வெற்றித்திரைக்காவியமான "முரடன் முத்து", சென்னை மற்றும் தென்னகமெங்கும் கணிசமான அரங்குகளில் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. அதிகபட்சமாக, கோவை 'இருதயா' திரையரங்கில் 80 வெற்றி நாட்கள். இதே, கோவை மாநகரின் 'ராயல்' திரையரங்கில், "நவராத்திரி" 72 நாட்கள் ஓடி சிறந்ததொரு வெற்றியைப் பெற்றது. "முரடன் முத்து" முதல் வெளியீட்டில் நல்லதொரு வெற்றியை அடைந்த காவியமே.
தனது 100வது காவியம் வெளியான அதே நாளில், தனது இன்னொரு (99வது) காவியத்தையும் வெளியிட்ட அசாத்திய துணிச்சல், ராஜ தைரியம் உலக சினிமாவில் நமது நடிகர் திலகத்துக்கு மட்டுமே கை வந்த கலை. வேறு எவரும் இதனைக் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாது. இரண்டுமே பெருவெற்றிக்காவியங்களாகவும் திகழ்ந்தன.
100வது காவியம் கருப்பு-வெள்ளைக் காவியமாக அமைந்து, அக்காவியம் அபார வெற்றி கண்டதும் தமிழ்த்திரையுலக வரலாற்றிலேயே நமது நடிகர் திலகம் ஒருவருக்குத்தான்.
அன்புடன்,
பம்மலார்.
-
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்
சாதனைச் சிகரத்தின் 100வது திரைக்காவியம்
நவரசத் திலகத்தின் "நவராத்திரி"
[3.11.1964 - 3.11.2011] : 48வது ஆரம்பதினம்
நவரத்தினங்களை மிஞ்சும் பொக்கிஷம்
சிறப்பு நிழற்படம் : NT & NT : நடிகர் திலகமும் நடிகையர் திலகமும்
http://i1110.photobucket.com/albums/...aar/NTNT-2.jpg
அன்புடன்,
பம்மலார்.
-
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்
வெள்ளை ரோஜா
[4.11.1983 - 4.11.2011] : 29வது உதயதினம்
மணம் பரப்பும் இதழ்கள்
முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/...GEDC4964-1.jpg
100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 11.2.1984
http://i1094.photobucket.com/albums/...ar/VR100-1.jpg
வசூல் சாதனைகள் குறித்த ரசிகர் மன்ற குறும்பிரசுரம்[நோட்டீஸ்]
http://i1094.photobucket.com/albums/...tionNotice.jpg
அன்புடன்,
பம்மலார்.
-
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்
கண்கள்
[5.11.1953 - 5.11.2011] : 59வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
சிறப்பு நிழற்படம்
http://i1110.photobucket.com/albums/...angal1-1-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 4.11.1953
http://i1110.photobucket.com/albums/...GEDC4966-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
-
"கண்கள்" 59வது உதயதினம்.
S.V.வெங்கட்ராமன்('கண்கள்' திரைப் படத்தின் இசை அமைப்பாளர்).
http://s3images1.filmorbit.com/media...91277-opt.jpeg http://t3.gstatic.com/images?q=tbn:A...pGPR4CZTkHDN_s
S.V.வெங்கட்ராமன் அவர்களின் தேனிசையில் ஒலிக்கும் 'கண்கள்' படத்தின் சில அற்புத பாடல்கள்.
"ஆளு கனம் ஆனால் மூளை காலி"....J.P.சந்திரபாபு அவர்களின் உற்சாகக் குரலில்...
"பாடிப் பாடி தினம் தேடினாலும்"...
"வருங்காலத் தலைவன் நீயே பாப்பா".. கேட்டு மகிழ...
லிங்க் கீழே.
http://www.inbaminge.com/t/k/Kangal/
எம்.எல்.வசந்தகுமாரி
http://upload.wikimedia.org/wikipedi...220px-MLV1.jpg
"இன்ப வீணையை மீட்டுது அவர் மொழியே" எம்.எல்.வசந்தகுமாரியின் அற்புதக் குரலில். (கம்பதாசன் அவர்களின் காவிய வரிகளில்).
லிங்க் கீழே.
http://www.muzigle.com/album/kangal-...inba-veenaiyai
அன்புடன்,
வாசுதேவன்
-
-
'கண்கள்' திரைப்படத்தில் நம் கண்ணுக்குக் கண்ணானவரும், பண்டரிபாய் அவர்களும். (நிழற்படம்)
http://i1087.photobucket.com/albums/...1355/uuu-1.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
-
கிட்டத்தட்ட ஒரு மாதங்களுக்குப்பிறகு நேற்று மாலைதான் மீண்டும் இண்ட்டர்நெட் இணைப்பு கிடைத்தது. கிடைத்ததும் முதல் வேலையாக நமது இந்த திரியைப் படித்ததுதான். கிட்டத்த்ட்ட 300 பதிவுகளுக்கும் மேலாக இருந்தது. இன்று காலைதான் பார்த்து முடிக்க முடிந்தது. இத்தனைக்கும் நேற்றிரவு ஒரு மணி வரை பார்வையிட்டேன்.
அடேயப்பா எவ்வளவு ஆவணப்பொகிஷங்கள் திகட்டத் திகட்ட அள்ளி வழங்கப்பட்டிருக்கின்றன. அத்தனையும் விலை மதிக்க முடியாத ரத்தினங்கள்.
டியர் பம்மலார்,
கடந்த ஒரு மாதங்களில் நீங்கள் அள்ளி வழங்கியிருக்கும் ஆவணப்பொக்கிஷங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். அடேயப்பா எவ்வளவு சிரமமும் சிரத்தையும் எடுத்துச்செய்திருக்கிறீர்கள். இருப்பினும் இவை காலம் காலமாகத்தொடரும் வண்ணம் அடுத்த தலைமுறையைச்சேர்ந்த எண்ணற்றோர் கைகளில் கொண்டு சேர்த்திருக்கிறீர்கள்.
திருடன், சபாஷ் மீனா, பாவை விளக்கு, பராசக்தி, கீழ்வானம் சிவக்கும், பாபு, சித்ரா பௌர்ணமி, எங்க ஊர் ராஜா, பெற்ற மனம், பட்டாக்கத்தை பைரவன், தேவர் மகன், பந்தபாசம், பைலட் பிரேம்நாத், அவள் யார், பாகப்பிரிவினை, தச்சோளி அம்பு, எங்கிருந்தோ வந்தாள், சொர்க்கம், லட்சுமி வந்தாச்சு, ரங்கோன் ராதா, முரடன் முத்து, நவராத்திரி, டாக்டர் சிவா, வைர நெஞ்சம், வெள்ளை ரோஜா...... என எவ்வளவு படங்களுக்கு எவ்வளவு ஆவணங்களை அள்ளிப் பொழிந்துள்ளீர்கள்.
நினைக்க நினைக்க பெருமையாகவும், பெருமிதமாகவும், அவற்றைவிட ஆச்சரியமாகவும் இருக்கிறது. இங்கு பலர் தெரிவித்தது போல, இவற்றையெல்லாம் நாம் காண முடியுமா எண்ணி ஏங்கியிருந்தவை. எங்கே போய்த்தேட முடியும், யார் வைத்திருப்பார்கள், யார் தருவார்கள். ஆனால் இப்படி ஒருவர் பொக்கிஷப்புதையல்களை நம் வீட்டு நடுக்கூடத்துக்கே வந்து தருகிறார் என்றால், பல நேரங்களில் 'ஏய் சாரூ, கனவு கண்டது போதும். எழுந்திரு' என்று யாரும் எழுப்பி விடுவார்களோ என்றே அச்சம் ஏற்படுகிறது.
இவற்றுக்கெல்லாம், உலகமெங்கிலும் உள்ள நடிகர்திலகத்தின் ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக நன்றி சொன்னாலும் போதாது. கார்த்திக்கின் நண்பர் சேலம் ரெங்கராஜ் சொன்னதுபோல, தாங்கள் பல்வேறு அமைப்புகளால் மிகச்சிறந்த முறையில் கௌரவிக்கப்பட வேண்டும் என்பதே எல்லோருடைய ஆசை, விருப்பம், வேண்டுகோள்.
இப்போது இணைப்புக் கிடைத்து விட்டதால் தொடர்ந்து விரிவாக உங்கள் சாதனைகளைப்பற்றி பதிவிடுகிறேன். நன்றி.
-
டியர் வாசுதேவன்,
சென்ற மாதம் மற்றும் இம்மாதம் வெளியான நடிகர்திலகத்தின் ஒவ்வொரு திரைக்காவியத்துக்கும் நீங்கள் மிகுந்த சிரத்தையெடுத்து படத்தின் நிழற்படங்களையும், பாடல்களின் வீடியோக்களையும் அளித்து வருவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
வைர நெஞ்சம் படத்தில் இடம்பெற்ற 'நீராட நேரம் நல்ல நேரம்' என்ற அற்புதமான பாடலை, யாரும் கண்டுகொள்வதில்லையே என்று நான் ஏற்கெனவே வைர நெஞ்சம் கட்டுரையில் ஆதங்கப்பட்டிருந்தேன். எனது கணிப்பில் வாணி ஜெயராம் பாடிய மிகச்சிறந்த பாடல் அதுதான். என் வாட்டத்தைப்போக்கும் வண்ணம் அப்பாடலின் வீடியோ இணைப்பை அளித்து அசத்தி விட்டீர்கள். என்னுடைய கம்ப்யூட்டரில் வீடியோ பார்க்கும் வசதி இல்லையென்றாலும், தமிழ்கூறும் நல்லுலகுக்குக் கொண்டு சேர்த்த பெருமை உங்களுக்கு உண்டு. (அப்படத்தின் டி.வி.டி.யில் அடிக்கடி இப்பாடலை பார்த்துக்கொண்டிருப்பேன்). இதுவரை பார்க்காத பலரை பார்க்க வைத்த பெருமை உங்களுக்கே.
ஒவ்வொரு படத்தின் ஸ்டில்களின் தொகுப்புகளும், அவற்றில் நடிகர்திலகத்தின் முகபாவங்களும் அருமையோ அருமை. அபூர்வமான படங்களுக்குக்கூட ஸ்டில்களை தேடி அளித்துள்ளீர்கள். நன்றி.
டியர் ராகவேந்தர்,
இத்திரியில் தங்களின் பங்களிப்புகளும் வழக்கம்போல அருமை. அரிய நிழற்படங்களை பதிவிட்டு அசர வைத்துள்ளீர்கள். பெருந்தலைவர் நவராத்திரி படம் பார்க்கும் ஸ்டில் ஒரு சான்று. மற்றும் திரைப்பட விளம்பரங்களும், மாத இதழ்களில் வந்த கிடைத்தற்கரிய ஸ்டில்களும் மிக அற்புதம். நன்றி.
டியர் கார்த்திக்,
'பாபு' படத்தின் தங்கள் மலரும் நினைவுகள் மிக அருமை. பல்வேறு விஷயங்களை ஒரே பதிவில் ஒருங்கிணைத்து தந்து ஒன்ற வைத்து விட்டீர்கள். உங்களின் மற்றைய பதிவுகளும் அவ்வப்போது பல விஷயங்களைத் தாங்கி வருகின்றன. நன்றி.
டியர் முரளியண்ணா,
அடிக்கடி பதிவிடவில்லையென்றாலும், வரும்போது பல அற்புதமான பதிவுகளைத்தந்து வழக்கம்போல மலைக்க வைக்கிறீர்கள். பாபு படத்தின் மதுரை நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்ட விதம் நன்றாக இருந்தது. முன்பு போல முரளியண்ணாவின் பதிவுகளை அடிக்கடி பார்க்க விரும்புகிறோம். நன்றி.
எல்லோருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள்.
-
-
Photo vender Vasu sir
Photo vender Vasu sir,
Expecting for "Kathavarayan" photos... thanks again.
Cheers,
Sathish
-
எங்கள் ஆசானின் "விஸ்வரூபம்" (6-11-1980) 32- ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
Hero ..... 'Nadigar thilagam' Sivaji ganesan
Heroine ....... Sujatha
Director ....... A.C.Thirulokachandhar
Producer ....... G.Hanumantha rao
Actors ....... Major sundarrajan,Manogar,Thengai seenivasan
Actress ....... Sujatha,Manorama,Sridevi
Music director..... M.S.viswanathan
Lyricist ....... Vali, Kannadasan, Pulamaipithan
Playback ....... T.M.soundarrajan,S.P.B,Vani jairam,S.janaki.
Dialog ........ Arurdas
Editor ....... B.kandasamy
Photography...... Viswanatharoy
Art ....... S.krshna rao
Release date...... 06-11-1980
"விஸ்வரூபம்" காவியத்தின் விஸ்வரூபக் கொண்டாட்டங்கள்.
நடிப்புலக வித்தகரின் 'விஸ்வரூப' நிழற்படங்கள்.
http://i1087.photobucket.com/albums/..._000179140.jpg
http://i1087.photobucket.com/albums/..._000831203.jpg
http://i1087.photobucket.com/albums/..._002078360.jpg
http://i1087.photobucket.com/albums/..._002114889.jpg
http://i1087.photobucket.com/albums/..._002473802.jpg
http://i1087.photobucket.com/albums/..._001195962.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
-
-
-
'விஸ்வரூப'த்தின் அற்புதப் பாடல்கள் ஒலி-ஒளிக் காட்சியாக.
எங்கள் குல தெய்வத்திற்கு "கையோடு கள்ளமில்லே...இந்த வாயோடு பொய்யுமில்லே"...
நடிகர் திலகத்தின் வித்தியாசமான நடிப்புப் பரிமாணத்தில் மிளிரும்
"என்ன யாருன்னு நெனச்சே...பண மூட்டையை விரிச்சே"... அசத்தும் அரிய பாடல் வீடியோவாக.
http://www.youtube.com/watch?feature...&v=gZee-FhqZ7Q
"ராஜாதி ராஜனுக்கு ராணி மேலே காதலடி"... என்றும் இனிக்கும் டூயட் பாடல்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Uc9e5YQI7UM
"ஓ...மிஸ்.. நாம் சந்திப்பது எந்தப் பக்கம் காட்டு"... ஸ்ரீதேவியுடன் இளமைத் துள்ளல் டூயட் .
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=msigf98WEI0
"வாழ்க்கையில் எனக்கொரு புது ராகம் வந்ததை எண்ணிப் பாடட்டுமா"...S.P.B.யின் மயக்கும் குரலில், சிம்மக்குரலோனின் உன்னத உதட்டசைவில்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=sQsX199DTUw
"நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து"... சாதனைத்திலகத்தின் அற்புதமான சோக நடிப்பில்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=RMMG7UT3bOA
அன்புடன்,
வாசுதேவன்.
-
-
"விஸ்வரூபம்" திரைப் படத்தின் H.M.V. இசைத்தட்டு.
Viswaroopam M.S. VISWANATHAN 7" EMI HMV EP 1980 7LPE 21558
http://s.ecrater.com/stores/47612/48...310_47612n.jpg http://s.ecrater.com/stores/47612/48...b01_47612n.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
-
சாரதா,
Welcome Back!
செவிக்கு உணவில்லாதபோதுதானே வயிற்றுக்கு ஈஃய வேண்டும். இங்கே சுவாமி என்ற சுனாமி அடித்து கலக்கும்போது அதை ரசிப்பதிலே நேரம் போய் விடுகிறது.
பைலட் பிரேம்நாத் பற்றி நினைக்கும்போதெல்லாம் ஒரு சில விஷயங்கள் நினைவுக்கு வரும். அந்த படம் தயாரிப்பில் இருக்கும்போது எதிர்பார்ப்பு ஏராளமாக இருந்தது. முதன் முறையாக இரு நாடுகளுக்கிடையே ஒரு கூட்டு தயாரிப்பு, சிவந்த மண் மற்றும் அவன்தான் மனிதன் படங்களுக்கு பிறகு வெளிநாட்டில் படமாக்கப்படும் நடிகர் திலகத்தின் படம், இலங்கையில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட படம், மூன்று schedule-களாக படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக நினைவு. அந்த நேரத்தில் இலங்கை வானொலியின் சார்பில் அப்துல் ஹமீது நடிகர் திலகத்தை பேட்டி கண்டு அது இலங்கை வானொலியில் இரண்டு மூன்று பகுதிகளாக ஒலிப்பரப்பட்டது. அந்த நிகழ்வும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை தூண்டியது. சென்னை சபாக்களில் நடிக்கப்பட்ட மெழுகு பொம்மைகள் என்ற மேடை நாடகமே இந்த படம் என்று தெரிந்த போதிலும் மேற்சொன்ன விஷயங்களால் படத்தைப் பற்றிய ஒரு ஆர்வம் இருந்தது. படம் 1978 அக்டோபர் 30 தீபாவளியன்று மதுரை சென்ட்ரல் சினிமாவில் ரிலீஸ் என்று அறிவிப்பு வந்து விட்டது.
இதற்கிடையே அதே அக்டோபர் மாதம் 13-ந் தேதி என்று நினைவு. எங்கள் மதுரை ஸ்ரீதேவியில் பார் மகளே பார் வெளியானது. இந்த படத்தை நினைவு தெரிந்த பிறகு பார்க்கவில்லை என்பதனால் உடனே அந்த படத்திற்கு போனோம். ஞாயிறு மாலை சரியான கூட்டம். படம் ஆரம்பமே அமர்க்களம். அந்த ஆஸ்பத்திரி நடை, நீரோடும் வைகையிலே ஸ்டைல் என்று பிரமாதப்படுத்தி இருப்பார். படம் முடியும் போது simply blown away என்று சொல்லுவார்களே அப்படி ஒரு மனநிலையில் நாங்கள் இருந்தோம். சாதாரணமாக பழைய படங்கள் ஒரு வாரத்திற்குதான் போடுவார்கள். ஆனால் இந்தப் படம் தீபாவளி வரை ஓடியது. அந்த 18 நாட்களில் மூன்று முறை பார்த்தேன்.
தீபாவளி வந்தது. அந்த முறை ஏராளமான படங்கள். தீபாவளிக்கு முதல் நாள் பகல் காட்சி லயன்ஸ் கிளப் அல்லது ரோட்டரியா என்பது நினைவில்லை. அவர்கள் சிவம் தியேட்டரில் நடத்திய தப்பு தாளங்கள் சிறப்புக் காட்சிக்கு போனோம். தீபாவளிக்கு முதல் நாளே வெளியாகி விட்ட மனிதரில் இத்தனை நிறங்களா இரவு காட்சி பார்த்தோம். மறுநாள் காலை தீபாவளி.
காலை ஓபனிங் ஷோவிற்கு சென்ட்ரல் சினிமா போயாகி விட்டது. மிக மிக நெருங்கிய நண்பன் ஒருவனின் பிறந்த நாள் வேறு அன்று. சக சிவாஜி ரசிகனான அவனும் ஜோதியில் கலக்க வந்து விட்டான். படத்திற்கு பெரிய அளவில் அலப்பறை இருந்தது. சுவையாக ஆரம்பித்த படம் கதையின் முக்கிய முடிச்சு விழும் கட்டத்திற்கு வந்த போதுதான் ஆஹா! இது பார் மகளே பார் போலவே இருக்கிறதே என்று தோன்றியது. அப்போது முதல் எங்கள் நண்பர் குழாம் ஒவ்வொரு காட்சியையும் ஒப்பிட்டு பார்க்க ஆரம்பித்து விட்டோம். அப்படி பார்த்தால் சிவலிங்கத்திற்கு முன்னால் பிரேம்நாத்தால் தாக்கு பிடிக்க முடியுமா? படம் முடிந்து வெளியே வருகிறோம். படம் பார்த்து விட்டு வந்தவர்கள் அனைவரும் நல்ல ரிப்போர்ட் சொல்ல எங்களால் மட்டும் அப்படி சொல்ல முடியவில்லை. இந்த ஏமாற்றத்தை போக்க வேண்டுமே! உடனே அனைவரும் கூடி ஒரு முடிவு எடுத்தோம். தீபாவளியை முன்னிட்டு வெள்ளைக்கண்ணு தியேட்டரில் புதிய பறவை வெளியாகி இருந்தது. அதற்கு மாலைக் காட்சிக்கு செல்வது என முடிவு செய்து அதன்படியே சென்றோம். அங்கும் பயங்கர கூட்டம்.ஆனாலும் டிக்கெட் வாங்கி பார்த்த பிறகுதான் தீபாவளி தீபாவளியானது.
பின் மறுநாள் கண்ணாமூச்சி, அடுத்த நாள் வண்டிக்காரன் மகன், அடுத்து தாய்மீது சத்தியம் என வரிசையாக படங்களை பார்த்தோம். அநேகமாக எல்லா படங்களும் பார்த்தாகி விட்டது.சிகப்பு ரோஜாக்கள் மதுரையில் 10 நாட்கள் தாமதமாக ரிலீஸ் ஆனது. அதை தவிர கே.எஸ்.ஜியின் அடுக்கு மல்லி, தேங்காயின் தங்க ரங்கன் எல்லாம் எங்கள் லிஸ்டிலேயே கிடையாது என்பதால் அவற்றை ஒதுக்கி விட்டோம்.
இந்த நேரத்தில் படம் பார்க்காத மற்றொரு நண்பன் வந்து பைலட் படம் பார்க்க கூப்பிட்டான். தயக்கமாக இருந்தது. எல்லோரும் நல்ல ரிப்போர்ட் சொல்கிறார்கள் என்று அவன் சொல்லுகிறான். சரி என்று அவனோடு சென்றோம். படத்தை ஒரு ஒட்டுதல் இல்லாமல் பார்க்க ஆரம்பித்தோம். இந்த முறை அந்த ட்விஸ்ட் காட்சிக்கு பிறகு எந்த வித ஒப்பீடும் இல்லாமல் பார்த்த போது அவ்வளவு மோசமில்லை என்று தோன்றியது. நாம்தான் அதிகமாக எதிர்பார்த்து விட்டோமோ என்று தோன்றியது. அதற்கு பிறகு ஒரு மாதம் கழித்து அடுத்த முறை பார்க்கும் வாய்ப்பு தற்செயலாக கிடைத்தது. இந்த முறை படம் முழுக்க பிடித்தது. அப்படி படம் ஓடி முடிவதற்குள் மொத்தமாக ஒரு ஐந்து தடவை பார்த்து விட்டேன். 70-களிலும் 80-களிலும் வெளி வந்த நடிகர் திலகத்தின் படங்களில் முதல் முறை பார்த்த போது தோன்றிய கருத்து அடுத்தடுத்த முறை பார்க்கும் போது மாறியது என்றால் அது பைலட் பிரேம்நாத் படத்திற்குதான்.
அன்புடன்
இந்த விஷயத்தை திரிக்கு வந்த புதிதிலேயே எழுதியிருக்கிறேன். ஆனால் பலரும் படித்திருக்க வாய்ப்பில்லை என்பதால் இம்முறை சற்று விளக்கமாகவே எழுதியிருக்கிறேன்.
-
டியர் வாசுதேவன் சார்,
"கண்கள்" காவியத்தின் இரு பதிவுகள், இரு கண்கள் !
"விஸ்வரூபம்" காவியத்திற்காக தங்களின் உழைப்பும் 'விஸ்வரூபம்' எடுத்திருப்பது பதிவுகளைப் பார்க்கும் போது தெரிகிறது !
தங்களுக்கு எனது வளமான பாராட்டுக்களுடன் கூடிய மனமார்ந்த நன்றிகள் !
"காத்தவராய"னுக்காக காத்திருக்கிறோம் !
டியர் ராகவேந்திரன் சார்,
"கண்கள்" ஒரிஜினல் பாட்டுப் புத்தக முகப்பு அரிய ஒன்று !
அன்புடன்,
பம்மலார்.
-
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்
விஸ்வரூபம்
[6.11.1980 - 6.11.2011] : 32வது உதயதினம்
சாதனைச் செப்பேடுகள்
காவிய விளம்பரம் : தினத்தந்தி : 1.10.1980
http://i1110.photobucket.com/albums/...GEDC4969-1.jpg
100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 13.2.1981
http://i1110.photobucket.com/albums/...GEDC4970-1.jpg
'100வது நாள் விழா' நிழற்படம் : முரசொலி : 17.2.1981
http://i1110.photobucket.com/albums/...GEDC4971-1.jpg
குறிப்பு:
சென்னை 'சாந்தி'யில் 100 நாள் விழாக் கொண்டாடிய இக்காவியம், 'ஸ்ரீகிருஷ்ணா' திரையரங்கில் 69 நாட்களும், 'புவனேஸ்வரி' திரையரங்கில் 69 நாட்களும் ஓடி மாநகரில் சிறந்த வெற்றி பெற்றது. தென்னகமெங்கும் கணிசமான அரங்குகளில் 10 வாரங்கள் [69 நாட்கள்] ஓடி பெருவெற்றிக்காவியமாகத் திகழ்ந்தது. இவை தவிர, இலங்கையின் கொழும்பு 'கிங்ஸ்லி' திரையரங்கில் 100 நாட்கள் ஓடி அமோக வெற்றி கண்டது.
அன்புடன்,
பம்மலார்.
-
சகோதரி சாரதா,
தங்களுக்கு நல்வரவு !
நான் முன்பு குறிப்பிட்டதையே இப்பொழுதும் குறிப்பிடுகிறேன். தங்களது பதிவு இல்லாத நமது திரி விருந்து இல்லாத திருமணவிழா போலத்தான். தங்கள் பதிவுகளைப் படித்தவுடன் மனதில் மகிழ்ச்சி. தொடர்ந்து தாங்கள் இனி பதிவிடுவீர்கள் என்று அறிந்ததும் இரட்டிப்பு மகிழ்ச்சி.
எப்பொழுதும் போல் தாங்கள் அளித்த உச்சமான பாராட்டுதல்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள் !
தங்களிடம் ஒரு அன்பு வேண்டுகோள். தற்பொழுது "விஸ்வரூபம்" வெளியீட்டு மேளா நமது திரியில் கொண்டாடப்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள் ! சென்னை 'சாந்தி'யில் சிறந்த முறையில் நடைபெற்ற "விஸ்வரூபம்" 100வது நாள் விழா பற்றிய சிறப்புப்பதிவை விரைவில் பதிவிடுவதாக சில மாதங்களுக்கு முன்னர் எழுதியிருந்தீர்கள் ! அந்த சிறப்புப் பதிவை தற்பொழுது தாங்கள் பதிவிட்டீர்களென்றால் அது ஒரு சிறந்த பொக்கிஷப் பதிவாகத் திகழும். "விஸ்வரூபம்" 100வது நாள் விழாவில் தாங்கள் நேரில் கண்டு களித்த நிகழ்வுகளை. தங்கள் அபார எழுத்து நடையில் சிறப்புப்பதிவாகக் காண, என்னையும் சேர்த்து இங்குள்ள எல்லோருமே ஆவலாக உள்ளோம் ! அவசியம் எழுதுவீர்கள் என்று நம்புகிறோம் !
அன்புடன்,
பம்மலார்.
-
டியர் முரளி சார்,
தங்களின் உயர்ந்த உள்ளத்திலிருந்து பொங்கி வரும் பாராட்டுக்கு எனது பொன்னான நன்றிகள் !
"பைலட் பிரேம்நாத்" அனுபவப்பதிவு அருமையிலும் அருமை !
அன்புடன்,
பம்மலார்.
-
Visvaroopam
டியர் பம்மலர்,
விஸ்வரூபம் கொழும்பு கிங்ஸ்லி திரையில் 93 நாட்கள் ஓடியது.
நன்றி
Jeev
-
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்
காத்தவராயன்
[7.11.1958 - 7.11.2011] : 54வது ஜெயந்தி
அர்ச்சனை மலர்கள்
சிறப்புப் புகைப்படம்
http://i1110.photobucket.com/albums/...araayan1-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 29.10.1958
http://i1110.photobucket.com/albums/...GEDC4972-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 14.11.1958
http://i1110.photobucket.com/albums/...GEDC4973-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.