Originally Posted by saradhaa_sn
வரவர இந்தப்பழைய பஞ்சாங்கங்களின் தொல்லை தாங்க முடியலைப்பா. வேறு யார்..?. இந்த தொடரின் ஒரே உறுத்தல் நாயகி கற்பகம்தான் (சத்யபிரியா). பின் என்ன, திருமணம் என்பது இருமனம் ஒத்துப்போகும் ஒரு விஷயம்தான் என்பதை இவர்கள் எல்லாம் எப்போதுதான் உணரப்போகிறார்களோ. உலகம் முழுக்க தம்பதிகளாய், பிள்ளை குட்டிகளோடு சந்தோஷமாக வாழும் அத்தனை பேரும், தந்தையால் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டவர்கள்தானா?. அப்படியே இது சாஸ்திர சம்பிரதாயம் என்று சாக்குப்போக்கு சொன்னாலும், காலமெல்லாம் பெற்ற பிள்ளைகளை மறந்து, 'தந்தை' என்ற தன் கடமையை நிறைவேற்றத் தவறிய ஒருவர் எப்படி ஒழுங்கான தந்தையாவார்?. பையனின் அல்லது பெண்ணின் பிறப்புக்கு மட்டும் அவன் காரணமாயிருந்தால் போதுமா?. அப்படியென்றால், மிருகங்களும் அதைச்செய்கின்றனவே. தந்தையின் கடமையிலிருந்து தவறியவருக்கு, தன் பிள்ளைகளை தாரை வார்த்துக்கொடுக்க என்ன யோக்கியதை இருக்கிறது?. மூளைக்குப்பதிலாக களிமண்ணைத்தலையில் கொண்டுள்ள கற்பகம் போன்ற மரமண்டைகள் இருக்கும் வரை, ஏன் ஆணாதிக்கம் கொடிகட்டிப்பறக்காது?.
அபியின் வீடு.... கறபகம், சாரதா, அபி, ராஜேந்திரன்....
'என்ன காரியம் பண்ணியிருக்கீங்க சித்தி?. எதுக்காக அந்த காஞ்சனா வீட்டுக்குப்போனீங்க?. அந்த மனுஷன் நமக்கு செய்ததைல்யெல்லாம் மறந்துட்டீங்களா?'.
'அபி, சாரதாவாகப்போகலை, நான்தான் போய் அவரை கூப்பிடச்சொன்னேன்'.
'அதுதான் எதுக்கும்மா?'.
'கல்யாணத்தின்போது ஒரு தகப்பன் இருந்து தன் பெண்னை தாரை வார்த்துக்கொடுப்பதுதான் முறை'.
'ஏம்மா உனக்கு கொஞ்சமாவது இருக்கா?. அவர் உன்னைக் கைவிட்டு ஓடிப்போன நாள் முதல், சஷ்டியப்த பூர்த்தி விழா வரையில் அவரால் நமக்கு அவமானங்கள்தான் மிச்சம். அவர் வந்து தாரை வார்த்துக்கொடுக்கலின்னா என்ன கெட்டுப்போகப்போகிறது?. சஷ்டியப்த விழா ஏமாற்றத்துக்குப் பிறகுதான், அவர்கூட எந்த தொடர்பும் இல்லைன்னு சொன்னோமே. அப்புறம் ஏம்மா இதெல்லாம்?. நாம யாரும் அந்த வீட்டு வாசற்படிய மிதிக்கலாமா. எப்போ வருவோம் அவமானப்படுத்தலாம்ணு காத்திருப்பாங்க'
'எனக்கென்னமோ நீ சொல்றதெல்லாம் மனசுக்குமனசுக்கு சரியாப்படலை அபி. அவர் கண்டிப்பா கல்யாணத்துக்கு வரணும்'.
'அக்கா, ஒருவேளை அவர் வருவதா இருந்தல் கூட அந்த காஞ்சனா வரவிடமாட்டாள். அந்த அளவுக்கு பேசிட்டாள்'
'தெரிந்ததுதானே. அவங்க அப்படி பேசலைன்னாத்தான் நாம ஆச்சரியப்படணும். தெரிஞ்சே போய் அவமானப்பட்டு வந்திருக்கீங்க சித்தி. இதுவே ஆனந்திக்கு தெரிஞ்சா ரொம்ப கோபப்படுவா. அவர் வந்து தாரை வார்த்துக் கொடுப்பதாயிருந்தால், ஆனந்தி இந்த கல்யாணத்துக்கே சம்மதிக்க மாட்டாள்'.
யார் என்ன சொல்லியும் கற்பகத்தின் வரட்டுப்பிடிவாதம் தளர்வதாயில்லை. அபி போனதும்....
'என்னக்கா, இப்படி தீர்மானமா இருக்கிற பொண்ணுங்களை எப்படி சம்மதிக்க வைக்கப்போறீங்க?.
'சாரதா, இவங்களை எப்படி சம்மதிக்க வைக்கிறதுன்னு எனக்கு தெரியும்' (வேறென்ன, 'நான் சொல்றபடி கேட்கலைன்னா என்னை உயிரோடு பார்க்க முடியாது'ன்னு டயலாக் விடுவீங்க. அதானே?. 1950லேருந்து இதைத்தானேடி சொல்றீங்க).
'சரி இவங்களை விடுங்க, அவரை அனுப்பி வைக்க அந்த காஞ்சனாவை எப்படி சரிக்கட்ட போறீங்க?'
'அதுக்கு நானே போய், கேட்கிற விதத்திலே கேட்கிறேன்'. (காஞ்சனா வீட்டில் நிறைய விளக்குமாறுகளும் செருப்புகளும் இருக்காம்)
காஞ்சனா வீட்டுக்கு ஆட்டோவில் வந்து இறங்குகிறாள் கற்பகம். வீட்டின் உள்ளே யாருமில்லை. ஈஸ்வரன் படுத்திருக்கும் அறைவாசலைல் போய் நின்று விசும்ப, அவரும் பார்த்து கண்கலங்க சில நிமிடங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன....
'ஏய், எங்கே வந்தே....?' காஞ்சனாவின் அதிரடிக்குரல் திடுக்கிட வைக்க, பார்த்தால் மாடியிலிருந்து காஞ்சனா இறங்கி வர, பின்னாலேயே அஞ்சலி மற்றும் மனோ.
'என் ரெண்டு பொண்ணுங்களுக்கும் கல்யாணம் வச்சிருக்கேன்'.
'அது ரெண்டுக்கும் கல்யாணம்தான் ஒரு கேடு' - காஞ்சனா
'உங்க பொண்ணுங்க கல்யானத்தை ஏன் இங்கே வந்து பேசுறீங்க?' - அஞ்சலி.
'சரி அதுக்கென்ன இப்போ?'
'பொண்ணுங்களை தாரை வார்த்துக்கொடுக்க இவரை நீங்க அனுப்பணும்'.
'எக்காரணம் கொண்டும் இவரை அங்கே அனுப்ப முடியாது'. (பலே)
'கல்யாணம் முடியும் வரை கூட இருக்க வேணாம். ஒரு அரை மணி நேரம் வந்து தாரை வார்த்துக்கொடுத்து விட்டு வந்து விடட்டும்'
'முதல்ல அப்படித்தான் சொல்வே, அப்புறம் ஒட்டகம் கூடாரத்துக்குள் நுழைந்த மாதிரி, இவரை அப்படியே இழுத்துக்குவீங்க. அதெல்லாம் முடியாது போ வெளியே' (சபாஷ்)
'அப்படி சொல்லாதீங்க, இவர் வந்து ஆசீர்வாதம் பண்ணினால்தான் என் பொண்ணுங்க வாழ்க்கை நல்லாயிருக்கும்'.
அந்தக்கடவுளே வந்து ஆசீர்வாதம் பண்ணினாலும் உன் பொண்ணுங்களோட வாழ்க்கை நல்லாயிருக்காது. போ வெளியே'. (அப்படி போடு)
'நான் உங்க கிட்டே மடிப்பிச்சை கேட்கிறதா நினைச்சுக்குங்க. அவரை தயவு செஞ்சு அனுப்புங்க'. (இப்போ என்ன கல்யாண மண்டபத்தில் மாப்பிள்ளையும் பெண்ணும் மணவறையிலா உட்கார்ந்து காத்துக்கிடிருக்காங்க..?)
'இப்போ வெளியே போறியா இல்லையா?'.
இதற்கு மேல் நின்று பயனில்லை என்றறிந்து (காஞ்சனா விளக்குமாறுக்கு வேலை கொடுக்கும் முன்) கற்பகம் வெளியே போகிறாள். அம்மா போவதையே பார்த்துக்கொண்டிருக்கும் மனோவிடம், காஞ்சனா... 'பார்த்தியா மனோ, உன் கிட்டே ஒரு வார்த்தைகூட பேசலை உங்கம்மா'
'நானும் கூடத்தான் பேசலை. இப்போ அவங்க என்ன கேட்டாங்க?. அக்காக்களின்ன் கல்யாணத்துக்கு அப்பா வந்து ஆசீர்வாதம் பண்ணனும்னுதானே சொன்னாங்க'.
தன் பர்ஸை மேஜைமேல் வைத்து மறந்துவிட்டதையறிந்து, கற்பகம் திரும்பி உள்ளே வரும்போது.... அவள் வருவதையறியாத காஞ்சனா மனோவிடம், 'என்ன அம்மா மேல பாசம் பொங்குதோ. மற்யுபடியும் போயிடுவே போலிருக்கு'.
'இல்லே அத்தே, சஷ்டியப்த பூர்த்தி விழாவில் உங்க பக்கம் நியாயம் இருக்குங்கிறதனால்தானே, விழாவுக்குப்போன அப்பாவை வழியில் மடக்கி, கடத்திக்கிட்டு வந்து உங்க கிட்டே ஒப்படைச்சேன்'
பர்ஸை எடுக்க வந்த கற்பகத்தின் காதுகளில் மனோ பேசியது விழ... 'டேய் மனோ' என்று கத்திக்கொண்டே போய் அவன் கன்னத்தில் 'பளார்'..