-
டியர் கார்த்திக்
ஐட்டம் கேர்ள் என்ற ஒரு சொல்லில் அடை மொழியிடப் பட்டாலும் இந்தக் கதாபாத்திரங்கள் திரைப்படங்களின் போக்கினை நிர்ணயிக்கும் வலுவான பாத்திரங்களாக அமைந்து விடுகின்றன. அந்த வகையில் ஜெய்குமாரி நடிகர் திலகத்தின் திரைப்பட ஆராய்ச்சிகளில் நிச்சயம் இடம் பிடிப்பார், அவர் ஏற்ற இந்த கௌரவம் மற்றும் எங்கிருந்தோ வந்தாள் திரைப்படங்களின் மூலம். விஜயலலிதா வைப் பொறுத்த மட்டில் அந்த அளவிற்கு வலுவுள்ள கதாபாத்திரங்கள் என்று கூறப் படமுடியாவிட்டாலும் நடிகர் திலகத்துடன் அவர் நடனம் ஆடிய பாடல்கள் சாகா வரம் பெற்றவை [கே.வி.எம். சொதப்பிய எதிரொலி படப்பாடலைத் தவிர ]. குறிப்பாக திருடன் படத்தில் இரு பாடல்களில் அவருக்குக் கிடைத்த முக்கியத்துவம் கதாநாயகியான கே.ஆர்.விஜயாவிற்குக் கிடைக்கவில்லை என்பது வியப்பான உண்மை. அதுவும் நினைத்தபடி பாடலை எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத அளவிற்கு வெள்ளை உடையில் ஸ்டைல் சக்கரவர்த்தி கலக்கியிருப்பார். கோட்டை மதில் மேலே பாடல்... சொல்லவே வேண்டாம்.. இதே போல் இன்னொரு ஐட்டம் கேர்ள் பாத்திர நாயகியான ஆலம் அவர்களுக்கும் அமைந்த பாடல்கள் சூப்பர் ஹிட் பாடல்கள் .. வேலாலே விழிகள், ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் போன்றவை.
தாங்கள் குறிப்பிட்ட அனைத்து நடிகையரின் கதா பாத்திரங்களைப் பற்றியும் விரிவாக எழுத வேண்டுகிறேன்.
தங்கள் பதிவில் உள்ள சிறப்பைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். தாங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட காட்சியமைப்போ, நடிகையரோ அல்லது உடையமைப்போ எதுவாக இருந்தாலும் மதில் மேல் பூனையாக மிகவும் எச்சரிக்கையுடனும் அருமையாகவும் எழுதி வருகிறீர்கள்.
பாராட்டுக்கள். தொடருங்கள்.
-
நாளை 22.09.2013 தேதியிட்ட தினமலர் இதழுடன் வெளியாகும் வார மலரில் நடிகர் திலகத்தைப் பற்றிய வியட்நாம் வீடு சுந்தரம் அவர்களுடைய கட்டுரை இடம் பெறுகிறது.
-
இந்த திரியின் செல்லப்பிள்ளை திரு பம்மலார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
கார்த்திக் சார்
கவிதா கல்பனா (ஜெயகுமரி) பற்றி ஒட்டியும் வெட்டியும் எழுதி உள்ள உங்கள் பதிவு ஒரு அருமையான சுஜாதா நடையில் எழுதப்பட்ட பதிவு வாழ்த்துகள் ஜெயகுமாரி பற்றி நீங்கள் குறிபிட்டது உண்மை இன்னமும் அவர் வறுமையில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் வீடு வேலை செய்யும் (செர்வன்ட் மிட்) தொழில் செய்து கொண்டு இருப்பதாக கேள்விபட்டென் பெருங்குடியில் சிறு ஓடு வீடு ஒன்றில் இருப்பதாக எனது நண்பர் ஒருவர் கூறினார் (இரண்டு ஆண்டுகளுக்கு முன் )
மேஜர் சுந்தர் ராஜன் சிறிது காலம் உதவி செய்தார் என்றும் அறிந்தேன்
அடுத்த ஐட்டத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்.
Gkrishna
-
To pammalar
many more happy returns of the day
gkrishna
-
வாசு வருக. விஷத்தை (துளிதான்) பருக ஆவலாக உள்ளேன். தருவது நீயாயிற்றே? நாம் இருவரும் நேர்மையாக தராசு போல ஆய்வு செய்யும் இரு மேதைகள் அல்லவா?அதனால் எதிர்பார்ப்போடு உள்ளேன்.
கார்த்திக் சார்,
அடுத்து விஜயஸ்ரீ அல்லது ஆலம் எதிர்பார்க்கிறேன்.ராகவேந்தர் சார் குறிப்பிட்டது போல கதாநாயகிகளுக்கு சமமான முக்கிய துவம் ,கதை போக்கில் பொறுத்த பட்டு இந்த கவர்ச்சி துணை நடிகைகள் நன்கு கவனிப்பு பெற்றார்கள்.
-
Ragavendhar sir,
Thank you for informations . Do you have any apapparai Snaps in the theatres of NT Films during centenary celebrations? Can you Pl.help us?
-
இன்று பிறந்தநாள் காணும் அன்பு சகோதரர் பம்மலார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
-
Just Now watched Thulivisham , overjoyed by his marvellous acting waiting for Vasu sir's analysis.
Surely a underrated gem
-
பிறந்தநாள் காணும் நம் அன்பு நண்பர் திரு. பம்மல் சுவாமிநாதன் நீண்ட
ஆயுளுடன் எல்லா சிறப்புகளும் பெற்று நடிகர் திலகத்தின் புகழ் பரப்ப
எல்லாம் வல்ல இறைவனை வேண்டிகொள்கிறேன்.