Quote:
நம்மவர்களின் கற்பனை வளமே அலாதிதான் டெலஸ் கோப் இல்லாத காலத்திலேயே மூன்றாவது கண்ணான ஞானக்கண்ணைப் பயன்படுத்தி கோள்களின் நடமாட்டம் நட்சத்திரங்களின் இருப்பிடம் கொண்டு பஞ்சாங்கம் கணித்த பார் போற்றும் பண்டிதர்களே! ஜீரோ என்ற என்னையே உலகுக்கு அவர்கள் தந்திடாவிடில்.... நினைக்கவே அச்சமாக இருக்கிறது!! முன்னோரின் வழியிலேயே சற்று அறிவுக் கண்ணோட்டம் தவிர்த்து மெய்ஞான பாதை விலகி ஜாலியானஅஞ்ஞான கதை கற்பனை விசித்திரங்களையும் நமது மனமகிழ்வு வேண்டி தோண்ட தோண்ட கப்சா சுரங்கங்களையும் அல்ளித் தந்திருக்கிறார்களாயிற்றே !!
விட்டலாச்சார்யர்களும் ராமாநாராயனர்களும் ரவிகாந்த் நிகாய்ச் என்னும் தந்திர மந்திர இந்திரஜித்தின் கைவண்ணத்தில் வாரிவழங்கிய ஜாலிகளில் முதன்மையானது பாம்பை வைத்து அள்ளிவிட்ட தெறித்து ஓட வைக்கும் மாயபிம்ப கட்டுக்கதைக் களஞ்சியமே !
பாம்பு பால்குடித்து முட்டையடிக்குமாமே.... பெண்ணாக மாறி பழிதீர்க்குமாமே...... மகுடி இசையில் தன்னை மறந்து படமெடுத்து ஆடி போட்டுத் தள்ளுமாமே....இதெல்லாம் விட தண்ணியடித்துவிட்டு விக்கிவிக்கி இசைக்கோர்வையாகப் பாடிக்கொண்டே தள்ளடிக்கொண்டே நடநாபிநயங்களை சுதிசுத்தமாக கடைப்பிடித்து மன்னரையே மண்டியிட வைக்கும் இந்த அபூர்வ நிகழ்வை நாமும் மூளைஎன்னும் முகமூடியை தூக்கிஎறிந்துவிட்டு ரசிப்போமே !!