https://scontent-yyz1-1.xx.fbcdn.net...9a&oe=58743B7C
Printable View
சென்னை தி.நகர் பால மந்திர்- ஜெர்மன் ஹாலில் நடிகர்திலகத்தின் பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது,
முரளியின் " மௌன ராகம் " இசைக்குழுவினரின் மெல்லிய இசை விருந்தாக நடிகர்திலகத்தின் திரைப்பட பாடல்கள் மட்டுமே இசைக்கப்பட விழாவிற்கு நீதியரசர் சிவப்பிரகாசம் அவர்கள் தலைமை ஏற்று கலைச் சேவைகளை புரிவோர்க்கென " சிவாஜி விருது " வழங்கி கௌரவித்தார்,
விழாவில் சிறப்புரை ஆற்றியதிலிருந்து
நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது,...
என்னவோ தெரியவில்லை அவர் தமிழன் என்பதனால் மட்டுமே புறக்கணிப்புக்கு ஆளானார்,
வெளி மாநிலத்தவரையெல்லாம் இங்கு முக்கியத்துவம் கொடுத்து பெருமை படுத்திவிட்டனர்,
அவரின் நடிப்பாற்றலைப் பற்றி உலகில் அறியாதவர் உண்டோ,
ஆஸ்கர் அவார்டையே அவருக்கு பெற வேண்டும் என்று நினைத்து இருந்தால் பெற்று கொடுத்து இருக்கலாம் ஆனால் அதற்கான முயற்சியை இந்திய மண்ணில் யாரும் முயற்சிக்கவில்லை,
இப்பொழுதும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முயற்சிகள் மேற்கொண்டு பெருந்தலைவர்கள் மறைவிற்குப் பிறகும் வழங்கி வரும் பாரத ரத்னா விருதினை நடிகர்திலகத்திற்கு வழங்கிட கோரிக்கை விடுக்க வேண்டும்.
நீதியரசர் கோரிக்கையை செயல் ஆக்கம் கொடுக்க நாம் என்று ஒன்று கூடப்போகிரோம்
(முகநூல் சேகர் பரசுராம்)