இன்னா செய்தாரை ஒறுத்தல் - அவர் நாண நன்னயஞ் செய்து விடல் - சம்பவம் 4
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நடிகை பி. பானுமதி அவர்கள், "நாடோடி மன்னன்" படத்தில் நடித்தது தொடர்பாக, நமது பொன்மனச்செம்மலுடன் அவராகவே மனத்தாங்கல் கொண்டு, சற்று விலகி இருந்த நேரம் அது. (1957-58 கால கட்டம்).
இருப்பினும், அதனை பொருட்படுத்தாமல், நமது மக்கள் திலகம் அவர்கள் பெருந்தன்மையாக, நடிகை பானுமதியை மன்னித்து அவருக்கு தனது அடுத்தடுத்த படங்களில் (ராஜா தேசிங்கு, கலை அரசி, காஞ்சித்தலைவன்) கதா நாயகியாக வாய்ப்பளித்து கவுரவப் படுத்தினார்.
அப்போது அபிநயசரஸ்வதி சரோஜாதேவி அவர்கள் உட்பட பல புதுமுக நாயகியர் தமிழ் திரை உலகில் இருந்த போதிலும், பானுமதி அவர்கள் சில படங்களில் கதாநாயகி அல்லாத பத்திரங்களில் நடித்த போதும், அவரை கதாநாயகி பாத்திரங்களுக்கு ஒப்பந்தம் செய்து அவருக்கு தமிழ். திரை உலகில் மீண்டும் வாழ்வளித்தார்.
அது மட்டுமல்லாது, நமது புரட்சித்தலைவர் அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்றபின், அவருக்கு தமிழக அரசின் இயல் இசை நாடக மன்ற தலைவராக நியமித்து அவரை பெருமைப்படுத்தினார். உடனே பானுமதி அவர்களும் புரட்சித்தலைவரின் இந்த மாண்பினை கண்டு வியந்து தொலைபேசியில் நமது புரட்சித்தலைவருக்கு நன்றி கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
http://i46.tinypic.com/2z53rye.png
================================================== ================================================== =======
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்