டியர் ராகவேந்தர் சார்,
டியர் ஜி.கிருஷ்ணா சார்,
தங்களின் மனம் நிறைந்த பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி....
Printable View
டியர் ராகவேந்தர் சார்,
டியர் ஜி.கிருஷ்ணா சார்,
தங்களின் மனம் நிறைந்த பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி....
நடிகர்திலகத்தின் திரைப்படங்களில் ஐட்டம் நடிகையர் ( 3 )
லேடி ஜேம்ஸ்பான்ட் 'சாக்லேட்' விஜயலலிதா
என்னடா சாக்லேட் அது இதுன்னு ஜொள்ளு விடுகிறானே என்று நினைக்க வேண்டாம். பட்டணத்தில் பூதம் படத்தில் பாலாஜியால் 'மை டியர் சாக்லேட்' என்று அழைக்கப்பட்டதால் சிறிது காலம் 'சாக்லேட் விஜயலலிதா' என்று அழைக்கப்பட்டார். ('என்னத்தே' கன்னையா, 'அலேக்' நிர்மலா என்பதைப்போல). நிறைய படங்களில் ஐட்டம் நடிகையாக நடித்திருந்த போதிலும், சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார் (குறிப்பாக தெலுங்கு அதிரடிப் படங்களில்). எந்த வித நாகரீக கவர்ச்சி உடையும் ‘சிக்’கென்று பொருந்தக்கூடிய வாளிப்பான உடலமைப்பு, மயக்கும் பெரிய விழிகள், சற்றே அகன்ற வாய், எடுப்பான உதடுகள், 70 எம்.எம்.சிரிப்பு, அளவு மீறாத அங்க அமைப்புகள் என்று ஒரு ஐட்டம் நடிகைக்கான அனைத்து சாமுத்திரிகா லடசணங்களும் அமைந்த கவர்ச்சிப்புயல். (கர்சீப் ப்ளீஸ்). அன்றைய இளைஞர்கள் பலரின் தூக்கத்தைக் கெடுத்த அதிரடி நாயகியான இவர், நடிகர்திலகத்தின் படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார்.
“எதிரொலி”
பனாமா கால்வாய் ஆன இப்படத்தில் விஜயலலிதா ஏற்றிருந்தது ஐட்டம் நம்பர் அல்ல.ரொம்பவே நல்ல பிள்ளை. (அது சரி, அதென்ன பனாமா கால்வாய் என்கிறீர்களா?. 'நடிகர்திலகம்' என்ற பசிபிக் பெருங்கடலையும், 'இயக்குனர் சிகரம்' என்ற அட்லாண்டிக் பெருங்கடலையும் இணைத்த ஒரே படம்). ஒரு கேஸில் தனக்காக வாதாடி விடுதலை வாங்கித்தந்த வழக்கறிஞர் சங்கரை (நடிகர்திலகத்தை) தன் சாமியாகவே நினைத்து மரியாதை செய்பவர் விஜயலலிதா (கேரக்டர் பெயர் நினைவில்லை). வக்கீலுக்கு மன உளைச்சல் ஏற்படும் சமயங்களில் மலைமீதுள்ள தன் குடிசையில் அவர் வந்து இளைப்பாறுவதை பாக்கியமாக நினைப்பவள். அப்படி அவர் ஒருமுறை வந்திருந்தபோது பாட்டும் ஆட்டமுமாக மகிழ்வித்தவள். ('உங்க நல்ல மனசுக்கொரு குறையுமில்லே' என்ற பல்லவியை ஒவ்வொரு முறையும் 'நள்ள மனசு' என்றே உச்சரிப்பார் ஈஸ்வரி. மாமாவும் புழேந்தியும் கண்டுகொள்ளாதது ஏனோ). வக்கீல் சாமியின் குறைகளைகளைத் தீர்த்து வைப்பதை எதிர்பர்த்திருப்பவள். ஆனால், வக்கீலின் மன உளைச்சலுக்குக் காரணம் தன் காதலனான டாக்சி டிரைவரே (மேஜர்) என்று தெரியும்போது, கடவுளுக்குப் பின்னர்தான் காதலன் என்ற முடிவெடுத்து, காதலனை சுட்டுத்தள்ளி கடவுளுக்கு நிரந்தர நிம்மதியைத் தந்தவள். மிக அருமையான கதாபாத்திரம். உணர்ந்து நடித்திருந்தார் விஜயலலிதா. (அந்த சமயத்தில் இரண்டு அருமையான கதாபாத்திரங்களை விஜயலலிதாவுக்கு கொடுத்து பெயரெடுக்க வைத்தார் கே.பி. ஒன்று எதிரொலி இன்னொன்று 100 / 100) .
கவர்ச்சிப்புயல் “ரீட்டா” (திருடன்)
அப்போதெல்லாம் கொள்ளைக் கூட்டம், கடத்தல் கூட்டம் சம்மந்தப்பட்ட படமாயிருந்தால் அந்தக்கூட்டத்தில் ஒரு பிரதான பெண் கதாபாத்திரம் இருப்பாள். அவள் பெயரும் கூட காமாட்சி, மீனாட்சி என்றெல்லாம் இருக்காது. பெரும்பாலும். ரேகா, ரீட்டா, ஸ்டெல்லா இப்படித்தான் இருக்கும். பாலாஜியின் தயாரிப்பான திருடன் படத்திலும், பாலாஜியின் கூட்டத்தில் ஒருத்தியாக 'ரீட்டா' என்ற பெயருடன் நடித்திருந்தார் விஜயலலிதா. கேரக்டருக்கு ஏற்றார்போல கவர்ச்சியான உடைகள், அவரே பலமுறை நடித்து பழகிப்போன கேரக்டர். ‘ஸ்டைல் கிங்' நடிகர்திலகத்துடன் சேர்ந்து அதகளம் பண்ணியிருப்பார். 'நினைத்தபடி நடந்ததடி வராதவன் வந்து விட்டான்' பாடலில் அவருடைய ஆட்டம் அருமையோ அருமை. கவர்ச்சியான டைட் உடைகளில் ரசிகர்களைக் கொல்லுவார். (அப்போதெல்லாம் கதாநாயகிகள் கவர்ச்சியாக நடிக்க மாட்டார்கள், இழுத்துப் போர்த்துக்கொண்டு நடிப்பார்கள் என்பதால் ஜொள்ளுப் பார்ட்டிகளின் புகலிடம் இதுபோன்ற ஐட்டம் நடிகைகள்தான். இப்போது 'ஈரோயினிகளே' ஐட்டம் பிகர்களை விட கவர்ச்சியாக நடிக்க துவங்கி விட்டதால் ஐட்டம் நடிகைகள் என்ற குருப்பே காணமல் போய்விட்டது).
இளவரசியின் வைர நெக்லசைக் கொள்ளையடிக்க, யுவராஜா மற்றும் யுவராணியாக நடிகர்திலகமும், விஜயலலிதாவும் செல்லும் காட்சியில் இருவருமே செம க்யூட். உடைகளும் அப்படி. படத்தின் ஹைலைட் பாடலான 'கோட்டை மதில் மேலே ஒரு வெள்ளைப்பூனை' பாடலில் செம ஸ்டைல் மற்றும் சுறுசுறுப்பு. நடிகர்திலகத்தின் ஸ்டைலுக்கு நல்ல ஈடு கொடுத்திருப்பார் விஜயலலிதா. (கலரில் எடுத்திருந்தால் இந்தப்பாடல் எங்கோ போயிருக்கும்).
"பொன்மகள்" (சொர்க்கம்)
படத்தின் பெயரைச் சொன்னதும் அனைவருக்கும், மற்றெல்லாவற்றையும் விட சட்டென நினைவுக்க வருவது இந்தப்பாடலும் அதற்கான அசத்தும் காட்சியும் தான். அந்த அளவுக்கு அதுவரை தமிழ்ப்படங்களில் இல்லாத வகையில் தங்கக் காசுகளாக காய்த்துத்தொங்கும் மரம், வைரங்களாய் காய்த்துக்குலுங்கும் மரம், கரன்சி நோட்டுக்களாக காய்த்துக்குலுங்கும் மரம் என கற்பனை செய்து அதனை செட்டுக்களாக அமைத்து அதிர வைத்திருந்தார் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ராமண்ணா.
சரி, இந்தக் காட்சிக்கு அழகுக்கு அழகு சேர்க்க ஒரு அருமையான நடன மங்கை வேண்டாமா?. அதற்குப்பொருத்தமாக தேர்வு செய்திருந்தார் விஜயலலிதாவை. கற்பனையில் வேட்டிசட்டையுடன் உருண்டு விழும் கதாநாயகன் நடிகர்திலகத்தை பொற்கைகளால் ஆசீர்வதிக்க தகதக உடையுடன் எழும் நாயகன் பொன்மகளையும், தங்கமரமும் தங்கக் காசுகளுமாய் இருக்கும் சூழ்நிலையையும் கண்டு அதிசயிக்க, மெல்லிசை மன்னரின் அதிவேகமான இசைவெள்ளத்தில் பாடல் துவங்குகிறது.
பொன்மகளுக்கு பாடல் இல்லை, என்றாலும் அதிவேக நடன அசைவுகள் மற்றும் மூன்று வித உடை மாற்றங்கள். முதலில் தங்கத்தடுகளால் இழைக்கப்பட்ட ஆடை, அடுத்து வைர மணிகள் மின்னும் ஆடை, அடுத்து கரன்சி நோட்டுக்களால் (???) தொடுக்கப்பட்ட ஆடை என அசத்துவார். உடைகளுக்கு மேட்சாக அழகான பொன்னிற ஹேர்ஸ்டைல். ஒருபக்கம் நடிகர்திலகத்தின் ஸ்டைலான அசைவுகளைக்கான கண்கோடி வேண்டுமென்றால், பொன்மகளின் அழகையும், நடனத்தையும், நளினத்தையும் காண தனியே சிலநூறு கண்கள் வேண்டும்.
விஜயலலிதாவின் அன்றைய கவர்ச்சித் தாக்குதல்களை இன்றைக்குப் பார்த்தாலும் உதடுகள் உச்சரிப்பது "சாக்லேட் சாக்லேட்தான்"....
வணக்கம் கார்த்திக்
உங்கள் எழுத்தை படித்த பிறகு செய்த முதல் வேலை பொன் மகள் வந்தாள் பாடலை கானொளியில்
பார்த்தது தான். ஆஹா, ஆஹா. மிக்க நன்றி
பல்லாயிரம் முறை பார்த்தாலும் சலிக்காத பாடல் காட்சி ... சிக்கென்ற உடையில் நடிகர் திலகம் ... அட்டகாசமான நடனத்தை வழங்க விஜயலலிதா .... மெல்லிசை மன்னரின் இசையில் அருமையான பாடல் ...
நாமும் தான் பார்ப்போமே...
Of course the same describition applies to this song also ...
http://youtu.be/LPK9D4lYHaU
இந்தப் பாடலில் மெல்லிசை மன்னரின் ஜால வித்தை சூப்பர்... ஆரம்ப அக்கார்டின் இசை பின்னர் வந்த சொர்க்கம் பக்கத்தில் பாடலை நினைவூட்டும். பேங்கோஸ் ... மிகவும் அருமையாக மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ரிதம் ...
பொன் மகள் வந்தாள் பாடலை பார்த்த பிறகு மனதில் தோன்றிய முதல் எண்ணம், எத்தை பேர் எத்தனை நாள் இந்த செட் அமைக்க வேலை செய்து இருப்பர்ககள். விஜயலலிதாவின் நடனம் எவ்வளவு கஷ்டம் என்பது நடனம் ஆட தெரிந்தவர்களுக்கு தெரியும். அதுவம் அந்த வைர காஸ்டியுமில் அவர் ஆடுவது. நம்மவரின் நடனம் சொல்லவே வேண்டாம். மீண்டும் மிக்க நன்றி கார்த்திக் :smile:
பல்லாயிரம் முறை பார்த்தாலும் சலிக்காத பாடல் காட்சி ... சிக்கென்ற உடையில் நடிகர் திலகம் ... அட்டகாசமான நடனத்தை வழங்க விஜயலலிதா .... மெல்லிசை மன்னரின் இசையில் அருமையான பாடல் ...
நாமும் தான் பார்ப்போமே...
Of course the same describition applies to this song also ...
http://youtu.be/sjntryg_b9s
Dear vasu sir,
Thangaikaga fight sequence was too good thanks for uploading it Vasu sir
டியர் ராகுல் ராம்,
கவரி மான் திரைப்படத்தைப் பற்றிய தங்கள் ஆய்வு படிக்கும் முன் ஒரு வேண்டுகோளை வைக்க எண்ணுகிறேன்.
ஒவ்வொரு தலைப்பாக நாம் அலசிக் கொண்டே வருவோம். தற்போது கார்த்திக் சாரின் ஐட்டம் பெண் கதாபாத்திரங்களைப் பற்றிய அலசல் இடம் பெற்றுள்ளது. தொடர்ந்த துளிவிஷம் திரைப்படத்தைப் பற்றி வாசு சார் எழுத உள்ளார். இடையே நீதி மற்றும் பட்டிக்காடா பட்டணமா திரைப்டங்களைப் பற்றிய கோபால் சாரின் ஆய்வும் 1972ம் ஆண்டினை நிறைவு செய்யும் பதிவாக இடம் பெற வேண்டும். அதற்குப் பிறகு நாம் கவரிமான் திரைப்படத்தைப் பற்றி கருத்துப் பரிமாற்றம் செய்யலாம் என எண்ணுகிறேன்.
ஒவ்வொருவருடைய தலைப்பும் விரிவாக அலசப் பட வேண்டும் என்பதே என் அவா. அதே போல் ஒவ்வொருவரும் அனைத்துப் படங்களைப் பற்றியும் விவாதிக்க வேண்டும் என்பதும் முக்கியம். எனவே இனி வரும் காலங்களில் ஒரு விவாதம் முற்றுப் பெறும் சமயத்தில் தங்களுடைய அடுத்த தலைப்பைப் பற்றி ஒரு சிறு முன்னறிவிப்பினைத் தந்து விட்டு தொடங்கினால் அனைத்துப் பதிவுகளும் சமமான அளவில் விவாதிக்கப் படுவதற்கு ஏதுவாக இருக்கும்.
மிக்க நன்றி.
Update 7.47 pm
Thank you Ragul for understanding. Please post Kavariman without fail. It's really interesting and we need elaborate discussion on this film.
நம் திரி கொடுத்து வைத்தது. சாரதா,கார்த்திக்,முரளி, வாசு,சாரதி,கண்பட் என்று எத்தனை எழுத்து வேந்தர்கள் !!! அற்புதமான கேப்டன் ராகவேந்தர் சார், ஊக்குவிக்க கே.சி.எஸ்??
கார்த்திக் சார்,
எடுத்த சப்ஜெக்ட் விடாது ,அங்கங்கே நகைச்சுவை தெளித்து, திராட்சை ,முந்திரி ,குங்குமபூ போல லேசான கவர்ச்சி தெளித்து ,அப்பப்பா ! என்னவொரு எழுத்து?
அவ்வளவாக பிடிக்காத விஜயலலிதாவை,சிறிதே பிடிக்க வைத்து விட்டீர்கள்.பளிங்கினால் ஒரு மாளிகை யில் ,ஓரளவு பொன்மகளில் மட்டுமே கவர்ந்தவர். ஜோதியின் பின்னழகு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனால் மாற்று முகாம் ஆள். எண்ணம் போல கண்ணன் வந்தான் பாட்டை இன்று பார்த்தாலும் .....ஹூம்....
இனி உங்கள் எழுத்து திறனால் விஜியையும்(chocolate) கவனிக்க வைத்து விட்டீர்கள்.
அது சரி,இந்த குடும்பம்,பிள்ளை...குட்டி (மிக முக்கியம் அமைச்சரே)... இதெல்லாம் பற்றி.... சரி,சரி அவசரமில்லை. நிதானமாக....
I agree Ragavendhar Sir. Just Give me Tinkle when I should take up needhi and Pattikkada pattanama? I will follow your instruction and post it accordingly. Your initiative is appreciated and all postings will get deserving attention this way. Thanks to you.